தரமணியை பார்த்து ராம்-ஆண்ட்ரியாவுக்கு சித்தார்த் பாராட்டு

தரமணியை பார்த்து ராம்-ஆண்ட்ரியாவுக்கு சித்தார்த் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor siddharthஇயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த்ரவி ஆகியோர் நடித்துள்ள தரமணி படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை JSK சதீஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் சித்தார்த் தன் பாராட்டுக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்… இயக்குனரை ராம் அவர்களை பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், ஆண்டரியாவின் நடிப்பு அசத்தல் எனவும் பதிவிட்டுள்ளார்.

Siddharth‏Verified account @Actor_Siddharth
#Taramani is releasing Aug 11. I saw it and loved it! Proud of you @director_ram #Andrea is brilliant

அஜித்தை அப்படித்தான் திட்டனும்… சூரியை பாராட்டிய லிங்குசாமி

அஜித்தை அப்படித்தான் திட்டனும்… சூரியை பாராட்டிய லிங்குசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director Lingusamyதன் அப்பாவித்தனமாக காமெடியால் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சூரி.

இவர் வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டாலும், அதற்கு முன்பு அஜித் நடித்த ஜி, பரத் நடித்த காதல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தன் முன்னேற்றத்திற்கு காரணமான பத்திரிகையாளர்களை இன்று சென்னையில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் தன் சினிமா அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

லிங்குசாமி இயக்கத்தில் அஜித், வெங்கட்பிரபு நடித்த ஜி படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

அதில் ஒரு காட்சியில் காலேஜ் எலக்க்ஷனில் அஜித் ஜெயித்துவிடுவார். அவரின் எதிரி அணியில் நான் இருப்பேன்.

அப்போது காட்சி படமாக்கி கொண்டிருக்கும்போது ஜெயித்தவரை பார்த்து திட்டும்போது ஏதோ வாய்க்கு வந்த வசனங்களை பேசி விட்டேன்.

இதனை மானிட்டரில் பார்த்த லிங்குசாமி என்னை அழைத்தார்.

நீ என்ன டயலாக் பேசினாய் என்று கேட்டார். நான் தயங்கி நிற்கவே, அப்படித்தான் திட்டனும்.

தோற்றவர்கள் ஜெயித்தவர்களை அப்படித்தான் திட்டுவார்கள் என்று என் நடிப்பை பாராட்டினார்” என்று பேசினார் சூரி.

Director Lingusamy asked Actor Soori to scold Ajith

ஹாலிவுட் படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு; ஹாட் அப்டேட்ஸ்

ஹாலிவுட் படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு; ஹாட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu strகடந்த சில நாட்களாக தன் புதிய படம் பற்றிய ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு வந்தார் சிம்பு.

அதில் இடைவேளை இல்லை. பாடல்கள் இல்லை என அதிரடியாக தெரிவித்து வந்தார்.

யுவன் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங செய்கிறார் என்றார்.

இந்நிலையில் இப்படத்தை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவின் முக்கிய மொழிகளான தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

இப்படத்தை சிம்புவே இயக்கவுள்ளார் என்றும், இதற்கான வசனத்தை இயக்குனர் கௌதம்மேனன் எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Simbu aka STR going to direct English movie Gautam Menon penning dialogues

STR‏Verified account @iam_str

Regards to the rumors spreading about two versions are false. Only version which is English. Thanks @menongautham for penning the dialogues.

The film will be dubbed in Tamil and other main regional languages. #SilambarasanTRFilm @santoshsivan @thisisysr @menongautham #Antony

ரஜினியை தொடர்ந்து தனுஷ் படத்தை வாங்கிய மோகன்லால்

ரஜினியை தொடர்ந்து தனுஷ் படத்தை வாங்கிய மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohanlal dhanushசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள விஐபி2 படம் நாளை மறுநாள் (ஆக.11) தேதி வெளியாகவுள்ளது.

ஷான்ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி தாணுவும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு கேரளாவிலும் நல்ல எதிர்பாப்பு உருவாகியுள்ளதால் இதன் கேரள உரிமையை மோகன்லால் அவர்களின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளதாம்.

இப்படத்தை கேரளாவில் மட்டும் 200க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம்.

கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினியின் கபாலி படத்தை மோகன்லால் வாங்கியதும், அதற்காக தன் புலிமுருகன் படத்தின் ரிலீசையே தள்ளி வைத்திருந்ததும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Dhanushs VIP2 to be released by Mohanlals Aashirvaad Cinemas

ரஜினி-கமலை தலைவர்களாக ஏற்க முடியாது…- லட்சுமி ராமகிருஷ்ணன்

ரஜினி-கமலை தலைவர்களாக ஏற்க முடியாது…- லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lakshmi Ramakrishnanரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அதிரடி பேச்சுக்களால் தமிழகம் அரசியல் வட்டாரம் சூடுபிடித்துள்ளது.

அவர்கள் அரசியல் களத்திற்கு வரட்டும். ஒரு கை பார்ப்போம் என்று கூறும் அரசியல்வாதிகளை விட அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற கருத்தே பரவலாக உள்ளது.

இந்நிலையில் திரையுலகை சேர்ந்த இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியிருக்கிறார்.

அதில் ரஜினி மற்றும் கமல் இருவரும் நடிகர்கள்தான். அவர்கள் தலைவர்கள் இல்லை.

அவர்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது.” என தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

I cant accept Rajini and Kamal as political leaders says Lakshmi Ramakrishnan

டாப் ஹீரோக்கள் வரிசையில் தரமணி படம் இணைந்தது

டாப் ஹீரோக்கள் வரிசையில் தரமணி படம் இணைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Taramani stillsதங்கமீன்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதை பெற்று தந்த இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தரமணி.

இப்படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் சார்ப்பில் சதீஷ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் விளம்பரங்களே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் இது இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் கலாச்சாரம் பற்றி பேசும் படம் என தெரியவந்துள்ளதால் எதிர்பார்ப்பு எல்லை கடந்துள்ளது எனலாம்.

எனவே இளைஞர்களின் பல்ஸ் அறிந்த ஜிகே சினிமாஸ் தியேட்டர் நிர்வாகம் முன்னணி ஹீரோக்களுக்கு ஒதுக்கும் சிறப்பு காட்சிளை இப்படத்திற்கு ஒதுக்கியுள்ளது.

வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை போரூர் ஜிகே சினிமாஸ் தியேட்டரில் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது

More Articles
Follows