தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா இணைந்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.
ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா பொது முடக்கத்தால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழைப் போல சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ளது.
எனவே தெலுங்கிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
தெலுங்கில் ஆகாசம் நீ ஹதுரா என்ற பெயரில் ரிலீசாகிறது.
சூர்யாவின் தெலுங்கு பதிப்பு படங்களுக்கு ஸ்ரீனிவாஸ மூர்த்தி என்ற டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுத்து வந்தாராம்.
தற்போது பிரபல நடிகர் சத்திய தேவ் என்பவர் சூர்யாவுக்கு டப்பிங் பேசியிருக்கிறாராம்.
ஏன் இந்த டப்பிங் கலைஞர் மாற்றம் என்ற விவரம் தெரியவில்லை.