ஜெயம் ரவி & அருண் விஜய் மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் சந்தானம் மகன்

santhanam sonலொள்ளு சபா, சகளை vs ரகளை ஆகிய டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சந்தானம் அவர்களை ‘மன்மதன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தார் சிம்பு.

அதன்பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவானார் சந்தானம்.

ரஜினி முதல் வளரும் ஹீரோக்கள் வரை அனைவரது படங்களில் காமெடியனாக நடித்தார்.

தில்லுக்கு துட்டு, இனிமே இப்படித்தான், A1 ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.

தற்போது ஜான்சன் கே இயக்கத்தில் “பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் சந்தானத்தின் மகன் நிபுன் திரையுலகில் அறிமுகமாகிறாராம்.

பிரபுதேவா ஹிந்தியில் இயக்க உள்ள ஒரு படத்தில் சந்தானத்தின் மகன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அண்மையில் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் அவரது மகன் நடித்தார்.

அதுபோல் நடிகர் சூர்யா தயாரிக்கவுள்ள படத்தில் அருண் விஜய் மகன் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Santhanam’s son to make his debut soon

Overall Rating : Not available

Related News

நடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான…
...Read More
குழந்தை நட்சத்திரமாக பலர் நடித்தாலும் ஒரு…
...Read More
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற மாபெரும்…
...Read More
தன் புதிய படத்தின் அறிவிப்பையும் அப்படம்…
...Read More

Latest Post