நடிக்க தானே வந்தேன்னு கேட்டாரு விஜய் – சத்யா.; ‘சஞ்ஜீவனுக்கு முன்பே சூர்யா – ஜெய் படங்கள் வந்துட்டு – திவ்யா

நடிக்க தானே வந்தேன்னு கேட்டாரு விஜய் – சத்யா.; ‘சஞ்ஜீவனுக்கு முன்பே சூர்யா – ஜெய் படங்கள் வந்துட்டு – திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் இயக்கி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் வினோத், நிஷாந்த், சத்யா என்.ஜே., யாஷின், நடிகைகள் திவ்யா துரைசாமி, ஹேமா இயக்குனர் மணி சேகர், தயாரிப்பாளர் மலர்கொடி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் நிஷாந்த் பேசும்போது,

‘சுமார் 15 நிமிடம் ஓடக் கூடிய குறும்படமாகத் தான் இயக்குனர் எனக்கு காட்டினார். ஐவரில் ஒருவராக நீங்கள் நடிக்க போகிறீர்கள் என்று கூறினார். ஐவரும் ஐந்து விதமான குணங்கள் கொண்டவர்கள். ஒருவன் அமைதியாக இருப்பான், இன்னொருவன் எல்லாவற்றிலும் சரியாக இருப்பான். மற்றொருவன் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்பவன். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அவர்களுடன் 4 மாத பயணம், சூழ்நிலைக்கேற்றவாறு அவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. இப்படம் நடிக்கும்வரை எனக்கு ஸ்னூக்கர்ஸ் தெரியாது. இயக்குனர் சொந்தமாக ஸ்னூக்கர் நிலையம் வைத்திருந்தார். அங்கு சென்று ஸ்னூக்கர்ஸ் விளையாட கற்றுக் கொண்டேன்’ என்றார்.

நடிகர் வினோத் பேசும்போது,

‘புதிய குழு மற்றும் புதிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. முதல் முறையாக ஸ்னூக்கர்ஸ் படம் வருகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் இயக்கத்தில் ஒரு ஃபிரேமிலாவது நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது அவருடைய மாணவர் மணி சேகர் ஆக்ஷன் கூறி நடிப்பதில் பெருமையாக இருக்கிறது. சஞ்ஜீவன் படத்தை பத்திரிகையாளர்கள் மூலம் தான் மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் எனவே ஆதரவு தாருங்கள். அனைவருக்கும் நன்றி’ என்றார்.

நடிகர் சத்யா என்.ஜே. பேசும்போது,

‘இந்த படம் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வரும் ஸ்னூக்கர் படம். நான் கிரிக்கெட் விளையாடுபவன், ஸ்னூக்கர் பற்றிய முழு படமாக ஆர்வமாக பார்க்க முடியுமா? என்று நினைத்திருந்தேன். ஆனால், இயக்குனர் மிக அழகாக எடுத்திருக்கிறார். ஒரு ஏரியாவில் 5 நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை சுற்றி நகரும் கதை.

நம் எல்லோரையும் தொடர்புபடுத்திக் கொள்ளும் படமாக இருக்கும். தொழில்நுட்ப கலைஞனராக 13 வருடங்கள் இந்த துறையில் இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் உங்களுடைய ஆதரவு தான்.

முக்கியமாக இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி கூற வேண்டும். தயாரிப்பாளரின் மகன் நிஷாந்த் ஐவரில் ஒருவராக நடித்திருக்கிறார். ஆனால், என்னுடைய பையனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தனிப் பாடல், சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்று கூறாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். நிஷாந்தும் எங்கள் ஐவரில் ஒருவராகவே பழகினார்.

விஜய் சாருக்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தான் இந்த துறைக்கு வந்தேன். தெறி படத்தின் வெற்றிவிழாவில், நீ நடிக்க வேண்டும் என்று தானே இந்த துறைக்கு வந்தாய்? என்று விஜய் சார் என்னிடம் கேட்டார்.

என்னை நடிகனாக அங்கீகரித்து நடிக்க போ, என்று முதலில் கூறியது விஜய் சார் தான். அவர் கூறிய வார்த்தை தான் எனக்குள் ஏதோ இருக்கிறது என்று நடிக்கத் தூண்டியது. ஆகையால், விஜய் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன். இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் சாரிடம், இந்த தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

நடிகர் யாசின் பேசும்போது,

‘பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்த மாணவன். இது என்னுடைய முதல் படம். அனைவரின் ஆதரவும் தேவை என்று வேண்டுகோள் வைக்கிறேன்’ என்றார்.

திவ்யா துரைசாமி பேசும்போது,

‘செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். என்னை நம்பி இந்த படத்தில் இயக்குனர் மணி சேகர் வாய்ப்பு கொடுத்தார். சஞ்ஜீவன் படத்திற்கு தான் முதலில் கையெழுத்திட்டேன்.

ஆனால், இப்போது தான் வெளியாகிறது. எனக்கு மட்டுமல்லாது பலருக்கும் இப்படம் முதல் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் கையெழுத்திடும் போதுதான் தயாரிப்பாளரை பார்த்தேன். அதன்பிறகு இப்போது தான் பார்க்கிறேன். மிகவும் சுதந்திரம் அளிக்கக் கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு தான் ஜெய் மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தேன். ஆனால், அப்படங்கள் முன்பே வெளியாகிவிட்டது. இருப்பினும், சஞ்ஜீவன் படம் என்று எப்போதும் சிறப்பான படம் தான்.

இந்த துறைக்கு வரும் அனைவருமே சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வருபவர்கள் தான். அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

நடிகை ஹேமா பேசும்போது,

‘ஒன்றரை வருடத்திற்கு முன்பு இயக்குனர் மணியுடன் குறும்படத்தில் நடித்தேன். பிறகு இந்த படத்திற்கு தொடர்பு கொண்டு சஞ்ஜீவன் படத்தில் நாயகனின் அம்மா கதாபாத்திரம் இருக்கிறது. உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அழைத்தார். இந்த வாய்ப்புக் கொடுத்த மணி சேகருக்கு நன்றி’ என்றார்.

இயக்குனர் மணி சேகர் பேசும்போது,

இது என்னுடைய முதல் படம். சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்ற எதார்த்தத்தை சொல்லும் படமாக ‘சஞ்ஜீவன்` உருவாகி இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் ஸ்னூக்கர் விளையாட்டை மையமாக வைத்துள்ளோம். தென்னிந்தியாவில் முதல் ஸ்னூக்கர் படமாகவும் இந்த படம் வந்துள்ளது. இந்த படத்தில் நடித்த பெரும்பாலானோருக்கு இது முதல்படம். குறிப்பாக என்னை போன்ற பாலு மகேந்திரா சாரின் பட்டறையில் பயிற்சி பெற்றோர் பலரும் கைகோர்த்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் நல்லதொரு பொழுதுபோக்கு படமாகவும், எதார்த்த நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் நல்லதொரு படமாகவும் இருக்கும்’ என்றார்.

‘ஆச்சார்யா’ அட்டர் ப்ளாப்.: 80% பணத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி – ராம்சரண்

‘ஆச்சார்யா’ அட்டர் ப்ளாப்.: 80% பணத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி – ராம்சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான அப்பா – மகன் நட்சத்திரங்கள் என்று சொன்னால் அது சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோரை சொல்லலாம்.

சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்த ‘ஆச்சார்யா’ படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியானது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான கொரடாலா சிவா இயக்கி இருந்தார். ராம்சரண் இந்த படத்தை தயாரித்து இருந்தார்.

தந்தை, மகன் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படம் வெளியான முதல் நாள் முதலே மோசமான விமர்சனங்கள் வந்தன. எனவே படமும் படுதோல்வியை தழுவியது.

இதனால் இந்த நஷ்ட ஈட்டை சரி கட்ட வேண்டும் என விநியோகஸ்தர்கள் போர்கொடி தூக்கினர். பெரும்பாலான விநியோகஸ்தர்கள் படம் படுதோல்வியை தழுவியதால் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவி ஒரு விழாவில் கலந்து கொண்ட போது ஆச்சார்யா நஷ்ட ஈடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சிரஞ்சீவி பதிலளிக்கும்போது.. ”ஆச்சார்யா படம் நஷ்டம் ஆணதால் நானும், ராம்சரணும் 80% பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். படம் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

விஜய் படத்தை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் படத்தை தயாரிக்கும் தோனி

விஜய் படத்தை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் படத்தை தயாரிக்கும் தோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு எப்போதுமே விளம்பர படங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க அதிக ஆர்வம் உண்டு.

சச்சின், டோனி, விராட் கோலி ஆகிய பல கிரிக்கெட் முன்னணி வீரர்களும் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.

அது போல ஹர்பஜன்சிங், இர்ஃபான் பதான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அண்மையில் வெளியான பிரண்ட்ஷிப் கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தோனி production என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படங்களை தயாரிக்க உள்ளார் மகேந்திர சிங் டோனி.

இவர் விஜய்யின் 70 வது படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்திகளை நாம் ஏற்கனவே FILMISTREET பார்த்தோம்.

இந்த நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்க உள்ள புதிய படத்தையும் தோனி தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

முதன்முறையாக இணையும் விஜய்சேதுபதி – வடிவேலு கூட்டணி

முதன்முறையாக இணையும் விஜய்சேதுபதி – வடிவேலு கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆறுமுககுமார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி & கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளார் ஆறுமுக குமார்.

இதில் முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் இணைகிறார் வடிவேலு.

தற்போது வடிவேலு கைவசம்.. ‘மாமன்னன்’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘சந்திரமுகி 2’, உள்ளிட்ட படங்கள் உள்ளன.

அதுபோல விஜய் சேதுபதி கைவசம் ‘ஜவான்’, ‘காந்தி டாக்ஸ்’ உள்ளிட்ட ஹிந்தி படங்கள் உள்ளன.

இருவரும் தங்களது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் இணைந்து பணி புரிவார்கள் என தகவல்கள் வந்துள்ளன.

இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக உள்ளதாம்.

அழகான பெண் குழந்தைக்கு அப்பாவான ‘சலூன்’ பட இயக்குனர்

அழகான பெண் குழந்தைக்கு அப்பாவான ‘சலூன்’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகி பாபு நடித்த ‘தர்மபிரபு’, விமல் – வரலட்சுமி நடித்த ‘கன்னிராசி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்துக்குமரன்.

இவருக்கும் யோகேஸ்வரி தம்பதிக்கும் அக்டோபர் 13 நேற்று இரவு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்.

தற்போது மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சலூன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் முத்துக்குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஃபார்முலா ரிப்பீட் : புதுவையில் ரஜினி.; நெல்சனுக்கு நெருக்கடி.; ‘ஜெயிலர்’-க்கே போலீஸ் பாதுகாப்பு

பாண்டியன் ஃபார்முலா ரிப்பீட் : புதுவையில் ரஜினி.; நெல்சனுக்கு நெருக்கடி.; ‘ஜெயிலர்’-க்கே போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த வரும் ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், குட்டி ரித்விக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஆகஸ்ட்டில் இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்ற வருகிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஷூட்டிங்கில் சில காட்சிகள் லீக்கானது.

இந்த நிலையில் தற்போது புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் ‘ஜெயிலர்’ சூட்டிங் நடந்து வருகிறது. புதுவைக்கு அருகே அழகியநத்தம் கிராமத்தில் நடந்து வருகிறது.

ரஜினி பட சூட்டிங் நடப்பதை அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.

இதனால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழுவினர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புதுச்சேரி காவல்துறை மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

1990களில் ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் பட சூட்டிங்பை பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளில் நடத்தினார் எஸ்.பி. முத்துராமன். அங்கு வில்லனை ரஜினிகாந்த் அரெஸ்ட் செய்து அழைத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது .

அப்போது ரஜினியை பார்க்க ஆயிரம் கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இந்த சம்பவம் அப்போதே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows