மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஜி.எம்.குமார் எப்படி இருக்கிறார்..?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஜி.எம்.குமார் எப்படி இருக்கிறார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குருவி, அவன் இவன், தாரை தப்பட்டை, கர்ணன், நவம்பர் மாதம் & பேப்பர் ராக்கெட் (வெப் சீரிஸ்) உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தவர் ஜி.எம்.குமார்.

படங்களில் நடிப்பதற்கு முன்பே 1980களில் அறுவடை நாள், பிக் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகியப் படங்களை இயக்கியவர் இவர்.

மேலும் கன்னிராசி, காக்கி சட்டை, மை டியர் மார்த்தாண்டன் ஆகிய படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இத்துடன் பூவே உனக்காக, செம்பருத்தி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் ஜி.எம்.குமார்.

இந்த நிலையில் நடிகர் ஜி.எம்.குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Health update on Actor- Director GM Kumar

அதர்வா மிஷ்கின் தனஞ்செயன் பங்கேற்ற ‘குருதி ஆட்டம்’ பிரஸ் மீட் சுவாரஸ்யங்கள்

அதர்வா மிஷ்கின் தனஞ்செயன் பங்கேற்ற ‘குருதி ஆட்டம்’ பிரஸ் மீட் சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”.

பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,

எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது.

ஶ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதர், அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது. எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம் தான் எடுப்பார்கள்.

இந்த படத்தில் அதர்வா பல பரிணாமங்களை காட்டியுள்ளார். பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள். அனைவரும் இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். நன்றி.

இயக்குனர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது..

இந்த படத்தின் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய பயணம் கிடைத்தது. தயாரிப்பாளர் என்னுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை உறுதுணையாக இருந்தார். எனது முதல் படம் முடித்தவுடன் அதர்வா என்னை நம்பி என்னுடன் படம் பண்ண ஒத்துகொண்டார்.

இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய உதவியாய் இருந்தவர் அதர்வா. என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குருதி ஆட்டம் காப்பாற்றும். இந்த திரைப்படம் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படம், அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

இது ஒரு ஆக்‌சன் மற்றும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். இந்த படம் ஆகஸ்டு 5 வெளிவருகிறது, படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நடிகர் அதர்வா கூறியதாவது..

இந்த படம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களால் தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல இளம் நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஶ்ரீகணேஷ் இந்த கதையை சொல்லும் போது, கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

அனைத்து கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஶ்ரீகணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார். இந்த கதையை சிறப்பான ஒன்றாக மாற்றியது இசையமைப்பாளர் யுவன். இயக்குநர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு 5 வெளியாகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது..

குருதி ஆட்டம் நாம் வெகுநாட்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு படம். கொரோனாவினால் பல படங்கள் சிக்கலில் மாட்டியது. அதை தவிர்த்துவிட்டு தான் இந்த படத்தின் வெளியீட்டை பார்க்க வேண்டும்.

அதர்வா ஒரு எனர்ஜிட்டிக் ஆன நடிகர். அவர் இந்த படத்தில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த குருதி ஆட்டம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். Rockfort Entertainment க்கு இது பெரிய வெற்றியாக அமைய வேண்டும். இயக்குநர் ஶ்ரீகணேஷ் திறமையானவர், இந்த படம் பார்க்க பிரஷ்ஷாக இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

நடிகர் வட்ஷன் பேசியதாவது..

இந்த படம் எங்களுக்கு உணர்வுபூர்வமான படம். இயக்குநருக்கும், நடிகர் அதர்வாவிற்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம் ஒரு புதுமையான ஆக்‌சன் திரைப்படமாக இருக்கும்.

தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதாவது..

இயக்குநர் மேல் எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, அவர் மிகவும் திறமையான இயக்குநர். அவருடைய முதல் படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். நடிகர் அதர்வா அவருடைய தந்தையை போல நல்ல நடிகர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்.

நிர்வாக தயாரிப்பாளர் ஶ்ரீராம் பேசியதாவது…

இந்த திரைப்படம் புதுமையான ஆக்சன் படம், கடின உழைப்புக்கு பிறகு திரைக்கு வருகிறது. நடிகர் அதர்வா மிகப்பெரும் துணையாக இருந்தார். அவரால் தான் இந்தப்படம் முழுதாக முடிவடைந்தது. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி

இப்படம் உலகமெங்கும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Kuruthi Aattam press meet high lights

கேஜிஎஃப் வில்லனை அஜித்துக்கு எதிரியாக களமிறக்கும் வினோத்

கேஜிஎஃப் வில்லனை அஜித்துக்கு எதிரியாக களமிறக்கும் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ஏகே 61.

நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இதே கூட்டணி அமைந்துள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வந்தது.

சென்னையில் அனுமதி கிடைக்காத காரணத்தினால் ஹைதராபாத்தில் சென்னை போன்ற செட்டுகள் போட்டு படம் பிடித்து வருகின்றனர்.

மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவமே இந்த படத்தின் மைய கருவாகும்.

அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித் 61 வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது..

யஷ் நடித்த கேஜிஎப்- 2 படத்தில் வில்லனாக நடித்தவர் சஞ்சய்தத் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆகஸ்ட் மாதம் புனேயில் நடக்கும் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்கிறார். அப்போது அஜித் & சஞ்சய்தத் சம்பந்தப்பட்ட காட்சிகளை படம் பிடிக்க உள்ளார் இயக்குனர் வினோத்.

KGF baddie will be part of Ajith 61 movie

செஸ் ஒலிம்பியாட் ஆரம்பம் : பெருமைகளை பேசிய கமல். லிடியன் நாதஸ்வரம் அசத்தல்

செஸ் ஒலிம்பியாட் ஆரம்பம் : பெருமைகளை பேசிய கமல். லிடியன் நாதஸ்வரம் அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை – மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது.

இந்த போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

1927-ம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாகவும் அதுவும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.

இதனை முன்னிட்டு தமிழக அரசு நேப்பியர் பாலத்தை சதுரங்க கட்டம் போன்ற கருப்பு வெள்ளை நிறத்தில் மாற்றியுள்ளது.

மேலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தன் தந்தை நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்த விழாவிற்கு செல்வதாக ஐஸ்வர்யா அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

விழாவில் பல்கேற்ற கமல்ஹாசன்… “தமிழர்களின் பெருமையை எடுத்து கூறினார். கமல் பின்னணி குரல் கொடுக்க தமிழர்களின் பெருமைகளுக்கு ஏற்ப கலைஞர்கள் நடித்து காண்பித்தனர்.

இளம் வயதில் இசை சாதனை படைத்த லிடியன் நாதஸ்வரம் இந்த துவக்க விழாவில் தன் கண்களை கட்டிக் கொண்டு பியானோவில் இசையமைத்தார்.

மேலும் ஒரே சமயத்தில் இரண்டு பியானோவில் தீம் மியூசிக்கை வாசித்து மெய்சிலிர்க்க வைத்தார்.

Rajini Kamal participated in 44th Chess Olympiad launch at Chennai

தனுஷ் பிறந்தநாளில் முப்பெரும் விழா.; ரகிட ரகிட தாளம் போடும் ரசிகர்கள்

தனுஷ் பிறந்தநாளில் முப்பெரும் விழா.; ரகிட ரகிட தாளம் போடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ் இன்று ஜூலை 28ஆம் தேதி தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை அந்தந்த படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

அதன் விவரங்கள் வருமாறு…

நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்திற்கு ‘சார்’ என தெலுங்கிலும் தமிழில் ‘வாத்தி’ எனவும் தலைப்பு வைத்துள்ளனர்.

வெங்கி அட்லூரி இயக்க இப்படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களுடன் சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இன்று வாத்தி படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி உள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அலமாரிகளில் புத்தகங்களாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, மேசையின் மீது நைட் லேம்ப் வெளிச்சத்தில் தனுஷ் அமர்ந்துள்ளார்.

அடுத்ததாக… ‘நானே வருவேன்’..

‘மயக்கம் என்ன’ படத்தைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வராகவன் – தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’.

இப்படத்தை தாணு தயாரிக்க யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். நாயகியாக இந்துஜா நடிக்க தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கொடி பட்டாசு படங்களுக்கு பிறகு தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதில் செல்வராகவனும் நடித்துள்ளார்.

தனுஷ் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. காடுகளுக்கு நடுவே கைகளில் அம்பெய்தும் கருவியுடன் நிற்கிறார் தனுஷ்.

அடுத்ததாக… ‘கேப்டன் மில்லர்’..

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற மற்றொரு படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

ராக்கி & சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் தனுஷ் 3 கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ பட குழுவினர் வாழ்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

ஆக இன்றைய நாளில் ‘வாத்தி’ & ‘கேப்டன் மில்லர்’ & ‘நானே வருவேன்’ ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியாகி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இன்று ஜூலை 28ல் பிறந்தநாள் கொண்டாடும் தனுஷை FILMISTREET சார்பாக வாழ்த்துகிறோம்.

Triple treat for fans on Dhanush birthday today

நடுக்கடலில் சந்தானத்திற்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்

நடுக்கடலில் சந்தானத்திற்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார்.

இந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இவர் இயக்க தயாராகிக் கொண்டிருந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உருவானது.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ‘குலு குலு’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.

இப்படம் நாளை (ஜூலை 29-ம்) தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் ‘குலு குலு’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை சந்தானத்தின் நெருங்கிய நண்பரான உதயநிதி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘குலு குலு’ படத்தை கொண்டாடும் வகையில் சந்தானம் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Santhanam fans made Milk Abishegam for Gulugulu movie at Sea

More Articles
Follows