GVP – RKS – KSR – MGR – கீர்த்தி நடித்த படங்கள் மே 5-6ல் ரிலீஸ்

GVP – RKS – KSR – MGR – கீர்த்தி நடித்த படங்கள் மே 5-6ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 6 திரைப்படங்கள் ரிலீசாகவுள்ளது.

மே 5ம் தேதி ஈட்டி பட இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘ஐங்கரன்‘ படம் வெளியாக உள்ளது.

இதற்கு அடுத்த நாள் மே 6ம் தேதி கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’, ஆர்கே சுரேஷ் நடித்துள்ள ‘விசித்திரன்’, நாமக்கல் எம்ஜிஆர் நடித்துள்ள ‘உழைக்கும் கைகள்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

சாமி இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான ‘அக்கா குருவி’ என்ற படம் மே 6ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது. மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது.

இத்துடன் சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலும் எதிர்பார்ப்புக்குரிய ‘வாய்தா, துணிகரம்’ ஆகிய படங்களும் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளன.

இத்துடன் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாணி காயிதம்‘ படம் மே 6ம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இதற்கு அடுத்த வாரம் மே 13ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் ரிலீசாகவுள்ளது. மேலும் சில படங்களும் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

List of films releasing in May 5th and 6th

மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை

மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்துள்ள நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

இரண்டு மெகா ஸ்டார்கள் நடித்திருந்தும் இந்த படம் படுதோல்வியை தழுவியுள்ளது.

இவையில்லாமல் காட்பாதர், போலோ சங்கர் உள்ளிட்ட படங்களும் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வருகிறது.

மேலும் ஓரிரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிரஞ்சீவி.

இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தன் ராடன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகை ராதிகா.

“எங்களுடைய ராடன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்காக சிரஞ்சீவிக்கு நன்றி. மாஸ் மன்னனான சிரஞ்சீவியுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படத்தை உருவாக்க காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் ராதிகா.

இதில் நடிகரும் ராதிகாவின் கணவருமான சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என நம்பலாம்.

1980 ஆம் ஆண்டுகளில் சிரஞ்சீவி மற்றும் ராதிகா இணைந்து பல தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This famous actress to produce Chiranjeevi’s next flick

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலின் ‘விக்ரம்’ பட இசை வெளியீடு

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலின் ‘விக்ரம்’ பட இசை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் 232வது படமாக உருவாகியுள் படம் ‛விக்ரம்’. இந்த படத்தை கமல் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஷிவானி, காளிதாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் மற்றும் சிறை கைதிகளை மையப்படுத்தை இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது படத்திற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்மையில் ரயில் பெட்டிகளில் விக்ரம் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்த விளம்பரங்களை கமல் வீடியோவாக பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் வருகிற மே 15ம் தேதி விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த படம் அடுத்த மாதம் ஜூன் 3ல் படம் திரைக்கு வர உள்ளது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram movie audio and trailer launch on May 15th

கடவுள் இருக்காரா? அதிசயங்கள் நடந்தால் பதில் கிடைக்கும்.. – நடிகை ஜனனி

கடவுள் இருக்காரா? அதிசயங்கள் நடந்தால் பதில் கிடைக்கும்.. – நடிகை ஜனனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரத் கவுரவ் கோவை – ஷீரடி ரயில் சேவை தொடங்கப் படுகிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு ஹோட்டல் கிரீன் பார்க் சென்னையில் நடைப்பெற்றது.

தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. குத்துவிளக்கேற்றி நடிகை ஜனனி ஐயர் பேசியபோது,
இந்த அனுபவத்தைப் பற்றி என் வார்த்தைகளை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு சில அதிசயங்கள் நடந்தால் தான் பதில் கிடைக்கிறது. நான் 10 நாட்களுக்கு முன் தான் சாய் பாபாவை பற்றிய ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென தர்மா போன் செய்து ஷீரடி ரயில் ஒன்றிற்கு விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது என்றார். எனக்கு இப்போது அதை சொல்லும்போது கூட புல்லரிகின்றது சாயிபாபாவின் இருப்பை உணர்ந்தேன். அதனால் தான் இந்த விளம்பரப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. நானும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன்.
இதை இயக்குனர் ஜெய்குமாருடன் இயக்கியுள்ளார். நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருடன் வேலை பார்த்திருக்கிறேன். மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. நீங்கள் பார்த்தது போல் இந்த ரயிலில் அனைத்து சிறப்பு வசதிகளும் உள்ளன. நானும் இந்த ரயிலில் பயணம் செய்து ஷீரடி செல்ல வேண்டும் என ஆசை கொள்கிறேன். அது நடக்கிறதா என்று பார்ப்போம். நீங்களும் இந்த ரயிலில் பயணம் செய்து அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னை இங்கு அழைத்ததற்கு நன்றி என்றார்.

ஹரிகிருஷ்ணன், IRTS பேசும்போது

ஏன் தமிழில் பேச பண்ண வேண்டுமென்றால், தமிழுக்கு தான் நாம் தொண்டாற்ற வேண்டும் என்பதே என் குறிக்கோள். நான் மத்திய அரசு அதிகாரியாக இருந்தாலும் நான் செல்லும் கல்லூரி, நிறுவனம், அமைப்பு என எங்கு சென்றாலும் தமிழில் தான் பேசுவேன். ஐஆர்டிஎஸ் என்றால் என்ன? ஐஏஎஸ் தேர்வு என்றால் வெறும் ஐஏஎஸ் பதவிக்கு மட்டும் அல்ல ஐஏஎஸ், ஐஆர்எஸ், ஐபிஎஸ், இந்தியன் ஆடிட் அக்கவுண்ட் சர்வீஸ், இந்திய சிவில் அக்கவுண்ட் சர்வீஸ், என மொத்தம் 27 துறைகள் உள்ளன. அதில், ஒரு துறை தான் ஐஆர்டிஎஸ்.

இரயில்வேயில் மொத்தம் 4 வகையான சேவைகள் உள்ளன. அதில் முதன்மையானது ஐஆர்டிஎஸ் ஆகும். ரயில்வே துறையில் ஐஏஎஸ் என யாரும் இல்லை. ரயில்வே துறையை கட்டுப்படுத்துபவர் ஐஆர்டிஎஸ். இரயில்வே துறை இரண்டு வகைகளில் ஒன்று இயக்கம், மற்றொன்று வணிகம்.

நான் சேலம் கோட்டா பொறுப்பாளராக இருக்கிறேன், ஊட்டி வரை 15 மாவட்டங்கள் மற்றும் 99 ரயில் நிலையங்கள் என் கட்டுப்பாட்டில் இருந்தன. என்னைப் போலவே 67 மூத்த டிசிஎம்கள் இந்தியாவின் மொத்த வணிகத்தின் பொறுப்பாளர்களாக உள்ளனர்.

இந்தியாவில் 600+ மாவட்டங்கள் உள்ளன. ஆனால், அவர்கள் அதை இரண்டு இலக்க எண் 67 பாகமாக மட்டுமே பிரித்துள்ளனர். அவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கொரோனா இந்திய ரயில்வே மற்றும் இந்திய சுற்றுலா இரண்டையும் பாதித்துள்ளது. பின்னர், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 23 நவம்பர் 2021 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் “பாரத தேசத்திலுள்ள பழமை வாய்ந்த மற்றும் பெருமைவாய்ந்த சுற்றுலா தளங்களை இணைப்பதற்கு தனியார் பொறுப்புடன் யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியென்றால், இதற்கு முன் இந்த சுற்றுலா தளங்களை இணைக்கவில்லையா என்று கேட்டால், இதற்கு முன்பும் இணைக்கப்பட்டிருந்தது. அதை இணைத்தது ஐஆர்சிடிசி.

ஐஆர்சிடிசி என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, நாம் முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி செயலியையோ அல்லது இணையத்தளத்தையோ தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், எப்போதும் காத்திருப்பு பட்டியல் என்பது குறையாமலே இருக்கும். ஏனென்றால், அதிகபடியான தேவை இங்குள்ளது. அதற்கு ரயில்வேவும் ஈடு குடுக்க வேண்டியுள்ள காரணத்தால். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்ற முடிவு எடுக்கப்படுகிறது.

இந்திய ரயில்வேயில் மொத்தம் 18 பிரிவுகள் உள்ளன. ஆனால், 7 தனியார் நிறுவனங்கள் தென்னிந்தியாவில் மட்டுமே பதிவு செய்துள்ளன. அவர்களில் நான்கு பேர் என் பகுதியில் வந்தவர்கள். அந்த நான்கில் இருந்து இந்த நிறுவனம் தான் முதலில் தொடங்க முயற்சி எடுத்துள்ளது.

இவர்களின் இந்த முயற்சியை நான் ஒரு கதையாக சொல்ல ஆசைப்படுகிறேன். அதை பத்திரிகையாளர்களையே வைத்து சொல்கிறேன். ஒரு நாள், ஒருவர் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு வேலை கேட்டு செல்கிறார். அப்போது அங்கிருந்த அதிகாரி, உனக்கு நான் ஒரு இடம் சொல்கிறேன் நீ அங்கு சென்று செய்தியை சேகரித்து வா என்கிறார். “கப்பல் ஒன்றில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது, அதை செய்தியாக சேகரித்து வரவும்” என்று அவரை அனுப்புகிறார்.

இவரும் என்னடா இது கப்பலில் சுதந்திர தினம் கொண்டாடுவது எல்லாம் ஒரு செய்தியா என்று ஒரு சலிப்புடன் கிளம்பி செல்கிறார். மீண்டும் மாலையில் இவர் அலுவலகம் சென்றதும் அந்த அதிகாரி இவரிடம், செய்தி எங்கே என்று கேட்க, இவர் சுதந்திர தினத்தை கப்பலில் யாரும் கொண்டாடவில்லை. கப்பலில் ஓட்டை விழுந்து நீர் புகுந்து விட்டது. அனைவரும் நீரை வெளியேற்றுவதில் தீவிரமாக இருந்ததால் சுதந்திர தினமும் கொண்டாடவில்லை, எனக்கு செய்தியும் கிடைக்கவில்லை என கூறுகிறார்.

அதற்கு அவர், நீ செய்தி இல்லை என்று சொல்வதே ஒரு செய்திதானே? கப்பலில் ஓட்டை விழுந்து நீர் புகுந்து விட்டதால் யாரும் சுதந்திர தினம் கொண்டாடவில்லை என்பதே செய்தி தானே என்கிறார் அதிகாரி.

அது போல, பதிவு செய்த நால்வரில் இந்நிறுவனம் தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. அதுவும் இவர்கள் தேர்வு செய்த வழித்தடம் மிகவும் அதி முக்கியமான ஒன்று. ஷீரடி வழித்தடத்தை தான் இவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக வாராந்திர ரயில் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. அது சென்னை-ஷீரடி. ஆனால், அதற்கு முன் அவர்கள் இந்த தடத்தை பதிவு செய்துள்ளனர்.

ஜனனி ஐயர் கேட்டதுபோல், கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு, கடவுள் இருக்கிறார் என்பது தான் பதில். அவர் தான் நம்மை இங்கு இணைத்துள்ளார். ஷீரடிக்கு பலர் வெவ்வேறு இடங்களில் இருந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு நேரடி ரயில்கள் இல்லை. ஒன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் அல்லது இணைப்பு ரயில்களுக்காக பெங்களூரு செல்ல வேண்டும்.

கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் அனைத்தையும் கொங்கு மண்டலம் என குறிப்பிடுவோம். இந்த கொங்கு மண்டலத்தை இணைப்பதற்காக இவர்கள் இந்த வழித்தடத்தை தேர்வு செய்துள்ளார். இது சுற்றுலா தளத்தை இணைப்பதற்கான ஒரு திட்டம் என்பதால். இந்த ரயில் மந்திராலயம் வழியாக செல்லும். மக்கள் மந்திராலயம் ராகவேந்திரா சுவாமி கோவிலை தரிசிப்பதற்காகவே இந்த வழி.

ஐஆர்சிடிசி காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்குகிறது. ஆனால், அது ஒரு சாதாரண ரயில். இந்த முயற்சியில் நாங்கள் ரயிலை அவர்களிடம் ஒப்படைப்போம், அவர்கள் உட்புறங்களை மாற்றுவார்கள், பயணிகளுக்கான உணவு வசதி முதற்கொண்டு அவர்களே பார்த்துக்கொள்வர் மற்றும் நாங்கள் செய்யும் ஒரே வேலை, ரயிலை இயக்குவது மட்டுமே. நாங்கள் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேர அட்டவணையை வழங்குவோம். அதன் அடிப்படையில் ரயில் இயக்கப்படும். எனவே கொச்சி, ராமேஸ்வரம் மற்றும் சென்னையிலிருந்து ஷீரடிக்கு ரயில்கள் வரவுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சீசனில் மக்கள் தரிசிக்கும் திருப்பதி, சபரிமலை போன்ற கோவில்களை போல் ஷீரடி கோயில் இல்லை. குறிப்பிட்ட காலம் என இல்லாமல், அனைத்து காலத்திலும் மக்கள் ஷீரடிக்கு செல்வார்கள். அவர்கள் தங்கள் பயணத்தை எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த ரயிலின் சிறப்பு என்னவென்றால், முன்பதிவு ஐஆர்சிடிசியால் கட்டுப்படுத்தப்படவில்லை. டிக்கெட்டுகளைப் பெற, அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற வேண்டும். முக்கியமான ஒன்று இந்தியாவிலேயே தனியார் உதவியுடன் ரயில்களை இயக்கும் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தான் 7 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தனர். அதிலும், தமிழகத்தில் இருந்து இவர்கள் முதல் ரயிலை இயக்குவது தமிழ்நாட்டிற்கே பெருமை தரும் ஒரு விஷயமாக அமைந்துள்ளது.

இவ்வளவு பெரிய விஷயத்தை செய்வது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும். இது போன்று அடிக்கடி ரயில்வே குழு சந்திப்பிற்காக கூடுவார்கள். அப்போது, நான் தான் அவர்களின் சந்திப்பிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வேன். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை செய்து நம் அனைவரையும் இங்கு ஒன்றாக இணைத்திருக்கும் பாலாவிற்கு நான் கண்டிப்பாக நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் தான் இங்கு ஹீரோ.

ஜனனி ஐயர், நீங்கள் நடித்திருக்கும் இந்த விளம்பரப்படம் மிகச் சிறப்பாக உள்ளது. இயக்குனர் இதை அழகாக இயக்கியிருக்கிறார். தெகிடி படம் பார்த்தேன். அதில் மிக அழகாக நடித்திருந்தார் ஜனனி ஐயர். தெகிடி என்றால் என்ன அர்த்தம் என எனக்கு அப்போது தெரியாது. தெகிடி என்றால் பகடை என்று அர்த்தம். அதே போல் அவன்-இவன் படம் எதுகை மோனையோடு அமைந்த ஒரு படம். அந்த படத்திலும் மிக சிறப்பாக நடித்திருந்தார். இப்போது எடுக்கப்பட்ட இந்த விளம்பர படத்திலும் அழகாக நடித்திருக்கிறர் ஜனனி ஐயர். இந்த விளம்பரப் படம் நம்மை ரயிலுக்குள் கூட்டி செல்வது போல் அமைந்திருக்கிறது.

மிக குறுகிய காலத்தில் ரயிலை இயக்க பதிவு செய்ததிலிருந்து, குறுகிய காலம் என்றால், இராமாயணத்தில் கும்பகர்ண வரைபடம் இருக்கிறது. அதில், ஒருவர் பின் ஒருவராக, இந்திரஜித் முதற்கொண்டு அனைவரையும் அனுப்பி தோற்றுக் கொண்டே இருக்கிறார். அப்போது தான் ஞாபகம் வருகிறது நம் தம்பி ஒருவர் உறங்கிக் கொண்டிக்கிறாரே என்பது. அதற்கு பின் தான் கும்பகர்ணனை எழுப்புகிறார்கள். அப்போது தான் ராவணனிடம் கும்பகர்ணன் கேட்கிறார் என்ன நடக்கிறது என்பதை அதன் பின் கும்பகர்ணன் “நாம் படையை சிறுக சிறுக அனுப்பி தோற்பதற்கு பதிலாக நம் முழு படையையும் ஒன்றாக அனுப்பி ராமருடன் போர் செய்யலாம்” என ஆலோசனை கூறுகிறார்.

அதே போல், நாம் ஒரு விஷயத்திற்காக நம் சக்தியை சிறுக சிறுக செலவு செய்யக் கூடாது. முழுமையாக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்த நிறுவனமும் அப்படி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் வேலையும் போலீஸ், மிலிட்டரி போன்று சிரமமான வேலை தான். ஆனால், எங்களுக்கு சீருடை கிடையாது. எப்போதும் ரயில்களை இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பண்டிகை தினங்களில் கூடுதலாக சிறப்பு ரயில் இயக்க வேண்டியிருக்கும். எங்கள் வேலையும் மிகவும் கடினமானது. எங்களுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு இந்த நிறுவனமும் முழு செயல்பாட்டுடன் இருக்க அதற்கான வேலைகளை மிக குறுகிய காலத்தில் செய்துள்ளனர்.

வருகின்ற மே 17ம் தேதி அன்று இந்த ரயிலை இயக்க முடிவு செய்துள்ளனர். செவ்வாய்க் கிழமை இங்கு புறப்பட்டு, புதன் கிழமை மாலை அங்கு சென்றடையும். வியாழக்கிழமை அன்று பாபாவுக்கு உகந்த நாள் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. ஆகையால், தரிசனம் முடித்த பின் வியாழக்கிழமை அன்று மாலை புறப்பட்டு வெள்ளிக்கிழமை இங்கு வந்தடைவது போல் தான் பயணம் இருக்கும். இந்த குறுகிய காலத்தில் இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டை செய்தது மிகவும் கடினம். அதை செய்து முடித்திருக்கும் உமேஷ் அவர்களுக்கும் மற்ற குழு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். ஏனென்றால், அவர்களால் ரயில்வேக்கு பெருமை ரயில்வேயால் அவர்களுக்கு பெருமை. இது பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரு வழியாக இருக்கும் திட்டம். இதை மக்கள் அனைவரும் சரிவர பயன்படுத்த வேண்டுமென ரயில்வே துறை சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

திரு. உமேஷ் சிஇஓ பேசும்போது,

செய்தியாளர்கள், செல்வி.ஜனனி ஐயர், ஹரிகிருஷ்ணன் மற்றும் இந்த செய்திக்குறிப்பு மற்றும் சந்திப்புக்கு காரணமான எனது அன்பான தோழர்கள் ஆகிய உங்களை சந்திக்க ஒரு அற்புதமான மாலை இது. நாம் பயணித்த இந்த சில ஆண்டுகளில் மிகவும் சிரமப்பட்டும் கடுமையாக உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம்.

ஆனால், இன்னும் ஒன்றை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஜனவரி மாதம் நான் பாபாவை தரிசிக்க என் குடும்பத்துடன் ஷீரடி சென்றேன். எனது நிறுவனம் மூலம் பாபாவின் பக்தர்களை அவருடைய இடத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று நான் அப்போது நினைக்கவில்லை. இதற்கு மேல் பாபாவின் ஆசிர்வாதம் எப்படி கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

இது எங்களுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு, பத்திரிகை, ஊடகங்கள் அனைவரும் இந்த ரயிலை பற்றி மக்களுக்கு எடுத்துச் செல்வீர்கள் என்று நம்புகிறோம். மிஸ்டர் ஹரிகிருஷ்ணா கூறியது போல் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் முதல் ரயில் எங்கள் ரயில் என்பது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். பாலா மூலம் நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள் என்பதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

நாம் அனைவரும் ஒரு சார்ட்டெட் விமானம் வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால், சார்ட்டெட் ரயில் முற்றிலும் வேறு விதமான ஒன்று. ஹரிகிரிஷ்ணா அவர்கள் விவரமாக அனைத்தையும் உங்களுக்கு விளக்கிவிட்டார். இந்த ரயில் எப்படி இயங்கும், இந்த ரயிலின் வழித்தடம் என அனைத்தையும் தெளிவாக விளக்கிவிட்டார். பத்திரிகையாளர் அனைவரும் இந்த ஷீரடி சாய்பாபா சாய் சதன் எக்ஸ்பிரஸ் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய அன்பான வேண்டுகோள். பாபாவின் அருளுடன் நாம் கண்டிப்பாக வெற்றியடைவோம்.மென்மேலும் பல வழித்தடங்களில் ரயில் சேவையை துவங்குவோம் நன்றி என்றார்.

தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவுற்றது.

Actress Janani Iyer speech at Railway department event

நடிகர் விவேக் பெயரில் சாலை.; தமிழக முதல்வருக்கு உதயா நன்றி

நடிகர் விவேக் பெயரில் சாலை.; தமிழக முதல்வருக்கு உதயா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா காமெடியன்களில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விவேக்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுக்காலம் ரசிகர்களை தன் நகைக்சுவையாலும் சிந்தனை கருத்துக்களாலும் மகிழ்வித்து வந்த இவர் கடந்த 2021 ஏப்ரல் 17ல் மரணமடைந்தார்.

தற்போது ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார்.

விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு விவேக் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்து இருந்தார்.

அதன்படி நேற்று மே 1ஆம் தேதி சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்று அந்த சாலைக்கு பெயரிட்டனர்.

இந்த நிலையில் அரசாணை வெளிட்டு பெயரிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் உதயா.

அவரின் அறிக்கையில்….

உதயா,
திரைப்பட நடிகர்

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர்
உயர்திரு மு.க. ஸ்டாலின் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை.

பெருமதிப்பிற்குரிய ஐயா,

அன்பு வணக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் திரு விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சியில், அவரது கலை உலக மற்றும் சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக அவர் வாழ்ந்த சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அவரது நண்பனாகவும், சக நடிகராகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.

உடனடியாக அதை தங்களின் மேலான கவனத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் அண்ணன் திரு பூச்சிமுருகன் அவர்கள் எடுத்துச் சென்ற நிலையில், நடிகர் திரு விவேக் அவர்களின் குடும்பத்தினரும் தங்களை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் கோரிக்கைகள் போன்ற எந்த ஒரு விஷயத்திலும் எள்ளளவும் தாமதமின்றி எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயலாற்றும் தாங்கள் இந்த கோரிக்கையையும் உடனடியாக பரிசீலித்து நடிகர் விவேக் அவர்கள் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்டும் அரசாணையை வெளியிட்டுள்ளீர்கள்.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மாடர்ன் மனுநீதி சோழனாகவும், கலைஞர்களை கவுரவிப்பதில் அதியமானின் அப்டேடட் வெர்ஷனாகவும் உள்ளீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

எங்களது கோரிக்கையை ஏற்று சின்னக் கலைவாணர் விவேக் சாலை குறித்த அரசாணைக்காக *தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

என்றும் தங்கள் உண்மையுள்ள,

உதயா
திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்

Tamil Govt GO passed In Chennai road named late Actor Vivek

உங்க வீட்ல குட்டீஸ் இருக்காங்களா.? அப்படின்னா ‘துணிகரம்’ பாருங்க..

உங்க வீட்ல குட்டீஸ் இருக்காங்களா.? அப்படின்னா ‘துணிகரம்’ பாருங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்ச் சினிமாவில் எத்தனையோ கடத்தல் கதைகள் கூறப்பட்டுள்ளன. சில கடத்தல் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும். கடத்தல்காரர்களின் கொடூர செயல்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் பாலசுதன்.

குழந்தைக் கடத்தல் பின்னால் உள்ள கடத்தல் கும்பல்களின் துணிகரமான செயல்களும் அவர்களின் நெட்வொர்க்கும் எப்படிப்பட்டது என்று பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

புதிதாக உருவாகியுள்ள ‘துணிகரம்’ படத்தில் குழந்தைக் கடத்தல் கும்பல்களைப் பற்றி விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு தம்பதி மிக மிக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அந்த வாகனத்துக்குள் திடீரென்று ஒரு குழந்தைக் கடத்தல் கும்பல் ஏறிக் கொள்கிறது. அவர்கள் கண்ணெதிரே குழந்தை கடத்தப் பட்டு இருப்பதை அறிகிறார்கள். அவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்கள் தாங்கள் புறப்பட்ட படி மருத்துவமனைக்குச் சென்றார்களா? கடத்தப்பட்ட குழந்தை மீட்புக்கு ஏதாவது உதவி செய்தார்களா? என்பதே படத்தின் கதை.

இப்படி ஒரு குழந்தையின் கடத்தலைச் சுற்றிப் பயணிக்கின்ற திரைக்கதையே முழுப் படமாகி உள்ளது.

இப்படத்தை “ஏ4 மீடியா ஒர்க்ஸ் ” சார்பில் டாக்டர். வீரபாண்டியன் மற்றும் டாக்டர் .டெய்சி வீரபாண்டியன் தயாரித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

இயக்குநர் மிஷ்கினின் பாணியில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாக திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் பாலசுதன் கூறுகிறார்.

இப்படத்தின் கதையை டினோ எழுதியுள்ளார்.
படத்திற்கு ஒளிப்பதிவு- மெய்யேந்திரன் கெம்புராஜ், இசை – பி.ஷான் கோகுல்,
பாடல்கள் -கு. கார்த்திக், பி..ஷான் கோகுல்
,நடனம்- ராஜு , படத்தொகுப்பு – என். பிரகாஷ்.

“விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் துணிகரம் படத்தின் இரண்டாவது பாதியின் கதை முழுக்க ஒரு ஆம்புலன்சில் பயணிக்கிறது. விரைவாக ஓடும் ஆம்புலன்சுடன் கதையும் பரபரப்பாக ஓடுகிறது.

இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். இப்படம் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இளம் தம்பதியினருக்கும் மறக்க முடியாத படமாகவும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி ?அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் ஆபத்துக்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய படமாகவும் இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் பாலசுதன்.

‘துணிகரம் ‘ திரைப்படத்தை மே 6ஆம் தேதி உலகெங்கும் ஆக்சன் – ரியாக்சன் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

The first Indian In Ambulance survival thriller Thunikaram

More Articles
Follows