தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.கே.சுரேஷ்.
இயக்குனர் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
ஆர்.கே.சுரேஷ் – மது தம்பதியருக்கு 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆர்.கே.சுரேஷின் மனைவி மது இரண்டாம் முறை கர்ப்பமாகி வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்.கே.சுரேஷ் மற்றும் மது தம்பதிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆர்.கே.சுரேஷ் மற்றும் அவரது மனைவிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
actor rk.suresh wife madhu second child was born