“தனுஷை பார்த்து பொறாமை…” பிரசன்னா ஓபன் டாக்

“தனுஷை பார்த்து பொறாமை…” பிரசன்னா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush-and-Prasannaதனுஷ் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் பவர் பாண்டி.

இப்படத்தில் தனுஷுடன் ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங், ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பிரசன்னா பேசியதாவது…

“நிறைய கலைஞர்கள் சொல்ல மாட்டார்கள். நான் ஓபனாக சொல்கிறேன்.

தனுஷை பார்த்து, அவரின் ஒவ்வொரு திறமையையும் பார்த்து நான் பொறாமைப்பட்டுள்ளேன்.

இப்படத்தில் நடித்த போது என் அப்பாவை நினைத்து கொள்வேன்.

இந்தப் படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி” என்று பேசினார்.

விஜய் 61 படத்தின் அடுத்த கட்டம் இதுதான்…

விஜய் 61 படத்தின் அடுத்த கட்டம் இதுதான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 61 stillsஅட்லி இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார் இளையதளபதி.

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் 2ஆம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மார்ச் 27ம் தேதி இது தொடரும் என தெரிகிறது.

இதனையடுத்து, அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார்களாம்.

அது பிரான்ஸ் அல்லது அமெரிக்கா என கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விஐபி ராசியால் விஐபி2-க்கும் அதே சென்டிமெண்ட்… தனுஷ் முடிவு

விஐபி ராசியால் விஐபி2-க்கும் அதே சென்டிமெண்ட்… தனுஷ் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vip 2 movie stillsமுதன்முறையாக தனுஷ் இயக்கியுள்ள ‘பவர்பாண்டி’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

இப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து, சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2.

அண்மையில் சூட்டிங் நிறைவுபெற்று, தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் மே மாத இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை ஜூலையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

3 ஆண்டுகளுக்கு முன்பு, இதன் முதல் பாகம் ஜீலையில் வெளியாகி மாபெரும் பெற்றி பெற்றது.

எனவே அந்த சென்டிமெண்டில் ரிலீஸ் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படத்தில் தனுஷ் உடன் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சீன் ரோல்டன் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

அஜித் பட டைட்டில்… ஆச்சரியமூட்டும் சூப்பர் ஸ்டார்.

அஜித் பட டைட்டில்… ஆச்சரியமூட்டும் சூப்பர் ஸ்டார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohanlalஇருவேடங்களில் அஜித் நடித்து மாபெரும் ஹிட்டடித்த படம் வில்லன்.

தற்போது இதே பெயரில் உருவாகவுள்ள மலையாள படத்தில் மோகன்லால் மற்றும் விஷால் நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை உன்னி கிருஷ்ணன் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் சமயத்தில் தன் நீண்ட கால ஆசையை நிறைவேற்றி இருக்கிறாராம் மோகன்லால்.

இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல், சைக்கிளிலில் பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆசையாம்.

அதன்படி இவர் இரவு நேரத்தில் செல்ல, அதை படம்பிடித்த சிலர் இணையங்களில் பதிவேற்றி விட்டனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அட… இப்படியும் ஒரு சூப்பர் ஸ்டாரா..? என்று வியந்து வருகின்றனர்.

பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரனுக்கு ரஜினி ஆதரவு..?

பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரனுக்கு ரஜினி ஆதரவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini-and-gangai-amarenமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி அவர் வென்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் பாஜக சார்பாக பிரபல இசையமைப்பாளருமான இயக்குனருமான கங்கை அமரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பாஜக வெகுநாட்களாக ரஜினியின் ஆதரவை பெற முயற்சித்து வருகிறது.

இதனால் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

ரஜினியின் 2.0 படத்தின் பாடல் பற்றிய தகவல்கள்

ரஜினியின் 2.0 படத்தின் பாடல் பற்றிய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 poitn 0லைக்கா நிறுவனத்திற்காக ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் உள்ள ஒரு இறுதி பாடலை ஹைதராபாத்தில் படமாக்கவிருக்கிறார்களாம்.

இதற்காக செட் போடும் பணிகளும் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் எமி ஜாக்சன், அக்சய்குமார் உள்ளிட்டோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

More Articles
Follows