தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எங்கேயும் எப்போதும், சென்னை28, வடகறி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய்.
இவர் நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார்.
மது போதையில் தனது ஆடி சொகுசுக்காரில் மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்றுள்ளார்.
அடையாறு பாலம் அருகே வந்தபோது இவரது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.
விபத்து பற்றி பொதுமக்கள் வந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸாருக்கு புகார் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஜெய் மீது காரை வேகமாக ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் அவரது ஆடி காரையும் பறிமுதல் செய்து திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நடிகர் ஜெய்யை போலீஸார் கைது செய்து சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர்.
மேலும் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாத காலம் ரத்து செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.