‘கமல் சொன்னது சரி; ரஜினி செய்வது அவர் இஷ்டம்..’ சமுத்திரக்கனி

‘கமல் சொன்னது சரி; ரஜினி செய்வது அவர் இஷ்டம்..’ சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajini meetசமுத்திரகனி இயக்கி நடித்துள்ள தொண்டன் படம் அண்மையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமுத்திரக்கனி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது…

’மத்திய அரசு சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.

அதுகுறித்த கமல் தெரிவித்த கருத்துக்கள் சரியானதுதான்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது இஷ்டம்.

அரசியலுக்கு யார் வேண்டும்? யார் வேண்டாம்? என மக்கள் முடிவு செய்யட்டும்” என்றார்.

தற்போது ரஜினியுடன் காலா படத்தில் சமுத்திரக்கனி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Actor Director Samuthirakani talks about Kamal and Rajini

கண்தானம் செய்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் விஜய்சேதுபதி

கண்தானம் செய்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay Sethupathi donated his eyesமதுரை, மாட்டுத்தாவணியில் புதிதாக உருவாகியுள்ள தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய்சேதுபதியும், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில்…

‘நமது உடம்புக்கு ஒன்றென்றால் இருவரைத்தான் நாம் நம்புகிறோம். ஒருவர் கடவுள். மற்றொருவர் மருத்துவர்.

இந்த இருவரும் நமது வாழ்க்கைப்போக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நம் உடலின் முக்கிய அங்கமாகத் திகழும் கண்ணைக் காக்கவும்.

இயலாத ஏழைகளுக்கு அந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும்’ என்றார்.

அப்போது தன் கண்களை தானம் செய்வதாக அறிவித்தார்.

Actor Vijay Sethupathi donated his eyes

vijaysethupathi donates his eyes

நிதியமைச்சருக்கு கமல்ஹாசனின் பணிவான கோரிக்கை

நிதியமைச்சருக்கு கமல்ஹாசனின் பணிவான கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal stillsவருகிற 2018 ஜீலை முதல் இந்தியளவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

இதனால் எல்லா பொருட்களும் விலையும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சினிமா உள்ளிட்ட ஆடம்பர செலவுகளுக்கு 28% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக கமல் குரல் கொடுத்து வருவதை நாம் பார்த்தோம். இந்நிலையில் மீண்டும் தன் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான ஒரு கோரிக்கையை கமல் பதிவிட்டுள்ளார்.

அதில்… “பிராந்திய மொழிப்படங்களைக் காக்க மத்திய அரசின் ஜிஎஸ்டி குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை, வற்புறுத்தலாக கருதாமல், பணிவான கோரிக்கையாக மத்திய நிதியமைச்சர் கருத வேண்டும் எனவும் அதில் கமல் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Not pressurising. It’s a plea & SOS from regional cinema to our FM We fear it will collapse.We request the council to do all to save it.

ஹாலிவுட் பட போஸ்டரை காப்பியடித்த வேலைக்காரன்

ஹாலிவுட் பட போஸ்டரை காப்பியடித்த வேலைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Falling_Down_(1993_film)_posterமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் வேலைக்காரன்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியானதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் அதே போன்ற ஒரு டிசைனில் உள்ள மற்றொரு ஹாலிவுட் படத்தின் போஸ்டரும் தற்போது கிடைத்துள்ளது.

ஃபாலிங் டவுன் என்ற பெயரிடப்பட்ட இப்படம் கடந்த 1993ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆகியுள்ளது.

Michael Douglas, Robert Duvall, Barbara Hershey உள்ளிட்டோர் நடித்த இப்டத்தை Joel Schumacher இயக்கியிருந்தார்.

அப்படத்தின் போஸ்டரில் அவர் ஒரு கையில் சூட்கேசும் மறுகையில் துப்பாக்கியும் வைத்துள்ளார்.
வேலைக்காரன் போஸ்டரில் துப்பாக்கி பதிலாக அருவாள் இருக்கிறது.

எனவே இந்த இரு போஸ்டர்களையும் இணைத்து படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Falling Down poster copy cat by Velaikkaran first look poster

velaikkaran copy cat

சூப்பர்ஸ்டார் படத்திற்கு எதிர்ப்பு; ஆதரவு கரம் நீட்டிய மோடி

சூப்பர்ஸ்டார் படத்திற்கு எதிர்ப்பு; ஆதரவு கரம் நீட்டிய மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahabharatham mohanlalபாகுபலி படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சரித்திர கால படத்தை தயாரிக்க பலரும் முன்வந்துள்ளனர்.

இதில் எவருமே எதிர்பாராத வகையில் மகாபாரத கதையை ரூ. 1000 கோடியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் பி.ஆர்.ஷெட்டி.

எம்.டி.வாசுதேவனின் விருது பெற்ற பிரபல நாவலான ரண்டாமூழம் என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் பீமன் வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க மற்றொரு கேரக்டரில் நாகார்ஜீனா நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திதை மகாபாரதம் என்ற பெயரில் வெளியிடக்கூடாது என கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே, இப்படத்தை இந்தியாவில் ரண்டாமூழம் என்ற நாவலின் தலைப்பிலும், உலகம் முழுவதும் மகாபாரதம் என்ற பெயரிலும் திரையிடவிருக்கிறார்களாம்.

இதே வேளையில் தயாரிப்பாளர் பி.ஆர். ஷெட்டிக்கு தனது முழு ஆதரவை தருவதாக கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

அதில்.. “நமது தேசத்தின் பெருமையை சொல்லப்போகும் மகாபாரதம் படத்தினை காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழு வருகிற ஜூலை 7 ம் தேதி பிரதமரை சந்திக்கவிருக்கிறார்களாம்.

இரண்டு பாகங்களாக தயாராகவுள்ள இப்படத்தின் சூட்டிங் அடுத்த 2018ம் ஆண்டு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

Prime Minister Modi supports Rs 1000cr movie Mahabharata and calls it pride of the India

காலா படத்தில் ரஜினியுடன் இணையும் மம்மூட்டி.?

காலா படத்தில் ரஜினியுடன் இணையும் மம்மூட்டி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kaala mammotyரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் ஹீமா குரேஷி, அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இதில் கௌரவ தோற்றத்தில் இளவயது ரஜினியாக தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் மிக முக்கிய கேரக்டரில் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி நடிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் படத்தின் நாயகி ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட திரைக்கதை பேப்பரில் இருந்து கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கதைப்படி ஒரு சில காட்சிகளில் சட்ட மாமேதை பீம்ஜி என்றழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் தோன்றுவாராம். (பழைய காலத்தில்)

அந்த கேரக்டரில்தான் மம்மூட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். எனவேதான் அவரை தேர்வு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த 1991ஆம் ஆண்டே தளபதி படத்தில் ரஜினியும் மம்முட்டியும் இணைந்து நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Rajinikanth and Mammootty to come together after 25 years for Kaala movie

Rajinikanth and Mammootty to come together after 25 years for Kaala movie

More Articles
Follows