3 படம் சூட்டிங்… 3 படம் ரிலீஸ்..; வேற ‘மாரி’ வேகம் காட்டும் தனுஷ்

DhanushD43 என்ற தற்காலிக படத்தலைப்பில் நடித்து வருகிறார் தனுஷ்.

விரைவில் இப்பட தலைப்பு வெளியாகும் என தனுஷ் அறிவித்திருந்ததை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

சத்யஜோதி தயாரித்து வரும் இந்த படத்தை கார்த்திக் நரேன் டைரக்டு செய்கிறார்.

கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் இருவரும் நடிக்க இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்க தாணு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ என்ற புதிய படத்திலும் தனுஷ் நடிக்கிறார்.

இதனையடுத்து ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இந்த படங்கள் ஒரு புறம் தயாராக மறுபுறம் தனுஷின் 3 படங்கள் ரிலீசுக்கு ரெடியாகவுள்ளன.

அதன் விவரம் வருமாறு…

பேட்ட படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இதில் தனுஷுடன் ஐஸ்வர்ய லட்சுமி & சஞ்சனா நடராஜன் நடிக்க்ஒய்நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரித்து இருக்கிறார்.

‘கர்ணன்’ படத்தை மாரிசெல்வராஜ் டைரக்டு செய்ய, எஸ்.தாணு தயாரித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜினா விஜயன் நடித்துள்ளார்.

‘அந்த்ரங்கிரே’ (ஹிந்தி) படத்தை ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்து இருக்கிறார்.

இவர் தனுஷின் முதல் ஹிந்திப்படமான ‘ராஞ்சனா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush’s next movie updates

Overall Rating : Not available

Latest Post