சங்கத்தமிழன் பிரச்னை என்ன நடந்தது?; லிப்ரா நிறுவனம் விளக்கம்

சங்கத்தமிழன் பிரச்னை என்ன நடந்தது?; லிப்ரா நிறுவனம் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanga thamizhanகிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம்

இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் திரு.சுந்தர் , திருமதி .பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்

இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் திரு.அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய திரு. JSKகோபி , திரு.தேணாண்டாள் முரளி , திரு H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்

இதுவரை இல்லாத அளவு இந்த படத்தை மிகப்பிரமாண்டமாக ரிலிஸ் செய்யலாம் என்று போராடிக்கொண்டிருக்கும் போதே , படத்திற்கு நெல்லையில் தடை , லிப்ராவிற்கு டெப்ஸிட் , இடையே திடீரென்று எங்கள் நாயகன் திரு. விஜய்சேதுபதி அவர்களின் என்றும் தீரா பிரச்சனை என்ற இண்டர்வியூ இவற்றிற்கிடையே எங்களுடைய ஒரே நோக்கம் படத்தை வெளிகொண்டுவருவது மட்டுமே

ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் எத்தனை இடைஞ்சல்கள் , கேலிகள் , அவமானங்கள் , புறக்கணிப்புகள் ஆனால் எது நடந்தாலும் இந்த லிப்ரா புரொடக்சன்ஸ் கொண்ட கருத்தில் மாறப்போவது இல்லை

ஒருத்தங்க மேல ஈசியா குற்றச்சாட்டை சொல்லிவிட்டு கேலிசெய்துவிட்டு போய்விடலாம் , ஆனா அவர்களுக்கான பதிலை காலம் நின்றுசொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது எங்களுக்கு, எங்களுடைய ஒரே நோக்கம் எடுத்த வேலையை ஒழுங்காக செய்து அதை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வது மட்டுமே அதை எப்போதும் லிப்ரா செய்துகொண்டுதான் இருக்கும்

நன்றி
இவன்

#LIBRAProduction

தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி

தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakani and rajamouliநடிகர்கள் ஜீனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஆர்ஆர்ஆர்.

இந்த படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார்.

எனவே சமுத்திரகனி 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

இதனையடுத்து ரவி தேஜா நடிக்கவுள்ள வேறு ஒரு படத்திலும் அவருக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறாராம் சமுத்திரக்கனி.

இதனை கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தில் ரவி தேஜா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடிக்க அந்த படத்தை சமுத்திரகனி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் வரும்..- ஐசரி கணேஷ்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் வரும்..- ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ishari ganeshபுதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் கல்வியாளரும் நடிகரும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் நடிகர் சங்கம் தேர்தல் முடிவு குறித்து கேள்விகள் எழுப்பினர்.

நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது எங்கள் புகார்.

சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை.

நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன். “ எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பினராய் விஜயன் வேடத்தில் மம்மூட்டி

முதல்வர் பினராய் விஜயன் வேடத்தில் மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mammoottyஎந்த ஒரு வேடம் என்றாலும் அதில் எந்த விதமான ஈகோவும் இல்லாமல் தன் நடிப்பால் மிரள வைப்பவர் நடிகர் மம்முட்டி.

இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறாராம் மம்முட்டி.

இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்க்கையை ஒன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கவுள்ளனர்.

இந்த படத்தில் பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார்.

சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்க ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ரூ.50 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாராகவுள்ளது.

இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்முட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 வருடத்திற்கு பிறகு அஜித்துடன் இணையும் வடிவேலு..?

18 வருடத்திற்கு பிறகு அஜித்துடன் இணையும் வடிவேலு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu ajithஎச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த பட சூட்டிங் வருகிற நவம்பர் 24ம் தேதி தொடங்கவுள்ளது.

இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக உள்ளதால் அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், அஜித்துடன் இணைந்து வடிவேலு நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது.

எழில் இயக்கத்தில் அஜித்தும் வடிவேலுவும் இணைந்து ‘ராஜா’ படத்தில் நடித்திருந்தனர்.

அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு ஐகோர்ட் தடை

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு ஐகோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan in Heroபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ள படம் ஹீரோ.

சமுமூகத்தில் நடக்கும் அவலங்களை அடையாளம் கண்டு அதற்கு காரணமானவர்களை தோலுரிக்க முகமூடி அணிந்த ஒருவனாக வருகிறார் இந்த ஹீரோ.

இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.

கிறிஸ்மஸ் விருந்தாக அடுத்த மாதம் டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் வெளியிட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில்கடந்தாண்டுடி.ஆர்.எஸ். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜ 10 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

அதற்குரிய வட்டியையும், அசல் பணத்தையும் அவர் திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதோடு, இந்த படத்தை கேஜேஆர் நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளார்.

எனவே டிஆர்.எஸ். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதாவது ஹீரோ உள்பட 24 ஏ.எம்.நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று டிஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கில் ஹீரோ படத்திற்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஹீரோ படத்தை தயாரிக்கும் கேஜேஆர் நிறுவனம் நிச்சயம் படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என அறிவித்துள்ளது.

More Articles
Follows