புறநானூற்று பாடல் வரியை தன் படத்தலைப்பாக்கிய மக்கள் செல்வன்

புறநானூற்று பாடல் வரியை தன் படத்தலைப்பாக்கிய மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay sethupathiஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த கேரக்டர் என்றாலும் தயங்காமல் நடித்து பெயர் வாங்கி விடுபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

இவர் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் நவம்பர் 15ல் வெளியாகிறது.

ஜெனநாதன் இயக்கும் லாபம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதியின் 33வது படத்தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் வாக்கியம் சங்கக்கால புலவர் கனியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடலில் உள்ள வார்த்தையாகும்.

இணையத்தில் ட்ரெண்டாகும் அட்லி & ஷாருக்கான் படத்தலைப்பு

இணையத்தில் ட்ரெண்டாகும் அட்லி & ஷாருக்கான் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shah rukh khan and atleeஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி.

அதன்பின்னர் ராஜா ராணி என்ற படத்தை இயக்கிய ஒட்டு மொத்த காதலர்களையும் கவர்ந்தார்.

இதனையடுத்து விஜய்யின் தெறி படத்தை இயக்கினார். இந்த படம் ஹிட்டடிக்கவே விஜய்யின் மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

பிகில் படம் தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனிடையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை அட்லி இயக்கவுள்ளதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

தற்போது அது உறுதியாகியுள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.

இந்த படத்திற்கு சங்கி என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆகிறது.

நவம்பர் 2ஆம் தேதி ஷாரூக்கான் பிறந்தநாள் அன்று பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இது நிஜமா? அல்லது பொய்யா? விரைவில் தெரியவரும்.

Sanki என்றால் ‘சாதாரணமானவன் அல்ல’ என்று பொருள் உள்ளதாம்.

ஹரீஷ் கல்யாணின் “தனுஷு ராசி நேயர்களே” படத்தில் அனிருத் குரலில் துள்ளலான மெலடி !

ஹரீஷ் கல்யாணின் “தனுஷு ராசி நேயர்களே” படத்தில் அனிருத் குரலில் துள்ளலான மெலடி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhஇன்றைய தமிழ் சினிமா இசை உலகின் இளமை அடையாளமாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அனிருத். தொடர் ஹிட் ஆல்பங்களை தந்துவரும் அவர் தன் குரல் மூலமும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இளம் தலைமுறையினர் அவர் குரலினை கொண்டாடி வருகின்றனர். மெலடி, ராப் என எந்தவகை இசைக்கும் ஒத்துப்போகக் கூடிய குரல் அவருடையது. அவர் குரல் உலகம் முழுதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியதாய் இருக்கிறது. தற்போது அனிருத் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கும் ஹரீஷ் கல்யாணின் “தனுசு ராசி நேயர்களே” படத்தில் ஒரு இளமை துள்ளும் பெப்பி மெலடி ஒன்றை பாடியிருக்கிறார்.

இது பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…
கொண்டாட்டம், குத்துப்பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என
எந்த ஒரு சூழலை எடுத்துக்கொண்டாலும் அனிருத் அங்கே பொருந்தக்கூடிய திடகாத்திர குரல் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குரலால் பாடல் வரிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி பாடலை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறார். அவருடைய அத்தனை ஆல்பத்திலும் அவர் பாடிய பாடல்களிலும் தனித்தன்மையை கண்டிருக்கிறேன். எனது சிக்சர் அவர் பாடிய பாடலுக்கு பிறகு மீண்டும் எனது ஸ்டூடியோவில் அவர் குரலை பாடல் பதிவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இப்பாடல் கதையின் முன்னணி பாத்திரம் தன் வாழ்வின் சரியான துணையை தேடி பாடும் பாடலாக படத்தில் வருகிறது. கு. கார்த்திக் மிக எளிமையாகவும் அதே நேரம் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் வரிகளில் பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் உருவாகிய மொத்த தருணமும் கொண்டாட்டமானதாக இருந்தது. ரசிகர்களும் பாடலை அதே போல் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். “தனுஷு ராசி நேயர்களே” படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகிய இரு நாயகிகளும் மிளிரும் நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

படத்தின் ஷீட்டிங் முடிவுற்ற நிலையில் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மிக விரைவில் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

கதிரின் ‘ஜடா’ படத்திற்காக சாம் இசையில் அனிருத் பாட்டு

கதிரின் ‘ஜடா’ படத்திற்காக சாம் இசையில் அனிருத் பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh croons for Kathir in Jada movie Sam CS Musicஇசையமைப்பாளர் அனிருத் பாடும் பாடல்களுக்கு வரவேற்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

அவர் பாடிய “யாஞ்சி” மற்றும் “கண்ணம்மா” பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது …… அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் சாம் CS இசையில் ” ஜடா” படத்திற்காக பாடியிருக்கிறார்.

கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்கும் படத்தை பொயட் ஸ்டூடியோ தயாரித்திருக்கிறது. கால்பந்தாட்ட வீரனைப் பற்றிய படத்திற்கு இசையமைத்திருப்பவர் சாம் CS.

இந்தப்படத்தில் முக்கியமான ஒரு பாடலை அனிருத் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் அனிருத்தை அணுகியிருக்கிறார்கள்.

அனிருத்தும் பாடலின் டியூனைக்கேட்டு உற்சாகமாகி பாடலை பாடிக்கொடுத்துள்ளார்.

பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளதால் இசையமைப்பாளர் சாம்CS உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தில் சிறப்பான இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் CS அடுத்து வெளிவரவிருக்கும் “ஜடா” படத்திற்கும் சிறப்பான இசையை கொடுத்துள்ளார்

விரைவில் வெளியாகவிருக்கும் ஜடா படத்தின் குழுவினர் உற்சாகத்தில் உள்ளனராம்.

Anirudh croons for Kathir in Jada movie with Sam CS Music

ஒரே நாளில் மோதும் சூர்யா கார்த்தி சிவகார்த்திகேயன் படங்கள்

ஒரே நாளில் மோதும் சூர்யா கார்த்தி சிவகார்த்திகேயன் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Karthi and Sivakarthikeyan movies clash on December 2019சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

இப்படத்தை இறுதிச் சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்க ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்டில் தயாரித்துள்ளார்.

சூர்யாவுடன் அபர்ணா முரளி, கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷ்ரோஃப், மோகன் பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் பர்ஸ்ட் லுக் நவ.11ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்த படம் கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர்.20ம் தேதி ரிலீசாக வாய்ப்புள்ளது.

இதே தேதியில் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி, இவானா நடித்துள்ள ‘ஹீரோ’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது.

இத்துடன் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடித்துள்ள படமும் வெளியாகிறது.

இவர்களுடன் சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Suriya Karthi and Sivakarthikeyan movies clash on December 2019

அல்லு அர்ஜுனுக்கும் வில்லனாகிய மக்கள் செல்வன்

அல்லு அர்ஜுனுக்கும் வில்லனாகிய மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi play the baddie in Allu Arjuns filmமுன்னணி நடிகராக இருந்தபோதே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் உப்பெண்ணா படத்தில் வில்லன் வேடம் ஏற்று இருக்கிறாராம் மக்கள் செல்வன்.

இந்த நிலையில் அல்லுஅர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்திலும் வில்லனாக கமிட் ஆகியுள்ளார்.

ராஷ்மிகா நாயகியாக நடிக்க ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய சுகுமார் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படம் தெலுங்கில் விஜய்சேதுபதியின் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi play the baddie in Allu Arjuns film

More Articles
Follows