இந்தியாவில் இதுவரை இந்த முயற்சிகள் இல்லை.; ‘அடியே’ குறித்து ஆச்சரியத்தில் கௌரி

இந்தியாவில் இதுவரை இந்த முயற்சிகள் இல்லை.; ‘அடியே’ குறித்து ஆச்சரியத்தில் கௌரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’.‌

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.‌

இதன்போது படத்தின் தயாரிப்பாளர் பிரேம்குமார், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார், நடிகை கௌரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன், நடிகர் மதும்கேஷ் பிரேம் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில்…

‘ எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படமான ‘அடியே’ திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றியடையும். ஏனெனில் வித்தியாசமான திரைப்படமாக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தலைமையிலான குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடித்த அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். குறிப்பாக ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. கேட்கும் பொழுதெல்லாம் எந்த தடையும் இல்லாமல் முழு மனதுடன் வருகை தந்து நடித்துக் கொடுத்தார்.

ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கினர். தொடர்ந்து நல்ல படங்களை வழங்கி தமிழ் திரையுலகில் தரமான தயாரிப்பு நிறுவனமாக எங்கள் நிறுவனம் வளரும். இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில்…

‘ அடியே என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த வாய்ப்பை அளித்ததற்காக மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது வித்தியாசமான படம். பேரலல்யுனிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்தியாவில் இதுவரை இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்தப் படத்தின் கதை சிக்கலானது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனத்தின் முழுமையான ஒத்துழைப்பால், இப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் நன்றி.

என் வாழ்க்கையில் எப்போதும் எதிர்பாராமல் தான் அனைத்தும் நடந்திருக்கிறது. 96 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை போல்.. இந்த திரைப்படத்திலும் ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.

பொதுவாக கதைகளை கேட்டு பொறுமையாக தான் தேர்வு செய்து நடிப்பேன். ஆனால் அடியே படத்தின் கதையை முழுமையாக கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதற்கு மற்றொரு காரணம் ஜீ. வி. பிரகாஷ் குமார். அவருடைய இசைக்கு நான் ரசிகை. அவருடைய இசைக்கு அனைவரும் ரசிகர்கள் என்றாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கும்.

அவருடன் இணைந்து நடித்தது மறக்க இயலாத வித்தியாசமான அனுபவம். இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயரில் பாடல் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் என்னுடைய திரையுலக பயணத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ஆகஸ்ட் 25ஆம் தேதி இப்படம் வெளியான பிறகு ரசிகர்களிடத்தில் என்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என நம்புகிறேன்.

இந்த திரைப்படத்தில் வெங்கட் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான் அவருடைய ரசிகையும் கூட அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறோம். இது வித்தியாசமாக இருந்தது.‌

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கோகுல், மிகவும் சிக்கலான இந்த கதையை எளிமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் மதும்கேஷ் பிரேம் புதுமுக நடிகராக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு முன் நான் புது முகமாக நடிக்கும் போது சந்தித்த அனைத்து சவால்களையும் அவரும் எதிர்கொண்டார்.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு மக்கள் திரையரங்கிற்கு வருகை தருவது அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தை காண திரையரங்கத்திற்கு வருகை தந்தால், ஒரு புதிய படைப்பை கண்டு ரசிக்கும் அனுபவம் கிடைக்கும். ” என்றார்.

Adiyae attempt first time in India says Gowri

‘டாடா’ கணேஷ் K பாபுவின் அடுத்த அதிரடி.; ‘போர் தொழில்’ – ‘குட்நைட்’ – ‘யாத்திசை’ இயக்குனர்கள் வாழ்த்து

‘டாடா’ கணேஷ் K பாபுவின் அடுத்த அதிரடி.; ‘போர் தொழில்’ – ‘குட்நைட்’ – ‘யாத்திசை’ இயக்குனர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும் “ரேவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, S. S. லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ராக்ஃபோர்ட் என்ட்டெயின்மென்ட் முருகானந்தம், அருண் விஷ்வா, விநியோகஸ்தர் கோவை அரவிந்த் மற்றும் ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா, ‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராஜேந்திரன், ‘குட்நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

மாறுபட்ட களத்தில் புதுமுகங்களின் தற்கால நவீன தலைமுறையின் கதை சொல்லும் திரைப்படமாக “ரேவன்” படம் உருவாகிறது.

‘டாடா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் கணேஷ் K பாபு கதை திரைக்கதை எழுத, அவரது இணை இயக்குநராக பணியாற்றிய, கல்யாண் K ஜெகன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ரேவன்

அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர் கே பாக்யராஜ், VTV கணேஷ், வீரா, இந்துமதி, பா. அருணாச்சலேஸ்வரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஒரே கட்டமாக படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழுப்படப்பிடிப்பும் நடக்கவுள்ளது.

“ரேவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

*தொழிழ் நுட்ப குழு விபரம்*

தயாரிப்பு நிறுவனம் – MG STUDIOS
தயாரிப்பு – APV. மாறன், கணேஷ் K பாபு.
இயக்கம் – கல்யாண் K ஜெகன்
கதை, திரைக்கதை – கணேஷ் K பாபு.
ஒளிப்பதிவு – ரவி சக்தி
இசை அமைப்பாளர் – மனு ரமீசன்
எடிட்டர் – கதிரேஷ் அழகேசன்
கலை இயக்கம் – சண்முக ராஜா
நிர்வாக தயாரிப்பு – மீனா அருணேஷ்
ஒலி வடிவமைப்பு – அருணாசலம் சிவலிங்கம்
ஸ்டன்ட் – நைஃப் நரேன்
டிசைன்ஸ் – விக்ராந்த்
ஆடை வடிவமைப்பாளர் – காயத்திரி பாலசுப்பிரமனியன்
ஸ்டில்ஸ் – குமரேசன்
சிஜி – NxGen Media
மக்கள் தொடர்பு – திருமுருகன், பரணி அழகிரி

ரேவன்

Ajay Karthik and Anjana starrer Raven

ரஹ்மான் இசையில் ரொமான்டிக் கதையில் இணையும் ஜெயம் ரவி – கிருத்திகா உதயநிதி

ரஹ்மான் இசையில் ரொமான்டிக் கதையில் இணையும் ஜெயம் ரவி – கிருத்திகா உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைலண்டாக பல தரமான படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ‘சைரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் ‘இறைவன்’ என்ற ஒரு படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ‘ஜீனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஜெயம் ரவி.

இதில் நாயகியாக நித்யா மேனன் நடிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படம் ரொமான்டிக் கதையாக உருவாகிறதாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஆகஸ்ட் 21 தேதி தொடங்கியது.

Krithiga Udhayanidhi and Jayam Ravi teams up for first time

பெரிய கப்பல்கள் நடுவே கிழித்துச் செல்லும் படகு ‘நூடுல்ஸ்’.; சுரேஷ் காமாட்சி நம்பிக்கை

பெரிய கப்பல்கள் நடுவே கிழித்துச் செல்லும் படகு ‘நூடுல்ஸ்’.; சுரேஷ் காமாட்சி நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கிய படம் ‘நூடுல்ஸ்’. தம்பி அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியிடுகிது.

நிறைய நண்பர்கள் ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கவனம் செலுத்தலாமே? எனக் கேள்வி கேட்டதுண்டு.

சிலருக்கு சினிமா மோகம். சிலருக்கு சினிமா தாகம்.

நமக்கு கொஞ்சம் தாகம் அதிகம். முரண்களைப் பார்த்தே வளர்ந்துவிட்டதால் முரண்களில் பயணப்படுவது பிடிக்கும்.

ஏழு கடல் ஏழு மலை, ராஜாகிளி, உயிர் தமிழுக்கு, வணங்கான் என பெரிய படங்களுக்கு நடுவே நூடுல்ஸ் என்ற சமூக பொறுப்புள்ள ஒரு படத்தின் மீதும் கண் விழுந்தது.

நிச்சயம் பார்ப்பவர்களை ஏமாற்றாது என்ற நம்பிக்கை வந்த பிறகே படத்தின் மீது கைவைத்தேன்.

இயக்கம், நடிப்பு என எல்லா பக்கமும் கைதேர்ந்து படைத்திருக்கிறார்கள் இந்த நூடுல்ஸை.

சிறிய படம்… சின்ன நடிகர்கள் என்பதை மீறி இப்படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மிக மிக அவசரம் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போன்ற தாக்கத்தை இப்படமும் ஏற்படுத்தும் என வலுவாய் நம்புகிறேன்.

பெரும் படங்களின் மார்க்கெட்டிங் கப்பல்களுக்கு நடுவே இந்த கிழித்துச் செல்லும் படகையும் களம் காண வைக்கிறோம்.

உங்கள் பேராதரவு எனும் காற்று வீசி எங்கள் படகை கரை சேர்ப்பீர்கள் எனும் பெரும் நம்பிக்கையுடன் செப்டம்பர் 8 -ல் திரைவருகிறோம்.

ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்யுங்கள். நன்றி…

– சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர் / இயக்குநர்.

Producer Suresh Kamatchi confidence on Noodles

குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ் நாயகனார்.; பாக்யராஜ் – ஆர்வி. உதயகுமார் வாழ்த்து

குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ் நாயகனார்.; பாக்யராஜ் – ஆர்வி. உதயகுமார் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘ரங்கோலி’. இதில் அமரேஷ் – பிரார்த்தனா ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

தயாரிப்பாளர் சதீஷ் குமார் சாருக்கு ஒரு நல்ல நண்பர் மற்றும் இணை தயாரிப்பாளராக இருந்த பாபு ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர் அழகப்பன் மற்றும் இயக்குநர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கதாநாயகன் ஹமரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் கதாநாயகனாக வலம் வருவார்.

நான் படம் பார்க்க வேண்டிய வாய்ப்பு இருந்தது ஆனால் தவற விட்டுவிட்டேன். படத்தின் டிரெய்லரைப் பார்தேன் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று தெரிகிறது. இயக்குநர் அழகாகப் படத்தை இயக்கியுள்ளார்,

ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் இணைந்து ஒரு அழகான காவியத்தைக் கொடுத்துள்ளனர். கண்டிப்பாகப் படம் வெற்றி பெறும் ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி.

ரங்கோலி

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது…

இந்த படத்தைப் பலரும் பார்த்து விட்டனர் என்று கேட்டதும் என்னை ஏன் கூப்பிடவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் பலரது பள்ளிப் பருவத்தை ஞாபகப்படுத்த போகிறது. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்து, அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர்.

எனக்கும் என் பள்ளிப் பருவம் ஞாபகம் வந்தது. கதாநாயகன் ஹமரேஷ் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும், வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அதுவே முக்கியம். இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு நல்ல படத்தை அழகாக உருவாக்கியுள்ளீர்கள். ஏ எல் அழகப்பன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளனர்.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார்.

ரங்கோலி

Child Artist Amaresh now became lead in Rangoli

‘ரங்கோலி-யில் அழகப்பன் பேரன் அறிமுகம்.; வாழ்த்திய மாமாக்கள் உதயா – விஜய்

‘ரங்கோலி-யில் அழகப்பன் பேரன் அறிமுகம்.; வாழ்த்திய மாமாக்கள் உதயா – விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘ரங்கோலி’. இதில் அமரேஷ் – பிரார்த்தனா ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் பேசியதாவது…

இன்று என் வாழ்நாளில் எனக்கு முக்கியமான நாள். என் பேரன் இன்று கதை நாயகனாக நடித்துள்ளான். நான் சினிமா துறைக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது.

நான் திரைத்துறையில் பல பணிகளைச் செய்த பிறகு தயாரிப்பாளராக அறிமுகமானேன். நான் என் குடும்பத்தில் அனைவரையும் படித்த பிறகுதான் சினிமாத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்று கூறுவேன், ஆனால் ஹமரேஷ் படிக்கும் போதே நடிகராகிவிட்டார்.

இந்தப் படத்தில் தமிழ் வாத்தியாராக நடித்தவர் அழகாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் அம்மா கதாபாத்திரம் நடித்த பெண்மணி சிறு பெண் தான் ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் அருமையாகப் பொருந்தியுள்ளார். ஹமரேஷ் அருமையாக நடித்துள்ளார்.

கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும், நீங்கள்தான் இந்த படத்திற்கு ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் நன்றி.

ரங்கோலி

இயக்குநர் விஜய் பேசியதாவது…

என் மருமகன் முழுக்க தமிழ் பேசியது அழகாக இருந்தது. 2005 மார்ச் மாசம் ஹமரேஷ் பிறந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.

உண்மையான உழைப்பாளி, சினிமாவில் ஜெயிக்க எல்லா திறமையும் அவரிடம் இருக்கிறது. வாலி மோகன் தாஸ் நன்றாக இயக்கியுள்ளார். படத்தில் அனைவரும் நன்றாக உழைத்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் உதயா பேசியதாவது…

இது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் ஒரு கௌரவமான நிகழ்வு. ஹமரேஷ் சிறு வயதிலேயே எனக்குப் போட்டியாக வந்து விட்டான். ஹமரேஷ் சிறப்பாக நடித்துள்ளான், இயக்குநர் சிறப்பான ஒரு படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

அதுவே இந்தப் படத்திற்கு பலம். தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தை முதலிலிருந்து இறுதி வரை கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் ஹமரேஷ்க்கு நான் ஒரு அறிவுரை மட்டும் கூறுகிறேன். எந்த சமயத்திலும் நடிப்பைக் கைவிடாமல் உனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் இதுவே நான் கூறும் ஒரு அறிவுரை. பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அதற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

ரங்கோலி

Udhaya Vijay wishes their sister son Amaresh debut in Rangoli

More Articles
Follows