20 வருடங்களுக்கு பிறகு ஜப்பானில் ரஜினியின் *டான்சிங் மகாராஜா*

4K version of Rajinis Block Buster Muthu to Rerelease in Japanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

உலக தமிழர்கள் மட்டுமில்லாமல் ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா நாடுகளிலும் அந்தந்த நாட்டினரே ரஜினிக்கு ரசிகர்களாக உள்ளனர்.

அதெப்படி ரஜினிக்கு மட்டும் இப்படி? என்றொரு கேள்வி உங்களில் சிலருக்கு தோன்றலாம்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இணைந்த முத்து படம் தான் முதன்முறையாக ஜப்பான் நாட்டிலும் அவருக்கான ரசிகர்களை உருவாக்கியது.

கவிதாலயா தயாரிப்பில் ஏஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படம் 1995ம் ஆண்டில் தமிழில் வெளியானது.

அதன் பின்னர் ஜப்பான் மொழியில் சப்-டைட்டிலிங் செய்யப்பட்டு 1998ல் முத்து – ஒடோரு மகாராஜா – டான்சிங் மகாராஜா என்ற பெயரில் அங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

அதன்பின்னர் ஜப்பானில் நாட்டில் ரஜினியின் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது முத்து படம் டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்டு ஜப்பான் நாட்டில் நவம்பர் 23ம் தேதி மீண்டும் வெளியாகிறது.

இந்த அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேற்பார்வையில் படத்தின் ஒலியமைப்பும் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

முத்து படம் ஜப்பானில் வெளியாகி 20 வருடங்கள் ஆனதை முன்னிட்டு அப்படத்தை அந்நாட்டு தலைநகரான டோக்கியோவில் நவம்பர் 23ம் தேதியன்று மீண்டும் வெளியிட உள்ளார்கள்.

டிஜிட்டலில் 4 கே மற்றும் 5.1 சரவுன்ட் ஒலியமைப்பில் இப்படத்தைத் திரையிட உள்ளனர்.

இந்த ரீரிலீஸ் தொடர்பாக தொடர்பாக கவிதாலயாவின் புஷ்பா கந்தசாமி அவர்கள் ரஜினியை சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது.

4K version of Rajinis Block Buster Muthu to Rerelease in Japan

Overall Rating : Not available

Related News

தர்பார் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்…
...Read More
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடித்து…
...Read More
மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த நிறைய…
...Read More

Latest Post