தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெயம் ரவி தற்போது அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜுடன் இணைந்துள்ளார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு ‘சைரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் படம் என்றும்,மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி கைதியாகவும், கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் தற்போது் படக்குழு காரைக்கால் மற்றும் திரு – பட்டினத்தில் முகாமிட்டுள்ளது. அங்கு படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார் இயக்குனர்.
‘Siren’ second phase shooting update