தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிக்கு அடுத்த சாதனைகளை விஜய் மற்றும் அஜித் படங்களே படைத்து வருகின்றன.
மேலும் இவர்களின் பட டீசர் மற்றும் ட்ரைலரிலும் இந்த சாதனைகள் யூடிப்பில் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று (7.11.2016) மிகச்சரியாக மாலை 6 மணிக்கு ஞானவேல்ராஜா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எஸ் 3 படத்தின் டீசர் வெளியானது.
தற்போது 24 மணி நேரங்களை கடந்துள்ள நிலையில் இதன் சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.
அதாவது கபாலி படத்திற்கு பிறகு, குறைந்த நேரத்தில், 3 மில்லியன் (30 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளதாக அறிவித்து அதற்கான படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் சில தகவல்கள் இதோ….
- 24 மணி நேரத்தில் கபாலி டீசரை 51 லட்சம் பார்த்தனர். (5.1 மில்லியன்)
- 24 மணி நேரத்தில் பைரவா டீசரை 2.70 லட்சம் பேர் பார்த்தனர். (2.7 மில்லியன்)
- 24 மணி நேரத்தில் தெறி டீசரை 2.30 லட்சம் பேர் பார்த்தனர். (2.3 மில்லியன்)
- 24 மணி நேரத்தில் தெறி ட்ரைலரை 1.97 லட்சம் பேர் பார்த்தனர். (1.97 மில்லியன்)