தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை இலியானா டிகுரூஸ் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அதன் பின், விஜய்யின் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமடைந்தார் இலியானா டிகுரூஸ்.
இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
இலியானா சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருபவர்.
சில மாதங்களுக்கு முன்பு இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.
இருப்பினும் அவரது காதலர் போட்டோவை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்து இருந்தார்.
தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் இலியானா முதல் முறையாக அவரது காதலர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை இலியான தற்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதிலும் ஒரு ட்விஸ்டாக அவரின் பெயர் மற்றும் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. இந்த காதலன் யார் என்ற விவரங்களின் தேடுதல் வேட்டையில் ரசிகர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
Pregnant Ileana D’cruz finally reveals her boyfriend with pictures