அமீர்கான் நடிப்பில் 3 இடியட்ஸ் படத்தின் 2ஆம் பாகம் தயாராகிறது

3 idiots stillsராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸான ஹிந்திப் படம் ‘3 இடியட்ஸ்’.

அமிர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரினா கபூர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர்.

இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தை தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்தார்.

விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், இலியானா, சத்யன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்தப் படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதாகத் தெரிவித்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி.

கதையாசிரியர் அபிஜித்துடன் சேர்ந்து இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதத் தொடங்கிவிட்டாராம் அவர்.

தற்போது சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறான ‘சஞ்சு’ படத்தின் ரிலீஸில் பிஸியாக இருக்கிறாராம் ராஜ்குமார் ஹிரானி.

இந்த படத்தை தொடர்ந்து ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கப் போகிறாராம்.

இந்த இரு படங்களை முடித்துவிட்டுதான் ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார்.

ஏற்கெனவே இதன் 2ஆம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக அமீர்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

மலையாள சினிமாவில் 400க்கும் மேற்ப்பட்ட படங்களில்…
...Read More
ஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த்,…
...Read More
பிரபல நாவல் எழுத்தாளர் சேத்தக் பகத்.…
...Read More

Latest Post