திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான விஜய் பட நடிகை.; வைரலாகும் போட்டோ ஷூட்.!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான விஜய் பட நடிகை.; வைரலாகும் போட்டோ ஷூட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலியானா.

தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அதன்பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

நடிகை இலியானா புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரோ நீபோன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவரை பிரிந்ததாகவும் கூறப்பட்டது.

நடிகை இலியானா தற்போது பாலிவுட் நடிகை காத்ரினா கைஃப் சகோதரருடன் அவர் தற்போது டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் இருவரும் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில்,முதல் முறையாக அவர் கர்ப்பமாக இருக்கும் பேபிபம்ப் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும், நடிகை இலியானா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே இலியானா கர்ப்பமானதை அடுத்து அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம்? அவரது காதலர் யார்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ileana of Pregnant before marriage

காதர் பாட்ஷா & மார்க் ஆண்டனி வர்றாங்க.; ஜூனில் ஆர்யா.. ஜூலையில் விஷால்.!

காதர் பாட்ஷா & மார்க் ஆண்டனி வர்றாங்க.; ஜூனில் ஆர்யா.. ஜூலையில் விஷால்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் அடுத்த மாதம் ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது போல விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி்’ படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு படங்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்..

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா. நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க்வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் டைம் டிராவல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Arya and Vishal films to release in June and July

மாணவி லக்‌ஷயாஸ்ரீ-க்கு பாராட்டு.; அரசியலில் குதிக்கும் நடிகர் தாடி பாலாஜி

மாணவி லக்‌ஷயாஸ்ரீ-க்கு பாராட்டு.; அரசியலில் குதிக்கும் நடிகர் தாடி பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வில் நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இவரைப் போல தமிழ் பாடத்தில் லக்‌ஷயாஸ்ரீ என்ற மாணவி 100/100 மதிப்பெண் பெற்று பலரது கவனத்தை ஈர்த்தார்.

இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனம் பச்சையப்பன் மெட்ரிக் பள்ளியில் படித்தவர்.

லக்‌ஷயாஸ்ரீக்கு பலரும் பாராட்டு வகையில் KPY நடிகர் தாடி பாலாஜி மாணவியின் இல்லத்திற்கு சென்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பாலாஜி பேசும்போது… “மாணவியின் பெயரிலேயே லட்சியம் இருக்கு. எனவே அவரது லட்சியம் நிறைவேறும். அவரது மேற்படிப்புக்கு நான் உதவி செய்வதாக சொல்லியிருக்கிறேன்.

அப்போது அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

“நான் முன்பு சொன்னது போல விரைவில் அரசியலுக்கு வருவேன். வந்தால் நல்லது பண்ணுவேன்.

ஆனால் தனிக்கட்சி ஆரம்பிக்கும் ஐடியா இல்லை. எனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் கட்சியில் இணைந்து பணியாற்ற தயார்” என்றார்.

விரைவில் அவர் திமுக கட்சியில் இணைவார் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

கூடுதல் தகவல்கள்…

மேலும் திருவள்ளூர் மாவட்டம் அருகே பழங்குடியினர் வசிக்கும் பகுதி அருகே பென்னாலூர்பேட்டை பயிற்சி காவல் துறை உதவி ஆய்வாளர் பரமசிவம் என்பவரை சமீபத்தில் பாராட்டியிருந்தார் பாலாஜி.

பரமசிவம் தன் பகுதி பழங்குடியினத்தவரின் பகுதிகளுக்கு சென்று கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.

அங்கு வசிக்கும் மக்களிடம்.. “உங்கள் காலில் விழுகிறேன் உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள்” என கெஞ்சி பேசி இருந்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி நித்யா உடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்கிறார் நடிகர் பாலாஜி. அண்மையில் பாஜகவில் இணைந்தார் நித்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Kudos to student Lakshayashree.; Actor Thaadi Balaji enters into politics

சிக்கலில் சித்தப்பு.; பிச்சை எடுக்குற மாதிரிருந்த சரவணனுக்கு சோறு போட்டேன் – முதல் மனைவி சூர்யாஸ்ரீ

சிக்கலில் சித்தப்பு.; பிச்சை எடுக்குற மாதிரிருந்த சரவணனுக்கு சோறு போட்டேன் – முதல் மனைவி சூர்யாஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990 களில் வெளியான ‘பார்வதி என்னை பாரடி’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தவர் சரவணன்.

அதன் பின்னர் படங்களே இல்லாமல் இருந்த அவருக்கு கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ பட பெரும் பெயரை பெற்று தந்தது. அதில் அவர் ஏற்ற சித்தப்பு கேரக்டர் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

பின்னர் சில படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.

சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நடித்த ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் கௌதம் கார்த்திக் – வெண்பா நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் இவர்களின் தந்தையாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தன் குடும்ப விவகாரம் குறித்து புகார் மனு அளித்திருந்தார் நடிகர் சரவணன்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

“எனக்கு இரு மனைவிகள். முதல் மனைவியிடம் எனக்கு குழந்தை இல்லை என்பதால் 2015 இல் நான் மறுமணம் செய்தேன்.

சென்னை – போரூர் முகலிவாக்கத்தில் 2014 இல் லேக்வியூ அபார்ட்மென்டில் செண்பகராமன் என்பவரிடம் இரு பிளாட்களை வாங்கினேன். இதை எனக்கு முடித்துக் கொடுத்தவர் புரோக்கர் ராமமூர்த்தி.

4 பிளாக்குகளில் தலா 4 வீடுகள் இருந்தன. நான் இரு வீடுகளை வாங்கியதால் எனக்கு 2 கார் பார்க்கிங் கொடுக்கப்பட்டது.

இரு வீட்டின் யூடிஎஸ் எனக்கு 700 அல்லது 800 சதுர அடி வரும்.

இரண்டாவது மனைவி வந்த பிறகு முதல் மனைவியுடன் எனக்கு தகராறு ஏற்பட்டதால் இந்த வீட்டுக்கே நான் வருவதை நிறுத்திக் கொண்டேன்.

நான் இங்கு இல்லாததை பயன்படுத்தி ராமமூர்ததி என்பவர் கார் பார்க்கிங்கில் ஒரு கடையை கட்டி அதற்கு மின் இணைப்புடன் அந்த இடத்திற்கு வரி கட்டி விட்டதாகவும் கூறியிருந்தார். இப்படியாக என்னை ஏமாற்றி வந்தார்.

ராமமூர்த்தியின் மனைவி என் இடத்தில் இருந்து கொண்டு என்னை வெட்டுவேன் குத்துவேன் என்கிறார். ராமமூர்த்தி & அவரது மனைவி ஜெயமணி ஆகியோர் பெயரில் புகார் கொடுத்துள்ளேன்.

இந்த பிரச்சினை குறித்து அமைச்சர் தாமோ அன்பரசன் அவரிடம் மனு கொடுத்தேன்.” என்றார்.

நடிகர் சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ, ராமமூர்த்தி, மனைவி ஜெயமணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்…

“நான் சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ. அவர் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை.

என்னை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றிவிட்டார்,

ஒரு பெண்ணை வீட்டோட வைத்துக் கொண்டு என்னை டென்ஷன் செய்கிறார்.

எனக்கு விவாகரத்தே கொடுக்கவில்லை சரவணன். அப்புறம் எப்படி அவருக்கு 2வது மனைவி வருவாங்க.

அவர் அந்த பெண்ணை கீப் வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொன்ன முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை.

அந்த வீட்டை நான் காசு கொடுத்து வாங்கினேன். நான் சம்பாதித்த காசில் அவர் பெயரில் நான் வாங்கினேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு.

ரூ. 12 லட்சம் ரூபாய் நான் கட்டினேன். மீதமுள்ள 36 லட்சம் பணத்திற்கு லோன் போட்டுள்ளேன். அதற்கு EMI நான்தான் கட்டி வருகிறேன்.

‘பருத்தி வீரன்’ படத்திற்கு பிறகு சினிமா சான்ஸ் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தார். நான்தான் அவருக்கு சோறு போட்டேன். இதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் கூறியிருக்கிறார்.”

இவ்வாறு சரவணன் மனைவி சூர்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

I provided food to Saravanan who pretended to beg – First wife Suryashri

திருமாவளவன் பாராட்டு எங்கள் தேசிய விருது.; ‘இராவண கோட்டம்’ படக்குழு

திருமாவளவன் பாராட்டு எங்கள் தேசிய விருது.; ‘இராவண கோட்டம்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, ஆனந்தி, சஞ்சய், இளவரசு, பிரபு, தீபா உள்ளிட்டோர் நடிக்க நேற்று வெளியானது ‘இராவண கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த இந்த படத்தை தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருந்தார்.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான படமாக கருதப்பட்டது.

அதற்கு முக்கிய காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் பஞ்சத்தையும் சீம கருவேல மரங்களால் அழிக்கப்படும் நில வளத்தையும் இந்த படம் கதைக்களமாக கொண்டிருந்தது.

மேலும் இந்த படத்தில் மேல் சாதி கீழ் சாதி பிரிவினையும் காட்டப்பட்டிருந்தது.

இந்த படத்தை பார்த்த பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்த படத்தை நேற்று மாலை படக்குழுவினருடன் பார்த்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

தொல் திருமாவளவன் இந்த படத்தை பாராட்டியது தங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம் என படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதி காவலர் ஐயா தொல் திருமாவளவன் அவர்களின் வாழ்த்தை எங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம்.

At a special screening today in chennai
#TholThirumaSupportsRaavanaKottam
#RaavanaKottam

Thirumavalavan appreciation is like national award-‘Ravana Kottam’ film crew

ரஜினி நடிக்கும் ‘மொய்தீன் பாய்’ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.?

ரஜினி நடிக்கும் ‘மொய்தீன் பாய்’ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.

இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அவரது காட்சிகள் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறதாம்.

இதனையடுத்து ரஜினி நடிக்க உள்ள கேரக்டர் பெயர் சமீபத்தில் வெளியானது.

மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடிக்க அந்த இஸ்லாமிய தோற்றம் சமீபத்தில் வெளியானது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ரஜினியின் லுக் ரசிகர்களை கவரவில்லை என்பதே பெரும்பாலான கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தவர் மம்மூட்டி தானாம்.

தன் மகள் ஐஸ்வர்யாவிடம் ரஜினி கதை கேட்டபோது அவருக்கு மொய்தீன் பாய் கேரக்டர் பிடித்திருந்ததால் தானே நடிப்பதாக ஒப்புக்கொண்டாரம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Do you know who was the first to play the character of ‘Moideen Bhai’ played by Rajini?

More Articles
Follows