விஜய்-அட்லி இணையும் படத்தில் முத்தான சென்டிமெண்ட்ஸ்

விஜய்-அட்லி இணையும் படத்தில் முத்தான சென்டிமெண்ட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay atleeதெறி கூட்டணி மீண்டும் விஜய் 61 படத்திற்காக இணைகிறது.விஜய்யின் நண்பன் படத்தில் ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றினார் அட்லி.

அதன்படி பார்த்தால் விஜய்யுடன் 3வது முறையாக இணைகிறார்.சரி இந்த டைரக்டர் சென்டிமெண்ட்ஸ் தவிர விஜய்யுடன் 3வது முறை இணைபவர்கள் யார்..? என்பதை பார்ப்போம்.

நண்பன் மற்றும் தலைவா படத்தை தொடர்ந்து சத்யராஜும் 3வது முறை இணைகிறார்.இவர்களை அடுத்து எஸ்.ஜே.சூர்யா. குஷி, நண்பனை தொடர்ந்து 3வது முறை.சமந்தா இதற்கு முன் கத்தி, தெறியில் நடித்துள்ளார். எனவே இவருக்கும் 3வது முறை.

துப்பாக்கி, ஜில்லாவில் நடித்த காஜல் அகர்வாலுக்கும் இது 3வது முறை.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் 3வது முறையாக இணைந்துள்ளனர்.

உதயா மற்றும் அழகிய தமிழ்மகன் படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ஆர்.இத்தனை முத்தான சென்டிமெண்ட்களை வைத்திருக்கும் விஜய் 61 நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கலாம்.

திருமலை, குஷி படத்தில் நடித்த் ஜோதிகா விலகாமல் இருந்திருந்தால் அவருக்கும் இது 3வது முறைதான்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் நடிகை

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and selva raghavanசூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கின்றார்.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விரைவில் இதற்கான அறிவிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த 2 வெற்றியை தனுஷுக்கும் கொடுப்பாரா?

சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த 2 வெற்றியை தனுஷுக்கும் கொடுப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and sivakarthikeyanதனுஷ் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்த படம் கொடி.

இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இதே இயக்குனர் மீண்டும் தனுஷூக்காக ஒரு கதையை எழுதியுள்ளதாகவும் விரைவில் இருவரும் இணைந்து பணிபுரியவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இத்தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் உருவான ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இவையிரண்டும் சிவாவுக்கு மாபெரும் வெற்றிப் படங்களாய் அமைந்தன.

இதுபோல் தனுஷுக்கும் இரண்டு வெற்றிகளை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடவுள் தனுஷின் காலை தொட்டு கும்பிடனும்… சுசித்ரா

கடவுள் தனுஷின் காலை தொட்டு கும்பிடனும்… சுசித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and suchitraதனுஷை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டாடும் ரசிகர்கள் உண்டு.

ஆனால் திரையுலகை சேர்ந்தவரே தனுஷை அப்படி சொல்லியிருக்கிறார்.

அவர்தான் பின்னணி பாடகி சுசித்ரா. அவரது டவீட்கள் சில இதோ…

மேலும் இவருடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாமென பலர் நினைத்தாலும், அப்படி எதுவும் நடக்கவில்லை என அவரே தெளிவுபடுத்தியுள்ளார்.

Dhanush is God and I want to touch his feet. dhanus

— Suchi (@suchitrakarthik)

#Dhanush is a God!!! It has been announced by @ishafoundation

— Suchi (@suchitrakarthik) February 20, 2017
Account not hacked – just to clarify. All tweets here are officially Suchitra Karthik’s #gahgdn #hajsknf RK https://t.co/Rthz0KMbWf

— Suchi (@suchitrakarthik

நான் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் ரசிகன் – அர்மேனிய இயக்குநர் சரிக் !!!

நான் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் ரசிகன் – அர்மேனிய இயக்குநர் சரிக் !!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mithun chakraborthy and sarikஅர்மேனிய இயக்குநர் சரிக் ஆண்ட்ரியாசின் , இவர் இயக்கிய அமெரிக்கன் எனும் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகத்துக்குள் 2014 நுழைந்தார். தற்போது இவர் ரஷ்ய மொழியில் இயக்கி உள்ள கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஒரே சமயத்தில் உலகமெங்கும் 50 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சரிக்குக்கு இந்தியாவின் புகழ் பெற்ற நடிகைகளான ஐஸ்வர்யா ராய் , பிரியங்கா சோப்ரா ஆகியோரை நன்றாக தெரியுமாம். அதுமட்டுமல்ல இயக்குநர் சரிக் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மிகப்பெரிய ரசிகராம் , வாய்ப்பு அமைந்தால் அவருடன் பணியாற்ற ஆசை என்று கூறுகிறார். இந்த வருடம் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருதுகளின் விருது பட்டியலில் சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் “ லையன் “ திரைப்படத்துக்காக தேர்வாகி உள்ள தேவ் படேலை இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

நான் மிதுன் சக்ரவர்த்தி நடித்த நிறைய படங்களை பார்த்துள்ளேன். அவருடைய தோற்றம் , நடிப்பு மற்றும் சோவியத் யூனியனில் அவருக்கு இருந்த பிரபலம் என அனைத்தும் என்னை கவர்ந்தது. மிதுன் அவர்களின் டிஸ்கோ டான்சரில் இடம் பெற்ற “ ஜிம்மி ஜிம்மி “ என்ற சார்ட் பஸ்டர் பாடல் சோவியத் யூனியனில் மிக பிரபலம்.

ராஜ் கபூர் – நர்கிஸ் நடிப்பில் வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற “ அவாரா “ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற இயக்குநர் சரிக் , தனக்கு வரும் புதிய வாய்ப்புகளை ஏற்றுகொள்ள தயார் என்றும். இந்தியாவில் படம் இயக்கவும் , இந்தியாவை பற்றிய படத்தை இயக்கவும் தனக்கு ஆசை என்றார்.

32 வயதாகும் இயக்குநர் சரிக் The Pregnant , Moms and That was the Men’s world போன்ற தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான “அறம் செய்து பழகு“ தயாரிப்பாளர் ஆண்டனி !!!

இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான “அறம் செய்து பழகு“ தயாரிப்பாளர் ஆண்டனி !!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director suseenthiran and producer antonyஇயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “அறம் செய்து பழகு “ இப்படத்தில் கதையின் நாயகர்களாக “ விக்ராந்த் “ “ சந்தீப் கிஷன் “ ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. அன்னை பிலிம் ஃபாக்டரி வழங்கும் இப்படத்தை ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பிரபலாமான தயாரிப்பு நிறுவனங்களான சி டிவி , ஏ.வி.எம் , ஸ்டுடியோ கிரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து முதலில் சி டிவி நிறுவனத்தில் பணியாற்றிய இவர். அதன் பின்னர் 2000 ஆண்டில் இருந்து ஏ.வி.ஏ.எம் நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்ற துவங்கினார். 2000 ஆண்டில் இருந்து 2008 ஆண்டு வரை ஏ.வி.எம் நிறுவனத்தில் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் இவர் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றினார்.

அதன் பின் 2008ஆம் ஆண்டில் இருந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்ற துவங்கினார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ நான் மகான் அல்ல “ திரைப்படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் சுசீந்திரன் உடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்ப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனுடன் நிறைய படங்களில் பணியாற்றிய பின்னர். இயக்குநர் சுசீந்திரன் விரும்பியதால் தயாரிப்பு மேற்பார்வையாளர் ஆண்டனி இப்போது “அறம் செய்து பழகு “ திரைப்படத்தின் தயாரிப்பாளராகியுள்ளார்.

முதல் படமே தயாரிப்பாளரான உங்களுக்கு இயக்குநர் சுசீந்திரன் போன்ற மிக சிறந்த இயக்குநருடன் அமைந்துள்ளது அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மற்றும் “அறம் செய்து பழகு “ திரைப்படம் என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் ?? என்று நாம் கேட்டபோது “ ஆம் , இது இயக்குநர் சுசீந்திரன் எனக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்று தான் நான் சொல்வேன் , என்னென்றால் என்னை இந்த “அறம் செய்து பழகு “ திரைப்படத்தை தயாரிக்க சொன்னதே இயக்குநர் சுசீந்திரன் தான். என்னை தயாரிப்பாளராக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி.

“ அறம் செய்து பழகு “ திரைப்படம் இயக்குநர் சுசீந்திரனின் மாபெரும் வெற்றி படங்களான “ நான் மகான் அல்ல “ , “ பாண்டிய நாடு “ போன்ற ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் ஆண்டனி.

More Articles
Follows