Upcoming Movies

  • Upcoming Movies
  • July
  • Sep

Videos

  • Teasers
  • Trailers
  • Videos Songs
  • Short films
  • Motion Poster
  • Sneak Peek

DOUBLE TUCKERR – Official Teaser

Produced by – Air flick Written & Directed by – Meera Mahadhi Music by – Vidya Sagar Co-Written & Co-Produced – Chandru Director of photography

Vanangaan – Official Teaser

Starring: Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan, Yohan Chacko, Kavitha Gopi, Brindha Sarathy, Mai Pa Narayanan, Aruldas, Munish Sivagurunath

AMARAN – TEASER

Starring: Sivakarthikeyan, Sai Pallavi Director : Rajkumar Periasamy Banner: Raajkamal Films International & Sony Pictures International Productions Produced by : Kamal Haasan, Sony Pictures International

Ninaivellam Neeyada – Official Movie Teaser

Starring – Prajan, Manisha Yadav, Sinamikaa, Yuvalakshmi, Rohit, Reddin Kingsley, Manobala, Madhumitha Written & Directed By: Aadhiraajan Music : Ilaiyaraaja Producer : Royal Babu Banner

Latest post




திகில் க்ரைம் டிராமா ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’
இசைத் தொகுப்பில் ஏழு பாடல்கள்

பிரைம் வீடியோவின் அடுத்து வரவிருக்கும் திகில் க்ரைம் டிராமா ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’

நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட திகில் க்ரைம் டிராமா ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’.

இந்த இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் நடிகர் நவீன் சந்திரா (Naveen Chandra) கதாநாயகன் வேடத்தில் தோன்ற அவருடன் இணைந்து சுனைனா(Sunainaa), கண்ணா (Kanna) ரவி (Ravi), மாலினி (Malini) ஜீவரத்தினம், (Jeevarathnam) ஸ்ரீகிருஷ்ண தயாள்(Srikrishna Dayal,) மற்றும் குமரவேல் (Kumaravel) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இந்த இசைத் தொகுப்பில் இடம்பெறும் ஏழு பாடல்கள்களையும் இப்போது அனைத்து இசை ஸ்ட்டீமிங் தளங்களிலும் கேட்டு ரசிக்கலாம்.

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 அன்று வெளியிடப்படவிருக்கிறது.

இணைப்பு :https://open.spotify.com/album/5V54iqpQ0JjHbuT2P9AvTq?si=wDzJdztbSnWarlyoL70Jqw

அஷ்வத் நாகநாதன் ( Ashwath Naganathan), இசையமைப்பில் உருவான இந்த தொகுப்பில் அதன் டைட்டில் டிராக் உட்பட இந்த திகில் க்ரைம் டிராமா தொடரின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சிலிர்ப்பூட்டும் கூறுகளை உள்ளடக்கி.

அச்சமூட்டும் தொனியுடனான மனதைக் கொள்ளை கொள்ளும் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒட்டுமொத்த இசைத் தொகுப்பு அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் சேவைத் தளங்களிலும் கிடைக்கும்.

பகவதி பி.கே.,(Bagavathy PK,) மஷூக் ரஹ்மான் (Mashook Rahman,) மற்றும் புகழேந்தி கோபால் ஆகியோர் இயற்றிய இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களுக்கு கபில் கபிலன், (Kapil Kapilan,) பாப் ஷாலினி (Pop Shalini), இஷான் நிகாம், (Ishan Nigam i கிறிஸ்டோபர் ஸ்டான்லி (Christopher Stanley), ஆர். அரவிந்த்ராஜ், (R. Aravindraj) பாலாஜி ஸ்ரீ (Balaji Sri,) சௌந்தர்யா.ஆர். தேவூ தெரசா மாத்யூ, ‘உதிரி’ விஜயகுமார், ஸ்ரீராம் க்ருஷ், அஷ்வத் (Ashwath,) ஷைலி பித்வைக்கர், (Shailey Bidwaikar), ஸ்வஸ்திகா ஸ்வாமினாதன், சுனிதா சாரதி (Sunitha Sarathy) மற்றும் அஞ்சனா பாலகிருஷ்ணன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள மர்மங்களால் சூழப்பட்ட ஒரு அழகான கிராமத்தின் பின்புலத்தில் அமைந்த இந்த தொடரின் சாரத்துடன் இந்த இசைத் தொகுப்பு கச்சிதமாக இணைந்து பொருந்துகிறது.

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஏழு பாடல்கள் இந்தத் இன்ஸ்பெக்டர் ரிஷி இசைத் தொகுப்பில் உள்ளடக்கியுள்ளது :

1. இதயத்தின் மாயம் (தலைப்பு பாடல்) – பாடலாசிரியர்: மஷூக் ரஹ்மான்; பாடகர்: கிறிஸ்டோபர் ஸ்டான்லி
2. கண்ணாடி காதல் – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடகர்: கபில் கபிலன், பாப் ஷாலினி
3. உறை பனி நான் – பாடலாசிரியர்: மஷூக் ரஹ்மான்; பாடியவர்: இஷான் நிகாம்
4. காடு – பாடலாசிரியர்: புகழேந்தி கோபால்; பாடகர்: ஆர் அரவிந்த் ராஜ், பாலாஜி ஸ்ரீ, சௌந்தர்யா ஆர், தேவு டிரஸ்ஸா மேத்யூ, ‘உதிரி’ விஜய்குமார், ஸ்ரீராம் கிரிஷ், மற்றும் அஸ்வத் 5. ஹே சகி ஹே – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடகர்: ஷைலி பித்வைகர் மற்றும் ஸ்வஸ்திகா சுவாமிநாதன்
6. தொண்டகப்பாறை – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடியவர்: சுனிதா சாரதி
7.பரிசுத்த தேவனே – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடியவர்: அஞ்சனா பாலகிருஷ்ணன்

7 Songs in Inspector Rishi Crime drama




டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த யாளி.; மீண்டும் உருவெடுத்து வரும் ‘கஜானா’

இந்திய சினிமாவில் முதல் முறையாக யாளி விலங்கு..: வியக்க வைக்கும் ‘கஜானா’

பான் இந்தியா திரைப்படங்களின் வருகை அதிகரித்திருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் ஒரு திரைப்படம் வெளியானாலே அப்படத்தை பான் இந்தியா திரைப்படம் என்று சொல்கிறார்கள்.

உலக அளவில் ரசிகர்களை ஈர்க்க கூடிய கதைக்களத்துடன், வியக்க வைக்கும் VFX காட்சிகளுடன் உருவாகியிருக்கும் படம் தான் ‘கஜானா’.

‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ திரைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக இதுவரை அச்சு வடிவிலும், சிற்ப வடிவிலும் நாம் பார்த்து வந்த யாளி விலங்கை முதல் முறையாக திரையில் தோன்ற செய்து ரசிகர்களை வியக்க வைக்கும் பணியை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அழிந்துப்போன ஆதி உயிரினமான யாளி தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. யானை மற்றும் சிங்கத்தின் உருவம் கொண்ட இந்த யாளி விலங்கு தென்னிந்தியாவையும் தாண்டி இலங்கை போன்ற பிற நாட்டு கோவில்களிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

சிற்பக்கலையின் முக்கிய அம்சமாக விளங்கும் யாளி விலங்கு யானையையே விழுங்கும் ஆற்றல் படைத்தது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி, டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்று கருதப்படும் இத்தகைய விலங்கை இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் காட்சிப்படுத்தவில்லை.

சிற்பம் மற்றும் அச்சு வடிவில் நாம் பார்த்த யாளி விலங்கை முதல் முறையாக உயிரோடு கொண்டு வந்திருக்கிறது ‘கஜானா’ படக்குழு. இதற்காக அவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தரத்திலான VFX பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா மற்றும் லண்டனில் நடைபெற்ற இபப்டத்தின் VFX பணிகள் யாளி விலங்கை வடிவமைப்பதில் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, அந்த விலங்கை வியக்க வைக்கும் விதத்திலும், சிறுவர்கள் கொண்டாடும் விதத்திலும் உருவாக்கியிருக்கிறார்களாம்.

இதுவரை டைனோசரை விரும்பி வந்த சிறுவர்கள் ‘கஜானா’ படத்திற்கு பிறகு யாளி விலங்கை நிச்சயம் கொண்டாட செய்வார்கள், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த க்ரீன்ஸ்கார் VFX (Greenscar VFX) நிறுவனம் தலைமையில், வெளிநாடுகளில், வெளிநாட்டு VFX கலைஞர்கள் கைவண்னத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் VFX காட்சிகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள், விலங்குகளுடன் உரையாடும் காட்சிகளும் மிக தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் யோகி பாபு, அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் பேசி நடித்தது இதுவே முதல் முறையாகும். VFX பணிகளினால் இப்படம் வெளியாவது சற்று காலதாமதம் ஆனாலும், படத்தில் இடம்பெறும் VFX காட்சிகள் உலகத்தரத்தோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் இடம்பெறாத காட்சிகளாகவும் இருக்கும்.

இத்தகைய முயற்சி குறித்து தயாரிப்பு தரப்பு கூறுகையில், ”உலகளவிலான ஒரு கதைக்களத்தை படமாக்கும் போது அப்படத்தின் தரமும் உலகத்திரத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் தான் படத்தின் VFX காட்சிகளுக்கு அதிக செலவு செய்திருப்பதோடு, கடும் உழைப்பையும் கொடுத்திருக்கிறோம். எங்கள் புதிய முயற்சி நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று நம்புகிறோம். அதேபோல், எங்களைப் போன்ற வளரும் தயாரிப்பாளர்களின் இத்தகைய முயற்சிக்கு திரையுலகின் ஆதரவாக நின்றால் எங்களுக்கு உற்சாகம் கொடுப்பதோடு, இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்வதற்கான உந்துதலாகவும் இருக்கும். எங்களுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கொடுக்கும் வரவேற்பை தொடர்ந்து, பலர் இதுபோன்ற வித்தியாசமான முயற்சியை மேற்கொள்வதற்கான நம்பிக்கையையும் கொடுக்கும், எனவே எங்களது இந்த ‘கஜானா’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவைப் போல், திரையுலகினரும் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், வேதிகாவுடன் சாந்தினியும் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிலும், கவர்ச்சியிலும் கிரங்கடிக்கவும் செய்திருக்கிறார்.

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய சாகசங்கள் நிறைந்த ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ கோடை விடுமுறையின் கொண்டாட்டமாக மே முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

மேலும், ‘கஜானா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ப்ரீபுரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு அறிவிக்க உள்ளது.

Gajaana VFX sequences setting a new standard in Indian cinema

#Gajaana Movie VFX sequences are anticipated to be unparalleled, setting a new standard in Indian cinema,

they dedicated over 2 years to world-class VFX work in order to achieve this by @greenscarvfx from Salem

This is a Sample see you in main film…!!!

@LIONSatishSamz @Vedhika4u @ActorInigo @IamChandini_12 @NarenthenVihas @Sureshsugu @ProDharmadurai




இயற்கை அன்னை ஆசியுடன் உருவான காதல் காவியம் ‘ஆலன்’

நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ படப்பிடிப்பிற்கு ஆசியளித்த இயற்கை, திகட்டாத காதல் காவியம் ஆலன்

நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, ‘அருவி’ மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார்.

ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்… மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம்… இந்தக் களம் படமாக்கப்பட்டபோது கொடைக்கானலில் கடும் மழையும், குளிரும் உடன் பயணித்தது.

சென்னையில் படமாக்கப்பட்ட போது புயலும், காற்றும் இந்த காதலை ஆரத் தழுவியது. வாரணாசியிலும், ரிஷிகேசிலும் படமாக்கப்பட்ட போது பனிக்காற்றும், கடும் குளிரும் கூடவே இருந்து தாலாட்டியது. இப்படி இயற்கை அன்னை ஆசீர்வதித்த இந்த காதலை தமிழ் ரசிகர்களின் பார்வைகளுக்கு பரிமாற.. இறுதி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.

‘இசைப்புதல்வன்’ மனோஜ் கிருஷ்ணாவின் இசை மெட்டிற்கு கவிஞர் கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுத, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் வசீகர குரலில் ‘வாரணாசியில் மனித பிறப்பின் ரகசியங்களை சிவனைப் பார்த்து கேட்பது போல்..’ ஒரு பாடலும்.., இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன் காந்தக் குரலால் காதலில் பரிதவிக்க ஒரு பாடலும்… . பாடகிகள் சின்மயியும், மும்பை நிகிதா காந்தியும் தங்களின் தேனினும் இனிய குரலால் காதலை ஆரத் தழுவ தலா ஒரு பாடலும்..என இந்த நான்கு கானங்களும் உங்கள் செவிகளுக்கு செந்தமிழில் உள்புக.. இசையின் தாளலயங்களில் தாலாட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. விரைவில் உங்கள் செவி வழியாக இதயத்தில் தஞ்சமடையவும் காத்திருக்கிறது.

இந்த காதல் காவியத்தில் ‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி கதையின் நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஹரிஷ் பெராடி, மதன்குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை காண காத்திருங்கள்.‌ உங்களை ‘ஆலன்’ வெகு விரைவில் வெண் திரையில் சந்திப்பான்.. காதலின் வாசத்துடன்…” என்றார்.

Vettri starring Aalan movie got blessing of Nature




ஒரு ஆணை பெண் எப்படி பார்க்கனும்.. ‘ரோமியோ’-வை ப்ரோமோட் செய்ய கிசுகிசு… – விஜய் ஆண்டனி

ரோமியோ’ படம் விஜய் ஆண்டனி சாருக்கு பெண் ரசிகர்களை அதிகமாக்கும் – இயக்குநர் நம்பிக்கை

அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படம் ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தனஞ்செயன் கலந்துக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி…

“இந்த மேடையே சந்தோஷமாக உள்ளது. விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. மிருணாளினி தன்மையான நல்ல பொண்ணு. படத்தை புரோமோட் பண்ண எங்களை பத்தி கிசுகிசு கிரியேட் பண்ணலாமா என யோசித்தோம்.

ஆனால், எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை. முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்.” என்றார்.

படத்தின் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பேசுகையில்..

“ஒரு கணவனாக காதலனாக ஒரு ஆணை பெண் எப்படி பார்க்க வேண்டும் என்பதுதான் கதை. அதற்கான இன்ஸ்பிரேஷன் என் அம்மாதான். அவருக்கு நன்றி. வாய்ப்புகளுக்காக காத்திருந்த போதுதான் விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கால் வந்தது. என்னுடைய படம் பார்த்துவிட்டு அவர் அவ்வளவு டீடெய்லாகப் பேசினார். கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார்.

லவ் ஸ்டோரி என முடிவு செய்ததும் எல்லாரும் நோ சொன்னார்கள். அப்போதே இதைத்தான் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இது வழக்கமான காதல் கதை கிடையாது. சக்சஸ்ஃபுல்லான மனிதன் தன் வாழ்வில் மிஸ் செய்யும் காதல்தான் ‘ரோமியோ’. பல சர்ப்ரைஸான விஷயங்கள் கதையில் இருக்கிறது. தன் வாழ்வில் வரும் பெண்ணை எப்படி அணுக வேண்டும் என இதில் சொல்லி இருக்கிறோம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

ஹீரோயின் லீலாவுக்காக ஒரு வருஷம் தேடினோம். மிருணாளினி ஃபோட்டோ பார்த்துவிட்டு அவரிடம் பேசினோம். அவருக்கும் கதை பிடித்து விட்டது. விஜய் ஆண்டனி சார் எனக்கு ‘பிச்சைக்காரன்’ படத்தில் இயக்கம் கற்றுக் கொடுத்தார். அவரை தனிப்பட்ட முறையில் அந்த சமயத்தில் தெரிந்து கொண்டேன்.

அவருடைய நிஜ முகத்தை ஜாலியாக இதில் நீங்கள் பார்க்கலாம். வாழ்க்கையில் உள்ள எல்லா எமோஷன்களும் படத்தில் இருக்கும். இந்த படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி சாருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாகி விடுவார்கள். அறிவு- லீலாவை உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை மிருணாளினி ரவி பேசுகையில்…

“ரோமியோ’ படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். பட வாய்ப்பு என்பதை விட இதை பொறுப்பாகவே பார்க்கிறேன். மிருணாளினி என இயக்குநர் என்னைக் கூப்பிட்டதே இல்லை. லீலா என்றுதன கூப்பிடுவார். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிவிட்டார். விஜய் ஆண்டனி சார் மல்டி டாஸ்கிங் நபர். பல விஷயங்கள் அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் நான் முதல்முறையாக டப்பிங் செய்திருக்கிறேன். பர்சனலாக நான் என்னுடன் இந்தக் கதையை ரிலேட் செய்து கொண்டேன். தலைவாசல் விஜய் சார் எனக்கு ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரம்ஜானுக்கு படம் பாருங்கள்.” என்றார்.

நடிகர் தலைவாசல் விஜய் பேசுகையில்…

“பிளாக்பஸ்டர் படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பெரிய மாற்றம் கொடுக்கும். அந்த அளவுக்கு நல்லவர். பெரிய துன்பத்தை தனது மனவலிமையால் கடந்து வந்து தன் வேலையை செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த மனநிலையை நான் மதிக்கிறேன்.

படத்தில் என் கதாபாத்திரம் இன்றைய தலைமுறைக்கு பிடிக்குமா எனத் தெரியவில்லை. இயக்குநர் விநாயக் தனக்கு வேண்டியது கிடைக்கும் வரை என்னை விடவே இல்லை. அந்த அளவுக்கு திறமையானவர். வெத்தல பாடல் சூப்பர் ஹிட். படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.” என்றார்.

இசையமைப்பாளர் பரத் தனசேகர் பேசுகையில், “ஐந்து வருடங்களுக்கு முன்பு டிரம்மராக என் இசைப்பயணத்தை ஆரம்பித்தேன். சின்ன வயதில் இருந்தே கீபோர்ட், தபலா, பியானோ என ஒவ்வொரு கிளாஸ் தினமும் போவேன். விளையாடுவதற்குக் கூட நேரமே கிடைக்காது எனத் தோன்றும். ஆனால், அந்த இசைதான் என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது.

என் அம்மா, அப்பா, தங்கச்சி, நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. அவர்களை போலவே பெஸ்ட்டாக ‘ரோமியோ’ படம் அமைந்தது. இந்தப் படத்தில் செல்லக்கிளி பாடல்தான் முதலில் கம்போஸ் செய்தோம். பாடல் கேட்டுவிட்டு விஜய் ஆண்டனி சார் பிடித்திருந்தது என்று சொன்னார். படத்தில் எட்டு பாடல்கள் உள்ளது.

நிறைய ஜானர் இதில் இருக்கும். பல கலைஞர்களுடன் பாடலுக்காக இணைந்து பணியாற்றியுள்ளோம். என் இசையில் விஜய் ஆண்டனி சார் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சீக்கிரம் அந்தப் பாடல் ரிலீஸ் ஆகும். விநாயக் என்ன வேலை பார்த்தாலும் திருப்தி ஆகவே மாட்டார். இந்தப் படம் சூப்பராக வந்துள்ளது.

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி எல்லோருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். படத்தில் வேலை பார்த்த எல்லோருக்குமே நன்றி. இசை பொருத்தவரை எனக்கு பெரிய கற்றலாக இந்தப் படம் இருந்தது. ரம்ஜானுக்கு வரும் இந்தப் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்.” என்றார்.
இணை இயக்குநர் வைத்தியநாதன் பேசுகையில்…

”இயக்குநர்கள் ஜி.எம். குமார், ராஜ்கபூர் எனப் பலரிடம் இணை இயக்குநராக 30 வருடங்களுக்கும் மேலாக வேலை பார்த்து வருகிறேன். இத்தனை வருடங்கள் எனக்கு இயக்குவதற்கு கிடைக்காத வாய்ப்பு என் மகன் விநாயக்குக்கு விஜய் ஆண்டனி சார் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

தமிழ் சினிமாவில் கதையைத் தேடும் ஹீரோவாக விஜய் ஆண்டனி இருக்கிறார். என் மகனின் கதையை படித்துவிட்டு, ‘கதை பம்பர் ஹிட். என் வாழ்க்கையில் இன்னொரு ‘பிச்சைக்காரன்” என மெசேஜ் செய்திருந்தார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. படம் நல்ல எண்டர்டெயின்மெண்ட்டாக வந்துள்ளது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில்…

”வெத்தல சாங் நேற்றுதான் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்தப் பாட்டில் இருந்தது போல கலாட்டாவான விஜய் ஆண்டனியை நான் படத்தில் பார்த்ததே இல்லை. அவரை இப்படி ஜாலியாக பார்க்க வேண்டும் என நிறைய பேர் விரும்பியிருக்கிறார்கள். அது நிறைவேறி விட்டது.

எத்தனை இடர்பாடுகள் வாழ்க்கையில் வந்தாலும் அதை தாண்டி வருவது எப்படி என்பதை விஜய் ஆண்டனியிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். மிகவும் அர்ப்பணிப்பான நபர். வாழ்வில் பெரிய துன்பம் வந்தபோது, இரண்டாவது நாளே ஷூட்டிங் போனார். எனக்கு மட்டுமல்ல, நம்மில் நிறைய பேருக்கு அவர் இன்ஸ்பிரேஷன். படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு படக்குழு வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

We tried gossip to promote Romeo says Vijayantony

—–




ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டஸி ஸ்டோரியில் நித்யா மேனன்

ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.

தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டஸி கதையம்சம் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் கதையின் கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப் (அறிந்தும் அறியாமலும்), பிரதீக் பாப்பர் (FOUR MORE SHOTS PLEASE), தீபக் பரம்போல் (மஞ்சும்மல் பாய்ஸ்), என பெரிய நட்சத்திரம் பட்டாளமே நடிக்க உள்ளனர்.

இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.

ஒளிப்பதிவு பணிகளை ப்ரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார். மேலும் இப்படம் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

Nithya menon starring in fantasy comedy movie




கமல் தயாரிப்பில் நடிகராக லோகேஷ் கனகராஜ்.; ஸ்ருதிஹாசன் கூட்டணி

பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல்

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் ‘இனிமேல்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது.

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இனிமேல்’ பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும். ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள இனிமேல் பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார்.

இப்பாடல் தற்போதைய தலைமுறையில் காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல்களை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு RKFI நிறுவனம் இனிமேல் பாடல் குறித்து அறிவித்ததிலிருந்தே, இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இந்த சிங்கிள் பாடல் மூலம் இந்திய சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகள் இணைகிறார்கள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இனிமேல் பாடலின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனினும் தயாரிப்பாளர்கள் மூன்று ஆளுமைகள் இணையும் இப்பாடலைப் பெரிய அளவில் எடுத்துச்செல்வதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

Kamal Lokesh Shruthi teamsup for Album




ஞானவேல் ராஜா தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘கார்த்தி 26’

கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 26ஆவது படத்தில் கார்த்தி,

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கார்த்தி 26’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியை பின்பற்றி வெற்றி பெற்ற படைப்பாளியான நலன் குமாரசாமி இயக்கத்தில், முதன் முதலாக கார்த்தி இணைந்திருப்பதாலும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சர்வதேச தர முத்திரையுடன் தயாராவதாலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Karthi and Gnanavelraja joins with Nalan Kumarasamy




ரஞ்சித் – மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த ஜோடி துருவ் – அனுபமா

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படம், இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார்.

இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது.

கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என தொடர்ந்து வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரிக்கிறது.

படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது.

கபடி விளையாட்டை மையப்படுத்திய படைப்பாக உருவாகிறது. அனைத்து தரப்பிலும் எதிரிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும், தைரியத்தையும் வாழ்வியலாக கொண்ட இளைஞனின் கதையை சொல்கிறது இந்த திரைப்படம்.

இந்தக் கதை- ஒரு மனிதன் விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, வன்முறையற்ற.. அமைதியான.. மரணமற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் போராட்டத்தை விவரிக்கிறது.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பிரேமம்’, ‘குரூப்’ ஆகிய படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

திரைப்படத்தைப் பற்றி அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் பேசுகையில்…

”நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனான எங்களது ஒத்துழைப்பு.. அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுகான ஒரு அற்புதமான அத்தியாயத்தை குறிக்கிறது. இந்தக் கூட்டணி ஒரு அசாதாரணமான விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்துடன் தொடங்கி, தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை தேர்வு செய்வதில் எங்களது அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது. இயக்குநர் மாரி செல்வராஜின் திறமை மற்றும் திறன் மிகு தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது” என்றார்.

நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் பா.ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் பேசுகையில், ” பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நீலம் ஸ்டுடியோஸ், மாரி செல்வராஜுடனும் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது.

அர்த்தமுள்ள சினிமா மற்றும் உண்மையான கதைகளுக்கான எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில்…

” பரியேறும் பெருமாள்- பா ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு அது ஒரு படிக்கல்லாக அமைந்தது. அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது.

இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். மீண்டும் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. பரியேறும் பெருமாள் முதல் என்னுடைய அனைத்து படைப்புகளையும் அதிதி ஆனந்த் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் ஒரு நல்ல தோழியும் கூட.

மேலும் அவருடைய உள்ளார்ந்த ஆதரவுடன் இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும்.

மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும்.. திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பற்றி…

தொலைக்காட்சி தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சி, இணைய தொடர், திரைப்படம், ஆவண படங்கள் மற்றும் அனிமேஷன் படைப்புகளுக்கு உள்ளடக்கம் மற்றும் கதை கருவினை வழங்கும் முன்னணி ஸ்டூடியோவாக அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் திகழ்கிறது.

இது ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு பிரிவாக இயங்குகிறது. மேலும் ஊடகத்துறை நிபுணரான சமீர் நாயரின் வழிகாட்டலில் செயல்படுகிறது.
இந்த ஸ்டுடியோ ஏராளமான தொடர்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. வெவ்வேறு ஜானரில்… வெவ்வேறு மொழிகளில்… நிகழ்ச்சிகளையும் வழங்கி இருக்கிறது. குறிப்பாக ‘ருத்ரா : தி எட்ஜ் ஆப் டார்க்னெஸ்’, ‘கிரிமினல் ஜஸ்டிஸ்’, ‘ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’, ‘ஸ்கேம் 2003 : தி தெஹல்கி ஸ்டோரி’, ‘உன்டேகி’, ‘கஃபாஸ்’ என பல தொடர்கள் பார்வையாளர்களின் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது.

அத்துடன் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், நந்திதா தாஸ் இயக்கத்தில் நடிகர் கபில் சர்மா நடிப்பில் ‘ஸ்விகாடோ’ எனும் திரைப்படத்தை தயாரித்து, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டு, விமர்சன ரீதியாக பெரும் பாராட்டையும் பெற்றது.

இதனுடன் இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் சினிமாவான ‘போர் தொழில்’ திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றதுடன், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் அமோக வரவேற்பையும் பெற்றது. மேலும் அபர்ணா சென் இயக்கத்தில் உருவான ‘தி ரேப்பிஸ்ட்’ எனும் திரைப்படம் அண்மையில் பூஸன் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு மதிப்புமிக்க கிம் ஜிஜோக் விருதை வென்றது.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – டிஜிட்டல் தள உலகில் முன்னணியில் திகழும் நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லைவ், எம் எக்ஸ் ப்ளேயர், ஜீ5 மற்றும் வூட் செலக்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆக்கபூர்வமான படைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை செய்து வருகிறது.

நீலம் ஸ்டுடியோஸ் பற்றி…

இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோரால் தொடங்கப்பட்ட நீலம் ஸ்டுடியோஸ் – புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களின் திறமையை.. நிலையான வணிக நடைமுறைகளுடன் உருவாக்கி, வெற்றி பெற வைப்பதுடன்.. நீலம் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் இந்தியத்தனத்துடன் கூடிய சுதந்திரமான உள்ளடக்கத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர அடையாளங்களில் ஒருவராக ஜொலிக்கும் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ ஆகிய படைப்புகள் வெளியாகி இருக்கிறது. விரைவில் சீயான் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ எனும் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

அதிதி ஆனந்த் – தொழில் முனைவோர், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராவார்.

அவரது தயாரிப்பில் ‘தேரே பின்லேடன்’, ‘நோ ஒன் கில்ட் ஜெசிக்கா’, ‘பான் சிங் தோமர்’, ‘சில்லார் பார்ட்டி’ மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தி ஜேர்னி ஆப் த ஃபக்கீர்”, ‘பெரனீஸ் பெஜோ’, ‘பர்கத் அப்ட்டி’ மற்றும் ‘எரின் மோரியாரிட்டி’ ஆகிய திரைப்படங்கள் உருவாகி இருக்கிறது.

பா. ரஞ்சித் – அதிதி ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து, இயக்குநர் பிராங்கிளிங் ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘ரைட்டர்’ எனும் விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் பாராட்டைப் பெற்ற திரைப்படத்தை தயாரித்தனர்.

மேலும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ் நடிப்பில் உருவான ‘J பேபி’ எனும் திரைப்படம் அண்மையில் வெளியாகி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து கலையரசன், தினேஷ், ஷபீர், ரித்விகா மற்றும் வின்சு ரேச்சல் ராம் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தண்ட காரண்யம்’ எனும் திரைப்படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Ranjith Dhruv Vikram Mariselvaraj combo movie updates




செய்யாறு பாலு சொல்வதெல்லாம் பொய், பொறிந்து தள்ளிய 96 பட இயக்குனர் பிரேம்

அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு,

வணக்கம்,

நான் ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் – 7’ஆம் தேதி ‘Cheyyaru Balu official’ என்ற Youtube Channel’ல், ‘உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா’ என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது.

அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான ’96’ படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார்.

குறிப்பாக, ’96 பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், *இன்னொரு வார்த்தை, ‘பொ’ என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க’* என்றும் பேசியுள்ளார்.

மேலும் அதற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்த கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் என்னால் கடந்து செல்ல இயலவில்லை.

திரு. செய்யாறு பாலு அவர்கள் குறிப்பிட்டுள்ள மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கும், 96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கும் Think Music வாயிலாகவும், அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும், இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னரே அதற்கான அனுமதியை பணம் செலுத்தி பெற்றுவிட்டோம்.

ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்துகொண்டு இந்த முக்கியமான தகவலை கூட விசாரிக்காமல், அல்லது அந்த உண்மையை உள்நோக்கத்துடன் மறைத்து பொய் கூறியதேன்? ஒரு காணொளியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு ஒரு செய்தியாளரின் அடிப்படை அறத்தை விட்டுக்கொடுப்பதா?

அந்த காணொளி இசைஞானி இளையராஜா அவர்களை பற்றியது. அவருடைய பெருமையை பேசுவதற்கு அவர் இசையமைத்த ஆயிரம் திரைப்படங்களிலிருந்து ஏதோ ஒரு பாடலே போதுமானது. அப்படி இருக்க, முறையாக ஒரு செயலை செய்த எங்களை சிறுமைப்படுத்துவதேன்? ஒன்றை உயர்த்த இன்னொன்றை தாழ்த்த வேண்டும் என்பது அடக்குமுறை அல்லவா…..

மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் 96 திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தினோம் என்பதை விட, அது அவருடைய இசைக்கான எங்கள் சமர்ப்பணம். இசைஞானியின் இசையை கேட்டு பிறந்து, வளர்ந்த தலைமுறை நாங்கள்.

’96 பற்றி இசைஞானி இளையராஜா Daring’ஆக ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று திரு. செய்யாறு பாலு சொல்கிறார்.

தவறு,

அது ஒரு நேர்காணலில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில். அதற்கான உரிய விளக்கத்தை நாங்கள் கொடுத்த பிறகு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.

மேலும், அதற்கு ’96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் மன்னிப்பு கேட்டதாக ஒரு பொய்யான தகவலையும் சொல்கிறார் திரு. செய்யாறு பாலு. முதலில் 96 படத்தின் இசையமைப்பாளர் பெயர் கோவிந்த் வசந்தா. கோவிந்த் வசந்த் அல்ல. அடுத்ததாக அவர் எந்த மன்னிப்பும் கேட்கவே இல்லை.

திரு. செய்யாறு பாலு எங்களைப் பற்றிய உண்மையைதான் சொல்ல வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், எங்களைப் பற்றி பொய் சொல்ல வேண்டாம்.

சினிமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல. சினிமாவைப் பற்றி விமர்சித்து செய்தி வழங்கும் செய்தியாளர்களுக்கும் அது சொந்தமானதுதான்.

சினிமாவை பாதுகாப்பது இருவரின் கடமைதான்.

கடந்த காலத்தில் 96 திரைப்படத்திற்கு வந்த ஒரு முக்கியமான பிரச்சினையை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் துணையோடுதான் தீர்வு கண்டு, மீண்டு வர முடிந்தது.

அந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்.

ஐந்து வருடங்கள் கடந்தும், மீண்டும் ஒரு பிரச்சினை திரு. செய்யாறு பாலுவின் மூலமாக வந்துள்ளது.

தன்னிலை விளக்கம் அளிக்கவும், உண்மையை நிலைநாட்டவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை, உங்களையே மீண்டும் நாடுகிறேன்.

உண்மை விளங்கட்டும்.

நன்மை விளையட்டும்.

பேரன்புடன்,

ச. பிரேம்குமார்

96 Director Premkumar statement against Media person




மீண்டும் ரஞ்சித் & நிகேஷுடன் படங்கள்..; வெங்கியை சுற்றி பெண்கள்.. ‘ரெபல்’ இசை விழாவில் ஜிவி பிரகாஷ் கலகல

ரெபல் பட இசை வெளியீட்டு விழா

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’.

இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசியதாவது…

ரெபெல் திரைப்படம் இயக்குநர் நிகேஷ் உடைய ஒரு கனவு. இந்திய சினிமாவின் ரெபெல் ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு அளப்பரியது.

இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. அவரைத்திருப்திப் படுத்துவது தான் எங்கள் வேலையாக இருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் இங்கு வேலை காரணங்களால் வரமுடியவில்லை. மும்பையில் ஸ்டூடியோ க்ரீன் சார்பில் சில திரைப்படங்கள் ஆரம்பிக்கிறது அதனால் தான் வரமுடியவில்லை. அவருக்கு இந்த வருடம் மிகச் சிறப்பான வருடமாக அமையும்.

இங்கு வாழ்த்த வந்துள்ள எங்கள் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. ஒரு இயக்குநராக மட்டுமில்லாமல், அவர் ஒரு நிறுவனம் மூலமாக 10க்கு மேற்ப்பட்ட அறிமுக இயக்குநர்களைத் திரை உலகிற்குத் தந்துள்ளார். அவரளவிற்கு இல்லாவிட்டாலும் அது போல் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

இந்தப்படம் மூலம் நிகேஷ் பெரிய அளவில் சாதிப்பார். 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப்படம் உருவாகியுள்ளது. ஜீவி பிரகாஷ் அட்டகாசமான ஆக்சன் செய்துள்ளார். இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

இயக்குநர் நிகேஷ் பேசியதாவது…

நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயது தான், ஆனால் ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார். 10 நாள் ஷீட் செய்து, அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும் வரை, என்னிடம் கேள்வியே கேட்கவில்லை. ஞானவேல் ராஜா சாருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

இப்படத்தின் அனைத்து பணிகளிலும் எப்போதும் உறுதுணையாக இருந்த தனஞ்செயன் சார், அவருக்கு நன்றி. ஜீவி பிரகாஷ் அண்ணா என்னை நம்பி இந்தக்கதை கேட்டார், கேட்டவுடன் தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார். அவருக்கு என் நன்றி. இந்த மொத்தப்படமும் அவர் மீது தான் பயணிக்கிறது.

நாயகி மமிதா பைஜு, மிக ஆழமான அழுத்தமான கேரக்டர், ஆனால் அதைப் புரிந்து நடித்த தந்தார் அவருக்கு என் நன்றிகள். பா ரஞ்சித் அண்ணா என் படத்தின் பூஜைக்கு வந்தார், இப்போது இங்கு வாழ்த்த வந்துள்ளார் நன்றிகள். கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், என ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். அருண் மிக அற்புதமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்.
உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது…

இந்தப்படத்தின் கதை 2 1/2 வருடம் முன்னாடி முடிவானது. இந்த 2 1/2 வருடங்களில் இப்படத்திற்காகப் போராடிப் படத்தை அருமையாகக் கொண்டு வந்துள்ள இயக்குநர் நிகேஷ் அவர்களுக்கு நன்றி. ஜீவி அண்ணா அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அவர் நேரில் தம்பி போல் என்னைப் பார்த்துக்கொண்டார்.

ரஞ்சித் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களை வாழ்த்த வந்த அவருக்கு நன்றி. மமிதா பைஜு இன்னும் நிறைய வெற்றிப்படங்கள் தர வாழ்த்துக்கள். நிறைய மலையாள நண்பர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் கல்லூரி வினோத் பேசியதாவது…

ஜீவி பிரகாஷ் சாருக்கு வணக்கம் , இந்தப் படத்தில் நான் தான் இறுதியாகக் கலந்து கொண்ட கதாபாத்திரம், இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம், ரஞ்சித் அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும் , அவரது படம் போல இந்தப் படமும் ஒரு முக்கியமான அரசியலை மைய்யாமாக வைத்து உருவாகியுள்ளது.

அது மட்டுமில்லை அதில் ரசிக்கும்படி பாடல்கள் சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளது. இயக்குநர் நிகேஷ் சாருக்கு நன்றி, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் நன்றி. ஜீவி பிரகாஷ் சாரின் ரசிகன் நான். வெயில் படத்தின் பாடல்கள் முதல் இன்று வரை அவரது பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவருடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் – நடிகர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது…

முதல் படம் ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட படமாக, பொதுவுடைமை கருத்தைத் தைரியமாகச் சொல்லும் படமாக இயக்கியிருக்கிறார் நிகேஷ். முதல் படத்தில் இதை செய்வது மிகப்பெரிய விசயம்.

தமிழை முதல் படத்தில் இவ்வளவு தைரியமாகப் பேசி எடுப்பது பெரிய விசயம் நிறைய ஹீரோக்கள் இதைச் செய்யப் பயந்திருப்பார்கள். ஆனால் மிகத் தைரியமாகச் செய்துள்ள ஜீவிக்கு நன்றி. அவர் சமூகத்தில் சின்ன சின்ன விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இவரால் மட்டும் தான் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும்.

இந்தப்படம் பார்க்கும் போது எனக்கு நாயகன் தான் ஞாபகம் வந்தது. அந்தப்படமும் மும்பையில் தமிழ் கஷ்டங்களைப் பேசும் படம். ரனினிக்கு பில்லா மாதிரி ஜீவிக்கு இது பெயர் சொல்லும் ஆக்சன் படமாக இருக்கும். ரஞ்சித் எனக்கு மிகப்பிடித்த இயக்குநர். தமிழ் சினிமாவில் ஆர் பி சௌத்திரிக்குப் பிறகு அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் ரஞ்சித் அவருக்கு என் நன்றி. இந்தப்படம் தான் உண்மையான மஞ்ஞும்மள் பாய்ஸ். தமிழ் பசங்க கேரளா போவது தான் கதை. ஒரு அருமையான போராளிப்படம். இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் நன்றி.

நாயகி மமிதா பைஜு பேசியதாவது…

இது எனது முதல் தம்ழிப்படம். எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான படம். ஜீவி பிரகாஷ் சார் அருமையான கோ ஸ்டார். எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். எல்லோரும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளனர். இந்தப்படம் அருமையாக வந்துள்ளது, தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…

இந்தப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்தேன், முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் மிரட்டி விட்டார். ஒரு போராளிக்கதை அதை தனித்த கண்ணோட்டத்தில், பார்க்கும் திறமையுடன் இருக்கக்கூடியவர்.

ஆனால் முழுக்க முழுக்க கமர்ஷியலான ஒரு படாமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிகேஷ். இது தெறிக்கும் கமர்ஷியல் படம். ஜீவி பிரகாஷ் சார் முழுக்க ஆக்சன் ஹீரோவாக மாறியிருக்கிறார். படத்தில் 200 பேரை அடிக்கிறார். ஆனால் அதை அத்தனை நம்பும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அந்தக்காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கும். ஞானவேல் சாரின் நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது.

இடையில் சில வருடங்கள் அவருக்குப் பல கஷ்டங்கள் இருந்தது, ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த வருடம் அவருக்கு மிகச் சிறப்பாக இருக்கும். இப்படம் மூலம் ஒரு அருமையான புதுமுக இயக்குநர் கிடைத்துள்ளார். ஜீவியுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் செய்கிறேன். இரண்டுமே அட்டகாசமாக வந்துள்ளது.

ரஞ்சித் சார் வந்துள்ளார். அவரின் சமீபத்திய தயாரிப்பான ஜே பேபி படத்தை நான் தான் ரிலீஸ் பண்ணியிருக்கிறேன். ஒரு படத்தில் புதுமுகங்கள் பெயர் பெற வேண்டும் என்பதற்காக, உழைக்கும் அவர் பண்பு வியக்கவைத்தது.

தொடர்ந்து சிறப்பான படங்களைப் புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ரெபல் படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பேசியதாவது…

ரெபல் படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் உண்மையான ரெபல் பா ரஞ்சித் பற்றிப் பேச நினைக்கிறேன், உண்மையில் புதிய முகங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் அவரது இந்த புரட்சி பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியது.

அவரை சரோஜா படத்தில் உதவி இயக்குநராகப் பார்த்தேன். இன்று அவர் பல இயக்குநர்களை உருவாக்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது , அவர் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த பட வெற்றியின் மூலம் அடுத்த கட்டத்திற்குப் போவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பொருளையும் வெற்றியையும் ஈட்டித் தரும். இந்தப் படம் 80 கால கட்டங்களில் நடப்பது போலப் படமாக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த படக்குழுவினரின் உழைப்பு படத்தின் இந்த டிரெய்லரில் தெரிந்து விட்டது, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது…

ரெபெல் படப்புகழ் மேடையா ? என்னைப் புகழும் மேடையா? எனத் தெரியவில்லை, இந்தப்பாராட்டுக்கள் மூலம் நான் என் வேலையைச் சரியாகச் செய்கிறேன் என்று நினைக்கிறேன்.

இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில், இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில், இந்தக்கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள்.

ஜீவியை எனக்கு தங்கலான் மூலமாகத் தான் தெரியும், எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள், ஆனால் நேரில் பழகியபிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனது கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும், நிறையப் பேருக்கு நல்லது செய்ய வேண்டும்.

தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார். இந்தப்படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது, என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது, இந்த நிலையில் தான், சக்திபிலிம் சக்திவேலன் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். அவர் இந்த வேலையை நிறையச் செய்ய வேண்டும். நிகேஷ் இப்படத்தில் இருமொழியைப்பிரச்சனையைக் கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…

இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள். ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.

சக்தி ரெபல் படம் பார்த்துவிட்டார், அதனால் தான் இவ்வளவு சந்தோஷமாகப் பேசுகிறார்.

இந்தப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. தமிழ் பற்றிப் பேசும் கதை, இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது, இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலைச் செய்துள்ளார்.

ஆதித்யா இந்தப்படத்தின் மையமே அவன் தான். அவனது கேரக்டர் சரியாக அமைந்ததால் தான், இந்தப்படமே சரியாக வந்துள்ளது. அட்டகாசமாகச் செய்துள்ளான். நடிகர் வினோத் போனில் பேச ஆரம்பித்தால் அரை மணிநேரம் ஆனாலும் வைக்க மாட்டான், நல்ல பையன். இரவு 8 மணிக்கு மேல் அவருக்கு போன் செய்யக்கூடாது.

நன்றாக நடித்துள்ளான். மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன், அவர் தான் டார்லிங்க் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும்.

நிகேஷ் படம் பார்த்துவிட்டு என் தயாரிப்பில் படம் செய்ய அட்வான்ஸ் தந்துள்ளேன். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். ஓஃப்ரோ மிகச்சிறப்பான பின்னணி இசை தந்துள்ளார், சித்துக்குமார் கேரளா சாங் செய்துள்ளார். அதை நான் தான் டிரெய்லரில் வைக்கச் சொன்னேன்.

வெங்கடேஷ் என்னிடம் எல்லாம் பேச மாட்டான் எப்போதும் பெண்களுடன் தான் பேசுவான். நல்ல நடிகன்.

எல்லோருமே மிக அர்ப்பணிப்போடு உழைக்கும் போது அந்தப்படம் சிறப்பாக வரும். மமிதா பைஜு அழகாக தன் கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார்.

ஆண்டனி லவ் ஸ்டோரி சொல்வார் பிரமிப்பாக இருக்கும். ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம். தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம் உங்கள் எல்லோருக்கும் இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

Gv Prakash funny speech about Rebel villain Venky




நான் ஹீரோ இல்லை.. சினிமாவை நினைத்து பயந்துட்டேன்.; ‘அமீகோ கேரேஜ்’ படவிழாவில் மகேந்திரன் பேச்சு

அமீகோ கேரேஜ் படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு

People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’.

கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார்.

இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

நடிகர் மகேந்திரன் பேசியதாவது…

நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி.

கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார்.

அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.  

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது…

இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம்.

ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது.  இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி. ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார்.

கமல் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷீட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார். தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். அவருக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்தது. பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கு கார்த்திக் பாடல் தரும்போதே ஐந்து சரணம் தந்துவிடுவார், அவருக்கு என் நன்றி. விஜய குமார் மிகச் சிறந்த நண்பர். அவருடன் ஆறு வருட பயணம், அட்டகாசமான ஒளிப்பதிவை தந்துள்ளார். அசோக் அண்ணா, நல்ல ஆக்சன் ப்ளாக் தந்துள்ளார். எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர்.

இந்த ட்ரெய்லருக்கு வாய்ஸ் தந்த மைம் கோபி அண்ணாவிற்கு நன்றி. இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம்  கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

NV Creations தயாரிப்பாளர் நாகராஜன் பேசியதாவது..

இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். இப்படத்தின் இயக்குநர் என் மகன். அமீகோ என்றால் என்ன என்று அவனிடம் கேட்டேன்,  அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ஃபிரண்ட் என அர்த்தம் என்றார். இது நண்பர்கள் சம்பந்தமான படம். மாஸ்டர் மகேந்திரன் ஒரு நடிகராக எங்களிடம் அறிமுகமானார், இன்று எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாக தான் பழகுகிறார்கள். இந்தப்படம் எடுக்கும் போது தான் ஒரு படம் எடுப்பது எத்தனை கடினமானது என்பது புரிந்தது. என் மகன் எடுத்துள்ள இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.  

Action Reaction நிறுவனம் சார்பில் ஜெனிஷ் பேசியதாவது…

அமீகோ பெயரே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷுவல்களும் சூப்பராக வந்துள்ளது. வியாபாரத்திற்காக பேசும்போது எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. திரை வட்டாரத்தில் நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுள்ளது. ஆக்சன் ரியாக்சன் சார்பில், இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். நல்ல டீம் மிகச்சிறந்த ஆதரவைத் தந்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது…

2 வருடங்களாக நாங்கள் காத்திருந்த படம், இப்போது ரிலீஸுக்கு ரெடி ஆகியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது, எனக்கு தமிழ் தெரியாது, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டேன். இந்தப் படம் எல்லோரும் இணைந்து ஒரு குடும்பமாக இணைந்து  மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

நடிகர் முரளி பேசியதாவது…

மகேந்திரன் ஃபிரண்டாக தான் இங்கு வந்தேன். இந்தப்படத்தின் கனெக்டிங் பீப்பிளாக அவன் தான் இருந்திருக்கிறான். எல்லா நண்பர்களுக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளான், அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இல்லை அப்பா என்று  தான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டார்கள், எனக்கு இயக்குநரைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இயக்குநர் பிரசாந்தும் நானும் நிறையப் பேசியிருக்கிறோம், நல்ல படம் எடுத்துள்ளார். கண்டிப்பாக இந்தப்படம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் அனைவருக்கும் நன்றி.  

ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து பேசியதாவது..

இது என் முதல் மேடை. இந்த வாய்ப்பிற்காக இயக்குநருக்கு என் நன்றி. ஒரு நல்ல படம். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் பாலமுரளி பாலு பேசியதாவது…

மகேந்திரன் என் தம்பி மாதிரி. அவன் தான் எனக்கு போன் செய்து, ஒரு நல்ல கதை நீங்கள் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டான். அவனுக்குப் பண்ணாமல் எப்படி ? அப்படி தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். அதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எனும் இன்னொரு தம்பி கிடைத்தார். தயாரிப்பாளர் முரளி மிகப்பெரிய ஆதரவு தந்தார். அவரோடு சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. கு கார்த்திக் எல்லாப்பாடல்களையும் அழகாக எழுதித் தந்தார். எப்போதும் ஒரு பாடலுக்கு 5 சரணங்கள் எழுதித் தந்து விடுவார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஸ்டன்ட் இயக்குநர் டான் அசோக் பேசியதாவது…

அனைவருக்கும் என் வணக்கம். அமீகோ கேரேஜ் பற்றிச் சொல்ல நிறையச் சொல்ல இருக்கிறது. விஷுவல், பாடல்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. மகேந்திரன் எந்த ஷாட்டாக இருந்தாலும், ரெடியாக இருப்பார். நிறைய ஒத்துழைப்புத் தந்தார் ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இயக்குநர் பழகப் பழக ஒரு குடும்பமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர் வீட்டில் நாங்கள் சமைத்து சாப்பிடும் அளவு நெருக்கமாகிவிட்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவை  தாருங்கள்.

பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது…

அமீகோ கேரேஜ் மிக ஜாலியாக வேலை பார்த்த படம். இதுவரை இசையமைப்பாளர் பால முரளி உடன் காமெடி கமர்ஷியல் என செம்ம ஜாலியான படமாகத்தான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஆக்சன் டிராமா படம், பால முரளியிடம் நமக்கு நல்ல வாய்ப்பு என்றேன். இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம், பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தைப் பத்திரிக்கையாளர்கள், மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் என் நன்றி .

நடிகர் தாசரதி பேசியதாவது…

இது என்னுடைய முதல் மேடை. இயக்குநர் பிரசாந்த் எனக்கு லைஃப் சேஞ்சிங் மொமண்ட் தந்துள்ளார். அவர் என் நண்பன், இங்கு எல்லோருமே நண்பர்கள் தான்.  இது நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படம். படத்தை அனைவரும் இணைந்து அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளோம், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் முரளிதரன் சந்திரன் பேசியதாவது…

இயக்குநர் பிரசாந்த் இந்த கேரக்டர் பற்றிச் சொன்னபோது, எனக்கு நடிக்கத் தெரியாது என்றேன். வாங்கப் பார்த்துக் கொள்ளலாம் என்றார். என்னை நடிகனாக்கி விட்டார். இப்போது எல்லோருமே நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ஶ்ரீக்கோ உதயா பேசியதாவது…

ஊடக நண்பர்களுக்கு நன்றி. கொரோனா டைமில் மகேந்திரன் போன் செய்து 2 நாள் வேலை இருக்கிறது வாருங்கள் என்றார். என்னை மிக நன்றாகக் கவனித்தனர். கொரோனா சமயம் ஆனால் எல்லோரையும் அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள்.

அமீகோ கேரேஜில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் பாடலாசிரியர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.  இயக்குநர் இசை ஞானம் கொண்டவர், படத்தையும் அருமையாக எடுத்துள்ளார். இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

நடிகர் மதன கோபால் பேசியதாவது…

எங்கள் குழுவே அமீகோ கேரேஜ் படத்திற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தோம். இந்த படக்குழு எனக்கு புதியது, மகி மட்டும் தான் நண்பர். ஆனால் படப்பிடிப்பு முடிந்து, இப்போது எல்லோரும் குடும்பமாகிவிட்டார்கள்.

இந்த டீமில் நானும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி கோபால் பேசியதாவது…

இந்தப் படம் ஃபிரண்ட்ஸ் இல்லாவிட்டால் நடந்திருக்காது. இயக்குநர் பிரசாந்த் தான் அனைவருக்கும் வாழ்க்கை தந்துள்ளார். எல்லோரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.  

கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக,  சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர், தசரதி,  அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய,  ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.

Mahendran speech at Amigo Garage press meet




அஜித்துக்கு V சென்டிமென்ட்.. வெண்பாவுக்கு A சென்டிமென்ட்.. வரிசை கட்டும் படங்கள்

கோலிவுட்டில் சிறு வயது முதலே நடித்து வரும் குழந்தை நட்சத்திரங்களில் ஒரு சிலர் மட்டுமே ஜெய்ப்பது உண்டு.

கமல் ஸ்ரீதேவி விஜய் மீனா சிம்பு உள்ளிட்டவர்கள் வரிசையில் இணைந்தவர் தான் நடிகை வெண்பா.

சிறுவயதில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, கற்றது தமிழ் கஜினி சிவகாசி, சத்யம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

வளர்ந்து குமரியான பின்னர் காதல் கசக்குதையா, பள்ளிப் பருவத்திலே, மாய நதி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் நந்தா பெரியசாமி இயக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் முக்கிய கேரக்டரில் வெண்பா நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவரது கைவசம் தற்போது 5-6 படங்கள் உள்ளன.. இதில் மூன்று படங்களுக்கு அ என்ற எழுத்தில் தலைப்பு இடம் பெற்றுள்ளது.

முதல் படம் ‘அக்கரன்’..

அருண் பிரசாத் இயக்கி வரும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வந்த் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் வெண்பா நாயகியாக நடித்து வருகிறார்.

இரண்டாவது படம் ‘அஸ்திரம்’..

அரவிந்த ராஜகோபால் இயக்கி வரும் இதில் ஷாம் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் வெண்பா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படம் ‘போர்த் தொழில்’ பாணியில் ஆன திரில்லர் கதை என கூறப்படுகிறது.

மூன்றாவது படம் அத்திப்பூ

எஸ் ஏ செல்வகுமார் என்பவர் இயக்கியவர் இந்த படத்தில் வெண்பா நாயகியாக நடித்து வருகிறார்.. இவர்களுடன் சரவணன் சிங்கம்புலி, பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்..

நடிகர் அஜித் ‘வி’ செண்டிமெண்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.. விஸ்வாசம் விவேகம் வீரம் வலிமை தற்போது உருவாகி வரும் விடாமுயற்சி உள்ளிட்ட அனைத்து படங்களும் ஆங்கில எழுத்தில் வி என்ற முதல் எழுத்திலேயே தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Venba movie titles starts with A sentiment

Follows