அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படத்தை இயக்கும் லோகேஷ்

சிம்ரன் தனது புதிய படமான ‘தி லாஸ்ட் ஒன்’ (‘The Last One’) மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்*

*தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’*

மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது.

இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான மற்றும் அற்புதமான பாத்திரத்தை சிம்ரன் இதில் ஏற்றுக் கொண்டிருப்ப‌தால் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை இப்படம் பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்த கால அனுபவத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ள சிம்ரன், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்த அசாத்தியமான‌ பயணத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘குல்மோஹ‌ர்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு படங்களிலும் சிம்ரனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் அவரது சமீபத்திய படமான ‘அந்தகன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டடது. இவ்வாறு மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் சிம்ரனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக ‘தி லாஸ்ட் ஒன்’ திகழும்.

தற்போது தயாரிப்பில் உள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ இருக்கும்.

தனது அற்புதமான சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தில் சிம்ரன் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து லோகேஷ் குமார் இயக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதியதொரு திரை அனுபவத்தை வழங்கும்.

After Andhagan Simran next titled The Last One

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்*

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ‘யாத்திசை’ மற்றும் யோகி பாபு நடித்த ‘லக்கிமேன்’ ஆகும்.

பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார்.

ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

‘யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.

திரைப்படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay TV fame Kumaran debut as lead on movie

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார்.

மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, குணா மறுவெளியீடு திரையரங்க வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

Guna movie re release issue solved at Court

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமாவில் காமெடி செய்து கொண்டிருந்த நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோக்களாக மாறிவிட்டனர்..

வடிவேலு சந்தானம் சூரி யோகி பாபு சதீஷ் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களும் தற்போது ஹீரோக்களாக பல படங்களில் நடித்து வருகின்றனர்.

எனவே காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் ரெடின் கிங்ஸ்லி காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனை அடுத்து அவர் ரஜினியுடன் அண்ணாத்த & ஜெய்லர் உள்ளிட்ட படங்களிலும் விஜய்யுடன் பீஸ்ட் படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.

இந்த நிலையில் ஆனந்த ராகம் உள்ளிட்ட பல டிவி சீரியலில் நடித்து வந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிப்புத் துறை மட்டுமில்லாமல் பிசினஸ் செய்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி.. முக்கியமாக கடந்த 15 வருடங்களாக பொருட்காட்சி விழாக்களை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு தீவு திடலில் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற மிகப்பெரிய பொருட்காட்சியை நடத்தி வருகிறார்.

இதனை தமிழக அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.. இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்களும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவும் கலந்து கொண்டார்.

இந்தப் பொருட்காட்சியின் நுழைவு கட்டணம் ரூபாய் 100 மட்டுமே.. இங்கு இலண்டன் துபாய் பாரிஸ் சுற்றுலா தலங்கள் தத்ரூபமாக செட்டு போடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் கொண்டாட பல அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவு திடலில் நடைபெறும் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற பொருட்காட்சி அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.

Redin Kingsley Sangeethas Dubai Global village at Chennai

ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’

ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’

எல்லா ஜீவராசிகளுக்கும் தாம்பத்யம் உறவு இருந்தாலும் திருமணம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு அற்புதமான தருணமாகும்.

அந்த திருமணம் பந்தத்தை சொல்லும் படங்கள் மிகவும் அரிதாகும். இந்த சூழ்நிலையில் திருமண உறவுகளை சொல்ல வரும் படம் தான் ‘விழி அருகே’..

திருமண வாழ்க்கைக்கு பிறகு பெண்கள் படும் இன்னல்களை மிகவும் தத்துருவமாக இயக்குனர் ஆண்டோ (ANTO) படமாக்கி இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘விழி அருகே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஆண்களுக்கு ஒரு பாடமாகவும் பெண்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் கொடுக்கும்.

இதில் சஜிதா நாயகியாகவும் ஜெகதீஷ் நாயகனாகவும் மற்றும் முக்கியமான வேடத்தில் பறவை சுந்தராம்பாள் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை SAHAYAMATHA EXIM கம்பெனி தயாரித்துள்ளது.

ஒளிப்பதிவு ரஹீம் பாபு இசை விஜய் தேவசிகாமணி பாடல் வரிகள் ரமணி காந்தன் எடிட்டிங் வேலை சுந்தர் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளிவர நிலையில் அப்டேட் கேட்டு மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

எனவே எங்களுடன் இணைந்து இருங்கள்..

Sajitha and Jagadish starring Vizhi Arugae

—–

அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் விஜய்யின் GOAT ரிலீஸ்

அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் விஜய்யின் GOAT ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் விஜய்யின் GOAT ரிலீஸ்

*ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டில், வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் விஜய்யின் ‘கோட்’ படம்*

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோகளின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது. இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.

முன்னதாக “மாஸ்டர், பீஸ்ட்” என தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படத்தை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் வெளியிடுகிறது.

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவினில், இப்படத்தினை அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் இப்படத்தை வெளியிடுகிறது.

அட்வான்ஸ் புக்கிங் ஓபனான நிலையில் தற்போது பல முந்தைய தென்னிந்திய திரைப்பட சாதானைகளை முறியடித்து வருகிறது. ஓவர்சீஸ் வெளியீட்டில் இன்னும் பல சாதனைகளை கோட் திரைப்படம் முறியடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தெலுங்கில் ஜீனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்தினையும் ஓவர்சிஸில் வெளியிடுகிறது. RRR படத்திற்கு பிறகு பலத்த எதிர்பார்ப்பிலிருக்கும் தேவாரா படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Grand release Vijays Goat movie in America

More Articles
Follows