தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
VETTAIYAN: ஒண்ணுமே தெரியாம வந்தேன்.. நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது.. – ரஜினி
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன் ராணா டகுபதி மஞ்சு வாரியார் துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சின் சில தகவல்கள் இங்கே…
மன்னன் பட சூட்டிங் நடித்துக் கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் ஒரு குழந்தை அழைத்துக்கொண்டு வந்தார் அவர்தான் அனிருத்.. அப்போது குழந்தையை ஒரு சிம்மாசனத்தில் வைத்து போட்டோ எடுத்தேன். இன்று அனிருத் இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.. அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுகிறது.. அந்த உயரத்தை எட்டி இருக்கிறார்..
இயக்குநர் என்னிடம் 100% அனிருத் வேணும்’னு சொன்னார். அப்போ நான் `எனக்கு 1000% அனிருத்தான் வேணும்’னு சொன்னேன்..
அமிதாப்பச்சன் நடித்த கேரக்டருக்கு சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தால் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.. அதற்கு பதிலாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்..
படத்தில் ஒரு கேரக்டருக்கு பகத் பாஸில் தேதிகள் தேவைப்பட்டது ஆனால் அவர் காட்சி கிடைக்க தாமதமானது அந்த சமயத்தில் தேதிகளை தள்ளி வைக்க தயார் பள்ளியிடம் சொன்னேன் ஒரு பக்கம் எனக்காக லோகேஷ் கனகராஜ் காத்துக் கொண்டிருந்தார் அப்போது இது குறித்த அவரிடம் சொன்னேன்.. அப்போது லோகேஷ் உடனே ஓகே சொன்னார் அப்போதுதான் புரிந்தது அவர் கதையை இன்னும் ரெடி பண்ண வில்லை என்று..
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ஒன்லைன் சொன்னதாக சௌந்தர்யா சொன்னார்.. அவரிடம் நான் பேசியபோது நீங்க மெசேஜ் சொல்லுவீங்க.. எனக்கு மெசேஜ் செட் ஆகாது.. மக்கள் கொண்டாடனும்.. கமர்சியலா இருக்கணும் என்றேன்.. அவர் பத்து நாட்கள் டைம் கேட்டார்.. ஆனால் இரண்டு நாட்களில் எனக்கு போன் செய்து பேசினார்..
நான் கமர்சியலா பண்றேன்.. ஆனால் நெல்சன் லோகேஷ் மாதிரி இருக்காது.. ஆனால் ரசிகர்களுக்கு உங்களை வேறு ஒரு கண்ணோட்டத்துடன் காட்டுகிறேன் என்றார்… எனக்கும் அதுதான் வேணும் என்றேன்.. அதுபோல வேணும் என்றால் நான் லோகேஷ் நெல்சனிடம் சென்று இருப்பேனே என்று சொன்னேன்..
சகுனிகள் இருக்கிற சமுதாயத்தில நல்லவனா இருந்தா பிழைச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்…
சினிமாவுக்கு வந்து 50 வருஷம் ஆகப்போகுது ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன். நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன்..
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்..
Rajini speech at Vettaiyan Audio launch