தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.. இவரது படங்களுக்கு எப்போதும் குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பு இருக்கும்.
ஆனால் சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் ரவியின் மார்க்கெட்டை காலி செய்துள்ளது..
இவரது சொந்த குடும்ப பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதாவது விவகாரத்தை செய்துள்ளார்.. அவர் தன்னுடைய சுயநலத்திற்காக முடிவு எடுத்துள்ளார்.. அவரை பல மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.. என்னையும் என் குழந்தைகளையும் தவிக்க விட்டார்” என அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
(ஒருமுறை நாங்கள் வெளியே சுற்றிய போது ஒரு பொருளை வாங்க நினைத்தபோது எங்களிடம் பைசா இல்லை.. அருகில் இருந்து ஜெயம் ரவிவிடம் கேட்டேன்.. அவன் கூட என்னிடம் பைசா இல்லை.. மனைவியிடம் தான் பைசா இருக்கிறது என புலம்பினார் நடிகர் விக்ரம்.)
மேலும் ஜெயம் ரவிக்கு வேறு ஒரு பெண்ணுடன் அதாவது ஒரு பிரபல பாடகி உடன் தொடர்பு இருப்பதாக பல முன்னணி ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன.
இதனிடையில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது..
இசை வெளியீட்டுவதற்கு முன்பாக சிலரை தனியாக சந்தித்து கவனித்து விளக்கம் கொடுத்திருந்தார் ஜெயம் ரவி.
தற்போது ‘பிரதர்’ படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழ்நிலை எங்கும் காணப்படுகிறது.. முக்கியமாக ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான சைரன் படம் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.
இதற்கு முன்பு ரவி நடித்து வெளியான ‘பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய பாகங்கள் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு மணிரத்தினம் ரகுமான் லைக்கா உள்ளிட்ட பிரபலங்களின் பங்கு மிகப் பெரியது.
இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அகிலன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது.. சொல்லப்போனால் கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிய வெற்றியை ஜெயம் ரவி கொடுக்கவில்லை.
அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம் ராஜேஷ் உடன் கைகோர்த்துள்ளார்.
ராஜேஷின் ஆரம்பகால படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் வெற்றியை பெற்றன.
ஆனால் அதற்குப்பின் (2013 முதல் 2023 வரை) அவர் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா, வி எஸ் ஒ பி – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்பிள்ளை, கடவுள் இருக்கான் குமாரு, மை 3 உள்ளிட்ட அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.. தற்போது 10 ஆண்டு தோல்வி பின் ராஜேஷ் ‘பிரதர்’ படத்துடன் வருகிறார்.
பிரதர் படம் இந்த பிரதர்-களுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
மேலும் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ படமும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வருகிறது..
சென்னை வானகரத்தில் நடைபெற்ற ‘ஜீனி’ பட பூஜை சமயத்தின் போது காலை 8 மணிக்கு பூஜை என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு ஆரம்பித்திருந்தனர்.. அப்போது நிகழ்ச்சி முடிந்து பின்னர் அப்போது சிலர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்ற போது ‘எனக்கு வேலை இருக்கிறது…’ என்றார் ஜெயம் ரவி.
கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்களை 3 மணி வரை காக்க வைத்து விட்டு இவருக்கு மட்டும் தான் வேலை இருப்பதாக சொன்னது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..
Jayam Ravi in wrong route Brother disappointment