தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செம்பியன் மாதேவி விமர்சனம்… சா-தீ-யிலும் சாயாத காதல்
8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’.
ஸ்டோரி…
செம்பியன் என்ற கிராமத்தில் 2004 ஆம் ஆண்டின் கதை.. படத்தில் நாயகன் வீரா.. நாயகி மாதேவி..
மாடு முட்டி என்பவருக்கு முருகேசன் என்ற மகனும் என்ற மகளும் உள்ளனர்.. இதில் முருகேசனை சில மர்ம நபர்கள் வெட்டிக்கொள்கின்றனர்.
இதன் காரணமாக தெரியாமல் அலையும் மாடு முட்டி தன்னுடைய ஒரே மகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் வேலை செய்யும் கோழி பண்ணை முதலாளி மகன் இவரது மகளை காதலிக்கிறார்.. இந்த விவரங்கள் எல்லாம் இவருக்கு தெரியாது.
இந்த சூழ்நிலையில் நாயகன் உயர்சாதி என்பதால் முதலில் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மெல்ல மெல்ல இவரும் காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் நாயகனால் நாயகி கர்ப்பமாகிறார்.. எனவே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறாள் நாயகி.. ஆனால் இப்போது திருமணம் வேண்டாம் என தள்ளிப் போடுகிறான் நாயகன்..
அதன் பிறகு என்ன நடந்தது.? நாயகி என்ன செய்தார்.? நாயகன் திருமணம் செய்ய மறுப்பது ஏன்.? இவர்களின் காதல் விவரம் தெரிந்த உயர் சாதி என்ன செய்தனர்? என்பது மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
இந்த படத்தை தயாரித்து இசையமைத்து நாயகனாக நடித்திருக்கிறார் லோகு பத்மநாபன்.. கிராமத்து இளைஞனாக கவர்கிறார்.. கொஞ்சம் மேக்கப் போட்டு நடித்திருக்கலாம்..
நாயகி அம்சரேகா இவரது அறிமுகக் காட்சி அசத்தல்.. சில காட்சிகளில் ஒப்பனை போதவில்லை.. அண்ணனை இழந்து விட்ட தன் குடும்பத்திற்காக தன் தந்தைக்காக முதலில் காதலை ஒதுக்கும் சராசரி பெண்ணாக இவர் உயர்ந்து நிற்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் கற்பழிப்பு பலரது மனதை கலங்கடிக்கும்..
மற்றொரு நாயகி கண்ணகியாக நடித்திருக்கும் ரெஜினா.. இவரது கேரக்டர் படத்தில் ஒரு திருப்புமுனை.. விளையாட்டாக செய்த காரியம் வினையானது என்பதை இவரது கேரக்டர் பல பெண்களுக்கு உணர்த்தும்..
மணிமாறன் இந்த படத்தில் ஜாதி கட்சி தலைவராக மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்…
அதுபோல முருகேசன் கேரக்டர் மற்றும் மாடு முட்டி கேரக்டர் ஆகியவை கவனம் பெறுகின்றன..
மற்றவர்கள் கிராமத்து மனிதர்களாக இயல்பான நடிப்பை கொடுத்துள்ளனர்..
ஜெய்பீம் படத்தில் நடித்து நம்மை கவர்ந்த மொசக்குட்டி இந்த படத்தின் கதை ஓட்டத்திற்கும் காமெடிக்கும் உதவியிருக்கிறார்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
கே.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பின்னணி இசை ஏ.டி.ராம் அமைத்திருக்கிறார்.
சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி நடனக் காட்சிகளை வடிவமைக்க மெட்ரோ மகேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
ஜெ.கார்த்திக் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
சாதிய பாகுபாடு… ஆவணக் கொலை என தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாவையே இந்த இயக்குனரும் கையில் எடுத்திருக்கிறார்..
செம்பியன் என்ற கிராமத்து பகுதியும் மாதேவி என்ற நாயகி பெயரையும் வைத்து படத்தலைப்பு வைத்திருக்கிறார்.. இவரே தயாரிப்பாளர் இயக்குனர் நாயகன் என்ற போதிலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது
படத்தில் ஐந்து பாடல்கள்.. வரிகளுக்கும் உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடலை உருவாக்கி இருக்கிறார் ஆனால் வருகின்ற நான்கு பாடலும் ஒரே மாதிரி சாயலில் இருப்பது கொஞ்சம் சோர்வை தருகிறது.. ஓரிரு பாடலையாவது குரூப் டான்ஸ் ஆக கொடுத்து இருக்கலாம்..
ஒளிப்பதிவு எடிட்டிங் பின்னணி இசை படத்திற்கு பலம்…
சாதி வெறியர்களை எதிர்க்க காதல் ஒன்றே ஆயுதம்.. காதலர்கள் தங்கள் காதலின் மேல் நம்பிக்கை வைத்து போராடினால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.. அதை மறுக்க முடியாது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
Sembiyan Maadevi movie review