தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘உழைப்பாளர் தினம்’ விமர்சனம் 3/5.. பணத்தை விட வாழ்வே முக்கியம்
ஸ்டோரி…
தன் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக சிங்கப்பூர் சென்று சம்பாதிக்கிறார் சந்தோஷ நம்பிராஜன்.. இங்கு ஒரு மளிகை ஸ்டோர் வைக்க வேண்டும்.. அதற்கு ஒரு கடை கட்ட வேண்டும்.. அதற்குப் பிறகுதான் கல்யாணம் என முடிவெடுத்து சிங்கப்பூரிலேயே கடுமையாக உழைத்து வருகிறார்..
அவரின் சக நண்பர்களோ.. தலைமுடி கொட்டிக் கொண்டே இருக்கிறது.. வயது ஏறிக்கொண்டே இருக்கிறது.. உடனே திருமணம் செய்து கொள் என அட்வைஸ் செய்கின்றனர்.. ஆனாலும் கடை கட்டிய பிறகு திருமணம் என உறுதியான முடிவில் இருக்கிறார்..
இந்த சூழ்நிலையில் அவருக்கு திடீர் என திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.. வேறு வழி இல்லாமல் திருமணமும் செய்து கொள்கிறார்.. திருமணம் முடிந்து இரண்டு வாரங்களிலேயே மனைவியை பிரிய வேண்டிய சூழ்நிலை..
வீட்டில் குடிகார அண்ணன் வேற இருப்பதால் குடும்ப வறுமை அதிகரிக்க வேறு வழியில்லாமல் மீண்டும் சிங்கப்பூர் செல்கிறார்… நீங்கள் என் பிரசவத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என நாயகி குஷி அன்பு கட்டளையிடுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? அவர் நினைத்தபடி கடையை கட்டி முடித்தாரா?கடன்களை அடைத்தாரா? மனைவியின் பிரசவத்திற்கு வந்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
சந்தோஷ் நம்பிராஜன், குஷி, அன்புராணி, கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குனர் சம்பத்குமார் மற்றும் பலர்.
தன் மீதும் கதையின் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்து இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்.. எங்கும் சினிமாத்தனம் இல்லாமல் நம் வீட்டு நபராகவே தெரிகிறார் நாயகன் சந்தோஷ்.
ஒவ்வொரு முறையும் இந்தியாவில் நம் குடும்பத்துடன் வாழ வேண்டும் என திரும்பும் இந்தியர்கள் மீண்டும் கடன் தொல்லையால் வெளிநாட்டுக்கு ஓடும் காட்சிகளில் ரசிக்கவும் கலங்கவும் வைக்கிறார்.
வெளிநாட்டில் சம்பாதித்து விட்டு இந்தியாவில் நமக்கு ஒரு பிரச்சினை எனும் போது இங்கு உள்ள அரசியல்வாதிகளால் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.. அந்த இடைவெளியில் கட்சிக் கொள்கை கேட்டால் தலை சுத்திடுச்சு ஒருவர் சொல்கிறார் மற்றொருவர் கட்சிக் கொள்கை ரகசியம் என்கிறார் என ரஜினி விஜய்யை கிண்டல் அடித்திருக்கிறார் இயக்குனர்..
நாயகியாக குஷி.. பெண் பார்க்கும் காட்சியில் நாயகனை கிண்டல் அடிப்பதும் திருமணத்திற்குப் பிறகு இருவருக்குமான ரொமான்டிக் சீன்ஸ் அசத்தல்.. முக்கியமாக சினுங்கி சினுங்கி பேசும் காட்சிகள் செம.. அதுபோல விடிய விடிய பேச பிளாஸ்க் காபி எனும் ரொமான்டிக் வார்த்தை சூப்பர்..
சிங்கப்பூரில் உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களின் நிலை.. அவர்களின் குடும்ப சூழ்நிலை.. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் பெண்களின் குடும்பம் அவர்களின் குழந்தை என அனைத்தையும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்..
மேலும் நாயகனின் அம்மா அப்பா அண்ணன் அண்ணி மாமா நண்பர்கள் அனைவரும் பங்களிப்பும் படத்திற்கு பெரிதும் உதவி உள்ளது..
டெக்னீசியன்ஸ்…
இசை: மசூத் ஷம்ஷா
பாடல்கள்: சிங்கை சுந்தர், கனியன் செல்வராஜ்
ஒளிப்பதிவு: சதீஸ் துரைகண்ணு
எடிட்டிங்: கோட்டிஸ்வரன்
தயாரிப்பு: சிங்காவுட் புரொடக்ஷன், நம்பிராஜன் இண்டர்நேஷனல் சினிமாஸ்
ராக் எண்டர்டெயின்மெண்ட்ஸ்.
தயாரிப்பாளர்கள்: ராஜேந்திரன் கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், பிரேம்சந்த் நம்பிராஜன், ராஜேந்திரன் நீதிபாண்டி, கஜா, சரஸ்
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என பல படங்கள் பார்த்து இருந்தாலும் இந்த படத்தில் உணர்வுப்பூர்வமாக எதார்த்தமாக திரைக்கதை அமைத்து ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் சந்தோஷ நம்பிராஜன்.
படத்தில் சில காட்சிகளில் உதட்டில் வசனங்கள் ஒட்டவில்லை.. பட்ஜெட் படம் என்றாலும் மெனக்கெட்டு இருக்கலாம்..
நிச்சயம் இந்த படத்தை பார்த்தால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உடனே இந்தியாவுக்கு வரவேண்டும் தன் குடும்பத்துடன் வாழ வேண்டும் என நினைப்பார்கள்.. அதுபோல தன் கணவனையோ தன் சகோதரனையோ தன் மகனையோ வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு குடும்பத்தாரின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
பாடல்களைப் பொறுத்தவரை…
அழகான சிங்கப்பூரூ.. மனசெல்லாம் தங்கம் பாரு … பாட்டு ஓகே.. ஆனா ராகம் இடிக்கிறது.. வரிகளுக்கு மெட்டு போட்டாரா மெட்டுக்கு வரி அமைத்தாரா என்பது இசையமைப்பாளருக்கு வெளிச்சம்
வாழ்வே வாழ்வே பாட்டு.. & தீரா காதலே நீதான் என் தேடலே… ஆகிய பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.. ஆனால் அனைத்து பாடல்களுமே ஒரே மாதிரியாக இருப்பதை இயக்குனர் கவனித்தாரா??
பல இடங்களில் வசனங்கள் நம் கண்களில் கண்ணீரை வர வைக்கும்..
வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்வோருக்கு பணம் முக்கியம் ஆனால் அதைவிட வாழ்க்கை முக்கியம். என வெளிநாட்டிலே வாழ்ந்து வாழ்க்கையை தொலைத்த ஒரு இந்தியர் சொல்லும்போது நம் மனம் ரணமாகும்..
ஆசை ஆசையாக தங்க நகைகளை வாங்கிக் கொண்டு இந்தியாவிற்கு பரிட்டன் வரும்போது. கஸ்டம்ஸ் சேர்த்து சாம்பாதிக்க வேணும்ல என்ற வசனம் வரும்.. நம் உறவுகளிடம் தங்க நகை கேட்கும் உறவுகளுக்கு இந்த வசனம் சாட்டையடி..
ஹீரோ அண்ணன் பைட் சீன்.. எடிட்டிங் மோசம்.. அண்ணன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியின் வண்டி வந்துவிடும் ஆனாலும் காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கும் மீண்டும் தம்பி வருவதாக காட்சி காட்டப்படுவதை எடிட்டர் கவனிக்கவில்லையா..??
திருமணம் ஆகி 14 நாட்களில் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டு கணவன் மனைவி குடும்பம் நடத்தும் அந்த ஒரு காட்சி பரிதவிப்பை உண்டாக்குகிறது..
Uzhaippalar Thinam movie review