தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்
பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.*
எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..
பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.
பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரை, தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகியோர் உட்பட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது.
செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தலைவெட்டியான் பாளையம் திரைப்படம் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் திரையிடப்படவிருக்கிறது.
தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார்.
இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.
Thalaivettiyaan Palaiyam streaming from 20th September