தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை
நேற்று இரவு செப்டம்பர் 30ஆம் தேதி திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வருத்தம் தொற்றிக் கொண்டது அப்புல மருத்துவமனை அருகே ரசிகர்கள் குவிந்தனர்.
தமிழக அரசின் சுகாதாரத்துறை ரஜினியின் உடல் நலம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.. மேலும் அப்போல்லோ மருத்துவமனையும் ரஜினியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில்… நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. மேலும் தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல் உதயநிதி, நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..
Rajinikanth health updates from Appollo