ஷங்கரின் உதவி இயக்குநரைப் பாராட்டிய விஷால்-சசிகுமார்-கௌதம்மேனன்

ஷங்கரின் உதவி இயக்குநரைப் பாராட்டிய விஷால்-சசிகுமார்-கௌதம்மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

megam sellum thooramபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார்.

அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார்.

புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் வாழ்க்கை, அன்பு, குடும்பம் இவற்றின் மீதான மதிப்புகளை உணர்ந்து கொள்கிறான். இதுவே “மேகம் செல்லும் தூரம்” வீடியோ பாடலின் சாராம்சம்.

இந்த பாடலை படமாக்குவதற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், உதவி இயக்குநர் விக்னேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு மட்டுமே இமாச்சல் பிரதேஷ், ராஜஸ்தான், நீலகிரி ஆகிய இடங்களுக்குப் பயணித்திருக்கிறது. மேலும் சில காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட்டிக்கின்றன.

இந்தப் பாடலின் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண் “ஒரு கிடாயின் கருணை மனு”, “விழித்திரு” ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் முழுக்க காதலின் வலி, இளைஞனின் லட்சியத் தேடல், பெண்ணின் மனநிலை, பயணா அனுபவம், காதலின் புரிதல் என பல அனுபவங்களை ஒரே களத்திற்குள் தனது அழகு கொஞ்சும் தமிழ் வரிகளால் நிரப்பியிருக்கிறார் பாடலாசியரும், பத்திரிக்கையாளருமான ம.மோகன்.

இவரின் வரிகளுக்கு இயல்பான இசையின் மூலம் உயிர் தந்திருப்பவர் இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்.

இவர் வெறும் 17 வயது மட்டுமே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவுஸ்துப் ரவியின் குரலில் அழகாய் உருவாகியிருக்கும் இப்பாடலுக்கு, எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார் அருள்மொழி செல்வன்.

மேலும் இந்த வீடியோ பாடலை “மஹாலட்சுமி தியேட்டர்ஸ்” உரிமையாளர் ஷைலேந்தர் சிங் தயாரித்திருக்கிறார்.

இன்றைய இளம் தலைமுறை காதலர்களின் வாழ்வில் சகஜமாகிவிட்ட “பிரேக்-அப்” மற்றும் “ஈகோ” போன்றவற்றை மையமாய் வைத்து வெளிவந்திருக்கும் இந்த வீடியோ பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் “யூ-டியூப்” வலைதளத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

“மேகம் சொல்லும் தூரம்” வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின், “இந்த வீடியோ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குறிப்பாக இப்பாடலின் இசையும், ஒளிப்பதிவும் பிரம்மிப்பைத் தருகிறது.” என்று பாராட்டியுள்ளார்.

அவரைப் போலவே நடிகர் விஷால், நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அவர்களது கருத்துக்கள் பின்வருமாறு :-

நடிகர் விஷால், “நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. விக்னேஷ்குமார், ஜாட்ரிக்ஸ் மற்றும் ஆர்.வி.சரண் ஆகியோருக்கு வாழ்த்துகள்” என்று கூறினார்.

நடிகர் சசிகுமார், “இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. படமாக்கப்பட்ட இடங்களும், பாடல் வரிகளும் மிகவும் அருமையாக இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “மேகம் செல்லும் தூரம்” பார்த்தேன். அருமையாக வந்திருக்கிறது. கடினமான இடங்களில் படமாக்கப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.

இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

Vishal Sasikumar Udhayanidhi praises Shankar Asst Vignesh kumar for his album song

சூர்யாவை வைத்து விஜய்யை கிண்டல் செய்த கருணாகரன்

சூர்யாவை வைத்து விஜய்யை கிண்டல் செய்த கருணாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karunakaran made fun of Vijay movie shooting during cinema strikeமார்ச் 1ஆம் தேதி முதல் தமிழ்த்திரை உலகினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சினிமா போஸ்டர்கள் கூட ஒட்டக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில் விஜய் நடித்து வரும் படத்தின் சூட்டிங் சென்னை விக்டோரியா மஹாலில் நடைபெற்றது.

தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் மற்றொரு புறம் இதனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் தன் ட்விட்டரில் “ஸ்டிரைக் இருக்கு ஆனா இல்ல” என கிண்டலடிக்கும் விதமாக எஸ்ஜே. சூர்யாவின் படத்தை போட்டு பதிவிட்டு இருந்தார்.

மேலும் மற்றொரு ட்வீட்டில் “தமிழன்னு சொன்னாலே திமிர் ஏறும் உண்மையா? இல்ல ஜஸ்ட் சாங் ஆ” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது சினிமாவில் தமிழர்களின் ஒற்றுமையை பற்றி பேசிவிட்டு தங்களுடைய படப்பிடிப்பை மட்டும் தனியா நடத்துகிறீர்களே இது முறையா? என பொருள்படும் வகையில் அவர் பதிவிட்டுள்ளார்.

Actor Karunakaran made fun of Vijay movie shooting during cinema strike

Karunakaran‏Verified account @actorkaruna
Tamizannu sonnaley thimir yerum unmaya illa just song uh

பதவி கிடைக்கலேன்னா ஃபீல் பண்ணாதே கண்ணா.. ரஜினி அட்வைஸ்

பதவி கிடைக்கலேன்னா ஃபீல் பண்ணாதே கண்ணா.. ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini video speech at Rajini Makkal Mandram meetingதன் அரசியல் பிரவேசம் உறுதி என அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.

விரைவில் தன் கட்சி மற்றும் கொடிகளை அறிமுகப்படுத்த உள்ளார். அதற்கு முன்னதாக தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இந்த பணிகளை சுதாகர் மற்றும் ராஜீ மகாலிங்கம் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அங்கு ரஜினி பேசிய வீடியோ காட்சி ஒன்று ஒளிப்பரப்பானது.

அதில் ரஜினி பேசும்போது.. பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமை படக்கூடாது. காவலர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். நாம் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். முழுவதையும் நாம் மாற்ற வேண்டும்” என பேசினார் ரஜினிகாந்த்.

Rajini video speech at Rajini Makkal Mandram meeting

கரு உள்ளிட்ட சிறு படங்களுக்கு வழிவிடும் காலா

கரு உள்ளிட்ட சிறு படங்களுக்கு வழிவிடும் காலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala release may postponed So Lyca likely to release Karu movieகடந்த 3 வாரங்களாக அதாவது மார்ச் 1 முதல் தமிழகத்தில் எந்த ஒரு புதிய சினிமாவும் ரிலீஸ் ஆகவில்லை.

டிஜிட்டல் கியூப் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது.

இந்த வேலை நிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாத நிலை உள்ளது.

இதனால் திரைத்துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

மார்ச் மாத ரிலீஸ் செய்யப்பட வேண்டிய 30 படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை ஸ்டிரைக் முடிந்த உடன் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதனால் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவிருந்த ரஜினியின் காலா திரைப்படம் மே மாதத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இது தொடர்பாக காலா படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களாம்.

அதன்படி காலா வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாம் அதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள லைகா.

இதே நிறுவனம்தான் விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்துள்ள கரு படத்தை தயாரித்துள்ளது.

எனவே அந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடவிருக்கிறார்கள்.

Kaala release may postponed So Lyca likely to release Karu movie

2 படங்களை நிறுத்திவிட்டு பேய் படத்துக்கு ரெடியாகும் ஐஸ்வர்யா தனுஷ்

2 படங்களை நிறுத்திவிட்டு பேய் படத்துக்கு ரெடியாகும் ஐஸ்வர்யா தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Dhanush next direction movie updatesரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள் ‘3‘ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதே படத்தின் மூலம்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இப்படத்தில் இடம் பெற்ற ஒய் தி கொல வெறி என்ற பாடல் உலகம் முழுக்க பிரபலமாக இந்த படம் நன்றாக ஓடியது.

இதனையடுத்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா தனுஷ்.

இந்த படங்களை தொடர்ந்து சினிமாவில் தங்கள் உயிரையே பணயம் வைத்து போராடும் சண்டைக் கலைஞர்களுக்காக ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.

அது இன்னும் வெளியாகவில்லை.

இதனைத் தொடர்ந்து அதிரடியாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக அறிவித்தார்.

ஆனால் அது என்ன ஆனதோ..? அதுவும் முடங்கிவிட்டது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு பேய் படத்தை இயக்கவுள்ளாராம்
இப்படத்தை கணவர் தனுஷ் தயாரிக்கவுள்ளார்.

தற்போது நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் முழு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Aishwarya Dhanush next direction movie updates

தாடி வச்சிட்டு ஐடி ஆபிஸ் போன அசிங்கமா பார்த்தாங்க.: நடிகர் சோமு

தாடி வச்சிட்டு ஐடி ஆபிஸ் போன அசிங்கமா பார்த்தாங்க.: நடிகர் சோமு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Munthiri kaadu movie stills (9)அண்மையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘6 அத்தியாயம்’ இது தமிழ்ச் சினிமாவில் ஒரு வித்தியாசமுயற்சி என்று பாராட்டப்படுகிறது.

இதில் ஆறாவது அத்தியாயத்தில் ‘சித்திரம் கொல்லுதடி’யில் அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருப்பவர் சோமு.

இவர் சாப்ட்வேர் உலகத்திலிருந்து திரையுலகத்துக்கு வந்திருப்பவர்.
இதோ சோமு தன்னைப் பற்றிக் கூறுகிறார்,

“நான் பள்ளி , கல்லூரி என்று படித்து சாப்ட்வேரில் புகழ் பெற்ற ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்குச் சின்ன வயது முதலே சினிமா என்றால் பிடிக்கும்.

அந்தக் கனவு உலகத்தில் நம் காலடி படாதா என்று ஏங்குவது உண்டு. நான் படித்து வேலைக்குப் போனதும் என் ஆர்வத்தை கலை நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தேன். எனக்கு நடனத்தில் அபார ஆர்வம். அலுவலக நடனக் குழுவில் நான் அங்கம் வகித்து ஆடுவேன்.

இப்படிப் போய்க் கொண்டிருந்த போது கலைஞர் டிவியில் ‘நாளைய இயக்குநர்கள் ‘சீசன் தொடங்கியது அது பலருக்கும் திரையுலகக் கதவுகளைத் திறந்து விட்டதை யாவரும் அறிவர்.

நானும் ஒரு குறும்படத்தில் நடித்தேன். அது சிறந்த நடிகருக்கான விருதையும் எனக்குத் தேடித்தந்தது. விருதை இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் கையால் பெற்றேன். முதல் குறும்படத்திலேயே சிறந்த நடிகர் விருது ,அதுவும் திரையுலகில் சாதனை படைத்த பாக்யராஜ் அவர்களால் என் பதை எண்ணிப் பெருமையாக இருந்தது.

நடிப்பில் இறங்கலாம் என்று சிறு நம்பிக்கையும் வந்தது. அதன் பிறகு நாளைய இயக்குநாகளுக்கே 5 குறும்படங்கள் நடித்தேன். வேறு மாதிரியும் என சுமார் 15 குறும்படங்களில் நடித்தேன்.

அப்படி ஒரு குறும்படமாக வந்த வாய்ப்பு தான் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கிய ‘சித்திரம் கொல்லுதடி’. அதுவே 6 அத்தியாத்தில் ஆறாவது அத்தியாயம். இன்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படுகிற முயற்சி அது ‘ அதைப் பார்த்த பலரும் என்னை இனங்கண்டு பாராட்டினார்கள்.

இது தான் என் திரையுலக அறிமுகக் கதை. ” என்று தன் முன் கதையைக் கூறினார் சோமு.

இவர் நடித்து இப்போது மு.களஞ்சியம் இயக்கத்தில் ‘முந்திரிக்காடு ‘படம் முடிந்திருக்கிறது. வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வட சென்னை’யில் நடித்திருக்கிறார்.

அந்த அனுபவங்கள் பற்றிக் கூறும் போது “என்னைத் திரையுலகிற்கு முழுத் தகுதியாக வளர்த்து உருவாக்கியவர் களஞ்சியம் அவர்கள் தான் என்று கூறுவேன்.

சினிமாவில் அவரே என் திரையுலக. தந்தை அவர் 3 மாநில விருதுகள் உள்பட பல விருதுகள் பெற்ற இயக்குநர் பூமணி பூந்தோட்டம், மிட்டா மிராசு, எதிரும் புதிரும் போன்ற பல படங்களை இயக்கியவர்.

அவர் ‘முந்திரிக்காடு’ படத்தில் நான் நடிக்கும் போது என்னைச் சரியானபடி நடிக்க வைக்க எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். படத்துக்காகப் பெரிய தாடி ஓராண்டு காலம் வளர்த்தேன் அத்துடனேயே அலுவலகம் போனேன்.

ஐடி துறையில் தாடியுடனா என்று என்னைச் சிலர் அருவருப்பா அசிங்கமா பார்த்தார்கள். நான் பொறுத்துக் கொண்டேன். அதன் பிறகுதான் படப்பிடிப்பு போனோம்.

படத்தில் முக்கியமான வில்லன் நான்தான். படத்தின் பெரும் பகுதியில் நான் வருவேன். சுமார் 60 நாட்கள் தஞ்சாவூர் . புதுக்கோட்டை . திருநெல்வேலி என்று படப்பிடிப்பு நடந்தது.

முந்திரிக்காடுகளில் செம்மண் பூமியில் இப்படி படப்பிடிப்பு போனது மறக்க முடியாதது. நான் நடித்திருந்ததை அண்ணன் சீமான் அவர்கள் பார்த்து என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டி வாழ்த்தியிருந்தார். அதை மறக்க முடியாது. அது விருது கிடைத்த மகிழ்ச்சியைத் தந்தது.

அதே போல வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்ததும் மறக்க முடியாதது. அதில் நான் சிறிய அளவில் வந்தாலும் அடையாளம் கண்டு பாராட்டப் படுவேன். ” என்கிறார் .

“சினிமாவுக்கு என்று வந்த பிறகு என்னை முழுத் தகுதியுள்ளவனாக மாற்ற வேண்டுமல்லவா? அதற்காக நடனப் பயிற்சி, கராத்தே, குதிரைச் சவாரி ,நீச்சல் என பலவற்றிலும் பயிற்சி பெற்றுக் கற்றுக் கொண்டேன்.

வில்லனாக எனக்கென ஓர் இடம் பெற வேண்டும், இதுவே என் இப்போதைய லட்சியம் “என்கிற சோமு கையில் புதிதாக மேலும் 2 பட வாய்ப்புகள் வந்துள்ளன .

இவர் பந்தயப் புறாக்கள் வளர்ப்பதில் கைதேர்ந்தவர்.

“இந்த 2018 க்குள் உங்கள் மனதில் பதிகிற ஒரு நடிகனாக நான் வந்து விடுவேன்” என்கிற சோமுவின் கண்களில் நம்பிக்கை மின்னுகிறது.

Techie Somu turns Into Villan in Munthiri Kaadu

Munthiri kaadu movie stills (7)

More Articles
Follows