தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய் நெய்வேலி பகுதியில் நடைபெற்று வரும் ’மாஸ்டர்’ சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.
பெரும்பாலும் இவர் சூட்டிங்கில் சமய இடைவெளியில் ரசிகர்களை சந்திப்பதுண்டு.
இப்போதும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆனால் இந்த முறை இது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்-அன்பு செழியன்-AGSக்கு சம்மன்; கால அவகாசம் கேட்ட விஜய்
வருமான வரித்துறை சோதனை… காரில் போகும்போது முகத்தை மறைத்த விஜய், தற்போது நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் என திரையுலகை உலுக்கி வருகிறது.
இதனால் நெய்வேலியில் திரளான ரசிகர்கள் விஜய்யை காண தினம் தோறும் அங்கே வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் தான் எடுத்த செல்ஃபியை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் அதை அனைவரும் பகிர்ந்து MASS-TER தளபதி செல்ஃபி என டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
பல பிரபலங்களும் விஜய்யை வாழ்த்தி வருகின்றனர்.
Actor Vijays Masster selfie goes viral