தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இவர் தீவிர கமல்ஹாசன் ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இதற்கு முன்பு கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தையும் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது உருவாகி வரும் லியோ படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
‘லியோ’ படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகத்திற்கான சீன்ஸ் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ‘லியோ’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
’லியோ’ இரண்டாம் பாகத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் லலித்தின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில் கமல் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் ‘லியோ’ படத்தை முடித்த பிறகு ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக ஒரு பேட்டியில் “அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும்” எனவும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kamal and Vijay joining hands together for first time