தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
உலக அளவில் நிறைய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வந்தாலும் இந்த ஆஸ்கர் அவார்ட் பெரிய கவுரமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் 2வது முறையாக தொகுப்பாளர் இல்லாமல் நடந்து வரும் ஆஸ்கர் விருது விழா, JANELLE MONAE மற்றும் BILLY PORTER-ன் பாடலுடன் தொடங்கியது.
முதலில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இதை ONCE UPON A TIME IN HOLLYWOOD படத்தில் நடித்ததற்கான பிராட் பிட் தட்டிச் சென்றார். பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து வரும் பிராட் பிட் நடிகராக வென்ற முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது பெற்ற பட ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி & யோகிபாபு
மற்ற கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:
சிறந்த படம் – பாராசைட்
சிறந்த இயக்குநர் – போங் ஜூன் ஹோ (பாராசைட்)
சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)
சிறந்த நடிகை – ரெனீ ஜெல்வேகர் (ரூடி)
சிறந்த ஆவண குறும்படம் – லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – தி நெய்பர்ஸ் விண்டோ
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917)
சிறந்த ஆவணப்படம் – அமெரிக்கன் பேக்டரி
சிறந்த வெளிநாட்டு படம் – பாராசைட் (கொரியன்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – டாய் ஸ்டோரி-4
சிறந்த அனிமேஷன் குறும்படம் – ஹேர் லவ்
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரோஜர் டீக்கின்ஸ் (1917)
சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)
சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)
சிறந்த ஒப்பனை – கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்)
சிறந்த திரைக்கதை – போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்)
தழுவல் திரைக்கதை – டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)
சிறந்த பின்னணி இசை – ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)
சிறந்த பாடல் – லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)
ஆடை வடிவமைப்பு – ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)
ஒலி கோர்ப்பு – மார்க் டெய்லர் (1917)
தயாரிப்பு வடிவமைப்பு – பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த ஒலி படத்தொகுப்பு – டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)
92nd Oscar Awards 2020 Winner Full List is here