யாக்கை விமர்சனம்

யாக்கை விமர்சனம்

நடிகர்கள் : கிருஷ்ணா, ஸ்வாதி, மெல்வின், ஹரி கிருஷ்ணா, பிரகாஷ்ராஜ், சிங்கம்புலி, குருசோமசுந்தரம், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர்.
இயக்கம் : குழந்தை வேலப்பன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : சத்யா பொன்மார்
எடிட்டிங்: சாபு ஜோசப்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : ப்ரிம் பிக்சர்ஸ் முத்துக்குமரன்

கதைக்களம்…

மனித உடலின் மறுபெயர் தான் இந்த யாக்கை.

மருத்துவ துறையில் தன் வியாபாரத்திற்காக சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் பண முதலைகள் ஆடும் சதுரங்க வேட்டை தான் இந்த யாக்கை.

ஒரு அரிய வகை ரத்தம் உள்ளம் நாயகியை வில்லன் துரத்துகின்றனர்.

அதன் சூழ்ச்சியை பின்னர் அறிந்துக் கொள்ளும் அப்பாவி நாயகன் எடுக்கும் அவதாரமே இக்கதை.

C5j0nMwXQAApJ8G

கதாபாத்திரங்கள்…

லவ் பாயாகவும் ஆக்ஷன் ஹீரேவாகவும் வருகிறார் கிருஷ்ணா. காதலிக்காக கதறும்போது நம்மை உருக வைக்கிறார்.

ஆனால் மற்ற காட்சிகளில் ஒரு இடத்தில் நிற்காமல் துள்ளிக் கொண்டே இருக்கிறார். ஜாலியான காலேஜ் பசங்கன்னா இப்படி காட்டனுமா? என்ன?

நாயகி ஸ்வாதிக்கு நிறைவான படம். கண்களாலும் சைகையாலும் பேசும் காட்சிகளில் கவிதையாய் தெரிகிறார்.

ஜோக்கர் படத்தில் அசத்திய ஜனாதிபதி குருசோம சுந்தரம் இதில் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ் மற்றும் ராதாரவி சில காட்சிகள் என்றாலும் முத்திரை பதிக்கின்றனர்.

C5hk_pfWYAAgPlL

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சத்யா பொன்மார் ஒளிப்பதிப்பில் காலேஜ் காட்சிகளை ரசிக்கலாம்.

ஆனால் எடிட்டர் சாபு ஜோசப்தான் பொறுமையை சோதித்துவிட்டார்.

முதல் பாதியில் நிறைய காட்சிகளை வெட்டியிருக்கலாம். காதல், ஆதரவற்றோர் இல்லம் என காட்டிக் கொண்டிருந்தாலும் அதில் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பலம் சேர்க்கின்றன. “என்னுள்ளே ஏன் சலனம்…”, “நான் இந்த காற்றில்..”,” எந்தன் இறுதி மூச்சு…” உள்ளிட்ட பாடல்கள் இனிமை.

ஒரு மருந்தை சாப்பிட்டு நோய் குணமாகிவிட்டால், பின் எப்படி மருந்து வியாபாரம் ஆகும்.

அதை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் மருந்து முதலாளிகளின் வேலை என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கும் இயக்குனர் குழந்தை வேலப்பனுக்கு சபாஷ் போடலாம்.

கருணை உள்ளம் கொண்ட காதலி, ரத்தம் கேட்டால் கொடுத்திருப்பா.. அவளை ஏண்டா இப்படி பண்ணீட்டீங்க என்று நாயகன் கூறும்போது ரத்ததான கொடை வள்ளல்கள் கண்முன்னே நிற்கின்றனர்.

யாக்கை… ரத்ததான விழிப்புணர்வு

Comments are closed.

Related News

பொங்கல் தினத்தில் பைரவாவுடன் வர்றோம் என…
...Read More
2017 பொங்கல் தினத்தில் விஜய்யின் பைரவா…
...Read More
அடுத்த வருடம் பொங்கலுக்கு விஜய்யின் பைரவா…
...Read More