வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம்

வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம்

நடிகர்கள் : ஆர் கே, நீது சந்திரா, இனியா, நாசர், ஜான்விஜய், ஆர் கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், அர்ச்சனா, கோமல்ஷர்மா, சிங்கமுத்து, மனோபாலா, மதன்பாபு மற்றும் பலர்.
இயக்கம் : ஷாஜி கைலாஷ்
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : சஞ்சீவ் சங்கர்
எடிட்டர்: பிரபாகர்
பி.ஆர்.ஓ.: அ ஜான்
தயாரிப்பு : மக்கள் பாசறை (ஆர் கே)

rk advt

கதைக்களம்…

ஒன்லைன்… ரயிலில் நடக்கும் க்ரைம் த்ரில்லர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்டில் தீவிரவாதி, ஒரு நடிகை குடும்பம், ஜர்ணலிஸ்ட், நீது சந்திரா, நாலு டாக்டர் ப்ரெண்ட்ஸ், ஒரு பைத்தியக்காரன் குடும்பம், ஒரு பணக்கார பெண், டிடிஆர் உள்ளிட்டவர்கள் பயணம் செய்கிறார்கள்.

அதில் பயணம் செய்யும் 3 பெண்கள் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களை கொன்றவர் யார்?

அதனை ஐபிஎஸ் அதிகாரி ஆர். கே. எப்படி கண்டு பிடிக்கிறார்? என்பதே மீதிக்கதை.

vaigai express advt

கதாபாத்திரங்கள்…

ஆர்கேவின் அறிமுகமே அசத்தல்தான். படம் முழுவதும் ஆர்கே-வே ஆட்சி செய்கிறார்.

படத்தின் முதல் காட்சியில் தொடங்கிய அதே எனர்ஜியை க்ளைமாக்ஸ் வரை கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு ஃபிட்டான போலீஸ் கிடைத்திருக்கிறார். ஆனால் ஒரு சில காட்சிகளிலாவது சிரித்து இருக்கலாம் ஆர்.கே. சார்.

இரண்டு கேரக்டர்களிலும் நீத்து சந்திரா ஸ்கோர் செய்கிறார். இனியாவுக்கு இன்னும் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

நாசர், ஜான்விஜய், ஆர் கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், அர்ச்சனா, கோமல்ஷர்மா, சிங்கமுத்து, மனோபாலா, மதன்பாபு, மலையாள கேரக்டரில் வரும் அனுப் ஆகியோரின் கேரக்டர்களில் கூடுதல் பலம் சேர்த்திருக்கலாம்.

vaigai english

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தமனின் பின்னணி இசை தாறுமாறு. சில இடங்களில் ரீப்பிட்டு செய்யாமல் புதுமையாக ட்ரை செய்திருக்கலாம்.

சஞ்சீவ் சங்கர் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கனல் கண்ணன் பைட்டில் அனல் தெறிக்கிறது. எடிட்டர் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.

rk neethu

இயக்குனர் பற்றிய அலசல்…

பெரும்பாலும் இதுபோன்ற கதைகளில் 3 கொலைக்கும் ஏதாவது ஒரு கனெக்ஷன் இருக்கும். உடனே ஹீரோ கண்டுபிடித்துவிடுவார்.

ஆனால் இதில், எந்தவித கனெக்ஷன் இல்லை என்பதால், 3 கொலையாளிகள் யார்? என்று சொல்வதில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் டைரக்டர்.

இதுபோன்ற கம்பீரமான ஹீரோக்கள் நல்லது செய்தால், அவரை ஹீரோயின் காதலிப்பார். ஒரு டூயட் இருந்திருக்கும். ஆனால் அதுபோன்ற எந்தவிதமான காட்சிகளையும் வைக்காமல் நகர்த்தியிருப்பது இயக்குனர் சமார்த்தியம்.

ஒரு இண்டர்நேஷ்னல் தீவிரவாதியை எப்படி கண்டுபிடிக்கிறார்? அவரை பிடிக்க ஒருவரே செல்வது கொஞ்சம் ஓவர்தான்.

இறுதியாக அந்த தீவிரவாதியை எதற்காக டிரெயினுக்கு கொண்டு வந்து கொல்கிறார் ஆர். கே. என்பதில் தெளிவில்லை.

அர்ச்சனாவுக்கு மறைந்த நடிகை கல்பனா வாய்ஸ் பொருந்தவில்லை. சில வசனங்களை பார்க்கும்போது டப்பிங் படத்தை பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது.

க்ளைமாக்ஸில் நீத்து சந்திரா கேரக்டருக்கு வைத்த ட்விஸ்ட் செம.

வைகை எக்ஸ்பிரஸ்… ஆர்.கே.வின் த்ரில்லர் எக்ஸ்பிரஸ்

Comments are closed.