FIR (FANTASTIC INVESTIGATION RIDE).. எப்ஃஐஆர் FIR விமர்சனம் 3.75/5

FIR (FANTASTIC INVESTIGATION RIDE).. எப்ஃஐஆர் FIR விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதம் முத்திரை குத்தப்படுகிறது. அந்த பழியில் இருந்து மீண்ட ஒருவன் மற்றவர்களின் முகத்திரையை கிழித்திருக்கிறார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தான் “எப் ஐ ஆர்”. இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்.

கதைக்களம்..

கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனக்கு பிடித்த வேலையை தேடி அலைகிறார் விஷ்ணு விஷால். முஸ்லீம் மதத்தைச் இவர் சேர்ந்தவர் என்பதால் இவரது பெயர் இர்பாஃன் பதான்.

இவரின் காதலி ரெபோ மோனிகா. விஷ்ணு விஷாலின் அம்மா போலீஸ் அதிகாரி. விஷ்ணுவின் தோழி ப்ராமண பெண் மஞ்சிமா மோகன் ஒரு வழக்கறிஞர்.

ஒரு கட்டத்தில் வேலையே கிடைக்காத காரணத்தால் கெமிக்கல் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார் விஷ்ணு. இதனால் அடிக்கடி கோவை, பெங்களுர், ஹைதராபாத் என பயணம் செய்கிறார்.

இவர் பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் இலங்கை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வெடிக்குண்டு வெடிக்கிறது. ஒரு பிரபல அமைப்பு இந்தியாவிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறது.

சில சூழ்நிலைகளால் விஷ்ணுவின் நடவடிக்கைகள் உளவுத்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சில சாட்சிகளும் ஆதாரங்களும் இதற்கு சாட்சியாக கிடைக்க தீவிரவாத அமைப்பின் தலைவர் (அபுபக்கர்) இவர்தான் என உளவுத்துறை முத்திரை குத்துகிறது.

இதனால் விஷ்ணுவின் அம்மா பணியும் பறிபோகிறது. மேலும் அவர்களது வீட்டை காலி செய்ய சொல்கின்றனர்.

விஷ்ணு விஷால் யார்..? நிஜமாகவே அவர் தீவிரவாதிதானா..? சுமத்தப்பட்ட பழியிலிருந்து மீண்டாரா? உளவுத்துறை என்ன செய்தது.? என்பதே மீதிக்கதை..

கேரக்டர்கள்..

ஒரு படம் காமெடி.. ஒரு படம் ஆக்சன் என மாறி மாறி பயணிக்கிறார் விஷ்ணு விஷால். அவர் கதைகளை தேர்ந்தெடுக்கும் பாணிக்காகவே அவரை பாராட்டலாம். கதை மீது அளவுக்கடந்த நம்பிக்கை இருந்திருப்பதால் அவரே தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.

மேலும் இதுபோன்ற படத்தை ஓடிடியில் வெளியிடாமல் தியேட்டர்களில் வெளியிட துணிந்தமைக்கு அவரை வெகுவாக பாராட்டலாம்.

அப்பாவி இஸ்லாமிய இர்ஃபான் பதனாக தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். அதே சமயம் தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அசத்தல் ரகம். ஆக்‌ஷன் காட்சிகளில் சிக்ஸ் பேக் படிக்கட்டுகளை காட்டி ரசிகைகளையும் ஈர்க்கிறார்.

NIA அதிகாரியாக கெளதம் வாசுதேவ் மேனன். அவரது ஸ்டைலிஷ் இங்கிலீஷ் எப்போதும் ப்ளஸ்தான். அவரது மேனரிசம் அவரது கேரக்டருக்கு கூடுதல் பலம் அளித்துள்ளது.

இன்ஸ்வெஸ்டிகேசன் குணசேகர் கொள்ளியப்பனும் தன் கேரக்டரில் கவனம் ஈர்க்கிறார். இடையில் எங்கு காணாமல் போனார்? என்பது தெரியவில்லை.

அதுபோல் நிறைய அதிகாரிகள் வருகிறார்கள். அவர்களும் ரசிகர்களை கவர்கிறார்கள்.

படத்தில் மூன்று நாயகிகள். இதில் மனிஷாவாக வரும் ரைசா முதல் இடம் பெறுகிறார். ஆக்சன் காட்சிகளிலும் ஃபயராக வருகிறார் ரைசா. இனி அவருக்கு இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்கள் சான்ஸ் வரும்.

கன்னங்கள் வீங்கி குண்டு பெண்ணாக வருகிறார் மஞ்சிமா மோகன். இனியாவது அவர் உடலை கவனிப்பது நல்லது. படத்தில் பெரிதான வேலையில்லை. பிராமண பெண்ணாக ப்ராத்தனா கேரக்டரில் ரசிக்க வைக்கிறார்.

ரெபா மோனிகா அழகான ஒரு மெலோடி பாட்டுக்கு வந்து அட.. அடடா அழகு என ரசிக்க வைக்கிறார். இவரின் கேரக்டர் க்ளைமாக்சில் செம ட்விஸ்ட்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் படத்தின் பில்லர் எனலாம். அருமையாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். ரொமான்டிக் சீன் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டலான ஒளிப்பதிவு.

அஷ்வத் இசையில் விழியே.. பாடல் சூப்பர். பின்னனி இசையில் தெறிக்கவிட்டுள்ளார். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை இசை ராஜ்யம் நடத்தியுள்ளார் அஷ்வத். பிரசன்னாவின் படத்தொகுப்பு ஷார்ப் தான். எங்கும் போரடிக்கவில்லை.

ஜெட் ஸ்பீட்டில் மேக்கிங் என தனி முத்திரை படைத்துள்ளார் டைரக்டர் மனு ஆனந்த்.

படத்தின் ஆரம்பம் முதலே ரேஸ் கார் வேகத்தில் பயணிக்கிறது கதை. இது ஆக்சன் பிரியர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும். அதை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த். இது அவரின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டர்கள். திரைக்கதையை தெளிவாக வைத்து க்ளைமாக்சில் செம ட்விஸ்ட் வைத்து சீட் நுனியில் ரசிகர்களை உட்கார வைப்பார்.

தேசத்திற்காக உண்மையாக வாழும் அனைவரும் இந்நாட்டின் மன்னனே என உணர்த்தியிக்கிறார்.

ஆக.. இந்த எப்ஃஐஆர் படம்.. FIR (FANTASTIC INVESTIGATION RIDE)

FIR movie review and rating in Tamil

கடைசி விதை..; கடைசி விவசாயி விமர்சனம் 3.75/5

கடைசி விதை..; கடைசி விவசாயி விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

நம் அனைவருக்கும் உணவளிப்பவனே உயர்ந்தவன். அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட விவசாயி பற்றிய வாழ்வியலே இந்த பாடம்.

கதைக்களம்…

75-80 வயது மதிக்கத்தக்க நல்லாண்டிதான் இந்த கதையின் நாயகன்.

ஓர் அழகான கிராமத்தில் விவசாயம் செய்து தன்னை மட்டுமே நம்பி வாழ்கிறார். நாத்து நடவோ அறுவடை செய்யவோ ஆள் கிடைக்காவிட்டாலும் தனி ஆளாக அனைத்தையும் செய்து வருகிறார்.

பலர் 100 நாட்கள் வேலை திட்டத்தை நம்பியிருக்க இவர் மட்டுமே 365 நாட்கள் விவசாயியாக வாழ்ந்திருக்கிறார்.

செயற்கை உரங்களை நம்பாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார். இவரின் எண்ணத்திற்கு ஏற்ப இவரது கேணியில் மட்டும் தண்ணிரூக்கு பஞ்சமில்லை.

ஒரு கட்டத்தில் 15 வருடங்களாக நின்றுபோன ஊர் குல தெய்வத்திற்கு படையலிட இவரிடம் நெல்மணிகளை கேட்கின்றனர்.

இதற்காக நாத்து நாட்டு பயிரிடுகிறார் நல்லாண்டி.

பிராணிகள் மீது அதீத அன்பு கொண்ட இவரது விவசாய நிலத்தில் மூன்று மயில்கள் இறந்து கிடக்கின்றன.

இறந்த மயில்கள் தானே என தனது நிலத்திலேயே மூன்றையும் புதைத்தும் விடுகிறார்.

இதனை பார்த்த ஒரு நபர் தவறுதலாக நல்லாண்டி தான் 3 மயில்களை கொன்று புதைத்தார் என காவல்துறையில் புகாரளித்து விடுகிறார்.

மயிலை கொன்ற காரணத்திற்காக நல்லாண்டி மீது போலீஸ் வழக்கு பதிய சிறையில் அடைக்கப்படுகிறார்.

இதனால் பயிரிடப்பட்ட நாற்று பாதியில் நிற்கிறது.

நல்லாண்டி வழக்கில் இருந்து மீண்டாரா ? பயிர்கள் என்னவானது. ? குல தெய்வம் படையல் திருவிழா நடந்ததா? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இந்த பெரியவர் நல்லாண்டி நிஜ வாழ்க்கையில் கொரோனா காலத்தில் மரணமடைந்துவிட்டார். ஒருவேளை அவர் இருந்திருந்தால் ஒட்டு மொத்த பாராட்டையும் பெற்று இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.

அவர் படத்தில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அவர் செய்வதை செய்யட்டும் நான் படமாக்கி கொள்கிறேன் என இயக்குனர் & ஒளிப்பதிவாளர் மணிகண்டன் நினைத்திருப்பார் போல… அப்படியே யதார்த்தமாக வருகிறார் இந்த மனிதர்.

அவரின் அப்பாவித்தனம் படத்திற்கு கூடுதல் பலம்.. ஒரு காட்சியில் கோர்ட்டில் நீதிபதி வந்து அமர… யார் அந்த பெண்? என கேட்கிறார்.

நம் உயிர்களை போல நெற்பயிரும் உயிர்தான். அதனை காப்பது நம் கடமை என சொல்லும்போது நம் கண்கள் கலங்கும்.

கதையின் நாயகி என்றால் அது நீதிபதியாக வரும் ரெய்ச்சல் ரெபேகா தான். இந்த மனிதர் மயிலை கொன்று இருப்பாரா.? என போலீசிடம் கேட்கும்போது நீதி தேவதையாக தோன்றுகிறார்.

இறுதியில் தீர்ப்பளித்துவிட்டு விவசாயிக்கு என்ன ஆச்சு என பதறும்போது ரெய்ச்சல் மீது நடிப்பு பாய்ச்சல் ஒளி தெரிகிறது.

கைதியாக வருபவர், போலீஸ் ஏட்டாக வந்த காளைப் பாண்டியன், கிராமத்து வாசிகளாக வந்த முனீஸ்வரன், காளிமுத்து & பாட்டியம்மாக்கள் உள்ளிட்டவர்கள் சூப்பர்.

படத்தில் முருக பக்தனாக விஜய்சேதுபதி & யானை வளர்ப்பவனாக யோகிபாபு இருவரும் ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள். அவ்வளவுதான்.

டெக்னீசியன்கள்…

சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் இருவர்களின் பின்னனி இசை ரசிக்க வைக்கிறது. ஏற்கெனவே கேட்ட முருகா முருகா பாடல்களை தவிர்த்து புதுப்பாடல்களை போட்டு இருக்கலாம்.

கிராமத்து அழகினை வெறுமனே காட்டாமல் மயில், மாடு, கோழி, யானை உள்ளிட்ட ஜீவன்களுடன் காட்டியது கூடுதல் சிறப்பு.

எந்த செயற்கைத்தனமும் இல்லாத கிராம மக்களின் வாழ்வியலுடன் ரேஷன் கார்டு, மின்சாரம் என எதுவும் இல்லாமல் வாழும் நல்லாண்டி போன்ற மனிதர்களை நாம் இன்று பார்க்க முடியாது.

அவரின் உன்னதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு பாடமாக பதிவு செய்திருக்கிறார் மணிகண்டன் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆக…. இந்த கடைசி விவசாயி…

விவசாயிதான் இந்த மண்ணின் கடைசி விதை. அவர்கள் இல்லையேல் நாம் இல்லை..

Kadaisi Vivasayi movie review and rating in tamil

பவர்புஃல் பன்றி..; பன்றிக்கு நன்றி சொல்லி விமர்சனம் 3.5/5

பவர்புஃல் பன்றி..; பன்றிக்கு நன்றி சொல்லி விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

அதிசயமிக்க பன்றி சிலை ஒன்று பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது தற்போது யார் கையில் உள்ளது. அதனால் அவர்கள் அடைந்த லாபம் என்ன?

கதைக்களம்

மிகப்பழமை வாய்ந்த சின்ன சிறிய பன்றி சிலை ஒன்றை சீன நாட்டிலிருந்து கைப்பற்றிய ஒருவர் தமிழகத்திற்கு வருகிறார்.

ஒரு கட்டத்தில் தொல்லியல் துறை ஆய்வாளர் ஒருவர் அதை எடுத்துச் செல்ல அவர்களிடமிருந்து மற்றொரு கும்பல் அதைப் பிடுங்கி செல்கிறது.

இதன் பின்னர் ஓரிரு இளைஞர்கள் அதன் ரகசியத்தை அறிந்து திருடி சென்று மறைத்து வைக்கிறார்கள். அதன் பலனை அனுபவிக்கும் முன்பே அவர்கள் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள்.

இந்த நிலையில் போலீஸ் பாலாஜி ரத்தினம் மற்றும் ரவுடி விஜய் சத்யா ஆகியோர் பன்றி சிலையை பறிக்க போராடுகிறார்கள்.

இதே சமயத்தில் சினிமா டைரக்டராக போராடும் நிஷாந்தும் இந்த பன்றி கதைக்குள் வருகிறார். இவரிடம் தயாரிப்பாளர் ஒருவர் கதையை தனக்கு ஒரு நல்ல தொகைக்கு விற்கும்படி கேட்கிறார். இதனை ஒப்புக்கொள்ளாத இயக்குனர் (இவர்தான் நாயகன்) வேறு தயாரிப்பாளரை தேடி நகர்கிறார்.

இறுதியில் அந்த பன்றி சிலையை யார் கைப்பற்றினார்கள் என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் பெண் கேரக்டர்கள் எவரும் இல்லை என்பது பெரிய விஷயம்.

இதில் நாயகன் இவர்தான் என யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது.

நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்னம், செல்லா, வியன், பாஸ்கர் மற்றும் ஜீ நண்பர் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் நடிப்பை மீறி யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

பாழடைந்த கம்பெனி ஒன்றில் படமாக்கப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் செல்வராஜின் பணிகள் பாராட்டும் படி உள்ளது.

சுரேன் விகாஷின் பின்னணி இசை சிறப்பு. முக்கியமாக பன்றிக்கு… என்ற பாடல் ரசிக்கும்படியாக உள்ளது.

எடிட்டர்கள் ராம் சதீஷ் இருவரையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு மணி நேரம் 42 நிமிடத்திற்குள் படத்தை எடிட்டிங் செய்துள்ளனர்.
கிரைம் காமெடியாக சொல்லப்பட்ட திரைக்கதையில் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர் பாலா அரன். சில திருப்பங்களும் விறுவிறுப்பை கொடுத்துள்ளன.

ப்ளாக் காமெடி படம் என்றால் இன்னும் பல நகைச்சுவைகளை ஆங்காங்கே அளித்து தெளித்திருக்கலாம். ஆனால் காமெடி கொஞ்சம் கம்மிதான்.
இளைஞர்களின் இந்த வித்தியாசமான முயற்சியை நிச்சயம் பாராட்டலாம்.

ஆக.. இந்த பன்றிக்கு நன்றி சொல்லி… பவர்புஃல் பன்றி

Pandrikku Nandri Solli Review rating

சாதியை வெளுக்கும்… சாயம் விமர்சனம்

சாதியை வெளுக்கும்… சாயம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…
சாதி என்ற சாயம் பூசப்படுவதால் வருங்கால தலைமுறை என்னாகிறது? என்பதே கதை.

கதைக்களம்…

ஓர் கிராமத்தில் ஊர் பஞ்சாயத்து தலைவர் பொன்வண்ணன். இவரது மனைவி சீதா. இவர்களது ஒரே மகன் அபிசரவணன் (இவரின் புதிய பெயர் விஜய் விஸ்வா). இவரின் முறைப்பெண் சைனி. (படத்தின் நாயகி)

விஜய்யின் நெருங்கிய நண்பர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் எந்த சாதி வேறுபாடும் இல்லாமல் நட்பாகவே உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கின்றனர்.

ஆனால் கையில் கயிறு கட்டுவது.. பைக்கில் சாதி தலைவர்களின் ஸ்டிக்கர் ஒட்டுவது என ஒரு சிலரால் கல்லூரி மாணவர்களிடையே சாதி அரசியல் பேசப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வில்லன் சூழ்ச்சி வலையில் சிக்கி கொள்கிறார் விஜய் விஸ்வா. தன் உயிர் நண்பனையே சூழ்நிலை காரணமாக கொலை செய்ய சிறைக்குச் செல்கிறார்.

இதனால் இவர் சாதி வெறியர்களின் எதிரியாகிறார். சிறையில் விஜய்யை போட்டுத்தள்ள திட்டம் போடப்படுகிறது.
அங்கு விஜய்யின் சாதியினரின் ஆதரவினால் இவர் தப்பித் கொள்கிறார்.

சாதி சாயத்தில் சிக்கிக் கொண்ட விஜய் என்ன செய்தார்? அதன்பின்னர் விடுதலை ஆனாரா? என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இந்த படத்தை இயக்கியதோடு சாதி வெறி பிடித்த மிரட்டல் வில்லனாகவும் நடித்துள்ளார் இயக்குனர் அந்தோணி சாமி. இவர்தான் முதலில் நாயகன் போல காண்பிக்கப்படுகிறார். அப்புறம்தான் விஜய் விஷ்வா நாயகன் என்பதே தெரிகிறது.

வழக்கமான கிராமத்து இளைஞனாக விஜய் விஸ்வா நடித்துள்ளார். முதலில் சாதியை வெறுக்கும் விஜய் பின்னர் சாதி வெறி பிடித்த கைதியாக மாறுகிறார். காதல் காட்சிகள் இவருக்கு கைகொடுக்கவில்லை என்பதை விட

இவருக்கு காதல் காட்சிகளை இயக்குனர் கொடுக்கவில்லை என தெரிகிறது. க்ளைமாக்சில் எமோஷனல் ஆக்சன் என கொஞ்சம் முயற்சித்துள்ளார்.

நாயகி ஷைனி நாயகனை விட மூத்தவராக தெரிகிறார். சில காட்சிகளில் குண்டாகவும் மற்ற காட்சிகளில் ஒல்லியாகவும் தெரிகிறார். நாயகனை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இவர்களின் நண்பர்கள் கச்சிதம்.

பொன்வண்ணன், சீதா, இளவரசு, போஸ் வெங்கட் என பல அனுபவ கலைஞர்கள் உள்ளனர். அவர்களின் தேர்வு கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

நாகா உதயன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். கிரிஸ்ட்டோபர், சலீம் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
சாதி சாயம் பூசப்படுவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை அந்தோணி சாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆனால் அதை சொன்ன விஷயத்தில் தடுமாறியிருக்கிறார் டைரக்டர்.

ஆக மொத்தத்தில் சாயம் – சாதியை வெளுக்கும்.

Saayam movie review rating

சரவெடி சாமானியன்..; வீரமே வாகை சூடும் விமர்சனம் 3.25/5

சரவெடி சாமானியன்..; வீரமே வாகை சூடும் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடும் சாமானிய மனிதனின் கதை.

கதைக்களம்..

விஷாலின் அப்பா மாரிமுத்து போலீஸ்காரர். விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரி மாணவி.

தன் அப்பாவை போல போலீஸ் ஆக முயற்சிக்கிறார் விஷால். (க்ரைம் ப்ரான்ச்)

ரவீனாவுக்கு லோக்கல் ஏரியா லவ் டார்ச்சர் கொடுக்கிறார். இதனால் விஷால் ஆவேசமடைகிறார். ஆனால் தந்தையோ பொறுத்து போ.. பொறுத்து போ என அட்வைஸ் செய்கிறார்

ஒரு கட்டத்தில் மற்றொரு கும்பல் ரவீனாவை கடத்தி செல்கிறது.

இறுதியில் தங்கை என்ன ஆனார்.? விஷால் கண்டு பிடித்தாரா? ரவீனாவை கடத்திய கும்பல் யார்? போலீஸ் ஆனாரா விஷால்.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஆவேசம், காதல், தங்கை பாசம், சமூக அக்கறை என தன் வழக்கமான பாணியில் விளாசுகிறார் விஷால். ஆக்ஷன் காட்சிகளில் வேற லெவல். சென்டிமெண்டில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாயகியாக டிம்பிள் ஹயாதி. பேங்கில் வேலை செய்கிறார். இவரின் அறிமுக காட்சி சூப்பர். என்னடா… உன் கூட படுக்கனுமா? என பேங்க் மேனஜரை டேமேஜ் செய்கிறார்.

தங்கையாக வரும் ரவீனா நம்மை கவர்கிறார். அண்ணனுடன் செல்ல சண்டை…. ரவுடி டார்ச்சரால் அவஸ்தை என எமோஷனல் நடிப்பை கொடுத்துள்ளார்.

வில்லன் பாபு ராஜ் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் க்ளைமேக்ஸ் இவரது பைஃட் எதிர்பாராத ஒன்று. போராளி குமரவேல் தன் கேரக்டரில் கச்சிதம்.

காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு. கொஞ்சம் மாறுபட்ட நடிப்பில் மாரிமுத்து.

ஆர்என்ஆர் மனோகர் & மரியம் ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பு கவனம் பெறுகிறது.

டெக்னீஷியன்கள்…

கவினின் ஒளிப்பதிவு செம ரிச். க்ளைமாக்ஸில் ஹீரோ & வில்லன் காஸ்ட்யூம் ஏற்ப லைட்டிங் கொடுத்துள்ளது சிறப்பு.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ஆனாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார் யுவன் சங்கர் ராஜா.

அனல் அரசு & ரவி வர்மா சண்டை காட்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஃபைட் சீன்கள் பட்டைய கிளப்பியுள்ளன.

அதிகார வர்க்கத்தின் அக்கிரமங்களை பார்த்து ஒரு கட்டத்தில் வெகுண்டெழும் சாமானியனின் கோபத்தை யதார்த்தமாக கொடுத்துள்ளார் இயக்குனர் து.ப.சரவணன்.

இடைவேளை காட்சியில் மூன்று கிளை கதைகளை கொடுத்து இரண்டை இணைத்து திரைக்கதை உருவாக்கி இருக்கிறார் டைரக்டர். மிகச்சிறப்பு.

3வது ட்விஸ்டை க்ளைமாக்ஸில் இணைத்துள்ளது சிறப்பு.

இடைவேளை வரை காட்சிகள் படத்திற்கு பலம். பிற்பாதியில் யூகிக்கும் படியான காட்சிகள் வருவது பலவீனம்.

ஓரிரு பன்ச் வசனங்களை தவிர வழக்கமான வசனங்களும் பலவீனம்.

தெரியாமல் செய்தால் உதவி.. தெரிந்து செய்தால் விளம்பரம்.. என்ற வசனம் ரசிக்க வைக்கிறது.

ஆக ‘வீரமே வாகை சூடும்’… சரவெடி சாமானியன்

Veerame Vaagai Soodum movie review and rating in Tamil

பல டென்ஷன்களில் பல மனிதர்கள்..; சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம்

பல டென்ஷன்களில் பல மனிதர்கள்..; சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், நாசர், அபிஹாசன், பானுப்ரியா, அஞ்சு குரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நம் செயல்பாடுகள் நமக்கு சரியாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் பார்வையில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..

சாதித்தவர்களின் சாதுவானவர்கள். அவர்களின் அனுபவப்படி நடத்தல் நலம்.

கொடுக்கப்பட்ட வேலையை முழுமையாக செய்யாவிட்டால் என்ன பிரச்சனை ?

ஆடம்பரமே வாழ்க்கையில்லை. பணத்தை மீறிய வாழ்க்கை உண்டு.

இப்படியாக 4 கதைகளை கொண்ட படம்தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

கதைக்களம்..

தன் தாயை இழந்த அசோக் செல்வன் தன் அப்பா நாசருடன் வாழ்ந்து வருகிறார். இவர் ரியா என்பரை திருமணம் அப்பா சம்மதத்துடன் மணக்கவிருக்கிறார்.

தன் அப்பா மீது அதீத பாசம் வைத்திருந்தாலும் அதை முரட்டுத்தனமாக காட்டுபவர் அசோக் செல்வன். உங்களுக்கு ஒன்றுமே தெரியல.. நான் சொல்றதை கேளுங்க என்ற அதட்டல் குணம் படைத்தவர்.

இவரின் பேச்சை கேட்காமல் நாசர் தன் நண்பர்களுக்கு மகனின் கல்யாண பத்திரிகை வைக்க தனியாக செல்கிறார்.

இரவு முழுவதும் அப்பாவை காணவில்லை என தேடி அலைகிறார் அசோக். என்ன ஆனார் நாசர்.?

2வது கதையில்…

பிரபலமான இயக்குனர் அறிவழகன் (கேஎஸ் ரவிக்குமார்) இவரது மகன் அபிஹாசன் அமெரிக்காவில் வளர்ந்தவர்.
சினிமா மீதுள்ள ஆசையால் நடிகராக அறிமுகமாகிறார். ஆனால் அப்பாவின் சென்டிமெண்ட் குடும்ப படங்கள் இவருக்கு சுத்தமாக பிடிக்காது.

அதிகார வர்க்க பணக்கார திமிரோடு வாழ்பவர். தந்தை துணை இல்லாமல் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவர். இவர் ஒரு பிரச்சினையை சந்திக்கிறார். அப்பா உதவினாரா?

3வது கதை..

ஸ்டார் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பராக பணிபுரிபவர் மணிகண்டன். தனக்கு திறமை இருந்தும் மதிப்பு இல்லை என குமுறுபவர் இவர். மேலும் கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் அதை முழுமையாக முடிக்காதவர். இவர் பாதியில் ஒரு வேலையை விட்டு சென்றதால் மற்றவர் பாதிக்கப்படுகிறார்..

4வது கதை..

ரித்விகாவின் கணவர் பிரவீன் ராஜா. தன் மனைவி தன் குடும்பத்தை வசதியாக காட்டிக் கொள்ள நினைப்பவர். காஸ்ட்லியான பொருட்களை வாங்கி தம்பட்டம் அடிப்பவர் இவர்.

உங்களுக்காக என்னால் அப்படி வாழ முடியாது என்பவர் ரித்திகா. இதனால் என்ன பிரச்சினை உருவானது?

இந்த நாலு கதைகளும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறது. ஒவ்வொருவரின் டென்ஷன்கள் மற்றவர்களின் பிரச்சினைக்கு எப்படி காரணமாகிறது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், ரித்விகா, அபிஹாசன், கே எஸ் ரவிக்குமார், நாசர் உள்ளிட்ட கேரக்டர்கள் அனைத்தும் சிறப்பு. இயக்குனர் கேரக்டருக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்துள்ளது மிகச்சிறப்பு.

இதில் அதிகம் ஸ்கோர் செய்பவர் நடிகர் நாசர் தான். கொஞ்ச நேரமே வந்தாலும் சேரி பாஷைகளில் தன் பாசத்தை புரிய வைத்துள்ளார்.

கோபக்கார இளைஞனாக அசோக் செல்வன். இவர் வருங்கால மனைவியுடன் தன் தவறை உணர்ந்து அடங்கி போவது ரசிக்க வைக்கிறது.

எப்போதுமே கொடுத்த கேரக்டருக்கு மகுடம் சூட்டுபவர் நடிகர் மணிகண்டன். யதார்த்த நாயகனாக அசத்தியிருக்கிறார்.

SHIT… SHIT… என ஸ்டைலிஷ் இங்கிலீஷ் பேசியிருக்கிறார் அபிஹாசன். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தெரிகிறது. குறைத்திருக்கலாம்.

ரித்விகா அவரது கணவர் பிரவீன் ராஜா இருவரும் சிறப்பு. பிரவீன் ராஜாவின் நண்பராக வரும் அந்த வக்கீல் சில காட்சிகளே என்றாலும் கவனிக்க வைக்கிறார்.

கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமாகுமார் பல சிறந்த நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டெக்னிஷியன்கள்…

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. சேரி காட்சியிலும் ஆடம்பர குடும்ப காட்சியிலும் மாறுபட்ட லைட்டிங் கொடுத்திருப்பது சூப்பர்.

ரதனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னனி இசை சில இடங்களில் கவனம் பெறுகிறது.

அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் பாஸ் மார்க்கும் பெறுகிறார்.

நான்கு கதைகளை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டே செல்வதால் ஒரு கதையை நாம் உணர்வதற்குள் அடுத்த கதை வருவதால் கவனம் சிதறுகிறது.

எமோஷனல் கதைதான் என்றாலும் அதை உணர்வுபூர்வமாக சொன்னாமல் போனதால் ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றமே.

முக்கியமாக ஒரு விபத்து நடக்கிறது. அதுக்கு யார் காரணம்? என பொதுமக்கள் இறுதியாக தெரிந்துக் கொண்டார்களா? என்பதை இயக்குனர் சரியாக காட்சிப்படுத்தவில்லை. அதை ரசிகர்களே புரிந்துக் கொள்ளட்டும் விட்டுட்டாரா?

நடிகரை ட்ரோல் செய்யும் காட்சிகள் சிறப்பு. இது என்ன சொல்ல போகிறாய்? நடிகர் அஸ்வினை குறிப்பதாகவே உள்ளது. அவர் பேசி சர்ச்சையான இசை வெளியீட்டுக்கு விழாவுக்கு முன்பே எடுக்கப்பட்ட காட்சியா? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

ஆக.. நம்மில் பல பேர் பல டென்ஷன்களுடன் வாழும் மனிதர்கள் தான் என்பதை சொல்லி ரிலாக்ஸ் ஆக சொல்லியிருக்கிறார் டைரக்டர் விஷால் வெங்கட்.

Sila Nerangalil Sila Manidhargal review

More Articles
Follows