திட்டிவாசல் விமர்சனம்

திட்டிவாசல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நாசர், மகேந்திரன், அஜய்ரத்னம், தீரஜ் அஜய்ரத்னம், தனு ஷெட்டி, ஐஸ்வர்யா மற்றும் பலர்.

இயக்கம் : பிரதாப் முரளி
இசை : ஹரிஷ் – சதீஷ்
ஒளிப்பதிவு: சீனிவாசன்
படத்தொகுப்பு: ஆர்.எஸ்.சதீஷ்குமார்
பி.ஆர்.ஓ. : சக்தி சரவணன்

கதைக்களம்…

காட்டில் வாழும் மக்களை அங்கிருந்து காலி செய்ய திட்டமிடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போடும் திட்டங்களை அண்மைக்காலமாக பல படங்களில் பார்த்து வருகிறோம்.

இதுவும் அதுபோன்ற கதைதான்.

ஆனால் இதில் முதல் காட்சி அண்மையில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை நேரில் பார்த்த உணர்வை தருகிறது.

தங்கள் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்காத கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்கிறார் நாயகி தனு ஷெட்டி.

இது பெரிய சர்ச்சையாக, நான் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் கலெக்டர் இங்கு வர வேண்டும் என கட்டளையிடுகிறார்.

அதன்படி கலெக்டர் வர, தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கிறார் நாயகி.

அந்த ப்ளாஷ்பேக்கில், ஒரு பொய் குற்றச்சாட்டில் காட்டு இளைஞர்களை சிறைக்கு அனுப்பி விடுகின்றனர் அரசியல்வாதிகள்.

சிறையிலிருந்து விடுதலை பெறும் அவர்கள் அரசியல்வாதிகளுக்கு எப்படி பாடம் புகட்டினார்கள்? தங்கள் கோரிக்கையை எப்படி பெற்றார்கள்? என்பதை சுவராஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரதாப் முரளி.

DNDvW7OUMAAEZXk

கேரக்டர்கள்…

மூப்பா என்ற ஊர் பெரியவர் கேரக்டரில் நாசர். இவர் என்ன சொன்னாலும் அந்த ஊர் இவரை நம்பும். அவரை கடவுளாகவே பார்க்கின்றனர்.

ஒரு காட்சியில் ஊரை காலி செய்கிறோம் என்று இவர் சொன்ன உடன் அந்த ஊரே அதிர இவர் அடுத்து செய்யும் செயல் ரசிக்க வைக்கிறது.

தங்க ரதம் ஜீப் ஓட்டும் கேரக்டரில் மகேந்திரன். அந்த காட்டு பகுதி இளைஞராகவே வருகிறார். இவரின் காதலி தனு ஷெட்டி.

இவருடன் மற்றொரு ஜோடியும் உள்ளது. வினோத் மற்றும் ஐஸ்வர்யா. இவர்களின் காதல் ரொமான்சும் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.

ஜெயில் கைதியாக இருந்து புரட்சிகளை செய்யும் அஜய் ரத்னம் மற்றும் போலீசாக வந்து அடாவடித்தனம் செய்யும் தீரஜ் அஜய் ரத்னம் (அஜய் ரத்னத்தின் மகன்) மற்றும் மந்திரியாக வரும் ஸ்ரீனிவாசப்பா ஆகியோரும் நல்ல தேர்வு

DNRs2hxVoAAmEJ_

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹரிஷ் – சதீஷ் ஆகியோரின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

எங்க ஊரு தங்க தேரு பாடல் தாளம் போட்ட வைக்கிறது.

சிறையில் பாடும் புறப்படு தோழா பாடல் விழிப்புணர்வை தரும்.

பின்னணி இசையும் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.

சீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அந்த காடும் அழகு சேர்க்கிறது.

DNcSLX_V4AAw1D7

 

படத்தொகுப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ்குமார் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இப்படம் சமூக கருத்துள்ள படம் என்றாலும் கமர்சியல் ஐட்டங்களை கலந்து தந்திருக்கிறார் இயக்குனர். ஆனா பெரும்பாலான காட்சிகள் கொஞ்சம் நாடகத்தன்மையோடு பயணிக்கிறது என்பதே உண்மை.

முக்கியமாக அந்த சிறைச்சாலை காட்சிகள்.

மேலும் அடர்ந்த காட்டில் உள்ள பெண்கள் பேசும்போது சிட்டி பெண்கள் பேசும் இங்கிலீஷ் போல உச்சரிப்பு சரியாக இருக்கிறது.

யாருக்கும் அந்த காட்டு மொழியே வரவில்லை என்பது குறையாக தெரிகிறது.

மக்களுக்கு நீதி எப்போதும் கிடைப்பதில்லை. அதனை போராடி பெற வேண்டியுள்ளது.

நாம் இறுதிவரை மௌனமாக இருந்தால் மக்கள் புரட்சியும் வராது மறுமலர்ச்சியும் வராது என ஆணித்தரமாக சொன்ன இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

திட்டி வாசல்.. திகட்டாத வாசல்

விழித்திரு விமர்சனம்

விழித்திரு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விதார்த்கிருஷ்ணாவெங்கட் பிரபுதன்ஷிகாஎரிகாதம்பி ராமய்யாஅபிநயா மற்றும் ஒரு பாடலுக்கு டிஆர்.
இயக்கம்: மீரா கதிரவன்
ஒளிப்பதிவு: விஜய் மில்டன்
இசை: சத்யன் மகாலிங்கம்
தயாரிப்பாளர்: மீரா கதிரவன்

கதைக்களம்….

மாலை முதல் அடுத்த நாள் அதிகாலை வரை (12 மணி நேரத்தில்) நடக்கும் கதை இது.

இதில் 4 கதைகளை ஒரு புள்ளியில் இணைக்கிறார் இயக்குநர்.

தொலைந்து போன தன் நாயை தேடும் சாரா. இவருடன் கண் தெரியாத அப்பா வெங்கட் பிரபு. நாயை தேடும் வேளையில் அந்த சிறுமி தேடும் அவஸ்தைகள்.

தாங்கள் செய்த ஒரு குற்றத்திற்கான ஆதாரம் பத்திரிகையாளர் எஸ்பி. சரணிடம் சிக்க, அவரை கொலை செய்ய திட்டமிட்டு சுட்டு விடுகின்றனர் வில்லன் கோஷ்டியினர்.

DNoq1RwVwAArSqn

அங்கிருந்து தப்பி ஓடும் இவர் டிரைவர் கிருஷ்ணாவில் காரி ஏற, அவருடன் காரில் பயணிக்கிறார் கிருஷ்ணா. போலீசுக்கு செல்லலாம் என்று நினைக்கையில் அந்தக் குற்றத்தில் போலீசுக்கும் சம்பந்தமிருக்க அவர் ஓடுகிறார்.

திருட சென்ற இடத்தில் தன்ஷிகாவை பார்க்க, அவரும் திருட வந்திருக்கிறார் என்று தெரிய வர, அவரிடம் உள்ள பணப் பையை பங்கு போட திட்டமிடுகிறார் விதார்த்.

விக்ரம் விஸ்வநாத் என்ற பணக்கார இளைஞன் தன் பிறந்த நாளை கொண்டாட ஸ்டார் ஓட்டலுக்கு செல்ல, அங்கு ஒரு அழகியை பிக் அப் செய்ய திட்டமிட்டு அவருடன் காரில் சென்னை வரை பயணிக்கிறார்.

இதனிடையில் கிருஷ்ணாவுக்கு உதவும் ரேடியோ ஜாக்கி அபிநயா.

இப்படியான கதைகளை எப்படி கிளைமாக்ஸில் இயக்குனர் இணைக்கிறார் என்பதே கதை.

 

Vizhithiru-movie-stills-5

கேரக்டர்கள்…

படத்தில் முக்கியமாக நான்கு கதைகள் இருந்தாலும், ஒவ்வொரு கதைக்குள்ளும் பல கேரக்டர்கள் வந்து செல்கிறார்கள்.

குடும்ப பாசம் கொண்ட கிருஷ்ணா அப்பாவித்தனம் கலந்த நடிப்பில் ஈர்க்கிறார். இறுதியில் மனதை கலங்கடிக்கிறார்.

விதார்த் மற்றும் ஹன்சிகா தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள். இந்த கேரக்டர்களில் தம்பி ராமையா இணைய கூடுதல் சுவாரஸ்யம் இருக்கும் என்று நினைத்தால் மிஸ்ஸிங். காமெடி கூட இல்லையே சார்?

இதில் டிஆர் பாடல் வேற. பாடல் நன்றாக இருந்தாலும் படத்திற்கு தேவையா? என கேட்கத் தோன்றுகிறது.

நாய் தேடும் சாரா மற்றும் வெங்கட் பிரபு கேரக்டர்கள் ரசிக்க வைக்கிறது. கண் தெரியாத அப்பாவை இப்படி அலையவிடுகிறாளே சாரா? என நினைக்கத் தோன்றும்.

எரிகாஅபிநயா என மற்ற இரு நாயகிகளும் தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள்.

சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபு இதில் வில்லனாக மிரட்டியுள்ளார். இவருடன் சுதா சந்திரன்,

DNZk9DrVAAAkXZ8

தொழில்நுட்ப கேரக்டர்கள்…

விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

சென்னையில் இரவு நேர வாழ்க்கை, அது தொடர்பான காட்சிகள் என வியக்க வைக்கிறார்.

சத்யன் மகாலிங்கத்தின் பின்னணி இசை படத்துக்கு இன்னொரு பலம்.

க்ளைமாக்ஸ் காட்சியில் தன் சமூக அக்கறையை சொன்ன இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் கேரக்டர்கள் முத்துக்குமார்திலீபன் என கிடைத்த கேப்பில் எல்லாம் இயக்குனர் தன் சமூக பற்றை காட்டியுள்ளார்.

முதல் பாதியில் விறுவிறுப்பான கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்க, அதை சரி செய்திருக்கலாம்.

கிருஷ்ணாவுடன் அடிக்கடி பேசும் அவரது தங்கைக்கு அண்ணனின் குரல் தெரியாதா? விதார்த் பேசும்போது நீங்க யார்? என்று கேட்க கூட இல்லையே?

அதற்கு பதிலாக டப்பிங் கலைஞரான வெங்கட் பிரபுவை பேச வைத்திருக்கலாமே. அது இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

விழித்திரு.. பார்க்கலாம்.

கடைசி பெஞ்ச் கார்த்தி விமர்சனம்

கடைசி பெஞ்ச் கார்த்தி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பரத், ருஹானி சர்மா, அங்கனா ராய், ரவிமரியா மற்றும் பலர்.
இயக்கம் : ரவி பார்க்கவன்
இசை : அன்பு ராஜேஷ்
ஒளிப்பதிவு: முனீர் மாலிக்
படத்தொகுப்பு: பாலு
பி.ஆர்.ஓ. : மௌனம்ரவி
தயாரிப்பு : ஜான் சுதீர்

கதைக்களம்…

திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துகொண்டால்தான், காதலையே ஏற்றுக்கொள்வேன் என்று காதலியிடம் கண்டிஷன் போடும் ஹீரோ.

காதலனின் செக்ஸ் கண்டிஷனை கேட்டு ஷாக்காகும் காதலி… மற்றொரு பக்கம் செக்ஸ்க்கு வலுக்கட்டாயமாக’ அழைக்கும் இரண்டாவது ஹீரோயின்…

இவர்கள் மூன்றுப்பேருக்கும் இடையிலான காதலுக்கு ’என்ன’ நடந்தது? திருமணத்திற்கு முன்பாகவே ’உடலுறவு’ வைத்து கொள்ளும் இன்றைய மாடர்ன் லவ் சரியானதுதானா? என்பதுதான் ’கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்தின் கதை.

கேரக்டர்கள்…

கல்லூரி மாணவராக பரத். அப்பாவியாகவும், அடப்பாவி என்று சொல்ல வைக்கும் மாடர்ன் மாணவராகவும் கவர்கிறார்.

கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் பஞ்சாப்பில் ‘மியூசிக் ஆல்பங்களில்’ கலர்ஃபுல்லாக கலக்கும் ரூஹானி ஷர்மா. இரண்டாவது கதாநாயகியாக, இன்றைய தலைமுறையை ஸ்கேன் எடுத்தது போல் பரப்பரக்க வைக்கிறார் அங்கனா ராய்.

லவ் குருவாக ரவிமரியா சில இடங்களில் வந்தாலும் அவருக்கே உரிய பாணியில் கலகலக்க வைக்கிறார்.
காதல் எப்போதும் அழிவதில்லை என்ற பேவரிட்டான காதலைதான் இயக்குநர் ரவி பார்கவன் கதைக்களமாக எடுத்திருக்கிறார்.

கல்லூரி கலாட்டா, மோதல், மோகம், காதல் அம்சங்களோடு இன்றைய தலைமுறையினரில் பலரிடம் இருக்கும், ‘கலவியும் கற்றும் மற’ கான்செப்ட்டை நாகரீகமாக சொல்ல முயற்சித்திருப்பதற்காக இயக்குநர் ரவி பார்கவனை பாராட்டலாம்.

சில வசனங்கள் படு பிராக்டிக்கலாக உள்ளது.

‘வயித்துக்குப் பசி எடுத்தா ஹோட்டலுக்கு போய் சாப்பிடுறது இல்லயா.. அதே மாதிரி உடம்புக்குப் பசி எடுத்தா இன்னொருத்தர் உடம்பு மூலம் அத தீர்த்துக்குறது தப்பில்ல’’

‘’பசங்க நாம தப்பு பண்ணாட்டியும், பொண்ணுங்க தப்பு பண்ணாலும் சட்டம் அவங்க பக்கம்தான் ஸ்ட்ராங். அதனால நம்மள ஸ்ட்ராங்கா வைச்சுக்க, கல்யாணத்துக்கு முன்னாடியே ’கன்ஃபர்ம்’ பண்றதுல தப்பே இல்ல.’’

‘’பப்புக்கு போறதுக்கும், பார்ட்டி பண்றதுக்கும் இவங்களுக்கு லவ்வர்ங்குற பேர்ல நாம தேவை. அப்புறம் டிஷ்யூ பேப்பர் மாதிரி தொடைச்சிட்டு தூசி வீசிடுவாங்க’’

இப்படி படம் நெடுக வசனங்கள் பளிச்சிடுகிறது.

‘’30 இன்ச் டிவியா இருந்தாலும், 52 இன்ச் டிவியா இருந்தாலும், அதோட ரிமோட் கண்ட்ரோல் 5 இன்ச்தான்’ என கல்லூரிப் பெண்கள் பசங்களைப் பற்றி அடிக்கும் கமெண்ட் டபுள் மீனிங் உச்சம்.

படத்தின் முதல்பாதியில் ’இரட்டை அர்த்தமுள்ள காமெடியை ‘ இவ்வளவு அதிகம் எக்ஸ்போஸ் செய்திருக்கிறீர்களே ரவி பார்கவன் இது அவசியம்தானா?

ஒளிப்பதிவு கதையின் ஓட்டத்தில் பயணிக்கிறது. ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுகமாகி இருக்கிறார் முஜீர்.
அடுத்து இசையமைப்பாளராக அன்பு ராஜேஷ் அறிமுகமாகி இருக்கிறார். பாடல்கள் மெலோடி ரகம். ஃபேஸ்புக் லவ்வுல கிக் இல்ல பாடல் ட்ரெண்ட்டியான குத்துப்பாட்டு.

இயக்குநர் கையிலெடுத்து கொண்டது என்னவோ வில்லங்கமான கான்செப்ட்தான். ஆனால் அதை வசனங்களால் பேலன்ஸ் செய்து கொண்டே போவது ‘கடைசி பென்ச் கார்த்தியின்’ பலம்.

பரத்துடன், அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் கைக்கோர்த்திருந்தால், படத்தின் பிரதிபலிப்பு இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

முதல்பாதி பரபர கலாட்டாக்களால் படம் விறுவிறுவென நகர்கிறது..இரண்டாம் பாதி சீரியஸான கதை, ப்ளாஷ்பேக் என உசைன் போல்ட் வாக்கிங் போனது போல முடிகிறது.

ஒரு நல்ல விஷயத்தை, கிசுகிசு கலந்து பலான கான்செப்ட்டுடன் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

களத்தூர் கிராமம் விமர்சனம்

களத்தூர் கிராமம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கிஷோர், சுலீல்குமார், யாக்னா ஷெட்டி, மிதுன்குமார், ரஜினி மஹாதேவையா மற்றும் பலர்.
இயக்கம் : சரண் கே அத்வைதன்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு: புஷ்பராஜ் சந்தோஷின்
படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்
பி.ஆர்.ஓ. : அ. ஜான்
தயாரிப்பு : ஆவுடைத்தாய் ராமமூர்த்தி ஏ.ஆர். மூவி பாரடைஸ்

Kalathur Gramam movie stills

கதைக்களம்…

தன் களத்தூர் கிராம மக்கள் பசி தீர அப்பகுதியைத் தாண்டிச் செல்லும் எந்த வண்டியாக இருந்தாலும் அதை வழிமறித்து அதிலிருக்கும் பொருட்களைக் களவாடுகிறார் கிஷோர்.

இது தொடர்பான புகார்கள் போலீஸில் இருந்தாலும் இந்த கிராமத்தை காவல்துறையால் நெருங்க முடிவதில்லை.

அந்த அளவுக்கு கிஷோர் தன் கிராம மக்களுக்கு நன்மை செய்கிறார். கிராம மக்களும் அவரை தெய்வமாக மதிக்கின்றனர்.

இந்நிலையில், யாக்னா ஷெட்டியைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாக, அவரைக் காப்பாற்றிக் கூட்டி வந்து அவர் தந்தையிடம் ஒப்படைக்க வரும்போது எதிர்பாராத விதமாக யாக்னாவை திருமணம் செய்யும் கட்டாயம் ஏற்படவே இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

ஆனால், கிஷோரை போலீஸ் கைது செய்கின்றனர். இதனால் தான் வரும்வரை யாக்னாவை பார்த்துக் கொள்ளும்படி தன் நெருங்கிய நண்பர் சுலீல் குமாரிடம் ஒப்படைக்கிறார்.

தனக்கு கல்யாணம் நடக்காத விரக்தியில் இருக்கும் சுலீல் இதை சாதகமாக பயன்படுத்தி யாக்னாவை தன் மனைவி என்று ஊர்காரர்களிடம் கூறிவிடுகிறார்.

இதனால் கிஷோருக்கும் சுலீப் நட்பு இடையே விரிசல் விழுகிறது.

Kalathur Gramam rajini heroine

ஒரு கட்டத்தில் யாக்னாவும் கிஷோருடன் சிறைச் செல்ல, அங்கு குழந்தை பிறக்கிறது.

தங்கள் மகன் சிறையில் வாழக்கூடாது என்பதால், ஒரு தம்பதியரிடம் வளர்க்கச் சொல்கின்றனர்.

ஆனால் அவர்கள் இந்த மகனையே பெற்றோருக்கு எதிராக திசை திருப்புகின்றனர்.

எனவே பெற்றோரை கொல்ல சொந்த மகன் மிதுன் குமாரே திட்டம் தீட்டுகிறார்.

இந்நிலையில் மிதுன் குமாரிடம் சிறுவயதில் பழகிய ரஜினி மஹாதேவையா அவரை காதலிக்கிறார்.

இப்படியாக செல்லும் இந்த போராட்டத்தின் மீதிக்கதையே களத்தூர் கிராமம்.

?????????????????????????????????????????????

கேரக்டர்கள்…

நிறைய படங்களில் வில்லனாக நடித்த கிஷோர் இதில் நாயகன். இவருக்கு இனி இப்படியொரு கேரக்டர் அமையுமா? எனத் தெரியாது.

அந்த கிராமத்து தாதாவாகவும், பாசக்கார நண்பனாகவும், அன்பான கணவனாகவும், தன்மான தந்தையாகவும் வாழ்ந்திருக்கிறார்.

களத்தூர் கிராமத்தையும் இந்த கதையையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.

யாக்னா கிராமத்து பெண்ணாக பளிச்சிடுகிறார்.

நண்பனாகவும் பின்னர் வில்லனாகவும் சுலீல்குமார் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மிதுன்குமார், ரஜினி மஹாதேவையா ஆகியோரும் ரசிக்க வைக்கின்றனர்.

நீதிபதியாக, விசாரணை கமிஷன் அதிகாரியாக நடிப்பில் வரும் அஜய் ரத்னம், காவல்துறையினரை சாட்டையடி வார்த்தைகளால் அவர் விளாசும் காட்சிகளும், விசாரணையை நேர்மையாக நடத்தும் விதமும் நீதித்துறையின் மீதான மதிப்பை உயர்த்தவே செய்கின்றன.

தவிர, இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரிகளாக, காவலர்களாக நடித்துள்ள அனைவரும் எந்த இடத்திலும் இது ஒரு படம் என நாம் நினைத்துவிடாதபடி, வலம் வருகின்றனர். அதுதான் இந்தப்படத்தின், இந்தக்கதையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

Kalathur Gramam audio launch

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு பெரிய பலம் இளையராஜா இசை. இப்படத்திற்கு முதலில் இசையமைக்க மறுத்து, பின்னர் படத்தை பார்த்து ஒப்புக் கொண்டாராம்.

ஆக்சன் காட்சிகளில் இளையராஜா பின்னணி இசை அனல் பறக்க செய்கிறது.

சரண் கே அத்வைதன் இப்படத்திற்கு சரியான கேரக்டர்களை தேர்வு செய்திருப்பதன் மூலம் ஜெயித்திருக்கிறார்.

கதைக்கேற்ற புஷ்பராஜ் சந்தோஷின் ஒளிப்பதிவு இன்னும் அழகு சேர்க்கிறது.

படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் அவர்களும் பாராட்டை பெறுகிறார்.

ஒரு சரியான கிராமத்து கதையை சில ட்விஸ்ட்கள் கொடுத்து தரமான படைப்பாக கொடுத்திருக்கிறார்கள் ஆவுடைத்தாய் ராமமூர்த்தியின் ஏ.ஆர். மூவி பாரடைஸ் நிறுவனம்.

களத்தூர் கிராமம்… கிராமத்து காவியம்

மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா மற்றும் பலர்.
இயக்கம் : ரத்னகுமார்
இசை : சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப்
ஒளிப்பதிவு: விது அய்யனா
படத்தொகுப்பு: சபீக் முகம்மது அலி
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : கார்த்திக் சுப்புராஜ்

கதைக்களம்…

படத்தின் நாயகன் வைபவ்வின் கேரக்டர் பெயர் முரளி. இவர் இதயம் பட முரளியைப் போல் நாயகி பிரியா பவானி சங்கரிடம் காதலை சொல்லாமல் இருக்கிறார்.

இதனால் இவரை இதயம் முரளி என்றே அழைக்கின்றனர்.

ஒரு நாள் பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற, இதனால் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார் முரளி.

எனவே பிரியாவை சந்திக்கும் முரளியின் நண்பர்கள் வினோத் மற்றும் கிஷோர், அவரை காப்பாற்ற சொல்கின்றனர்.

அவரை போனில் அழைத்துப் பேசிய பவானி சங்கர், மனம் மாறினாரா? முரளி தற்கொலை முடிவை கைவிட்டாரா? அதன்பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

meiyadha maan

கேரக்டர்கள்..

படம் முழுக்க லோக்கல் பாஷை பேசி, காதல் தோல்வி இளைஞர்களை கவர்கிறார் வைபவ்.

பிரியா அம்மா… தம்பி நீங்க தண்ணிய வாய் வச்சித்தான் குடிப்பீங்களா? என்று கேட்பதற்கு, நீங்க எத வச்சி குடிப்பீங்க? என்ற அப்பாவியாக கேட்கும்போது தியேட்டரை அலற வைக்கிறார்.

ஹீரோயின் பெயர் மதுமிதாவை குறிப்பிட்டு, மது உடம்புக்கு நல்லதல்ல என்பார்.

இதுபோன்ற காமெடி விஷயங்களில் பிரியாவை மட்டுமல்ல ரசிகர்களையும் கவர்கிறார் வைபவ்.

தங்கை பாசம், நண்பர்கள், மேயாத மான் கச்சேரி என படம் முழுவதும் லூட்டி அடிக்கிறார்.

டிவியில் புகழ்பெற்ற பிரியா பவானி சங்கர் சினிமாவில் நல்ல கதைக்காக தயங்கிக் கொண்டிருந்தார். அவர் காத்திருந்த போலவே அவருக்கு மேயாத மான் ஒரு கவரிமானாக அமைந்துவிட்டது.

இனி சினிமாவிலும் அதிகமான வாய்ப்புகள் இவரைத் தேடி வரும். இந்த வருடம் பிரியாவுக்கும் மெர்சல் தீபாவளிதான்.

வைபவ்-வின் நண்பராகவும் அவரின் தங்கச்சியின் கணவராக வரும் வினோத் (விவேக் பிரசன்னா) ரசிக்க வைக்கிறார். இதுவரை சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர் படம் முழுவதும் வந்து நம்மை ஈர்க்கிறார்.

நாயகனின் தங்கையாக இந்துஜா. இவரும் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ரத்ன குமார் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

படத்தின் பாடல்கள் காட்சிக்கு ஏற்றவாறு இருந்தாலும், ஓவரா பாட்ட போட்டு போரடிக்க வைத்துவிட்டார் சந்தோஷ் நாராயணன். அதுவும் ஒரே மாதிரியான பாடல்கள்.

படத்தின் நீளத்தை குறைத்தால் இன்னும் சிறப்பாக இந்த மான் துள்ளி ஓடும்.

மேயாத மான்… ரசிகர் மனதில் துள்ளும் மான்

மெர்சல் விமர்சனம்

மெர்சல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய், காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர்.
இயக்கம் : அட்லி
இசை : ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு: விஷ்னு
படத்தொகுப்பு: ரூபன்
பி.ஆர்.ஓ. : விஜயமுரளி, கிளாமர் சத்யா, ரியாஸ்
தயாரிப்பு : தேனாண்டாள் பிலிம்ஸ்

mersal dance

கதைக்களம்…

வெற்றிமாறன் என்ற தளபதி விஜய் மற்றும் நித்யாமேனனுக்கு இரண்டு குழந்தைகள்.

ஒரு சூழ்நிலையில் தாயும் தந்தையும் கொல்லப்பட இரு குழந்தைகள் பிரிகின்றனர்.

ஒருவர் டாக்டர் ஆக, மற்றொருவர் மேஜிக் மேன் ஆகிறார்.

இவர்களில் ஒருவர் தொடர்ந்து கொலைகளை செய்ய, போலீஸ் அவரை கைது செய்கிறது.

இவர் எதற்காக கொலை செய்கிறார்? என்ற கதைக்களத்துடன் படம் செல்கிறது. அதன்பின்னர் வரும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.

mersal kajal

கேரக்டர்கள்…

இதுவரை 3 வேடங்களில் நடிக்காத விஜய் இதில் மிரட்டியிருக்கிறார். அதிலும் தளபதி கேரக்டரில் இவரின் பாடி லாங்குவேஜ் அசத்தல்.

தன் ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் அதே சமயம் படத்திற்கு ஏற்ற வகையிலும் தன் கேரக்டரை பெஸ்ட்டாக கொடுத்துள்ளார்.

விஜய்க்கு நித்யாமேனன் கெமிஸ்டரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

3 நாயகிகள் இருந்தாலும் அதிகம் ஸ்கோர் செய்பவர் நித்யாதான். ஐசு கேரக்டரில் உருவ வைக்கிறார்.

2வது இடம் பெறுகிறார் சமந்தா. டேய் தம்பி என்று விஜய்யை அழைப்பதும், ரோஸ்மில்க் வாங்கி தரேன்டா என சொல்லுவதும் ரசிக்கும் ரகம்.

தெலுங்கு பட ஹீரோயினை போல காஜல் வந்து செல்கிறார்.

திரையில் தோன்றும்போதே படத்தின் நாயகன் போல எதிர்பார்ப்பை உண்டாக்குகிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. சபாஷ் ஜி.

அனுபவமிக்க நடிகர்களான சத்யராஜ், கோவை சரளா, வடிவேலு கேரக்டர்களில் அழுத்தமில்லாமல் செய்துவிட்டார் அட்லி.

யோகிபாபு ஒரு சில காட்சிகளில் வந்து சென்றாலும் சிரிக்க வைக்கிறார்.

mersal poster kaalai

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஏஆர். ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் செம மெர்சல்.

மெர்சல் அரசன், ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு விஜய்யை துள்ளி வைத்து ஆடவைத்திருக்கிறது.

எடிட்டர் ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே.விஷ்னு ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

mersal vijay dance

பிளஸ்…

படம் முழுவதும் விஜய் தெறிக்கவிட்டுள்ளார்.

ஏஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டல்.

க்ளைமாக்ஸில் ஜிஎஸ்டி வசனங்களும் மெடிக்கல் துறை ஊழலும் கைத்தட்டல்களை அள்ளும்.

பைட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆக்சன் காட்சிகளில் அடி தூள் பண்ணியிருக்கிறார்.

mersal stills

மைனஸ்…

சமந்தா, காஜல்அகர்வால் கேரக்டர்கள் பாட்டுக்காக வந்துபோவது போல் உள்ளது.

ரொமான்ஸ் இருந்தாலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சத்யராஜ் கேரக்டரில் வெயிட் இல்லை. வடிவேலு இருந்தும் காமெடி ஒர்க்அவுட் ஆகவில்லை.

 

Mersal-Movie-Shooting-Spot

இயக்கம் பற்றிய அலசல்…

ரமண கிரிவாசன் மற்றும் அட்லியின் வசனங்கள் அரசியலை சாடியிருக்கிறது. அதை விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் அரசியல் பேசும்போது இன்னும் பளிச்சிடுகிறது.

விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது இல்லத்தரசிகளையும் கவரும் வித்தை தெரிந்தவர் அட்லி. போரடிக்காமல் படத்தை நகர்த்தியிருக்கிறார்.

ஆண்டவனை நம்பி மசிர கொடுக்கிறோம். டாக்டர நம்பித்தான் உசிர கொடுக்கிறோம் என்ற டயலாக்குகளும் மருத்துவ துறையில் ஊழல் வந்தால் எப்படி மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை அப்பட்டமாக கமர்ஷியல் மசாலா கலந்து சொல்லியிருக்கிறார் அட்லி.

அரசு மருத்துவமனைகளை பார்த்து மக்கள் பயப்படுவதுதான் தனியார் மருத்துவனைகளின் பலம்.

பிரதமர், முதல்வர், அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். அப்பொழுதுதான் இந்திய மருத்துவதுறையை உலகளவில் கொண்டு செல்ல முடியும் என்ற வசனம் செம.

படத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தமான காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டார்களோ? என்னவோ?

இரண்டு கேரக்டர்கள் என்றாலே ஆள்மாறாட்டம் செய்துவிடுகிறார்கள். அந்த பார்முலா? இன்னும் எத்தனை காலத்துக்குதான்..?

மெர்சல்… மிரட்டல் விஜய்

More Articles
Follows