ரிப்பப்பரி விமர்சனம் 2.5/5.; பேய்க்கும் ஜாதீ வெறியா?

ரிப்பப்பரி விமர்சனம் 2.5/5.; பேய்க்கும் ஜாதீ வெறியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சத்யராஜ் பாக்யராஜ் பாண்டியராஜ் என பிரபல ஹீரோக்களின் பெயர்களை மகேந்திரனும் அவரது நண்பர்கள் வைத்திருக்கிறார்கள்.. இவர்கள் மூவரும் டியூடுப் சேனல் நடத்துகின்றனர்.

மனிதர்களுக்கு தான் ஜாதி வெறி பிடித்திருக்கிறது என்றால் இதில் பேய்க்கும் ஜாதி வெறி ஊட்டி இருக்கின்றார் இயக்குனர். 2வது நாயகனாக ஸ்ரீனி்.

சாதி – கலப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்கிறது ஒரு பேய். ஒரு கட்டத்தில் அது நாயகன் மகேந்திரனையும் துரத்துகிறது.

இவர் என்ன செய்தார்.? இந்த பேய்க்கும் நாயகனுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

மகேந்திரன் நடிப்பு படு செயற்கையாக இருக்கு. ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார் மகேந்திரன். ரிப்பப்பரி விழாவில் தன் கேரக்டர் 10 மடங்கு மாஸ்டர் படத்தைப் போல இருக்கும் என்றார். ஓவர் பில்டப் ஏன் செய்தார் என்பது தான் தெரியவில்லை. நடனத்தில் குறை வைக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

இவரது காதலியாக மலையாள மங்கை ஆரத்தி பொடி. இவர் சில காட்சிகளில் வந்து அழகில் நம்மை கவர்கிறார். 2வது நாயகனாகவும் பேயாகவும் வந்து கலக்கி இருக்கிறார் ஸ்ரீனி. இவரது காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

இரண்டாம் பாதியில் தான் இவர் வருகிறார். இடைவேளை வரை தியேட்டரில் அமரவே முடியவில்லை என்பதுதான் உண்மை.

பிளாஷ்பேக்கில் வரும் டிவி நடிகை காவ்யா அறிவுமணி நடிப்பு சிறப்பு சேர்க்கிறது.. சென்டிமென்ட் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார்.

யுகே என்ற பெயரில் உண்மை காதலன் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.. மகேந்திரனின் நண்பர்களாக வருபவர்கள் மாரியும், நோபிள் ஜேம்ஸும் அவர்கள் நினைத்தால் நம்மை சிரிக்க வைப்பார்கள் என்பது போல அவ்வப்போது காமெடி செய்கின்றனர்.

இவர்கள் தவிர இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தியாக வரும் செல்லா, நக்கலைட்ஸ் தனம் என பலரும் உள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

இசையமைப்பாளர் திவாகர தியாகராஜன்.. ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம்.. படத்தொகுப்பாளர் முகேன் வேல்.. இவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

இறுதிக்காட்சியில், தேவையில்லாமல் ‘பூவே உனக்காக’ பட ஆனந்தம்.. ஆனந்தம் பாட்டு.. விஜய் ரெஃபரன்ஸ் வேற.. படம் ஓடிடும் நினைச்சாங்களோ.?

பொதுவாக பேய் படங்களில் பேய்க்கு என்ன வேலை.. பழிவாங்கல் தான்.. ஆனால் இந்த படத்தில் பேய்க்கும் ஜாதி வெறியை ஊட்டி பழி வாங்குவதாக கதை அமைத்திருக்கிறார்.. ஜாதி மேல் கோபமா.? பேய் மேல் கோபமா..? என தெரியவில்லை. என்ன இயக்குநர் அருண் கார்த்திக்.. சொல்லுங்க.?!

பேய் அருகில் இருந்தால் டமாரம் அடிக்கும் போலீஸ் நாய் ஒன்றின் ஆவி அடைக்கப்பட்ட குரங்கு பொம்மை.. (என்ன லாஜிக் தெரியல.?!)

ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் படம் துணிந்து நிற்கிறது.

Ripupbury movie review and rating in tamil

முந்திரிக்காடு விமர்சனம் 2.5/5.; சாதிக்கு சாவு வராதா.?

முந்திரிக்காடு விமர்சனம் 2.5/5.; சாதிக்கு சாவு வராதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘முந்திரிக்காடு’.

இதில் சீமான் போலீஸ் அதிகாரியாக நடிக்க நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் ஆவார்.

நாயகியாக சுபபிரியா நடிக்க இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

நாயகன் புகழ் போலீஸ் அதிகாரியாக நினைத்து அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி சுபபிரியா ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என நினைத்து அதற்காக படித்துக் கொண்டிருக்கிறார்.

நாயகி மேல் ஜாதியை சேர்ந்தவர் நாயகன் கீழ் ஜாதியை சேர்ந்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர்.

இவர்கள் அடிக்கடி சந்திப்பதால் இவர்கள் காதலிப்பதாக நினைத்து மேல் ஜாதியினர் காதலை எதிர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் இதனால் வெறுத்துப் போகும் நாயகி நாம் இருவரும் காதலித்தால் என்ன.?

நாம் கலப்புத் திருமணம் செய்தால் சாதி பிரச்சனைக்கு விடிவு காலம் கிடைக்கும் என சொல்கிறார். ஆனால் நாயகன் மறுக்கிறார். இதனால் என் குடும்பத்திற்கு பிரச்சினை வரும்.. நான் போலீஸ் அதிகாரி ஆக முடியாது என்கிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க முடிவு எடுக்கின்றனர். மேல் சாதியினர் இவர்களை என்ன செய்தனர்.?

இந்த நிலையில் சாதியால் பிரிந்து கிடக்கும் ஊர் மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார் போலீஸ் சீமான். இறுதியில் என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

நாயகன் புகழ் ஒரு அப்பாவி இளைஞனாக வருகிறார். அவர் போலீஸ் ஆன பிறகு கம்பீரமாக காணப்படுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் அனைவரையும் நடிப்பில் ஓவர் டேக் செய்துள்ளார் நாயகி சுபபிரியா. காதலுக்காக மேல் சாதியை எதிர்க்க இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் அப்ளாசை அள்ளுகிறது.

நாயகியின் அப்பா சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.. அதுபோல காதலை கொல்லத் துடிக்கும் சாதி வெறியர்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றனர்.. அப்படி ஒரு நடிப்பை அவர்கள் கொடுத்துள்ளனர்.

ஆனால் அதே காட்சிகள் மீண்டும் மீண்டும் திரும்ப வருவதால் எப்படா முடியும்? என்பது போல் இருக்கிறது.

சீமான் போலீஸ் அதிகாரியாக வந்து அவர் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் சிறப்பு.. மேல் சாதியினர் சுவாசிக்கும் காற்றை கீழ் சாதியினர் சுவாசிக்கவில்லையா.? கீழ் சாதியநேர சுவாசிக்கும் காற்றை மேல் சாதியினர் சுவாசிக்கவில்லையா.? அப்போது சாதி கலக்கவில்லையா? என்று அவர் பேசும் வசனங்கள் சூப்பர்.

அது போல நாயகி பேசும் வசனமும் சூப்பர்.. நாம் காதல் திருமணம் செய்தால் நம்மை அவர்கள் கொல்ல வாய்ப்பு உண்டு. ஆனால் அடுத்த தலைமுறை நமக்காக யோசிக்கும்.. அதற்கு அடுத்த தலைமுறை சாதியை எதிர்த்து போராடும்.. அதற்கு அடுத்த தலைமுறை கண்டிப்பாக சாதியை வெல்லும் காதலாக வளர்ந்து நிற்கும்.. என சொல்லும் வசனங்கள் மனதை கவர்கின்றன.

டெக்னீஷியன்கள்…

பல வெற்றிப் படங்களை கொடுத்து சாதித்த மு.களஞ்சியம் சாதிக்காக ஒரு படம் எடுத்துள்ளார்.. இன்னும் இந்த படத்தை சிறப்பாக கொடுத்து இருக்கலாம்.

ஆனால் சாதி சாதி சாதி என படம் முழுவதும் சாடியுள்ளதால் எரிச்சலை உண்டாக்குகிறது. இப்படி எல்லாம் மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்களா.?

எந்நேரமும் வேலைக்கே போகாமல் காதலர்களை துரத்திக் கொண்டே இருப்பார்களா.? என்ற போன்ற கேள்விகள் எழுகின்றன.

சாதிக்காக கொலைகள் செய்யும் அவர்களை போலீஸ் ஒன்றுமே செய்யாதா.? என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன.

ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவசுந்தர், இசை – ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், பாடல்கள் – கவிபாஸ்கர், கலை – மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் – லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மு.களஞ்சியம்.

ஆக முந்திரிக்காடு.. சாதிக்கு சாவு வராதா.?

Munthirikkaadu movie review and rating in tamil

ரேசர் RACER விமர்சனம் 3/5.; LIFE GOAL

ரேசர் RACER விமர்சனம் 3/5.; LIFE GOAL

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சைக்கிள் ஓட்டும் காலத்திலேயே பைக் ரேசர் ஆக வேண்டும் என்ற கனவோடு வளர்கிறார் நாயகன் அகில் சந்தோஷ்.

ஆனால் குடும்பச் சூழ்நிலை கனவிற்கு தடையாக உள்ளது. இளைஞனாக வளர்ந்து வேலைக்கு சேர்ந்த பின்னர் ரூ 3.5 லட்சத்திற்கு லோன் போட்டு ரேஸ் பைக் வாங்குகிறார். வீட்டில் பெற்றோர் கேட்கும்போது ப்ரெண்ட் பைக் என பொய் சொல்கிறார்.

இந்த சூழ்நிலையில் குடும்பத்தில் பொருளாதார பிரச்சினை வரவே வீட்டுக்கு லோன் எடுத்து கேட்கிறார் தந்தை. இதனால் செய்வது அறியாமல் தவிக்கிறார் அகில்.

பின்னர் என்ன ஆனது.? பைக் ரேஸில் கலந்து கொண்டாரா.? லட்சியத்தில் வென்றாரா.? குடும்பத்திற்காக தன் கனவை தியாகம் செய்தாரா.? தந்தை என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நல்ல உடற்கட்டு.. நல்ல உயரம்.. அவரின் ஹேர் ஸ்டைல் என அனைத்தும் சிறப்பு.. அதே சமயம் தந்தைக்கு பயந்த மகன்.. சராசரி மிடில் கிளாஸ் பையன்.. காதலிக்கும் வயசு.. ரேஸ் பைக் ஆசை… என தன் கேரக்டரை சிறப்பாக கையாண்டுள்ளார் அகில் சந்தோஷ்.

கொஞ்ச நேரமே என்றாலும் மனதில் பதிகிறார் நாயகி லாவண்யா. அகிலின் தந்தையாக சுப்ரமணியன். தன் மகன் ஆசைப்பட்டு பைக் வாங்கி கேட்கும் போதெல்லாம் இவருக்கு வரும் ஒவ்வொரு செலவுகளால் அது தடைப்படுகிறது. இதன் மூலம் நடுத்தர குடும்ப தந்தையாக யதார்த்தமாக நடித்துள்ளார்.

இவர்களுடன் பார்வதி, சரத், நிர்மல், சதீஷ், ஆறுபாலா, அனீஸ், அரவிந்த் உள்ளிட்டோரின் பங்களிப்பும் பாராட்டும்படி உள்ளது.

டெக்னீஷியன்கள்…

இயக்குனர் சாட்ஸ் ரெக்ஸ்.. (Satz Rex) இன்றைய இளைஞர்களிடையே அதிக அளவில் காணப்படும் பைக் ரேஸ் மோகத்தை மையப்படுத்தி ‘ரேசர்’ கதையை அமைத்திருப்பது சிறப்பு.

வெறுமனே பைக் ரேஸ் போட்டியை மட்டும் காட்டாமல் அதனுடன் குடும்ப உறவையும் காட்டியிருப்பது அனைத்து தரப்பு மக்களையும் கவர வைக்கும்.

ஒளிப்பதிவாளர் பிரபாகரின் கேமரா கைவண்ணம் சிறப்பு.. முக்கியமாக பைக் ரேஸ் காட்சிகளில் அதன் கூடவே ஓடிச்சென்று படமாக்கி இருப்பது நேர்த்தியான படப்பிடிப்பை காட்டுகிறது.

பரத் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை கவனம் பெறுகிறது..

ஒவ்வொரு மகனுக்கும் ஏதாவது ஒரு லட்சியம் ஆசை இருக்கும். ஆனால் அதை சில பெற்றோர்களே புரிந்து செயல்படுத்தி வைக்கிறார்கள்.

சிலர் தங்களின் ஆசைக்காக பிள்ளைகளின் லட்சியத்தை தியாகம் செய்ய வைக்கின்றனர் என்பதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

அதே சமயம் எத்தனை தடைகள் வந்தாலும் விடாமுயற்சியுடன் பயணித்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை நாயகனின் கேரக்டர் உணர்த்துகிறது

ஆக ரேசர்.. வாழ்க்கை லட்சியம்

Racer movie review and rating in tamil

தலைக்கவசமும் 4 நண்பர்களும் விமர்சனம் 3/5; குப்பத்து தலைவன்

தலைக்கவசமும் 4 நண்பர்களும் விமர்சனம் 3/5; குப்பத்து தலைவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

முக்கோணக் காதலில் சிக்கிக் கொள்கிறான் நாயகன் ஆனந்த் நாக்.. அவனை ஒருத்தியும் அவன் இன்னொருத்தியையும் காதலிக்கும் சூழல் நேர்கிறது.

தன்னைக் காதலிப்பவள் முதலாளியின் மகள் என்ற போதிலும் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகன். இப்படியான நாயகன் ஆனந்துக்கு மூன்று நண்பர்கள்.

இவர்கள் நான்கு பேரும் நான்கு விதமான நல்ல வேலை பார்த்தாலும் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் தேவைக்கு போக மீதியை தங்கள் குப்பத்தில் உள்ள முதியவர்களுக்கும் மாணவர்களுக்கு கொடுத்து உதவுகின்றனர்.

ஒரு கட்டத்தில் வைரங்கள் பதுக்கி வைக்கப்பட்ட தலைக்கவசம் ஒன்று இவர்களின் கையில் கிடைக்கிறது. அதில் உள்ளே என்ன இருக்கிறது என தெரியாமல் இவர்கள் அதை பயன்படுத்த பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.

இறுதியில் என்ன ஆனது.? தலைக்கவசத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்களா.? வைரம் என்ன ஆனது.? நண்பர்கள் என்ன செய்தார்கள்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்…

நாயகன் ஆனந்த் நாக்.. ஸ்மார்ட்டாக இருக்கிறார். நட்பு காதல் தொழில் பக்தி விசுவாசம் புத்திசாலித்தனம் சமூக சேவை என அனைத்தையும் உணர்ந்து நடித்திருக்கிறார்.

நண்பர்களாக புதுமுகங்கள் ராஜேஷ், ஶ்ரீஜித், விக்கிபீமா ஆகியோரும் கவனிக்க ஙைக்கின்றனர்.

நாயகிகள் : ரேணுகா பதுளா & ஸ்வேதா டாரதி. இருவரும் வழக்கமான டூயட் நாயகி போல அல்லாமல் கதையுடன் பயணிப்பது சிறப்பு.. இடைவேளை வரை மட்டுமே இருவரும் முழுக்க வருகிறார்கள்.

அரசியல்வாதியாக ஓஏகே.சுந்தர், வில்லனாக இயக்குநர் ரத்னவேல் மற்ற பாத்திரங்களில் தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், போலீஸ் மணிமாறன் ஆகியோரும் உண்டு.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு – சீனு ஆதித்யா, இசை – ராஜ்பிரதாப், படத்தொகுப்பு – சேதுரமணன், சண்டைப் பயிற்சி – தளபதி தினேஷ், பாடல் – அருண்பாரதி

இயக்குநர் வி.எம். ரத்னவேல். (சுந்தர்.சி.யின் சிஷ்யர் இவர்.)

ராஜ்பிரதாப் இசையில் அருண்பாரதியின் வரிகளில் ஒரு காதல் பாடல்.. ஒரு குத்து பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

முதல் பாதி முழுவதும் காதலை காட்டிய இயக்குனர் இரண்டாம் பாதியில் காதலை துளி அளவு கூட காட்டாமல் கதைக்குள் சென்றுள்ளார். படத்தின் ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

எடிட்டிங்கில் முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டி இருந்திருக்கலாம்.

சுந்தர் சி யின் உதவியாளராக பணிபுரிந்த ரத்தினவேல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து காமெடி காட்சிகளை இணைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தமிழ் சினிமாவில் சேரிப்பகுதி என்றாலே ரவுடி, கடத்தல், கஞ்சா சிகரெட் மது மாது உள்ளிட்டவைகள் அதிகமாக காணப்படும். இது ஒரு எழுதப்படாத விதியாக இருந்தது.

ஆனால் இதில் 4 சேரி இளைஞர்களை காட்டினாலும் அவர்கள் படித்து முன்னேறி, தங்கள் பகுதியை முன்னேற்றச் செய்ய எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பு.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் அதற்கான தரத்தை கொடுத்திருப்பது ரத்தினவேலின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.

ஆக தலைக்கவசமும் 4 நண்பர்களும்.. குப்பத்தை மாற்றும் தலைவன்

Thalai Kavasamum 4 Nanbargalum Movie review and rating in tamil

ஆகஸ்ட் 16 1947 விமர்சனம்.. 4.5/5..; முருகதாஸ் தந்த பொன்(குமார்)குடம்

ஆகஸ்ட் 16 1947 விமர்சனம்.. 4.5/5..; முருகதாஸ் தந்த பொன்(குமார்)குடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

வெளியுலக தொடர்பே இல்லாத கிராமம் திருநெல்வேலி அருகே செங்காடு என்ற பகுதி.. அங்கு பஞ்சு உற்பத்தி தொழில் நடைபெறுகிறது.

இங்குள்ள மக்களை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்குகிறான் ராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலேயன். இவன் அந்த பகுதி மக்களை அடிமைகளாக வைத்திருக்கிறான்.

அவரது மகன் ஜஸ்டின் தங்களிடம் வேலை பார்க்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறான்.

இதனால் தங்கள் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டால் பெற்றோர்களே அவர்களை ஜஸ்டினிடம் இருந்து காப்பாற்ற கொலை செய்து விடுகின்றனர்.

இப்படியான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு ஆகஸ்ட் 15 1947 நள்ளிரவு சுதந்திரம் கிடைக்கிறது.

ஆனால் தன்னுடைய சொந்த பிரச்சினைக்காக அந்தப் பகுதி மக்களுக்கு சுதந்திரம் அடைந்ததை தெரிவிக்காமல் இருக்கிறான் ராபர்ட்.

பின்னர் அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது எப்படி தெரிந்தது என்பதுதான் படத்தின் கதை. இதில் கௌதம் கார்த்திக் யார்? நாயகி ரேவதி யார்? என்பதை பார்ப்போம்.

கேரக்டர்கள்…

தன்னுடைய கேரக்டருக்காக தன் வெள்ளை தோலை கருப்பாக்கி நடித்திருக்கிறார் கௌதம் கார்த்திக்.. திருட்டு வேலைகள் செய்யும் அவர் ஒரு கட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக துணிந்து நிற்கிறார்.

தன் அம்மாவின் மரணத்திற்கு இந்த ஊர் தான் காரணம் என்பதால் கௌதம் செய்யும் சேட்டைகள் சுவாரஸ்யம். கிளைமாக்ஸ் காட்சியில் கௌதம் பேசும் சாட்டையடி வசனங்கள் நம்மை அறியாமல் கைதட்ட வைக்கும்.

நாயகியாக ரேவதி.. இவர் அருவி பட நாயகி அதிதி பாலனின் தங்கை.. இந்த கேரக்டருக்கு இவரை விட சிறப்பானவர் எவரும் இருக்க முடியாது என்பதை தன் நடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

அந்த கிராமத்தின் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். இவரின் சிறு வயது தோற்றத்தில் நடித்த அந்த குட்டி பெண்ணும் ஒரே சாயலில் இருப்பது டைரக்டரின் தேர்வை காட்டுகிறது.

இவர்களுடன் நடித்துள்ள புகழ் மதுசூதனன் கலையரசன் என அனைவரும் தேசிய விருது பெரும் அளவுக்கு நடித்துள்ளனர். பொதுவாகவே ஏதாவது பேசிக் கொண்டே இருக்கும் புகழ் இதில் நாக்கு அறுபட்டு பேச முடியாமல் தவிக்கும் காட்சிகள் அருமை.

மேலும் பாட்டியாக நடித்துள்ள விஜயலட்சுமி நடிப்பில் நம்மை கவர்ந்திருக்கிறார்.

சுதந்திர இந்தியாவின் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், கௌதம் கார்த்திக்கின் தாயாக வரும் நீலிமாராணி ஆகியோர் சிறப்பு.

இவர்கள் இல்லாமல் ராபர்ட் மற்றும் ஜஸ்டின் இருவரும் தெறிக்க விட்டு உள்ளனர்.. ஆங்கிலேயே அதிகாரி ராபர்டாக (ரிச்சர்ட் அஷ்டன்), அவரது மகன் ஜஸ்டினாக (ஜேசன் ஷா)… இவர்களை பார்த்தால் நமக்கே கொன்றுவிடத் தோன்றும் வகையில் வெளுத்துக்கட்டி உள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

ஒரு இயக்குனருக்கு முதல் படம் என்றால் கமர்சியலாக செய்து இருப்பார்கள். ஆனால் தன் உழைப்பின் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவுக்கு ஒரு பொன்-முடியை தந்து இருக்கிறார் பொன் குமார்.

இவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர் ஆவார்.

1940-களில் கேட்ட இசையை கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். பாடல்களும் பின்னணி இசையும் சூப்பர்.. அந்த காலகட்டத்திற்கே நம்ம இழுத்துச் சென்று விடுகிறார் இசையமைப்பாளர்..

செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவும் சுதர்சன்.ஆர்-இன் படத்தொகுப்பும் பெரும்பலம். கண்களுக்கும் விருந்து.

படத்திற்கு பெரிய பலம் கலை இயக்குனர் தான். சுதந்திர காலகட்டத்தில் இந்தியர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை அப்படியே தத்துரூபமாக வடிவமைத்து கொடுத்துள்ளார். கலை இயக்குனர் மறைந்த சந்தானத்திற்கு அளவில்லா பாராட்டுக்கள்.

எந்த ஒரு இடத்திலும் படத்தில் தொய்வு ஏற்படாத வண்ணம் படத்தை கொடுத்திருக்கிறார் பொன் குமார். க்ளைமாக்ஸில் நமக்குள் ஒரு சுதந்திர உணர்வை ஏற்படுத்துகிறது அதிரடி வசனங்கள்..

முக்கியமாக சுதந்திர காலத்தில் நமது முன்னோர்கள் பட்ட கஷ்டங்களை நம் கண் முன் நிறுத்தியுள்ளார்.

சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா.? என நம்மை ஏங்க வைத்து விட்டார். அதுதான் பொன் குமாரின் முதல் சிக்ஸர்.

ஆக… ஆகஸ்ட் 16 1947.. முருகதாஸ் தந்த பொன்(குமார்)குடம்

August 16 1947 movie review and rating in tamil

விடுதலை விமர்சனம் 4.25/5..; ராஜா இசையில் வெற்றி மெட்டு

விடுதலை விமர்சனம் 4.25/5..; ராஜா இசையில் வெற்றி மெட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அருமபுரி என்ற கனிமவள நிறைந்த காட்டுப்பகுதியில் சுரங்க அமைக்க திட்டமிடுகிறது அரசு.. இதில் சில தனியார் நிறுவனங்களும் தொடர்பில் உள்ளன.

இந்த சுரங்கம் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் மக்கள் படையை கொண்டு போராடுகிறார் விஜய் சேதுபதி. இவரது முகம் கூட போலீசுக்கு தெரியாது.

எனவே அவர்களை தீர்த்துக்கட்ட சேத்தன் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்படுகிறது. இந்தப் படையில் டிரைவராக வந்து இணைகிறார் சூரி. இவர் உயர் அதிகாரிகளுக்கு கூட கட்டுப்படாத நேர்மையான நபர். அந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் நாயகி பவானி ஸ்ரீ-யின் மீது காதல் கொள்கிறார்.

காட்டுப்பகுதியில் ஜீப் ஒட்டி செல்லும் போது அந்த மக்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்கிறார் சூரி. அப்போது யார் என்று தெரியாமல் மக்கள் படைத்தலைவன் விஜய் சேதுபதியை ஓரிரு முறை பார்த்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில் போலீசால் தேடப்படுபவர் விஜய் சேதுபதி தான் தெரிய வரும்போது அவரை பிடித்து கொடுக்க முயற்சிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதியின் உறவினர் தான் தன் காதலிக்கும் பெண் என்பது சூரிக்கு தெரிய வருகிறது.

தான் நேசிக்கும் காவல்துறைக்கு உதவி செய்தாரா.? அல்லது தன் காதலிக்காக விஜய்சேதுபதியை காப்பாற்றினாரா.? என்பதுதான் ‘விடுதலை’ படத்தின் கதை.

கேரக்டர்கள்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார் என்ற செய்தி வந்த போது பலருக்கு கிண்டலாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த படம் பார்த்த பிறகு அவர்கள் சூரியை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஒரு முறை இவரது உயர் அதிகாரி மூணார் ரமேஷ் கேட்கும் போது.. “என்னடா கோபம் வருதா.? ஆமாங்கய்யா.. என்னை அடிக்க தோணுதா.? ஆமாங்கய்யா என சூரி சொல்லும்போதும்…

சேத்தன் சூரியை பார்த்து.. “இவனை என்னய்யா பண்றது? எத்தனை முறை தண்டனை கொடுத்தாலும் செய்கிறான்.. ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்கிறான்.” எனும் போது தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது.

நாயகி பவானி ஸ்ரீ இடம் தன் காதலை சொல்லும் போதும் விஜய் சேதுபதி துரத்தும் காட்சிகளும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

விஜய் சேதுபதி சிறிது நேரமே வந்தாலும் தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அவருக்கு நிறைய காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கிளைமாக்ஸில் விஜய்சேதுபதி பேசும் வசனங்கள் அனல் தெறிக்கிறது.

இவர்களுடன் உயர்அதிகாரி கௌதம் மேனன், போலீஸ் சேத்தன், நாயகி பவானி ஸ்ரீ, ஏட்டையா உள்ளிட்ட பலரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஒரு ராத்திரி நீ இல்லாமல் சென்றதற்கே என்னால் தனியாக வாழ முடியலை.. இனி நீ இல்லாமல் எப்படி வாழ்வேன்? என நாயகி தன் பாட்டியை பார்த்து கதறும் போது பலரின் கண்கள் கலங்கும்.

போலீஸ் சித்திரவதை அனுபவிக்கும் போதும் தன் பெற்றோர் இழந்த கதையை கூறும் போதும் பவானி அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறார்.

டெக்னீஷியன்கள்…

ஒரு படத்தில் கதை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிகனை சீட்டிலிருந்து எழ வைக்காமல் செல்போனை கையில் எடுக்க வைக்காமல் ஒரு இயக்குனரால் படத்தை கொடுக்க முடியும் என்றால் அதுதான் உண்மையான வெற்றி. அதை சரியாக 100% கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு ரயில் விபத்து காட்டப்படுகிறது.. நிஜ ரயில் விபத்தை நம் கண் முன்னால் முன்னே காட்டி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறனும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜூம்.

நம்மை பதற வைக்கும் ஒரு விபத்தை கலை இயக்குனர் ஜாக்கியுடன் இணைந்து கொடுத்துள்ளனர்.

இதற்கெல்லாம் மெருகூட்டும் வகையில் இளையராஜாவின் பின்னணி இசை ஒலிக்கும் போது நம்மை அறியாமல் கண்கள் கலங்கும்.

1980 – 90களில் நாம் கேட்டு ரசித்து பார்த்த இசையை மீண்டும் கொடுத்து இருக்கிறார் இளையராஜா. முக்கியமாக விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி.. துப்பாக்கியை கையில் எடுக்கும் சூரி உள்ளிட்ட பல காட்சிகளில் பின்னணி இசையை தெறிக்க விட்டுள்ளார்.

அதுபோல சூரி – பவானி நடந்து செல்லும் போது ‘உன்னோடு நடந்தால்..’ என்ற பாடல் தனுஷ் குரலில் ஒலிக்கும் போது நம்மால் ஒரு சிறந்த இசையை உணர முடிகிறது.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ். ராமர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஜாக்கி கலை பணிகளை பவனிக்க பீட்டர் ஹெய்ன், ஸ்டன்ட் சிவா ஆகியோ சண்டை பயிற்சிகளை வடிவமைத்துள்ளனர் படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

இளையராஜா – வெற்றிமாறன் என சிறந்த கலைஞர்கள் இணைந்து ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளனர்.

ஆனால் படத்தின் கதையை நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது.. திருப்புமுனையாக சில காட்சிகளை வைத்திருந்தால் இன்னும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கும்.

என்னதான் நாயகன் சாதாரண டிரைவர் ஆக இருந்தாலும் அவரே குற்றவாளியை பிடிக்க வழி நடத்துவது எல்லாம் சினிமாத் தனம்.

இவை எல்லாம் மீறி படத்தை சிறப்பாக தன்னுடைய மேக்கிங்கால் கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஆக விடுதலை.. ராஜா இசையில் வெற்றி மெட்டு..

Viduthalai movie review and rating in tamil

More Articles
Follows