First on Net தரமான தங்க தடம்…; தடம் விமர்சனம் 4/5

First on Net தரமான தங்க தடம்…; தடம் விமர்சனம் 4/5

நடிகர்கள்: அருண்விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால், யோகிபாபு, பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர்.
இயக்கம் – மகிழ்திருமேனி
ஒளிப்பதிவு – கோபிநாத்
எடிட்டிங் – ஸ்ரீநாத்
இசை – அருண் ராஜ்
தயாரிப்பு – ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார்
பிஆர்ஓ – நிகில் முருகன்

கதைக்களம்…

எழில் மற்றும் கவின் என அருண்விஜய் இரட்டை வேடமேற்று நடித்துள்ளார்.

ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியை நடத்தி வருகிறார் எழில். காதல், வேலை, காதலி என நார்மலான லைப்பில் இருக்கிறார் இவர்.

மற்றொரு கேரக்டர் கவின். தன் நண்பர் யோகிபாபுவுடன் இணைந்து கொள்ளையடித்து வாழ்க்கையை என்ஜாய் செய்யும் நபர் இவர். மேலும் வழக்கறிஞர்களுக்கு இணையாக சட்ட நுணுக்கங்களை அறிந்தவர் இவர்.

ஒரு நாள் ஒரு பிரச்சினைக்காக லட்சணக்கணக்கில் பணம் வாங்கிவிடுகிறார். திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் வட்டி கொடுத்தவரிடம் சிக்குகிறார் கவின்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நள்ளிரவு ஆகாஷ் என்ற வாலிபர் கொல்லப்படுகிறான். அப்போது அங்குள்ள பணம் காணாமல் போகிறது.

அந்த இளைஞனை கொன்றது அருண் விஜய்தான் என போலீஸ் கன்பார்ம் செய்கிறது. ஆனால் எந்த அருண்விஜய்? என்ற கன்ப்யூஸ் தொடர்கிறது.

யார் கொலை செய்தார்கள்? ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஆக்சன், ரொமான்ஸ், த்ரில்லர் என அனைத்திலும் வெரைட்டி காட்டி மிரட்டியிருக்கிறார் அருண்விஜய். ரெண்டு வேடம் அதே சமயம் ட்வின்ஸ் என்பதால் தேவையான அளவு நடிப்பை கொடுத்து வித்தியாசப் படுத்தியிருக்கிறார்.

தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் என 2 நாயகிகளும் நம்மை கவர்கின்றனர். இவர்களை விட போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் வித்யா பிரதிபா அழகிலும் கம்பீரத்திலும் நம்மை ஈர்த்து விடுகிறார்.

யோகி பாபு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். சோனியா அகர்வால், பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பிலும் குறையில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அருண்ராஜ் இசையில் விதி நதியே பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். புதுமுக மியூசிக் டைரக்டர் என்றாலும் தன் இசையால் உயர்ந்து இருக்கிறார்.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கச்சிதம். அதில் குறையில்லை.

போலீஸ் ஸ்டேசனில் ரெண்டு அருண்விஜய்யும் மோதும் பைட் காட்சி அனல் பறக்கிறது. பைட் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்.

இந்த இரட்டையர்களில் உண்மையான கொலையாளி யார்? என்று நீதிபதியே தினறும் அளவுக்கு க்ளைமாக்ஸ் காட்சியை தெறிக்க விட்டுள்ளார் மகிழ் திருமேனி.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதுதான் இந்திய சட்டம். எனவே போதுமான ஆதாரம் இல்லாமல் யாரை? குற்றவாளி என அறிவிக்க முடியாமல் அனைவருமே தினறும் காட்சிகள் செம.

இந்த உலகத்தில் இதுபோன்ற நடந்த குற்ற சம்பவங்களை திரையில் இயக்குனர் காட்டியிருப்பது அவரது புத்திசாலித்தனம்.

சில வருடங்களுக்கு முன் மலேசியா, ஜெர்மனியில் நடந்த இரட்டையர்கள் செய்த கொலையை ஆதாரத்துடன் காண்பித்த இயக்குனருக்கு ஹாட்ஸ் ஆஃப்.

ஒரு கப் காபி குடிக்க டைரக்டர் நடத்தியுள்ள நாடகம் செம.

எனக்கு கிப்ட் இல்லையா? என ஹீரோ ஹீரோயினிடம் கேட்க நான் தான் உன் கிப்ட் என கூறி அதற்கு ஒரு ரிப்பன் முடிச்சை நாயகி காட்டும் அந்த சீன் இனி நிறைய காதலர்கள் செய்ய தூண்டும்.

செமயான ட்விஸ்ட்கள் முடிந்தபின் க்ளைமாக்ஸ் பாடல் தேவையா?

தடம்.. தரமான தங்க தடம்

Comments are closed.