முக்கோண (கள்ளக்) காதல்..; மூன்றாம் மனிதன் விமர்சனம்

முக்கோண (கள்ளக்) காதல்..; மூன்றாம் மனிதன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணவன் மனைவி என்ற இருவருக்குள் இடையில் வேறு ஒருவனோ ஒருத்தியோ உள்ளே நுழைந்தால் என்ன மாதிரியான விளைவுகளை அந்த குடும்பம் சந்திக்கும்.. அந்தப் பிள்ளைகள் சந்திப்பார்கள் என்பதுதான் படத்தின் கரு. அதுவே இந்த மூன்றாம் மனிதன்.

ஸ்டோரி…

இயக்குனர் ராம்தேவ் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கிறார். இவரது மனைவி பிரணா. ஒரு கட்டத்தில் குடிக்க அடிமை ஆகிறார் வேலைக்கும் சரியாக செல்வதில்லை இதனால் கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே மனைவி பிரனா ஒரு போலீஸ் வீட்டிற்கு வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி தான் சோனியா அகர்வால்.

அங்கு பிரானாவுக்கு போலீஸ் உடன் உடன் கள்ளக்காதல் ஏற்படுகிறது இதனால் மேலும் குடிக்கிறார் ராம்தேவ். மனைவியை கண்டிக்கிறார் கணவன். நீ குடியை நிறுத்தினால் நான் அந்த உறவை நிறுத்துவேன் என்கிறார். இதனால் பிரச்சனை அதிகமாகிறது.

இந்த சூழ்நிலையில் போலீஸ் கொலை செய்யப்படுகிறார். பாக்யராஜ் தலைமையில் போலீஸ் விசாரணை வேட்டையில் இறங்குகிறது.

ராம்தேவ் மீது சந்தேகம் கொள்ளும் பாக்யராஜ் விசாரிக்கிறார். ஆனால் அவர் கொலை செய்யவில்லை என்கிறார். அப்படி என்றால் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிகதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

போலீஸ் இன்ஸ்பெக்டர் (இன்வெஸ்டிகேஷன் ஆபீசர்- இயக்குனர்,K. பாக்யராஜ்

ராமர் – இயக்குனர் ராம்தேவ்

செல்லம்மா – பிரணா

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் – ரிஷிகாந்த்

ரம்யா – சோனியா அகர்வால்

கௌதம் – இயக்குனர் ஸ்ரீநாத்

கொலை குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் ரெண்டு பசங்க – ராஜ், கார்த்திக்ராஜா.

ரிட்டையர்டு போலீஸ் ஆபீஸர் – சூது கவ்வும் சிவக்குமார்

பாக்கியராஜ் சார் உடன் வருபவர் – எஸ் ஐ ராஜகோபால்

போலீஸ் ஏட்டையா – மதுரை ஞானம்

ராமர் என்ற கேரக்டர் நடித்திருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். ஒரு குடிகாரனுக்கு உரிய பிரச்சினைகளை உணர்ந்து நடித்திருக்கிறார்.

படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் சோனியா அகர்வால் ஹைலைட்டாக காட்டப்பட்டாலும் நாயகி என்னமோ பிரனா தான். தன்னுடைய கேரக்டருக்கு ஏற்ப சின்ன வயதிலேயே முதிர்ச்சியான கேரக்டரை ஏற்று பிரகாசிக்க செய்கிறார்.

கையாலாகாத கணவன் குடிகாரன் ஆகிய பிரச்சினைகளை சந்திக்கும் மனைவியை கண்முன் நிறுத்தி இருக்கிறார் இதனால் குடும்பம் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை காட்சிகளாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

இதில் கிட்டத்தட்ட 4-5 குடும்பங்கள் காட்டப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் கள்ளக்காதலே பிரச்சினையாக இருப்பது ஏன் என்பது தெரியவில்லை?

தாய் தந்தையின் தவறான பாதையால் கொலைகாரனாக இரண்டு சிறுவர்கள் மாறுகிறார்கள்.. நடிப்பில் நல்ல முதிர்ச்சி..

அக்கா பிரானாவுக்கு அட்வைஸ் சொல்லும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.. எங்கள் வாழ்க்கை தான் தடம் புரண்டு விட்டது. உங்கள் மகனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என கொலை பழியை அவர்கள் சுமக்கும் போது கண்கலங்கவும் வைக்கிறது.

கதையின் ஓட்டத்திற்கு உதவும் போலீசாக வந்து செல்கிறார் பாக்யராஜ்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவு – மணிவண்ணன்

பாடல்கள் இசை – வேணுசங்கர்& தேவ் ஜி

பின்னணி இசை – அம்ரிஷ் .P

பாடல்கள் – ராம்தேவ்

எட்டிடிங் – துர்காஸ்

கலை இயக்குனர்

T.குணசேகர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்:ராம்தேவ்

இணை தயாரிப்பாளர்கள்

மதுரை C.A. ஞானோதயா

டாக்டர்.M. ராஜகோபாலன்

டாக்டர்.D. சாந்தி ராஜகோபாலன்

தயாரிப்பு : ராம்தேவ் பிக்சர்ஸ்

ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவி என்ற உறவுக்குள் வேறு யாரேனும் நுழைந்தால் என்ன மாதிரியான பிரச்சினைகளை அந்த குடும்பம் சந்திக்கும் என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய பிரியாணி காதல் கதையும் ஒரு காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளது.

என்னதான் மெசேஜ் சொல்லும் படமாக மூன்றாம் மனிதன் இருந்தாலும் நாடகத்தன்மை இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

பிள்ளைகளின் வாழ்வை கல்வியை குணத்தில் கொள்ளும் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

Moondram Manithan movie review and rating in tamil

கிராமத்து மண் வாசனை..: வட்டார வழக்கு விமர்சனம் 3.5/5..

கிராமத்து மண் வாசனை..: வட்டார வழக்கு விமர்சனம் 3.5/5..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 களில் நடக்கும் கதையாக இந்த ‘வட்டார வழக்கு’ உருவாகியுள்ளது.

எளிய மனிதர்களின் கிராமத்து வாழ்வியலை கொடுத்திருக்கிறார் கண்ணுசாமி ராமச்சந்திரன். இவரே இந்த படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.

ஸ்டோரி…

நம் தமிழ் சினிமாவில் பார்த்து பழகிப்போன பங்காளிகளின் சண்டைதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

ஒரு குடும்பத்தின் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் ஒரு பிரச்சனையில் ஒருவரை கொலை செய்து விட அவர்கள் இவரை தேடி பழி தீர்க்க அழைக்கின்றனர்.

மற்றொரு பக்கத்தில் நாயகன் நம்பி சந்தோஷ் மற்றும் ரவீனா ரவி இடையே ஒரு காதல்.. படுத்த படுக்கையாக கிடக்கும் தன் தந்தைக்கு பணிவிடை செய்து அறிவொளி இயக்கம் நடத்தும் பெண்ணாக ரவீனா ரவி.

நாயகனை வெட்டி தீர்க்க அலையும் கும்பலின் திட்டம் நிறைவேறியதா? காதலர்கள் இணைந்தார்களா? என்பது தான் இந்த வட்டார வழக்கு

கேரக்டர்ஸ்…

கிராமத்து முரட்டு இளைஞனாக சந்தோஷ் நம்பி ராஜன் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் வீராப்பு முறைப்பு எனத் தெரியும் நாயகன் சந்தோஷ்.. காதல் என்று வந்து விட்டால் கவிழ்வதும் அருமை.

‘தொட்டிச்சி’ கேரக்டரில் வெளுத்து கட்டி இருக்கிறார் ரவீனா ரவி. இவரது இவரது குரலும் கூடுதல் கவனிப்பை பெறுகிறது. முதலில் நாயகனை வெறுக்கும் ரவீனா மெல்ல மெல்ல காதலில் கரைவதை உணர்வுபூர்வமாக செய்திருக்கிறார்.

கண்ணாடியில் முகத்தை பார்ப்பது மட்டுமல்லாமல் எவர்சில்வர் பாத்திரத்தில் காதலனை காண்பதும் கவிதைத்துவமான காட்சி.. படிக்காத பாட்டிமார்களை ரவீனா திட்டி படிக்கச் சொல்லும் அதட்டலும் ரசிக்கும் ரகமே.

இவர்களுடன் டீக்கடை தாத்தா முதல் இளசுகள் பெருசுகள் என அனைவரையும் அவர்களது போக்கிலேயே வேலை வாங்கி இருக்கிறார் டைரக்டர்.

டெக்னீசியன்ஸ்…

கரிசல் எழுத்தாளர் மறைந்த கி.ரா அவர்களின் கதை மாந்தர்கள் பேசும் வசனங்கள் உள்ளன. எனவே டைட்டிலில் கி. ராவை நினைவுகூர்ந்து உள்ளார் இயக்குனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையமைப்பில் வந்திருக்கும் படம் இது. புதிதாக போட்ட மெட்டுக்களுடன் 1980களில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்களை ஆங்காங்கே பயன்படுத்தி இருக்கிறார் இசைஞானி. (இது இயக்குனர் வைத்து வேண்டுகோள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது)

அந்தப் பாடலை இந்தக் கதையுடன் இணைத்து பார்க்கும் போது ரசிக்கும் படியாக உள்ளது. தன் கிராமத்து மண்வாசையை மக்களுக்கு கலந்து கொடுத்திருக்கிறார் இளையராஜா.

எங்குமே சினிமாத்தனம் இல்லாத மக்களின் எளிய வாழ்க்கையை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

“ஊமை கனவு கண்டது போல சொல்ல முடியல” என்று சொல்லும் தாத்தாவிடம் ஒரு இளந்தாரி” ஊமை என்னதான் கனவு கண்டா?” என்று கேட்க தாத்தா தரும் விளக்கம் ரசிக்கும் காட்சி..

மேலும் கிராமத்துக்கே உரித்தான ஆட்டு கிடா முட்டு, டீக்கடை கலாட்டா.. பெருசுகளின் நையாண்டித்தனம் இளசுகளின் இம்சை என கிராமத்து மனிதர்களின் கலகலப்பையும் கலந்து கொடுத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பு நேர்த்தி.

இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். வித்தியாசமான முயற்சி என ரிஸ்க் எடுக்காமல் மக்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் ஒரு கதைக்களத்தை எடுத்து அதை மக்கள் வாழ்வியலோடு கலந்து கொடுத்திருக்கிறார்.

அதிக கெட்ட வார்த்தைகள் இடம் பெற்று இருந்தாலும் கிராமத்து பாஷையில் கெட்ட வார்த்தை கேட்கும் போது பெரிதாக நெருடல் இல்லை என்பதை உண்மை.

மதுரா டாக்கீஸ் & ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரித்துள்ளது.

டிசம்பர் 29ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறது.

Vattara Vazhakku movie review and rating in tamil

சலார் விமர்சனம்…

சலார் விமர்சனம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நண்பனுக்காக உலகத்தையே எதிர்க்கும் ஒருவன் ஒரு கட்டத்தில் நண்பனையே எதிர்த்து நிற்கும் கதை தான் இந்த சலார்.

கதை…

தேவா – வரதாவின் நட்பு.. என தொடங்கி கதையை ஆரம்பித்து இருக்கிறார் டைரக்டர் பிரஷாந்த் நீல்.

படம் ஆரம்பித்த 15 நிமிடங்களில் இவர்களின் மோதல் காட்டப்படுகிறது. அதன் பிறகு தேவா எவ்வளவு ஆபத்தானவன் என காட்டி நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறார் இயக்குனர் பிரஷாந்த் நீல்.

பிறகு… இந்தியாவுக்கு வருகிறார் ஸ்ருதிஹாசன். விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு கும்பல் அவரைப் துரத்த அவரை காக்க தேவா (பிரபாஸ்) உதவியை நாட வேண்டிய சூழ்நிலை.

ஆனால் தேவா தனது தாய் ஈஸ்வரி ராவ் உடன் வசித்து வருகிறார். தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்காக கோபத்தை அடக்கி வாழ்பவர்.

தேவா-வால் ஆத்யாவை காப்பாற்ற முடியுமா.? எப்படி முடிந்தது? கான்சார் உலகின் கிங் வரதாவுடன் (பிருத்விராஜ் சுகுமாரன்) பகை உண்டானது எப்படி? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸுக்கு சலார் கை கொடுக்கும். பிரபாஸ் இரண்டாம் பாதியில் அதிரடி செய்து இருக்கிறார்.

வில்லன் பிரித்திவிராஜ் கேரக்டரும் மாஸ். ஹீரோவுக்கு நிகராக உள்ளது.

பிரபாஸ் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் பல ஆக்சன் அதிரடி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாதியில் பார்வையாளர்களை கான்சார் உலகிற்கு அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.

கிளைமாக்ஸ்ல் வைத்த ட்விஸ்ட் அடுத்த பாகத்திற்கான லீட் என தெரிகிறது.

சில இடங்களில் ராஜமௌலியின் RRR திரைக்கதையைப் போல உணர முடிகிறது.

அம்மா சென்டிமென்ட் காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிவிட்டது.

ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளுக்கு முன்பாக ஒரு எமோஷனல் காட்சியை வைத்திருக்கிறார் டைரக்டர்.

வழக்கமான ஹீரோயின் போல இல்லாமல் ஸ்ருதியின் கேரக்டர் சிறப்பு.. கதை ஓட்டத்திற்கு அதுவே உயிரோட்டம்..

ஒவ்வொரு சீன்லும் 100-கணக்கான நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்.

ஹீரோ பிரபாஸ் & வில்லன் பிரித்திவிராஜும் பேசிக்கொண்ட பைட் போடும் காட்சி மரண மாஸ்.

ஜெகபதிபாபு கேரக்டரும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஸ்ருதிஹாசன் பின்னணி என்ன? ஈஸ்வரி ராவின் பின்னணி என்ன? போதுமான விளக்கம் இல்லை..

ஸ்ரேயா ரெட்டியும் வந்து செல்கிறார். அப்போது ரசிகர்களின் விசில் கேட்க முடிகிறது.

இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர்.. ஆக்சன் படத்திற்காண இசையை மிரட்டலாக கொடுத்திருக்கிறார். பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை.. பிரபாஸ் ஹீரோயிசத்தை காட்டுவதற்காகவே பாடல்கள்..??

பழைய கதையில் புது பிரம்மாண்டம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கான்சர் முத்திரை படத்திற்கு கூடுதல் பலம்.

பிரபாஸுக்கும் பிரித்விராஜுக்கு நட்பு & பகை ஆகியவைகளை கான்சார் கான்செப்ட்ல் சலார் சீஸ் ஃபயர் ஆக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.

ஆனால் இந்த காலத்திற்கு ஏற்ப திரைகதையை மாற்றி அமைத்து இருந்தால் சுவாரசியம் கூடியிருக்கும்.

சலார் பல காட்சிகள் ரத்த ஆறு ரத்த பூமியுமாக தெரிகிறது.

Salaar movie review and rating in tamil

சபாநாயகன் விமர்சனம்..

சபாநாயகன் விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய 3 பேரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்டோரி…..

குடிபோதையில் வண்டி ஓட்டி போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார் நாயகன் அசோக் செல்வன்.. அப்போது ஜீப்பில் சென்று கொண்டிருக்கும்போதே தன்னுடைய பள்ளி காதல் கல்லூரி காதல் ஆகியவற்றை பிளாஷ்பேக்காக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதில் அவர் செய்த குறும்புகளும் சேட்டை.. காதலித்த பெண்கள்.. அந்த அனுபவங்களை பகிர்வது தான் படத்தின் கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

அசோக் செல்வனின் திருமணத்திற்கு பின் வந்திருக்கும் முதல் படம் அவர் கதை தேர்வு செய்யும் விதமும் சமீப காலமாக ரசிக்க வைக்கிறது.. ரொமான்ஸிலும் குறை சொல்லாத முடியாதபடி கவர்ந்திருக்கிறார்.

மனுஷனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது போல..

12 ஆம் வகுப்பு படிக்கும்போது கார்த்திகா முரளிதரன் மீது காதல், கல்லூரி படிக்கும் போது சாந்தினி சௌத்ரி உடன் காதல், எம்பிஏ படிக்கும் போது மேகா ஆகாஷ் மீது காதல் என அசோக் செல்வன் வாழ்க்கையில் நடந்த காதல்கள் சுவாரசியமானவை என்றாலும் போதுமான உணர்வு அதில் இல்லை என்பது வருத்தமே.

அசோக்செல்வனின் நண்பர்களாக வரும், அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம் என அனைத்து கேரக்டர்களும் கவனிக்க வைக்கின்றனர்.

பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய மூவர்
ஒளிப்பதிவும் அருமை.

லியோ ஜேம்ஸின் இசையில் பாடல்களும் அதை படமாக்கிய விதமும் கண்களுக்கு இதமளிக்கிறது. அது போல கல்லூரி ஷாட்களும், பாடல் லொகேசன்களும் குளிர்ச்சி.

இந்தப் படத்தின் இயக்குனர் பல பெண்களால் ஏமாற்றப்பட்டாரோ என்னவோ? எந்தப் பெண்ணும் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் காதலிப்பார் என்பது போல பல காட்சிகளை அமைத்திருக்கிறார்.

ஆனாலும் இன்று காதலிக்கும் பல பெண்கள்… ஆண்கள் வாங்கும் வரதட்சணையை விட பெண்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் நிறைய நிறைய என்பதால் அப்படி காட்சிகளை அமைத்திருக்க கூடும்.

ஆனால் படத்தின் நீளம் தான் மிகப்பெரிய குறை.. நிறைய காட்சிகள் தேவையற்றதாகவே இருக்குது.. அதில் சுவாரசியம் இருந்தால் ரசித்திருக்கலாம்.

Saba Nayagan movie review and rating in tamil

டங்கி விமர்சனம் 3.25/5

டங்கி விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல் உள்ளிட்டோர் நடிந்துள்ளனர்.

ஒன் லைன்..

விசா இல்லாமல் திருட்டுத்தனமாக மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இதை கழுதை செல்லும் பாதையை இந்திய மொழியாக்கமாக டங்கி.

ஸ்டோரி…

3 நண்பர்கள் & 1 தோழி விசா இல்லாமல் ஒரு நாட்டிற்கு செல்ல நினைக்கின்றனர். இதற்காக 25 வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கானை தொடர்பு கொள்கிறார் டாப்ஸி. உதவி கேட்கிறார். ஷாருக்கும் உதவி செய்கிறார்.

இவர்கள் சட்ட விரோதமாக மற்றொரு நாட்டிற்கு செல்ல என்ன காரணம்? ஷாருக்கானுக்கும் டாப்ஸீக்கும் இதற்கு முன்பு இருந்த உறவு என்ன? இவர்கள் எல்லாம் யார்? இவர்கள் தப்பிச்செல்ல நினைக்க என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதிகதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

சமீபத்தில் வெளியான இளைஞர் வயதானவர் என மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருந்தார் ஷாருக்கான். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது.

சேவிங் செய்தால் இளைஞர்.. டை அடித்தால் வயதானவர் என தோற்றங்களில் மற்றும் பாடி லாங்குவேஜிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார் ஷாருக்கான்

இங்கிலாந்து நீதிமன்றத்தில் மறைந்த நண்பனின் சாம்பல் அஸ்தியை வைத்துக்கொண்டு பேசும் வசனம் செம. அதுபோல கிளைமாக்ஸ் காட்சியிலும் பின்னி பெடல் எடுத்து விட்டார் ஷாருக்கான்.

டாப்சியின் நடிப்பு டாப் லெவல். வயதானவர் இளையவர் என இரண்டு தோற்றங்களில் அசத்தியிருக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் தான் டாப்சிக்கான கேரக்டர் கிடைக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. ஷாருக்கிடம் மல்யுத்தப் பயிற்சி எடுக்கும் காட்சி வேற லெவல்.

இங்கிலாந்து சென்ற காதலியை மீட்க விக்கி போராட அது முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விக்கி கௌஷல் நடிப்பில் மிரட்டல்.

மேக்கிங் பாராட்டும்படியாக இருந்தாலும் ஒரு ராணுவ வீரர் சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்ல உதவுவது எல்லாம் நம்பும் படியாக இல்லை.ஒரு தேசப்பற்று மிக்கவர் இப்படி நடந்து கொள்வாரா என்பது கேள்விக்குறி??

காரியமாக வேண்டுமென்றால் காலை பிடிப்பது காரியம் முடிந்தவுடன் கழட்டி விடுவது என சில சுயநலவாதிகளின் உருவமாகவே டாப்ஸி வருகிறார்.

அதிலும் முக்கியமாக இந்தியாவை வெறுக்கும் நபராக டாப்சி வருகிறார். அப்படி இருக்கும் போது அவருக்கு ஒரு இந்தியர் ஏன் உதவுகிறார்?

படத்தில் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கும் படி வகையில் உள்ளது. முக்கியமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கிறது.

ஹிந்தியில் 3 இடியட்ஸ் , முன்னாபாய் எம்பிபிஎஸ் மற்றும் பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. இவர் தற்போது இயக்கியுள்ள படம் தான் டங்கி.

சட்ட விரோதமாக தப்பித்துச் செல்வது உள்ளிட்ட பல காட்சிகள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் விசா இல்லாமல் தப்பிக்க சென்றால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் ஒரு எச்சரிக்கை பதிவாக செய்திருக்கிறார் டைரக்டர்.

ஆக இந்த டங்கி ரசிகர்களுக்கு பிடித்த பீரங்கியாக இருக்கும் என நம்பலாம்..

Dunki movie review and rating in tamil

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்.. பொன் நகைச்சுவை

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்.. பொன் நகைச்சுவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதை என்ன?.

மாமா சரவணன்… மாப்பிள்ளை விதார்த்.. வெட்டித்தனமான வாழ்க்கை வாழ்கிறார் சரவணன். இவரது சகோதரி மகன் விதார்த்.

ஒரு கட்டத்தில் தங்கள் வீட்டின் பின்புறத்தில் கழிவறை கட்ட டாய்லெட் கட்டிக் கொள்ள அரசு மானியம் கிடைக்கிறது. இதனால் வீட்டின் பின்புறம் குழி தோண்ட அங்கே ஒரு புதையல் கிடைக்கிறது. குழி தோண்ட வருபவர் ஜார்ஜ் மரியான்.

அப்போது சோழர் கால ஆயிரம் பொற்காசுகள் கிடைகின்றன. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் அதை மறைக்க பல திட்டங்கள் போடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் இது பலருக்கும் தெரிய வரவே அனைவரும் பங்கு கேட்கின்றனர்.

அதை அனுபவிக்க முடிந்ததா…? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்ஸ்…

விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர், ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்துள்ளனர் கதைக்குத் தேவையான நடிப்பை சரவணனும் விதார்தம் பங்கு போட்டு செய்திருக்கின்றனர்.

ஆனால் இவர்களையெல்லாம் மிஞ்சி ஸ்கோர் செய்து இருக்கின்றனர் ஜார்ஜ் மரியான் மற்றும் ஹலோ கந்தசாமி. இரட்டை நாயகர்களாக இவர்கள் இருவரும் ஜொலிக்கின்றனர். காட்சிகளில் காமெடிக்கு பஞ்சம் இல்லை.

நாயகனை பார்த்ததும் காதலிக்கும் நாயகியாக அருந்ததி நாயர். இவரின் கண்கள் இவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.

நார்த் இந்தியா பிச்சைக்காரன் கேரக்டர் படத்தில் ரசிக்கும்படியாக இருக்கிறது ஆனால் கதை ஓட்டத்திற்கு பெரிதாக உதவவில்லை என்பதை உண்மை.

டெக்னிசியன்ஸ்..

அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார்.

பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார்.

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்ததோடு ஈரமான ரோஜாவே போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கேயாரின் கே.ஆர்.இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படம் வெளியாக உள்ளது.

ஜனங்கள் ரசிக்க ஜன ரஞ்சகமான படத்தை கொடுக்க வேண்டும் என படக் குழுவினர் முடிவு செய்து அதற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசையும் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. சில காட்சிகளில் நாடகத் தன்மை தென்பட்டாலும் லாஜிக் மறந்து காமெடியை ரசிக்கலாம்.

ஆயிரம் பொற்காசுகள்.. பொன் நகைச்சுவை

aayiram porkasugal movie review and rating in tamil

More Articles
Follows