பகிரி விமர்சனம்

பகிரி விமர்சனம்

நடிகர்கள் : பிரபு ரணவீரன், ஷ்ரவியா, ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன், சுப்ரமணியன் மற்றும் பலர்.
இசை : கருணாஸ் எம்எல்ஏ
ஒளிப்பதிவு : வீரகுமார்
இயக்கம் : இசக்கி கார்வண்ணன்
பிஆர்ஓ : A. ஜான்
தயாரிப்பாளர் : லட்சுமி கிரியேஷன்ஸ் (இசக்கி கார்வண்ணன்)

கதைக்களம்…

தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞனின் கதைதான் இந்த பகிரி.

நாஸ்மாக்கில் (டாஸ்மாக் என்று படித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை) வேலையில் சேரவேண்டும் என்பதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கிறார் ஹீரோ.

இதனிடையில் காதல், விவசாயம் என கதை பயணிக்கிறது.

ஒரு சூழ்நிலையில நாஸ்மாக் திட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. இதனிடையில் வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களால் தமிழக அளவில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.

இதனால் ஹீரோவின் லட்சியம் என்ன ஆனது? நாஸ்மாக் திட்டம் மூடப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Pagiri- Prabhu Ranaveran, Sharviya (2)

கதாபாத்திரங்கள்…

பிரபு ரணவீரன் தன் முதல் படத்திலேயே காதலிப்பதையும் வேலையையும் லட்சியமாக கொண்டு கேரக்டராக வாழ்ந்திருக்கிறார்.

தன் அம்மாவிடம் காதலியை மோதவிட்டு, தன் காதலை சொல்லுமிடத்தில் ரசிக்கி வைக்கிறார்.

நாயகி ஷ்ரவியாவுக்கு அறிமுக காட்சியே அசத்தல். பெண் பார்க்க வந்தவர் இவரது அம்மாவை சைட் அடிக்க, அதன் பின் இவர் எகிறும் காட்சிகள் ரகளை.

இவரிடம் நடிகை விசாகா சிங்கின் சாயல் தெரிகிறது.

காதலனுக்காக இவரும் இவரது அம்மா செய்யும் உதவிகள் ரசிக்க வைக்கிறது.

ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், டிபி.கஜேந்திரன் ஆகியோர் காமெடி ட்ராக்கை கவனித்து கொள்கிறார்கள்.

அதிலும் ரவி மரியாவின் ஆண்ட்டி சைட் அடிக்கும் காமெடி ‘ஜொள்’ ரகம்.

சரவண சுப்பையா, சுப்ரமணியன் ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

Pagiri Stills-Prabhu Ranaveera, Shravya, Ravimariya, A (4)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிகர் கருணாஸ்தான் இதன் இசையமைப்பாளர். இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓகே.

வீரக்குமாரின் ஒளிப்பதிவில் பார் காட்சிகள் அச்சு அசலாக உள்ளது.

படத்தின் ப்ளஸ்…

  • சரக்கு பாக்டரியை பெண்கள் நடத்தும் போது நாங்க சரக்கு கடை வைக்க கூடாதா? என கேட்பது நச்.
  • மதுவிலக்கை வைத்து தலைவர்கள் ஆடும் அரசியல் விளையாட்டு
  • மக்களை சுரண்டும் ஊழல் வாதிகளை பற்றிய சாட்டையடி வசனங்கள்
  • போராட்டம் நடத்துபவர்கள் அனைவரும் தினக்கூலியை எதிர்பார்த்து செய்வதன் மூலம் அவர்களின் போலித்தனத்தை காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்…

  • படம் முழுக்க நாஸ்மாக்கை காட்டிவிட்டு க்ளைமாக்ஸில் ஒரு காட்சியில் விவசாயத்தை காட்டியிருப்பது கொஞ்சம் ஒட்டவில்லை. படம் முடிந்துவிட்டதா? என யோசிக்க வைக்கிறது.
  • விவசாயத்தின் அருமையை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம்.
  • எடுத்துக் கொண்ட கதையை அரசியல் காரணங்களால் வெட்டி விட்டார்களா? எனத் தெரியவில்லை. கனெக்ஷன் மிஸ்ஸிங்.

Director Esakki Karvannan (3)

இயக்குனர் பற்றி…

படத்தின் ஆரம்பத்தில் வரும் டிவி விவாதங்களும் அதில் முடியும் சண்டை காட்சிகளும் இன்றைய டிவியின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.

பொதுவாக இதுபோன்ற பார் சம்பந்தப்பட்ட படங்களில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும். ஆனால் இதை குடும்ப கதையோடு கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் இசக்கி.

படம் முழுக்க டாஸ்மாக் காட்சிகள் என்றாலும், ஐட்டம் டான்ஸ் இல்லை என்பது ஆச்சரியம்தான்.

மதுவிலக்கு படத்தை மிக தைரியத்தோடு எடுத்து சொல்லியிருக்கிறார். அதற்கு மஞ்சள் துண்டு போட்ட தலைவர்களை காண்பிப்பதும் ரசிக்க வைக்கிறது.

பகிரி – மது குடிப்பவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்.

Comments are closed.

Related News

காமெடி கலந்த வில்லன் வேடமா? கூப்பிடுங்கள்…
...Read More
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன்…
...Read More