சாவி விமர்சனம்

சாவி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரகாஷ் சந்திரா தான் இப்பட ஹீரோ.

இவர் பூட்டு சாவி ரிப்பேர் செய்பவர். இவருக்கு நாயகி சுனுலக்‌ஷ்மி மீது காதல்.

ஒரு நாள் ஹீரோவின் நெருங்கிய நண்பர் தன் உறவினர் வீட்டு சாவி தொலைந்துவிட்டது என்றும் அந்த வீட்டு கதவை திறக்க அழைக்கிறார்.

அவரும் உதவுகிறார். உதவி செய்துவிட்டு வரும்போது வழியில் போலீஸ் ஒருவர் இவரை பார்த்து விடுகிறார்.

அடுத்த நாள் காலை அந்த வீட்டில் இருந்து லட்சணக்கனக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் நாயகனுக்கு தெரிய வருகிறது.

இவரை பார்த்த போலீஸ் இவருக்கு வலை வீச, இவர் நிஜத் திருடனுக்கு வலை வீச பல ட்விஸ்ட்டுக்களுடன் திரைக்கதை பயணிக்கிறது.

saavi movie stills

கேரக்டர்கள்…

படத்திற்கும் கதைக்கும் எது தேவையோ அதை அத்தனை கலைஞர்களும் நிறைவாக கொடுத்துள்ளனர்.

சாவி ரிப்பேர் செய்பவர் எப்படி இருப்பாரோ? அதே போல் டிவிஎஸ் ஸ்கூட்டர், எளிமையான வாழ்க்கை என யதார்த்தமாக வருகிறார் நாயகன்.

திருடனை தேடிச் சென்று ஒவ்வொரு ட்விஸ்ட்டாக இவர் சந்திக்கும் போது நமக்கும் அதிக ஆர்வம் ஏற்படுகிறது.

அறம் படத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்த சுனுலெட்சுமி இதிலும் குறை வைக்கவில்லை. இவரின் கண்கள் இவருக்கு மிகப்பெரிய பலம்.

தன் தவிப்பை கண்களால் சொல்லிவிடுகிறார்.

saavi stills

 

இவரின் தந்தையாக வரும் அந்த குடிக்கார அப்பா சூப்பர். ஒரு நிஜ குடிக்காரனை மிஞ்சி விடுகிறார். அவர் செய்யும் அலம்பலை நிச்சயம் அனைவரும் கைத்தட்டி ரசிப்பார்கள்.

நாயகனின் அண்ணன், அவரது நண்பன், தந்தை, மங்கா என்ற அந்த பெண் என அனைவரும் சரியான தேர்வு.

Saavi-Movie-Stills-1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் 2 பாடல்கள்தான். ஒரு டூயட் ஓகே. மற்ற குத்துபாடல் தேவையா? என கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசை ஓகே சதீஷ்.

சேகர்ராமின் கேமரா அந்த கோவை மாவட்ட காட்சிகளை அடடா எவ்வளவு அழகு? என்று கேட்க வைக்கிறது.

இரண்டு மணி நேரம் கூட படம் இல்லை என்பதால் படத்தை நன்றாக ரசிக்க வைக்கிறது.

சிறிய கதைக்களம், சின்ன பட்ஜெட் என ஆடம்பரமில்லாமல் இயக்குனர் சுப்ரமணியன் கையாண்ட விதம் அருமை.

சாவி – சின்ன படங்களின் நம்பிக்கை சாவி

விதி மதி உல்டா விமர்சனம்

விதி மதி உல்டா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

படத்தின் எல்லா கேரக்டர்களுக்கும் சூரி அறிமுகம் செய்து வாய்ஸ் ஓவர் கொடுக்கிறார். ஆனால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை.

ஹீரோ ரமீஸ் ராஜா அடிக்கடி கனவு வருகிறது. அவர் கனவு படியே சில நிகழ்வுகள் நடக்கிறது.

அதாவது இவருடைய தந்தை ஒரு வீட்டு புரோக்கருக்கு கமிஷன் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்.

எனவே அவர்கள் ரமீஸை கடத்தல் திட்டமிடுகின்றனர். மற்றொரு கும்பல் இவரின் ஒன் சைட் காதலி ஜனனியை கடத்த திட்டமிடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் சண்டையிடும்போது வில்லன் டேனியல் பாலாஜியின் தம்பி கொல்லப்படுகிறார்.

அதனால் டேனியல் பாலாஜி இரண்டு குடும்பங்களை பலி தீர்க்கிறார். இவை எல்லாம் கனவாக வருகிறது.
இந்த காட்சி ஒன்றன்பின் ஒன்றாக நடக்கத் தொடங்குகிறது.

இந்த விதியை அவர் தன் மதியால் எப்படி வென்றார் என்பதே மீதிக்கதை.

vidhi madhi ulta stills

கேரக்டர்கள்…

துறுதுறுவான நடிப்பாலும், வெகுளித்தனமான நடிப்பாலும், ரசிகர்களை கவர்கிறார் ரமீஸ் ராஜா.

கனவு நிறைவேறாமல் இவர் தடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஜனனி ஐயர் அழகிய நடிப்பாலும் பாதி கண்களாலும் கதை பேசி விடுகிறார்.

வில்லத்தனத்தில் டேனியல் பாலாஜி எப்போதும் மிரட்டுவார். ஆனால் இதில் கொஞ்சம் கம்மிதான்.

இவர்களுடன் கருணாகரன், சென்ட்ராயன், ஞானபிரகாசம், சித்ரா லட்சுமணன், குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படத்தின் கதையோட்டத்தை தங்கள் காமெடியால் அழகாக நகர்த்தியுள்ளனர்.

இரண்டு கும்பலும் கடத்தல் பங்களாவில் சந்திக்கும் காட்சிகள் செம அப்ளாஸ்.

vidhi madhi ulta

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் ‘தாறு மாறா…’ என்ற பாடல் ஓகே.

கருணாகரன் மற்றும் அந்த கும்பலுக்கான நடனம் செம மாஸ். அதை படமாக்கிய விதமும், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் ரசிகர்களுக்கு விருந்து.

கனவை சொல்லிவிட்டு காட்சிகளை நகர்த்திய விதம் அருமை. இயக்குனர் விஜய் பாலாஜி அங்கேயே தன்னை நிரூபித்து விடுகிறார்.

கனவையும் நிஜத்தையும் காமெடியுடன் சொல்லி ரசிகர்களை கவர்கிறார்.

விதி மதி உல்டா.. நிச்சயம் ரசிக்கலாம்

பலூன் விமர்சனம்

பலூன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகிபாபு மற்றும் பலர்
இயக்கம் : சினிஷ்
இசை : யுவன்சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஆர். சரவணன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: திலீப் சுப்பராயன், அருண் பாலாஜி

balloon-tamil-movie

கதைக்களம்…

ஹாலிவுட் பேய் படங்களை காப்பியடித்துதான் இப்படத்தை உருவாக்கினேன் என இயக்குனர் சினிஷ் தெரிவித்து இருந்தார். எனவே படத்தில் எந்த விதமான புதுமையை எதிர்பார்க்க முடியவில்லை.

ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு இது முதல் பேய் படம் அவ்வளவுதான்.

வழக்கமான பேய் படத்தில் ஒரு காட்டுக்குள் பங்களா இருக்கும். அங்கே சென்று சிலர் தங்குவார்கள். அங்குள்ள பேய் இவர்களைத் துரத்தும்.

பின்னர் அந்த பேய்களின் ஆசை என்ன கேரக்டர்கள் தெரிந்துக் கொள்ளும் அதே பார்முலாதான் இதுவும்.

டைரக்டர் ஆக துடிக்கும் ஜெய் திருமணமானவர். இவரின் மனைவி அஞ்சலி. ஒரு பேய் கதையை எழுத அந்த பங்களாவிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் அமானுஷ்யங்கள் இவர்களுக்கு பிரச்சினையாகிறது.

அதன்பின் அந்த பிரச்சினையில் இருந்து எப்படி தப்பினார் ஜெய் என்பதே மீதிக்கதை.

balloon stills

கேரக்டர்கள்…

நாயகன் நாயகி இருவரும் நிஜத்தில் நெருக்கமானவர்கள் என்பதால் இதில் ரொமான்ஸ் நன்றாக ஒன்றாக ஒர்க்அவுக் ஆகியிருக்கிறது.

மற்றபடி ஜெய்க்கு இதில் இரண்டு வேடம். ஒரு வேடத்தில் மீசையை மட்டும் எம்ஜிஆர் கால ஸ்டைலில் வைத்திருக்கிறார். வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

அழகாக வருகிறார் அஞ்சலி. அவர் பேயாக பயமுறுத்தினாலும் அழகே.

ஜனனி ஐயர் ப்ளாஷ்பேக்கில் வருகிறார். நல்ல தேர்வு.

மற்றபடி படத்தின் முதல்பாதியை தாங்கி வைப்பவர் காமெடி நடிகர் யோகிபாபுதான். இவர் இல்லையென்றால் முதல்பாதி காற்று இல்லாத பலூன் ஆகியிருக்கும்.

இவர் போடும் டிசர்ட்டுக்கள் கூட ரசிக்க வைக்கிறது. அதில் மூடு, வட போச்சே மற்றும் டாய்லெட் படம் போட்டு டவுன்லோடிங் என அனைத்திலும் காஸ்ட்யூமர் கவர்கிறார்.

ஜெய்யின் அண்ணன் மகனாக வரும் அந்த பையன் படு சுட்டி. கைத்தட்டல்களை அள்ளுகிறார். அவன் கொடுக்கும் கவுண்டர்கள் நச்.

Jai-Baloon-anjali

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறார். ஆனால் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆர்.சரவணின் ஒளிப்பதிவு கச்சிதம்.

எடிட்டர் ரூபன், கலை இயக்குனர் கைவண்ணம், மேக்கப் அப் ஆகிய அனைத்தும் பேசப்படும்.

இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் ஜாதி அரசியல் ஆகிய காட்சிகளுக்காக இயக்குனரை பாராட்டலாம்.

மற்றபடி வழக்கமான பேய் படம்.

பலூன்.. பயமில்லாத பலூன்

களவாடிய பொழுதுகள் விமர்சனம்

களவாடிய பொழுதுகள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்
இயக்கம் : தங்கர்பச்சான்
இசை : பரத்வாஜ்
ஒளிப்பதிவு: தங்கர்பச்சான்
எடிட்டிங்: ஆண்டனி
பி.ஆர்.ஓ. : டைமண்ட் பாபு
தயாரிப்பு: கருணாமூர்த்தி

கதைக்களம்…

கடந்த 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த காதல் படங்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்பதால் இதை தைரியாக வெளியிட்டுள்ளனர். சரி இனி கதைக்கு வருவோம்.

நிச்சயம் நீங்கள் அழகி படம் பார்த்திருப்பீர்கள். பள்ளிப் பருவத்தில் காதலித்த இருவர் காதலில் தோல்வியுற்று பிரிகின்றனர்.

பின்னர் வேறு ஒரு திருமண பந்தத்தில் இணைந்து விடுவார்கள். சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் வாழ்க்கையில் சந்திப்பார்கள். அதானே.

இப்படக்கதையும் அதுதான். ஆனால் இதில் நாயகி பூமிகா வசதியாக இருக்கிறார். நாயகன் பிரபுதேவா ஏழை டிரைவாக வருகிறார். பிரகாஷ்ராஜ் பூமிகாவின் புருசனாக வருகிறார்.

சில வருடங்களுக்கு பிறகு சந்தித்த காதலர்கள் என்ன செய்தார்கள்? என்பதே இதன் மீதிக்கதை.

DRxYI2qU8AAeQpy

 

கேரக்டர்கள்…

பல படங்களில் நடனமாடி மகிழ்வித்த பிரபுதேவா இதில் நன்றாக நடித்து நம்மை மகிழ்விக்கிறார்.

அவருக்காக ஒரு குத்து பாடல் கொடுத்து ஆடவைத்து அதிலும் சமூக கருத்துக்களை சொல்லி நம்மை கவர்ந்துவிடுகிறார் டைரக்டர்.

ஏழ்மையிலும் நேர்மையாக நடப்பது, அரசியல் பேசுவது என ரவுண்ட் கட்டி அடித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு இப்படியொரு படம் இனி கிடைக்குமா தெரியவில்லை. ஒரு பக்கம் மனைவி மகள் குடும்பம், மறுபக்கம் முன்னாள் காதலி, முதலாளி என உணர்ந்து நடித்திருக்கிறார்.

அன்பான மனைவியாகவும், அழகிய காதலியாகவும், பொறுப்பான முன்னாள் காதலியாகவும் என அனைத்திலும் ஜொலிக்கிறார் பூமிகா.

தன் காதலன் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என செய்யும் முயற்சிகள் பலருக்கு பலவற்றை நினைவுப்படுத்தும்.

கணவருக்கு துரோகம் செய்யாமல் காதலனுக்கு உதவும் கேரக்டரில் பூமிகா உயர்ந்து நிற்கிறார்.

தன் உயிரை காப்பாற்றிய பிரபுதேவாவுக்கு உதவ நினைக்கும் கேரக்டரில் பிரகாஷ்ராஜ்.

தன் மனைவிக்கு முன்பு காதல் இருந்தது என்பதை தெரிந்துக் கொண்டு, எல்லா தப்புக்கும் நான்தான் காரணம் என நினைத்து வேதனைப்படுவது பக்குவப்பட்ட நடிப்பு.

கடைசி வரை பூமிகா யார்? என்று தெரியாமல் அப்பாவி மனைவியாக பிரபுதேவாவின் மனைவியாக நடித்துள்ளவர் ஆச்சரியப்பட வைக்கிறார்.

கணவனை கண்டிப்பதும், பணக்கார பூமிகா கொடுக்கும் பணத்தை வாங்கி வசதியாக வாழ நினைப்பதும் ஒரு சராசரி பெண்னுக்கே உள்ள குணாதிசயம்.

 

DSC1pVwVQAAiaJJ

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பரத்வாஜ் இசைய்யில் அழகே அழகழகே பாடல் அருமை. சேரன் எங்கே சோழன் எங்கே பாடல் சமூக கருத்துள்ள பாடல்.

மற்றொரு பாடலில் இங்கே ஒருத்தனுக்கு ஒருத்தியும் காவியம்தான். ஐந்து பேருக்கு ஒருத்தி என்பதும் காவியம்தான் என்பதை பாடல் வரிகள் மூலம் அருமையாக புரிய வைத்துள்ளார் வைரமுத்து.

திருமணத்திற்கு பின்பு பழைய காதலர்கள் சந்தித்தால் ஏதாவது தப்பு நடந்துவிடுமோ? என்ற நோக்கத்தில் கதையை சொல்லாமல் கண்ணியத்தோடு கதையை நகரத்தியிருக்கிறார் தங்கர்பச்சான்.

ஆனால் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

அழகி படத்தின் இரண்டாம் பாகத்தை மற்றொரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான்.

எத்தனை காதலிகளுக்கு தங்கள் பழைய காதலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் அருகருகே வசிப்பது கிடைக்கும் என்ற வசனங்கள் உருக வைக்கும்.

களவாடிய பொழுதுகள்… காதல் மனதுகள் களவாடப்படும்

உள்குத்து விமர்சனம்

உள்குத்து விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தினேஷ், நந்திதா, சரத்லோகித்ஸ்வா, பாலசரவணன், ஸ்ரீமன், செப் தாமு, திலீப் சுப்பராயன் மற்றும் பலர்
இயக்கம் : கார்த்திக் ராஜு
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: பிகே பிலிம்ஸ் விட்டல் ராஜ்

கதைக்களம்…

தான் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்று மீனவ குப்பத்தில் உள்ள பாலசரவணன் உடன் அறிமுகமாகிறார் தினேஷ்.

படித்தவனை தன்னுடன் வைத்துக் கொண்டு அங்கு சுறா சங்கர் என்ற அட்டகாசம் செய்கிறார் பாலசரவணன்.

இதனிடையில் பாலாவின் தங்கை நந்திதாவை காதலிக்கிறார் தினேஷ்.

எனவே தன் தங்கை படித்தவனுக்கு கட்டி வைத்து அவனது சொத்தை கைப்பற்றி விடலாம் என ப்ளான் போடுகிறார் பாலா.

ஒரு கட்டத்தில் ஊர் தாதா சரத் லோகிதாஸ்வானின் மகன் திலீப் சுப்பராயனை கத்தியால் குத்தி கொலை செய்கிறார் தினேஷ்.

அப்படியென்றால் தினேஷ் யார்? எதற்காக கொல்கிறார்? அவரது பின்னணி என்ன? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

 

DSLvrnFV4AIpufX

 

கேரக்டர்கள்..

ஏற்கெனவே தினேஷ்க்கு ரொமான்ஸ் வராது. எனவே தனக்கு ஏற்றவாறு ஒரு அழுத்தமான கேரக்டரை தேர்ந்தெடுத்துள்ளார்.

அதிலும் மீனவ மக்களின் லுங்கி, சட்டை என அப்பட்டமாக அவர்களைப் போல் வாழ்ந்திருக்கிறார்.

நந்திதா அழகாக வருகிறார். ஆனால் இவரது கேரக்டர் அந்த மீனவ பகுதியில் ஒத்து போகவில்லை.

‘சுறா சங்கர்னா சும்மாவா’ என்று பன்ச் பேசியே ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டார் பாலசரவணன்.

DSM3hJGVwAAQ3cr

 

இவரை தன் குருநாதர் என தினேஷ் வில்லனிடம் மாட்டிவிட அதிலிருந்து மீள முடியாமல் மிரட்டி பேசுவது ரசிக்க வைக்கிறது.

உன்னை விசாரணை படத்துல அடிச்சது தப்பே இல்லைடா என்னும்போது நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்.

முதல்பாதியில் ஸ்ரீமனுக்கு சரியாக கேரக்டர் இல்லையே என நினைக்க தோன்றுகிறது. ஆனால் 2ஆம் பாதியில் அதை ஈடு செய்துவிட்டார் டைரக்டர்.

ஸ்ரீமன், ஜான்விஜய், சாயா சிங் ஆகிய மூவரும் தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள்.

சரத்லோகிஸ்த்வா மற்றும் திலீப் சுப்பராயன் இருவரிடமும் மிரட்டலான நடிப்பை கேட்டு வாங்கியிருக்கிறார். இருவரும் வில்லன் கேரக்டரை தாங்கி நிற்கிறார்கள். அவர்கள் பேசும் விதமே நமக்கு கோபத்தை வரவைக்கிறது.

பஞ்சாயத்து தலைவராக வரும் செஃப் தாமுவும் நம்மை கவர்கிறார்.

DRoaWqzVoAAqxWr

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையும் பலம் சேர்க்கின்றனர்.

அதிலும் பின்னணி இசை கோர்ப்பு செம குத்து.

மீனவ பகுதி வீடுகள் அது சார்ந்த இடங்கள் மார்கெட் அனைத்தும் சபாஷ் ரகம்.

தினேஷ் யார்? அவருக்கு பின்னணி என்ன? உள்ளிட்ட ப்ளாஷ்பேக் காட்சிகளை நன்றாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மீனவ மக்கள் மொழி நம் மொழியில் இருந்து சற்று மாறுபடும். ஆனால் இதில் கொஞ்சம் கூட இல்லை.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படம் முழுவதும் ஆக்சனை தெறிக்கவிட்டுள்ளார் இயக்குனர்.

உள்குத்து.. மாஸ் குத்து

சங்குசக்கரம் விமர்சனம்

சங்குசக்கரம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : திலீப் சுப்பராயன், கீதா, பேபி மோனிகா மற்றும் 9 குழந்தைகள் மற்றும் பலர்
இயக்கம் : மாரிசன்
இசை : ஷபீர்
ஒளிப்பதிவு: ரவி கண்ணன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: சினிமாவாலா பிக்ச்ர்ஸ் சதீஷ் அண்ட் லியோ விஷன்ஸ்

sangu villain

கதைக்களம்…

பொதுவாக பேய் படம் என்றால் பொறுமையாக காட்சிகளை நகர்த்தி பின்னர் பயமுறுத்த முயற்சி செய்வார்கள். அதிலும் ப்ளாஷ்பேக் இல்லாமல் பேய் படமே இருக்காது.

இந்த இரண்டையும் உடைத்தெறிந்துவிட்டார்கள் சங்குசக்கரம் படக்குழுவினர்.

ஆரம்ப காட்சியிலே பேய் படம் என்பதையும் சொல்லிவிட்டு ப்ளாஷ்பேக் இல்லாமல் கதையை முடித்திருக்கிறார்கள்.

ஒரு ஊரில் ஒரு பாழடைந்த பழைய பங்களா உள்ளது. கோடிக்கணக்கில் மதிப்பு பெறும் அந்த இடத்தை விற்று ப்ளாட் கட்ட நினைக்கிறார் ஒருவர்.

எனவே பேயை விரட்ட மந்திரவாதியை ஏற்பாடு செய்கிறார்.

பெரும் கோடீஸ்வரன் சிறுவன் ஒருவனை அவனது மாமா கொன்றுவிட்டு அந்த 500 கோடியை அள்ள நினைக்கிறார். எனவே பேய் பங்களாவில் வைத்து அவனை கொன்றுவிட்டால் பேய் மீது பழி போட நினைத்து அந்த சிறுவனை அங்கு அனுப்பி வைக்கிறார்.

இந்த நிலையில் ஏழு குழந்தைகளை திலீப் கடத்தி வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.

இவர்கள் எல்லாரும் அந்த பங்களாவைதான் குறி வைக்கிறார்கள். அங்கு ஏற்கெனவே ஒரு அம்மா பேயும் சிறுமி பேயும் உள்ளது.

இவர்கள் எல்லாரும் அங்கு ஒன்று கூட என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

sangu chakram kids

கேரக்டர்கள்…

ஒரு பேய் குழந்தை உட்பட படத்தில் மொத்தம் 10 குழந்தைகள். ஒவ்வொன்றும் ஒரு விதம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். பேய் மிரட்டும் என்றாலும் குழந்தைகளுடன் பார்க்கும்போது உற்சாகம் வருகிறது.

டாரு டமாரு என அடிக்கடி பேசி ரசிக்க வைக்கிறார் திலீப்சுப்பராயன்

பேயாக வரும் கீதா மற்றும் மோனிகா மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர். ஹேட்ஸ் ஆஃப்

அதிலும் தமிழ் கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் கேட்கும் கேள்விகளுக்கு இந்த உலகத்தில் எந்த பதிலுமே கிடையாது. கேள்வி கேட்டே பேயை விரட்டு விடுகிறான்.

அந்த கேள்விகளில் சில….

ஸ்கூல் யூனிபார்மில் எல்லாருக்கும் சமம்ன்னா அப்புறம் ஏன் ஒவ்வொரு ஸ்கூலுக்கும் வேற வேற யூனிபார்ம்..?

நிறைவேறாத ஆசையிருந்தால் பேய்யாக வருவார்கள் என்றால் மகாத்மா காந்தி ஏன் பேயாக வரவில்லை என கேட்கிறார்.

பேய்க்கு பவர் இருக்குன்னா? அந்த பவர வச்சி கரண்ட் வர வைக்கமுடியுமா? இப்படி பல கேள்விகள்.

கடவுள் எங்கும் இருப்பார் என்றால் பேய் வீட்டில் அவர் ஏன் இல்லை? என பல கேள்விகள் கேட்டு பேய்க்கு பயம் காட்டியிருக்கிறார்கள்.

‘பணம் என்றைக்குமே நிரந்தரம் இல்லை என்று சொன்னவன் எவனும் இப்போ உயிரோடு இல்லை.. ஆனா, பணம் இன்னும் நிரந்தமாக இருக்கு.

‘கெட்டவங்களை ஆண்டவன்தான் தண்டிக்கிறது இல்லை…. அந்த பேயாவது தண்டிக்கட்டுமே’ என பேய் அடிச்ச மாதிரி பல விஷயங்கள் சொல்லியிருக்கிறார்கள்.

sangu team

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஷபீரின் பின்னனி இசை படத்திற்கு பலம். பேய் படத்தில் பாடல்கள் இல்லாதது டைரக்டர் டச். தயாரிப்பாளருக்கும் சபாஷ் போடலாம்.

ஒரு பங்களா என்றாலும் அதில் ரவி கண்ணனின் கேமரா அழகாக சுற்றி வந்து ரசிக்க வைக்கிறது.

படத்தின் இறுதியில் வெளிநாட்டு மந்திரவாதிக்கும் உள்நாட்டு மந்திரவாதிக்கும் நடக்கும் மேளம் ஆட்டம்…. செம அப்ளாஸ்.

அப்போதும் நம்ம மந்திரவாதி பேசும் வசனங்கள் சூப்பர்…

ஏன்டா காய், மீன், அரிசி தனியா வித்துட்டு இருந்தோம். சூப்பர் மார்க்கெட்டுக்கு வச்சி எங்க பிழைப்ப கெடுத்தீங்க.. இப்போ பேய் ஓட்ட வந்து இந்த பிழைப்பையும் கை வக்கிறீங்களா? என கேட்டு மிரட்டுகிறார்.

க்ளைமாக்ஸில்.. ரஜினி அரசியலுக்கு வருவாரா? என கேட்டு எல்லாரையும் குழப்பிவிடுகிறான் அந்த சிறுவன்.
குழந்தைகளுடன் பார்க்கும் வகையில் குடும்ப படம் தந்துள்ளார் மாரிசன்

சங்குசக்கரம்.. பேயை தெறிக்கவிடும் குழந்தைகள்

More Articles
Follows