நிசப்தம் விமர்சனம்

நிசப்தம் விமர்சனம்

நடிகர்கள் : அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர், ராமகிருஷ்ணா, ருது, ஹம்சா, பழனி மற்றும் பலர்.
இயக்கம் : மைக்கேல் அருண்
இசை : ஷான் ஜாஸீல்
ஒளிப்பதிவாளர் : எஸ்.ஜே. ஸ்டார்
பி.ஆர்.ஓ.: யுவராஜ்
தயாரிப்பாளர் : ஏஞ்சலீன் டாவின்சி

nishabdham 4

கதைக்களம்…

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…

ஓரிரு வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை படமாக்க கொடுத்திருக்கிறார் டைரக்டர் மைக்கேல் அருண். அதனால் படத்தின் பேக்ட்ராப் பெங்களூர் காட்சிகள்தான்.

தற்போது தமிழ்நாட்டில் நிறையவே நடக்கிறது.

கார் சர்வீஸ் சென்டரில் மெக்கானிக்காக வேலை செய்கிறார் ஆதி (அஜய்).

இவரது காதல் மனைவி ஆதிரா (அபிநயா). இவர் வீட்டின் வாசலியே பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான ஸ்டேசனரி ஷாப் வைத்திருக்கிறார்.

இவர்களின் 8 வயது மகள்தான் பூமிகா (பேபி சாதன்யா).

சிட்டி லைப்பில் காலில் சக்கரம் கட்டி பறக்கும் மெக்கானிக் பெற்றோர்களுக்கு பிள்ளை கவனிக்க நேரமில்லை.

அதுமட்டுமில்லாமல் ஆதிக்கு பொண்டாட்டி பிள்ளையை விட டிவி, கிரிக்கெட் இதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

ஒரு மழை நாளில் பள்ளிக்கு தனியாக நடந்து செல்லும் பூமிகா, உதவி ஒரு குடிகாரன் ஒருவனுக்கு உதவுகிறார்.

ஆனால் அந்த காமகொடூரன் இவளை சீரழிக்கிறான். அந்த சிறுமியின் சிறு குடல் பெருங்குடல் பாதிக்கப்பட்ட நிலையில் அவள் மீதமுள்ள வாழ்க்கை எப்படி கழிக்கிறாள்.

இந்த சமூகத்தையும் ஆண்களையும் அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே நிசப்தம்.

nishabdham 2

கதாபாத்திரங்கள்..

அஜய் அபிநயா.. சிட்டி லைப் பேரண்ட்ஸ். மகள் மீது பாசம் இருந்தாலும் பிஸி லைப்பில் அவளை கவனிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

அபிநயா ஒவ்வொரு ப்ரேமையும் தன் உணர்வுபூர்வமான நடிப்பால் மிளிர வைக்கிறார்.

இதுநாள் வரை சின்ன சின்ன வேடங்களில் நடித்த அபிநயா, இதில் முழு நாயகியாகி அதிர வைத்துள்ளார்.

தன் மகள் தன்னை பார்க்க மறுக்கும்போதும் கூனிக்குறி நம்மையும் அழ வைக்கிறார் அஜய்.

பேபி சாதன்யா அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வருடத்தின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைக்க வாழ்த்துக்கள்.

இவருக்கு தெரபிஸ்ட் ருது ட்ரெயினிங் கொடுக்கும்போது சிறுமி கேட்கும் கேள்விகள் நம்மையும் பாதிக்கும்.

தான் பாதிக்கப்பட்ட உடன் பெற்றோருக்கு போன் செய்யாமல், போலீஸ்க்கு போன் செய்கிறார். நீங்க பிஸியாக இருப்பீங்க. அதான் போலீசுக்கு போன் செய்தேன் சொல்லும்போது… நிச்சயம் உங்கள் மனதில் வலி உண்டாகும்.

நான் ஏன் பொறந்தேன் என்று கேட்கும்போதும். அவன் கெட்டவன் என்று சொல்லும்போதும் சிலிரிக்க வைக்கிறார்.

கிஷோர், ஆதி நண்பர் பழனி, ஆதிரா தோழி ஹம்சா, தெரபிஸ்ட் ருது, பொம்மை விற்பன், பெண் போலீஸ் என அனைவரும் சிறுமிக்காக ஏங்குவது கவர வைக்கிறது.

nishabdham 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களை விட பாடல் வரிகள் நிச்சயம் பேசப்படும். அந்த வரிகளுக்கு சொந்தக்காரர் நா. முத்துக்குமார்.

ஷான் ஜாஸீல் பின்னணி இசை பெரிய பலம். உணர்வுபூர்வமான படத்திற்கு இசையால் உயிரூட்டியிருக்கிறார்.

அனைத்து காட்சிகளையும் ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர்.

nishabdham 3

இயக்குனர் பற்றிய அலசல்

மது விற்கும் அரசாங்கத்திற்கு கோர்ட் காட்சிகளில் சாட்டையடி கொடுக்கிறார் டைரக்டர்.

குடியை காரணம் காட்டி குற்றவாளி தப்பிக்க நினைப்பதும், அவனுக்கும் வாதாட வக்கீல்கள் இருப்பதும் சட்டத்தின் ஓட்டைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஓட்டை இல்லாத சட்டம் இருந்தால் நல்லது என்று நாமே நினைக்க தோன்றும்.

இதுபோன்ற செய்திகளையும் அந்த குடும்பத்தை காட்டி டிஆர்பி ரேட்டிங்கை எகிற செய்யும் மீடியாவுக்கும் கொட்டு வைக்கிறார் டைரக்டர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலி தெரியுமா? என்று கேட்கும்போது பதில் இல்லை நம்மிடம்.

தன் முதல் படத்தையே ஒரு அழகான ஒரு விழிப்புணர்வு மெசேஜ் உடன் கொடுத்திருக்கிறார் டைரக்டர். ஹாட்ஸ் ஆஃப் மைக்கேல் அருண்.

பணிச்சுமை இருந்தாலும் குழந்தைகள் மீது பார்வை இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ள படம்.

நிசப்தம்… பிஸியானவர்களே நீங்க நிச்சயம் பாக்கனும்

Comments are closed.

Related News

குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும்"நாரோ மீடியா…
...Read More
மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி…
...Read More
பேபி படத்தில் நடித்து முத்திரை பதித்தவர்…
...Read More