களத்தூர் கிராமம் விமர்சனம்

களத்தூர் கிராமம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கிஷோர், சுலீல்குமார், யாக்னா ஷெட்டி, மிதுன்குமார், ரஜினி மஹாதேவையா மற்றும் பலர்.
இயக்கம் : சரண் கே அத்வைதன்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு: புஷ்பராஜ் சந்தோஷின்
படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்
பி.ஆர்.ஓ. : அ. ஜான்
தயாரிப்பு : ஆவுடைத்தாய் ராமமூர்த்தி ஏ.ஆர். மூவி பாரடைஸ்

Kalathur Gramam movie stills

கதைக்களம்…

தன் களத்தூர் கிராம மக்கள் பசி தீர அப்பகுதியைத் தாண்டிச் செல்லும் எந்த வண்டியாக இருந்தாலும் அதை வழிமறித்து அதிலிருக்கும் பொருட்களைக் களவாடுகிறார் கிஷோர்.

இது தொடர்பான புகார்கள் போலீஸில் இருந்தாலும் இந்த கிராமத்தை காவல்துறையால் நெருங்க முடிவதில்லை.

அந்த அளவுக்கு கிஷோர் தன் கிராம மக்களுக்கு நன்மை செய்கிறார். கிராம மக்களும் அவரை தெய்வமாக மதிக்கின்றனர்.

இந்நிலையில், யாக்னா ஷெட்டியைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாக, அவரைக் காப்பாற்றிக் கூட்டி வந்து அவர் தந்தையிடம் ஒப்படைக்க வரும்போது எதிர்பாராத விதமாக யாக்னாவை திருமணம் செய்யும் கட்டாயம் ஏற்படவே இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

ஆனால், கிஷோரை போலீஸ் கைது செய்கின்றனர். இதனால் தான் வரும்வரை யாக்னாவை பார்த்துக் கொள்ளும்படி தன் நெருங்கிய நண்பர் சுலீல் குமாரிடம் ஒப்படைக்கிறார்.

தனக்கு கல்யாணம் நடக்காத விரக்தியில் இருக்கும் சுலீல் இதை சாதகமாக பயன்படுத்தி யாக்னாவை தன் மனைவி என்று ஊர்காரர்களிடம் கூறிவிடுகிறார்.

இதனால் கிஷோருக்கும் சுலீப் நட்பு இடையே விரிசல் விழுகிறது.

Kalathur Gramam rajini heroine

ஒரு கட்டத்தில் யாக்னாவும் கிஷோருடன் சிறைச் செல்ல, அங்கு குழந்தை பிறக்கிறது.

தங்கள் மகன் சிறையில் வாழக்கூடாது என்பதால், ஒரு தம்பதியரிடம் வளர்க்கச் சொல்கின்றனர்.

ஆனால் அவர்கள் இந்த மகனையே பெற்றோருக்கு எதிராக திசை திருப்புகின்றனர்.

எனவே பெற்றோரை கொல்ல சொந்த மகன் மிதுன் குமாரே திட்டம் தீட்டுகிறார்.

இந்நிலையில் மிதுன் குமாரிடம் சிறுவயதில் பழகிய ரஜினி மஹாதேவையா அவரை காதலிக்கிறார்.

இப்படியாக செல்லும் இந்த போராட்டத்தின் மீதிக்கதையே களத்தூர் கிராமம்.

?????????????????????????????????????????????

கேரக்டர்கள்…

நிறைய படங்களில் வில்லனாக நடித்த கிஷோர் இதில் நாயகன். இவருக்கு இனி இப்படியொரு கேரக்டர் அமையுமா? எனத் தெரியாது.

அந்த கிராமத்து தாதாவாகவும், பாசக்கார நண்பனாகவும், அன்பான கணவனாகவும், தன்மான தந்தையாகவும் வாழ்ந்திருக்கிறார்.

களத்தூர் கிராமத்தையும் இந்த கதையையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.

யாக்னா கிராமத்து பெண்ணாக பளிச்சிடுகிறார்.

நண்பனாகவும் பின்னர் வில்லனாகவும் சுலீல்குமார் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மிதுன்குமார், ரஜினி மஹாதேவையா ஆகியோரும் ரசிக்க வைக்கின்றனர்.

நீதிபதியாக, விசாரணை கமிஷன் அதிகாரியாக நடிப்பில் வரும் அஜய் ரத்னம், காவல்துறையினரை சாட்டையடி வார்த்தைகளால் அவர் விளாசும் காட்சிகளும், விசாரணையை நேர்மையாக நடத்தும் விதமும் நீதித்துறையின் மீதான மதிப்பை உயர்த்தவே செய்கின்றன.

தவிர, இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரிகளாக, காவலர்களாக நடித்துள்ள அனைவரும் எந்த இடத்திலும் இது ஒரு படம் என நாம் நினைத்துவிடாதபடி, வலம் வருகின்றனர். அதுதான் இந்தப்படத்தின், இந்தக்கதையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

Kalathur Gramam audio launch

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு பெரிய பலம் இளையராஜா இசை. இப்படத்திற்கு முதலில் இசையமைக்க மறுத்து, பின்னர் படத்தை பார்த்து ஒப்புக் கொண்டாராம்.

ஆக்சன் காட்சிகளில் இளையராஜா பின்னணி இசை அனல் பறக்க செய்கிறது.

சரண் கே அத்வைதன் இப்படத்திற்கு சரியான கேரக்டர்களை தேர்வு செய்திருப்பதன் மூலம் ஜெயித்திருக்கிறார்.

கதைக்கேற்ற புஷ்பராஜ் சந்தோஷின் ஒளிப்பதிவு இன்னும் அழகு சேர்க்கிறது.

படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் அவர்களும் பாராட்டை பெறுகிறார்.

ஒரு சரியான கிராமத்து கதையை சில ட்விஸ்ட்கள் கொடுத்து தரமான படைப்பாக கொடுத்திருக்கிறார்கள் ஆவுடைத்தாய் ராமமூர்த்தியின் ஏ.ஆர். மூவி பாரடைஸ் நிறுவனம்.

களத்தூர் கிராமம்… கிராமத்து காவியம்

மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா மற்றும் பலர்.
இயக்கம் : ரத்னகுமார்
இசை : சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப்
ஒளிப்பதிவு: விது அய்யனா
படத்தொகுப்பு: சபீக் முகம்மது அலி
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : கார்த்திக் சுப்புராஜ்

கதைக்களம்…

படத்தின் நாயகன் வைபவ்வின் கேரக்டர் பெயர் முரளி. இவர் இதயம் பட முரளியைப் போல் நாயகி பிரியா பவானி சங்கரிடம் காதலை சொல்லாமல் இருக்கிறார்.

இதனால் இவரை இதயம் முரளி என்றே அழைக்கின்றனர்.

ஒரு நாள் பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற, இதனால் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார் முரளி.

எனவே பிரியாவை சந்திக்கும் முரளியின் நண்பர்கள் வினோத் மற்றும் கிஷோர், அவரை காப்பாற்ற சொல்கின்றனர்.

அவரை போனில் அழைத்துப் பேசிய பவானி சங்கர், மனம் மாறினாரா? முரளி தற்கொலை முடிவை கைவிட்டாரா? அதன்பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

meiyadha maan

கேரக்டர்கள்..

படம் முழுக்க லோக்கல் பாஷை பேசி, காதல் தோல்வி இளைஞர்களை கவர்கிறார் வைபவ்.

பிரியா அம்மா… தம்பி நீங்க தண்ணிய வாய் வச்சித்தான் குடிப்பீங்களா? என்று கேட்பதற்கு, நீங்க எத வச்சி குடிப்பீங்க? என்ற அப்பாவியாக கேட்கும்போது தியேட்டரை அலற வைக்கிறார்.

ஹீரோயின் பெயர் மதுமிதாவை குறிப்பிட்டு, மது உடம்புக்கு நல்லதல்ல என்பார்.

இதுபோன்ற காமெடி விஷயங்களில் பிரியாவை மட்டுமல்ல ரசிகர்களையும் கவர்கிறார் வைபவ்.

தங்கை பாசம், நண்பர்கள், மேயாத மான் கச்சேரி என படம் முழுவதும் லூட்டி அடிக்கிறார்.

டிவியில் புகழ்பெற்ற பிரியா பவானி சங்கர் சினிமாவில் நல்ல கதைக்காக தயங்கிக் கொண்டிருந்தார். அவர் காத்திருந்த போலவே அவருக்கு மேயாத மான் ஒரு கவரிமானாக அமைந்துவிட்டது.

இனி சினிமாவிலும் அதிகமான வாய்ப்புகள் இவரைத் தேடி வரும். இந்த வருடம் பிரியாவுக்கும் மெர்சல் தீபாவளிதான்.

வைபவ்-வின் நண்பராகவும் அவரின் தங்கச்சியின் கணவராக வரும் வினோத் (விவேக் பிரசன்னா) ரசிக்க வைக்கிறார். இதுவரை சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர் படம் முழுவதும் வந்து நம்மை ஈர்க்கிறார்.

நாயகனின் தங்கையாக இந்துஜா. இவரும் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ரத்ன குமார் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

படத்தின் பாடல்கள் காட்சிக்கு ஏற்றவாறு இருந்தாலும், ஓவரா பாட்ட போட்டு போரடிக்க வைத்துவிட்டார் சந்தோஷ் நாராயணன். அதுவும் ஒரே மாதிரியான பாடல்கள்.

படத்தின் நீளத்தை குறைத்தால் இன்னும் சிறப்பாக இந்த மான் துள்ளி ஓடும்.

மேயாத மான்… ரசிகர் மனதில் துள்ளும் மான்

மெர்சல் விமர்சனம்

மெர்சல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய், காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர்.
இயக்கம் : அட்லி
இசை : ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு: விஷ்னு
படத்தொகுப்பு: ரூபன்
பி.ஆர்.ஓ. : விஜயமுரளி, கிளாமர் சத்யா, ரியாஸ்
தயாரிப்பு : தேனாண்டாள் பிலிம்ஸ்

mersal dance

கதைக்களம்…

வெற்றிமாறன் என்ற தளபதி விஜய் மற்றும் நித்யாமேனனுக்கு இரண்டு குழந்தைகள்.

ஒரு சூழ்நிலையில் தாயும் தந்தையும் கொல்லப்பட இரு குழந்தைகள் பிரிகின்றனர்.

ஒருவர் டாக்டர் ஆக, மற்றொருவர் மேஜிக் மேன் ஆகிறார்.

இவர்களில் ஒருவர் தொடர்ந்து கொலைகளை செய்ய, போலீஸ் அவரை கைது செய்கிறது.

இவர் எதற்காக கொலை செய்கிறார்? என்ற கதைக்களத்துடன் படம் செல்கிறது. அதன்பின்னர் வரும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.

mersal kajal

கேரக்டர்கள்…

இதுவரை 3 வேடங்களில் நடிக்காத விஜய் இதில் மிரட்டியிருக்கிறார். அதிலும் தளபதி கேரக்டரில் இவரின் பாடி லாங்குவேஜ் அசத்தல்.

தன் ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் அதே சமயம் படத்திற்கு ஏற்ற வகையிலும் தன் கேரக்டரை பெஸ்ட்டாக கொடுத்துள்ளார்.

விஜய்க்கு நித்யாமேனன் கெமிஸ்டரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

3 நாயகிகள் இருந்தாலும் அதிகம் ஸ்கோர் செய்பவர் நித்யாதான். ஐசு கேரக்டரில் உருவ வைக்கிறார்.

2வது இடம் பெறுகிறார் சமந்தா. டேய் தம்பி என்று விஜய்யை அழைப்பதும், ரோஸ்மில்க் வாங்கி தரேன்டா என சொல்லுவதும் ரசிக்கும் ரகம்.

தெலுங்கு பட ஹீரோயினை போல காஜல் வந்து செல்கிறார்.

திரையில் தோன்றும்போதே படத்தின் நாயகன் போல எதிர்பார்ப்பை உண்டாக்குகிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. சபாஷ் ஜி.

அனுபவமிக்க நடிகர்களான சத்யராஜ், கோவை சரளா, வடிவேலு கேரக்டர்களில் அழுத்தமில்லாமல் செய்துவிட்டார் அட்லி.

யோகிபாபு ஒரு சில காட்சிகளில் வந்து சென்றாலும் சிரிக்க வைக்கிறார்.

mersal poster kaalai

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஏஆர். ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் செம மெர்சல்.

மெர்சல் அரசன், ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு விஜய்யை துள்ளி வைத்து ஆடவைத்திருக்கிறது.

எடிட்டர் ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே.விஷ்னு ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

mersal vijay dance

பிளஸ்…

படம் முழுவதும் விஜய் தெறிக்கவிட்டுள்ளார்.

ஏஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டல்.

க்ளைமாக்ஸில் ஜிஎஸ்டி வசனங்களும் மெடிக்கல் துறை ஊழலும் கைத்தட்டல்களை அள்ளும்.

பைட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆக்சன் காட்சிகளில் அடி தூள் பண்ணியிருக்கிறார்.

mersal stills

மைனஸ்…

சமந்தா, காஜல்அகர்வால் கேரக்டர்கள் பாட்டுக்காக வந்துபோவது போல் உள்ளது.

ரொமான்ஸ் இருந்தாலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சத்யராஜ் கேரக்டரில் வெயிட் இல்லை. வடிவேலு இருந்தும் காமெடி ஒர்க்அவுட் ஆகவில்லை.

 

Mersal-Movie-Shooting-Spot

இயக்கம் பற்றிய அலசல்…

ரமண கிரிவாசன் மற்றும் அட்லியின் வசனங்கள் அரசியலை சாடியிருக்கிறது. அதை விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் அரசியல் பேசும்போது இன்னும் பளிச்சிடுகிறது.

விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது இல்லத்தரசிகளையும் கவரும் வித்தை தெரிந்தவர் அட்லி. போரடிக்காமல் படத்தை நகர்த்தியிருக்கிறார்.

ஆண்டவனை நம்பி மசிர கொடுக்கிறோம். டாக்டர நம்பித்தான் உசிர கொடுக்கிறோம் என்ற டயலாக்குகளும் மருத்துவ துறையில் ஊழல் வந்தால் எப்படி மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை அப்பட்டமாக கமர்ஷியல் மசாலா கலந்து சொல்லியிருக்கிறார் அட்லி.

அரசு மருத்துவமனைகளை பார்த்து மக்கள் பயப்படுவதுதான் தனியார் மருத்துவனைகளின் பலம்.

பிரதமர், முதல்வர், அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். அப்பொழுதுதான் இந்திய மருத்துவதுறையை உலகளவில் கொண்டு செல்ல முடியும் என்ற வசனம் செம.

படத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தமான காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டார்களோ? என்னவோ?

இரண்டு கேரக்டர்கள் என்றாலே ஆள்மாறாட்டம் செய்துவிடுகிறார்கள். அந்த பார்முலா? இன்னும் எத்தனை காலத்துக்குதான்..?

மெர்சல்… மிரட்டல் விஜய்

சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி, முனிஷ்காந்த், பேசி சாதன்யா மற்றும் பலர்.
இயக்கம் : ஜேபியார்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு: விஜய் தீபக்
படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே. அஹ்மது
தயாரிப்பு : பி.கே.ராம் மோகன்

chennaiyil oru naal 2 team

கதைக்களம்…

படத்தின் முதல் காட்சியே ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என ஒரு போஸ்டரை கோவை முழுக்க ஒருவர் ஒட்டுகின்றார்.

இது சினிமா போஸ்டர் இல்லை என்பதை உறுதி செய்துக் கொள்ளும் காவல்துறை அதிகாரி நெப்போலியன், அந்த போஸ்டர் பற்றிய விசாரணையை சரத்குமாரிடம் ஒப்படைக்கிறார்.

இதனிடையில் ஒரு மர்ம கடிதம் ஒன்று சரத்குமாரின் அக்கா மகளுக்கு ஏஞ்சலின் பெயரில் வருகிறது.

இதனால் சுதாரித்துக் கொள்ளும் சரத்குமார், தன் உதவியாளர் முனீஷ்காந்துடன் களம் இறங்குகிறார்.

ஏஞ்சலின் மரணத்தை முன்பே தடுத்தாரா சரத்? மர்ம கடிதம் இவரது வீட்டுக்கு வர என்ன காரணம்? உள்ளிட்டவைகளை தன் மிடுக்கான தோற்றத்துடன் சரத் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.

Chennaiyil-Oru-Naal-2-Movie-Photos-4

கேரக்டர்கள்…

தமிழ் சினிமாவில் போலீஸ் உடைக்கு பொருத்தமான ஆள் சரத்குமார். இதில் தாடி வைத்து தன் கெட்அப்பை மாற்றியிருக்கிறார். படம் முழுவதும் மப்டியில் வருகிறார். எனவே யூனிபார்ம் கிடையாது.

படத்தில் பைட் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் முறுக்கிய தேகத்துடன் வந்து செல்கிறார். நல்லவேளை டூயட் பாடவில்லை. (நாயகியே படத்தில் இல்லை)

உயர் போலீஸ் அதிகாரியாக நெப்போலியன் வருகிறார். கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். அவ்வளவுதான்.

chennaiyil oru naal 2 stils

கன்னியாஸ்த்ரியாக சுஹாசினி நடித்திருக்கிறார். முனிஷ்காந்த் இருக்கிறார் காமெடி இருக்கும் என நினைத்தால் அதிலும் ஏமாற்றம்தான்.

இப்படம் 24 மணி நேரத்தில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னையில் ஒரு நாள் என பெயரிட்டு இருந்தாலும், படம் முழுக்க கோவையிலே நடக்கிறது.

ப்ளாஷ்பேக் காட்சி மட்டும் சென்னையில் நடக்கிறது. அதுவும் கார்ட்டூன் படங்களை காட்டி லோ பட்ஜெட்ல் முடித்துவிடுகின்றனர்.

இதனால் சென்னையில் நடைபெற்ற அந்த விபத்து சம்பவத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது.

chennaiyil-oru-naal-2

ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையை பேசும்படி கொடுத்திருக்கிறார். சரத்குமார் தம் அடிக்கும் காட்சிகள் முதல் நெட்டி முறிக்கும் காட்சிகள் என அனைத்தையும் நன்றாகவே இசை போட்டு காட்டியிருக்கிறார்.

படத்தில் எதற்காக எல்லாம் செய்தார்? என வில்லனே சொல்லிவிடுகிறார். இதனால் சரத்குமாருக்கும் நமக்கும் காட்சிகள் எளிதாக புரிந்துவிட்டன.

அதிகபட்ச மெமரிலாஸ் மருந்தை இந்தியாவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு கொடுத்தால் நாட்டின் ஒட்டு மொத்த சிஸ்டமே கெட்டுவிடும் என்ற பயங்கரமான கான்செப்ட் உடன் படத்தை எடுத்திருந்தாலும் அதை சொன்ன விதத்தில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர்.

கருப்பன் விமர்சனம்

கருப்பன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, தான்யா, பாபிசிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி, சரத்லோகிஸ்த்வா மற்றும் பலர்.
இயக்கம் : பன்னீர்செல்வம்
இசை : இமான்
ஒளிப்பதிவு: சக்திவேல்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு : ஏம்எம். ரத்னம்

Tanya-Photos-Vijay-Sethupathi-Karuppan

கதைக்களம்…

வாடி வாசல் ஜல்லிக்கட்டு காளை என்றாலும் கருப்பன் விஜய்சேதுபதியை பார்த்தால் மிரளும்.

ஒருமுறை தன் ஜல்லிக்கட்டு காளையை அடக்கினால் தன் தங்கையை திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார் பசுபதி.

அதன்படி காளையை விஜய்சேதுபதி அடக்க, அவருக்கு கழுத்தை நீட்டுகிறார் தன்யா.

பசுபதியின் மச்சான் பாபிசிம்ஹாவுக்கோ தன்யா மீது கொள்ளை ஆசை.

எனவே விஜய்சேதுபதியை அவளுடன் இருந்து பிரித்து மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறார்.

அதன்பின்னர் அவர் என்ன செய்தார்? தான்யாவை அடைந்தாரா? விஜய்சேதுபதியை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

karuppan stills

கேரக்டர்கள்…

எந்த கேரக்டரா இருந்தா என்ன? கொடுங்கையா என்று கேட்டு வாங்கி அதில் தன்னை பேச வைப்பவர் விஜய்சேதுபதி.

அறிமுக காட்சியிலேயே ஒரு தாளத்திற்கு இவர் போடும் குத்தாட்டமே இவரது கிராமத்து உடல் மொழியை சொல்லிவிடுகிறது.

எம்ஜிஆர் பாடல்களுக்கு ஆடுவதாகட்டும், ஆலுமா டோலுமா ஆடிக்கொண்டே சண்டையிடுவதாகட்டும், மனைவியிடம் அன்பை பொழிவதாகட்டும், ஜல்லிக்கட்டு காளையை அடக்குவதாகட்டும் கருப்பனுக்கு கண் திருஷ்டி படும் அளவுக்கு மிரட்டியிருக்கிறார்.

அழகான கிராமத்து பெண்ணாக வசீகரிக்கிறார் தான்யா. கணவனை கண்டிப்பதிலும், அரவணைப்பதிலும் மனைவி ஒரு மாணிக்கமாக வாழ்ந்திருக்கிறார்.

கூட இருந்துக் கொண்டே குழிபறிக்கும் வில்லனாக பாபிசிம்ஹா. கிராமத்து வில்லனாக ஜொலிக்கிறார். ஆனால் கதையில் ட்விஸ்ட் வைத்திருந்தால் இவரது கேரக்டர் பேசப்பட்டி இருக்கும்.

விஜய்சேதுபதியின் தாய்மாமனாக சிங்கம் புலி. நேத்து ராத்திரி அம்மா பாடலுக்கு ஆடும் நடனம் ரசிக்கவைக்கிறது. செண்டிமென்ட்லும் கலக்கியிருக்கிறார்.

பசுபதி மற்றும் சரத் லோகிஸ்தவா கேரக்டர்களில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.

Karuppan-Movie-Press-Meet-15

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜல்லிக்கட்டு காட்சி கிராபிக்ஸ் என்றாலும் அதை ரசிக்கும்படி அருமையாக படமாக்கியுள்ளனர். ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.

இமான் இசையில் பின்னணி இசை பேசப்படும். பாடல்கள் கிராமத்து சூழலில் இருந்தாலும் வழக்கமான மெலோடி இதில் மிஸ்ஸிங் என்று தோன்றுகிறது.

சக்திவேலின் ஒளிப்பதிவில் மதுரையும் அந்த மக்களும் படத்திற்கு பலம்.

ரேனிகுண்டாவில் கலக்கிய இயக்குனர் பன்னீர் செல்வம் இதில் இன்னும் மிரட்டியிருக்கலாம்.

விவசாயம் பற்றிய காட்சிகள் ஆரம்பிக்கும்போது எதோ சொல்ல வருகிறார்கள் என்றால் அதை திடீரென முடித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.

வழக்கமான குடும்பத்து கதை ரசிக்கும்படி இருந்தாலும் ட்விஸ்ட் வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

கருப்பன்… எதிர்பார்ப்பு இல்லாமல் ரசிக்கலாம்

ஹரஹர மகாதேவகி விமர்சனம்

ஹரஹர மகாதேவகி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், ரவிமரியா, ஆர்கே.சுரேஷ், பாலசரவணன், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், நமோ நாராயணன் மற்றும் பலர்.
இயக்கம் : சந்தோஷ் பி. ஜெயக்குமார்
இசை : பாலமுரளி பாலு
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்கே.
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : எஸ். தங்கராஜ்

Hara-Hara-Mahadevaki-Movie-Stills

கதைக்களம்…

ஆங்ங்… அம்பி.. என் முனகல் சத்தத்தில் பேசும் சாமியாரின் பஜனை பேச்சுக்களுடன் படம் ஆரம்பிக்கிறது. அவரே எல்லா கேரக்டர்களுக்கும் அவரது ஸ்டைலில் இன்ட்ரோ கொடுக்கிறார்.

குடியரசு மக்கள் கட்சி பெயரில் ஒரு பேக் கிட்டதட்ட படத்தில் உள்ள 4 குழுவிடம் இருக்கிறது.

அதில் ஒவ்வொரு குழுவும் சில பொருட்களை கொண்டு செல்ல, அந்த பேக் கைமாறி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அரசியல்வாதியின் சதிவேலை திட்டம் அம்பலமாகிறது.

இதில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ் ஆகியோர் ஒரு பக்கம். இதில் காதலர்களின் பொருள் மற்றும் ஜட்டிகள் இருக்கிறது.

ரவிமரியா, நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் அடுத்த குழு. இவர்களிடம் உள்ள பையில் பாம் இருக்கிறது.

பாலசரவணனிடம் உள்ள பையில் முழுக்க கள்ளநோட்டுக்கள் இருக்கிறது.

ஒரு குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறது ஒரு கும்பல். அவர்களிடம் கொடுக்க ஒரு தம்பதி பையில் நல்ல ரூபாய் நோட்டுக்களை வைக்கின்றனர். இதை தேடி போலீஸ் ஆர்.கே.சுரேஷ் வருகிறார்.

இந்த நாலு குழுவும் ஒரு இடத்தில் கூடி அடிக்கும் கும்மாளமே இந்த படம்.

?????????????????????????????????????????????????????????????????????

கேரக்டர்கள்…

இதுபோன்ற படங்களில் யார் வேண்டுமானாலும் நடித்துவிடலாம். இதில் கௌதம் கார்த்திக் நடித்திருக்கிறார். ஜாலியாக வந்து செல்கிறார்.

நிக்கி கல்ராணி கவர்ச்சியாக வராவிட்டாலும் அவரது கடவுளே கடவுளே ரியாக்சன் படத்திற்கு ஈடு கொடுக்கிறது.

இவரிடம் காதலை ப்ரோபோஸ் செய்ய, சாவு வண்டியில் ஹீரோ வருவது செம.

பாலசரவணன் கள்ள நோட்டை மாற்றும் விதம் பல பேருக்கு ரூட்டாக அமைந்துவிடும்.

மொட்டை ராஜேந்திரன் காமெடியிலும் டபுள் மீனிங்கிலும் அனைவரையும் கவர்கிறார். அதுவும் இவரை கதவு லென்ஸ் வழியாக பார்க்கும் போது அசல் வேற்றுகிரக ஜந்து போல வருகிறார்.

இவரும் கருணாகரனும் விபச்சாரியிடம் சென்று மாட்டிக்கொள்ளும் சீனில் வரும் சிரிப்பு சத்தம் அடங்க வெகு நேரமாகும்.

இவர்கள் இல்லாமல் சதீஷ் அடிக்கும் காம நெடி ஜோக்குகளுக்கும் பஞ்சமில்லை.

மனோபாலா எதற்காக வருகிறார்? ஒரு பாடலுக்கு வர அவர் என்ன ஐட்டம் டான்சரா?

Hara-Hara-Mahadevaki-poster

ரவிமரியா மற்றும் நமோ நாராயணன் ஆகியோரின் இலக்கிய ஜோக்குகள் ரசிக்க வைக்கிறது.

அதுபோல் ரவிமரியா காலுக்கு இடையில் பாம்பு, நமோ நாராயணன் காலுக்கு அடியில் பீர்பாட்டில் என செக்ஸ் காமெடியில் உச்சம் தொட்டுவிட்டார்கள்.

இந்த சிரிப்பு படத்தில் சீரியஸ் ரோல் செய்ய முயற்சித்துள்ளார் போலீஸ் ஆர்.கே.சுரேஷ்.

ஜட்டி இல்லாமல் பார்ப்பது, அதை பாம்பு என்பது, பின்னர் பாம்பு எப்படி? என்பதை எல்லாம் வசனங்களாக பேசி கைத்தட்டலகளை அள்ளுகின்றனர்.

Hara-Hara-Mahadevaki-Working-Stills-1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசை – பாலமுரளி பாலு, ஒளிப்பதிவு – செல்வகுமார் ஆகியோர் படத்திற்கு எது தேவையோ? அதை சரியாக செய்துள்ளனர்.

வயசுக்கு வந்தவங்க மட்டும் என் படத்துக்கு வாங்க என சொல்லிவிட்டார். எனவே அவர்களுக்காக காமம் கலந்து காமெடி கலந்து புல் மீல்ஸ் கொடுத்துள்ளார்.

கை குலுக்கி போங்க, அதானே பார்த்தேன் உங்களுக்கு இவ்வளவு பெருசா இருக்காதே?, உள்ள போடலாம் வந்தா? வெளியே போக சொல்லிறியே என நிமிடங்களுக்கு நிமிடம் டபுள் மீனிங் வந்து போகிறது.

hhmd advt

நாம லஞ்சம் கொடுத்தா அது நல்ல பணமா? கள்ள பணமா? என பார்க்காம வாங்குறவங்க ஒரே ஆளு போலீஸ்தான் என்பது போன்ற சமூக கருத்துக்களும் இப்படத்தில் உள்ளது.

பாம்பு, பாம், பை இதுபோன்ற விஷயங்களை எத்தனையோ படங்களில் பார்த்துவிட்டோம். அதையாவது மாற்றியிருக்கலாம் டைரக்டர் சார்.

இந்த மாதிரியான படம்ன்னா நான் ஜாலியா பார்ப்பேன் என்பவரா நீங்களா? அப்படின்னா இந்த பஜனைக்கு டிக்கெட்ட போடுங்க.

ஹரஹர மகாதேவகி… பஜனை பரவசம்

More Articles
Follows