தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் உள்ளிட்ட தனுஷின் மூன்று படங்களை தொடர்ந்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த தட்டத்து மறையத்து என்று படத்தை ரீமேக் செய்து தமிழுக்கு கொண்டு வந்துள்ளார் மித்ரன் ஜவஹர்.
நடிகர்கள் : வால்டர் ப்லிப்ஸ், இஷா தல்வார், மனோஜ் கே ஜெயன், சிங்கமுத்து, ஷான், நாசர், தலைவாசல் விஜய், அர்ஜீனன், வித்யூலேகா ராமன், வனிதா மற்றும் பலர்.
இசை : ஜிவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு : விஷ்னு ஷர்மா
படத்தொகுப்பு : தியாகராஜன்
இயக்கம் : மித்ரன் ஜவஹர்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : சங்கிலி முருகன்
கதைக்களம்…
ஒரு இந்து பையன் இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறார். ஒரே மதம் என்றாலே பல பிரச்சினைகள் இருக்கும்.
இது இரண்டு மதங்கள் என்பதால் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது. அதை அவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.
கதாபாத்திரங்கள்…
மலையாளத்தில் நிவின் பாலி இஷா தல்வார் நடித்திருந்தனர். ஆனால் இங்கு நாயகன் மாற்றப்பட்டு இருக்கிறார்.
அறிமுக நாயகன் ல்டர் ப்லிப்ஸ் நடனங்களில் அசத்தியிருக்கிறார். நடிக்கவும் சில சமயம் முயற்சித்திருக்கிறார்.
காதல் காட்சிகளில் அழகாய் வர்ணித்து உருகுவது யதார்த்தம் என்றாலும், கொஞ்சம் ஓவராய் வழிவதாய் தெரிகிறது.
இஷா தல்வாரின் துப்பட்டா பற்றியும், காதலியை பற்றியும் ஜெயிலில் பேசிக் கொண்டே இருப்பது சலிப்பை தட்டுகிறது.
முஸ்லீம் பெண்ணாக இஷா தல்வார். கண்களால் கவிதை பேசியிருக்கிறார். வீட்டிற்கு தெரியாமல் காதலை மறைப்பதும், பின்னர் வெளிப்படுத்தும் காட்சியும் நச்.
போலீஸின் கம்பீரம் எல்லாம் காமெடியாகி இருக்கிறது. மனோஜ் கே ஜெயன், சிங்கமுத்து இருவரும் கதை கேட்டுக் கொண்டே இருப்பது எல்லாம் ரொம்ப ஓவரோ ஓவர்.
அர்ஜீனன் மற்றும் வித்யூலேகா ராமன் வழக்கம்போல காதலுக்கு உதவுகிறார்கள்.
நாசர், தலைவாசல் விஜய், வனிதா என பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் அவர்களுக்கான காட்சிகள் இல்லை.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் விஷ்னு ஷர்மா… இவர்கள் இல்லை என்றால் படமே இல்லை என்கிற அளவுக்கு படத்தை தங்கள் பணிகளால் தாங்கி நிற்கிறார்கள்.
சில பாடல்கள் கேட்ட டியூன்களாக இருந்தாலும், மெலோடியில் ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் வீடு முதல் கல்லூரி இடங்கள் வரை ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
படத்தின் ப்ளஸ்…
- ஒளிப்பதிவு மற்றும் மெலோடி பாடல்கள்
- கேரக்டர்கள் தேர்வு
படத்தின் மைனஸ்…
- காதல் கதை தெரிந்த ஒன்றுதான். அதில் எந்த ட்விஸ்டும் இல்லை.
- முதல் பாதி முழுவதும் பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு முன் மித்ரன் ஜவஹர் எடுத்த படங்களில் இருந்த செண்டிமெண்ட், காமெடி இதில் மிஸ்ஸிங்.
முஸ்லிம் வீடு, கல்யாண பாடல், கேரளாவையே ஞாபகப்படுத்துகின்றன.
காவல் நிலையத்தை காதல் நிலையமாக மாற்றி, போலீஸ் அதிகாரிகள் அட்வைஸ் செய்ய வைத்திருப்பதெல்லாம் டூ மச்.
பெண்களின் பர்தா, உடலை மூடுவதற்குதான். மனசை மூடுவதற்கு அல்ல என்று முடித்திருப்பதால் இயக்குனர் சபாஷ் பெறுகிறார்.
மீண்டும் ஒரு காதல் கதை… காதலர்களை கவரும்