மீன் குழம்பும் மண் பானையும் விமர்சனம்

மீன் குழம்பும் மண் பானையும் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஸ்னா சவேரி, எம்எஸ் பாஸ்கர், பூஜா குமார், ஊர்வசி, சந்தான பாரதி, தளபதி திணேஷ், தலைவாசல் விஜய், சிறப்பு தோற்றத்தில் கமல் மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : லட்சுமண்
படத்தொகுப்பு : ரிச்சர்ட் கெவின்
இயக்கம் : அமுதேஷ்வர்
பி.ஆர்.ஓ.: டைமண்ட் பாபு
தயாரிப்பாளர் : ஈஷான் புரொடக்ஷன்ஸ் துஷ்யந்த், அபிராமி துஷ்யந்த்

கதைக்களம்…

தன் பிள்ளை காளிதாஸ் மீது அதிக பாசம் வைத்துள்ளார் பிரபு.

ஆனால் அவரது அன்பை புரிந்துக் கொள்ளாத காளிதாஸ் அவரிடம் பாசம் காட்டி நடிக்காதே என்று கூறிவிடுகிறார்.
இதனால் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

இதனையறிந்த இவரது உறவினர் ஒய்ஜி மகேந்திரன், அவர்கள் இருவரையும் ஞானி கமல்ஹாசனை சந்திக்க சொல்கிறார்.

அதன்படி இருவரும் சந்திக்க, இருவரின் ஆன்மாக்களை எக்ஸ்சேஞ்ச் செய்து விடுகிறார் கமல்.

மற்றவரின் இடத்தை அவர் இடத்தில் பார்க்க இந்த ஏற்பாடாம்.

அதன்பின் அவர்கள் வாழ்வில் நடக்கும் கதைதான் இப்படம்.

Meen Kuzhambum Mann Paanaiyum still 1

கதாபாத்திரங்கள்…

இது பிரபுவின் 200வது படம். சில நடிகர்கள் இத்தனை படங்களை தொடும்முன் மார்கெட்டை இழந்துவிடுவார்கள்.
ஆனால் இன்றும் தனது மார்கெட்டில் ஸ்டெடியாக இருக்கிறார் பிரபு.

அதுபோல் படத்திலும் இவருக்கு ஸ்டாராங்கான வேடம்தான்.

சாந்தமான அப்பாவாக, இளமை துள்ளல் மகனாக என இருவேடங்களிலும் ஜொலிக்கிறார் பிரபு.

ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழுக்கு அறிமுகம். முதல் படத்திலேயே நன்றாக நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்.
அப்பாவிடம் எரிச்சல் காட்டும் இன்றைய இளைஞர்களின் கண்ணாடியாக பிரதிபலிக்கிறார்.

அரைகுறை ஆடைகளுடன் அசத்துகிறார் ஆஷ்னா சவேரி. ஆனால் படம் முழுக்க ஹீரோ மீது கோபமாகவே வருகிறார். இதனால் இவரது அழகு முகத்தில் ஸ்மைல் மிஸ்ஸிங்.

ஆக்ஷன் காட்சியில் ஆரம்பித்து, பின்னர் அழகு ஆண்ட்டியாக வருகிறார் பூஜாகுமார்.

மலேசியா டானாக வரும் எம்எஸ் பாஸ்கர் வரும் காட்சிகளில் நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது.

இவர்களுடன் ஊர்வசி, சந்தான பாரதி, தலைவாசல் விஜய், ஒய்ஜி மகேந்திரன் ஆகியோரும் உண்டு.

கௌரவ தோற்றத்தில் கமல். பர்ஸ்ட் டைம் விவேகானந்தர் கெட்டப்பில் வரும் இவர் பின்னர் உலகநாயகனாக வருகிறார்.

Meen Kuzhambum Mann Paanaiyum hotel

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமானின் இசையில் மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு, நிலா அதே நிலா பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

மலேசியா நகர அழகை ஒளிப்பதிவாளர் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் அமுதேஷ்வருக்கு இது முதல் படம் என்றாலும் சிறந்த நடிகர்களை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.

ஆனால் கதையில் கொஞ்சம் புதுமை காட்டியிருக்கலாம். பிரபுவின் சின்ன வாத்தியார் படத்தை பார்த்த ஞாபகம் வருகிறது.

பிரபு மகனாக மாறும்போது மாடர்னாக வருகிறார். ஆனால் காளிதாஸ் அப்பாவாக மாறும்போது, வேஷ்டி அணியவில்லையே. ஏன் சார்?

பிரபுவும் காளிதாசும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பாத்ரூம் தண்ணீர் மட்டுமே போதுமா என்ன? ஒருவேளை ஒரே பாத்ரூம் இருந்தால் என்ன செய்வது?

மொத்தத்தில் மீன் குழம்பும் மண் பானையும்.. ரசிக்க… ருசிக்க… சிரிக்க…

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிம்பு, மஞ்சிமா மோகன், பாபா சேகல், சதீஷ் கிருஷ்ணன் (டான்ஸர்), டேனியல் பாலாஜி மற்றும் பலர்.
இசை : ஏஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு : டான் மாகர்துர்
படத்தொகுப்பு : ஆண்டனி கான்ஷேல்வஸ்.
இயக்கம் : கௌதம் வாசுதேவ் மேனன்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

சிம்புவின் தங்கையின் தோழி மஞ்சிமா மோகன். அடிக்கடி சிம்புவின் வீட்டிற்கு வருவதும் போவதுமாக மஞ்சிமா இருப்பதால் காதலும் வளர்கிறது.

சிம்புவுக்கு பைக் மீது கொள்ளை பிரியம்.

ஒரு சூழ்நிலையில் இருவரும் நெடுந்தூரம் பைக்கில் செல்கின்றனர்.

ரொமான்டிக்காக செல்லும் இந்த பயணம் ஒரு கட்டத்தில் ஆக்ஷனுக்கு மாறுகிறது.

ஒரு விபத்தில் இவர்கள் சிக்கிக் கொள்ள, மஞ்சிமா தொலைந்து விடுகிறார்.

அதன் பின்னர் சிம்பு என்ன செய்தார்? மஞ்சிமா எங்கே சென்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

Cwzjvp7UsAQxLce

கதாபாத்திரங்கள்…

சிம்பு யதார்த்த நடிப்பால் கவர்கிறார். வீட்டில் இருந்துக்கொண்டு பெற்றோர், மற்றும் சிஸ்டருக்கு தெரியாமல் மஞ்சிமாவை சைட் அடிக்கும் போது இளநெஞ்சங்களில் கிக் ஏற்றுகிறார்.

பைக்கை லவ் செய்யும் காட்சிகளில் பைக் பிரியர்களையும் பிக்அப் செய்கிறார்.

ரொமான்ஸ், ஆக்ஷன் இரண்டிலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

தமிழில் முதல் படமாக இருந்தாலும், அதற்குமுன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார். இனி மஞ்சிமாவை நிச்சயம் ரசிகர்கள் கொஞ்சத்தான் போகிறார்கள்.

மாடர்னாகவும் ஹோம்லியாக வந்து கிறங்கடிக்கிறார்.

கௌதம் படத்தில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதே பார்முலா இதிலும் குறையில்லை.

படம் முழுக்க இவர்களை சுற்றி நகர்கிறது. இதனால் இளவட்டங்களுக்கு இப்படம் விருந்தாக அமையும்.

போலீசாக வரும் பாபா சேகல் கேரக்டரில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம். சிம்புவின் நண்பராக வரும் சதீஷ் மற்றும் குழுவினர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் பொருத்தமான தேர்வு.

Cwzjvp5UsAArTBf

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கௌதம் படங்களில் எப்பவும் ஸ்டைலிஷ் பீல் இருக்கும். எந்தவொரு ப்ரேமிலும் ஒளிப்பதிவாளர் சபாஷ் போட வைக்கிறார்.

ஷோக்காளி பாடலை எப்படிதான் பாடினார்களோ தெரியவில்லை. அப்படி ஒரு ஸ்பீட். விக்னேஷ் வரிகள் ரசிகர்களை கவரும்.

ஏஆர் ரஹ்மானின் இசையில் தள்ளிப்போகாதே பாடல்… நிச்சயம் காதலர்களின் காலர் டியூனாக என்றும் இருக்கும். (ஆனால் இப்பாடலின் டியூன் புரியாமல் பாட்டு எழுதியாக கவிஞர் தாமரை குறிப்பிட்டு இருந்தார்.)

கிளாசிக் டைரக்டர் என பெயர் எடுத்த கௌதம், இதில் ஆக்ஷனில் இறங்கியுள்ளார். அதையும் அவர் ஸ்டைலில் கையாண்டு இருப்பது சபாஷ்.

இவரது படங்களில் ஒரு கேரக்டர் தன் பெயரை சொல்லிவிட்டு கதையை ஆரம்பிக்கும். ஆனால் இதில் இறுதியில், சிம்பு அவர் பெயரை சொல்லும்போது ரசிகர்களிடையே அப்படி ஒரு அப்ளாஸ்.

ஆக்ஷன் இருந்தாலும், வழக்கம்போல ரொமான்டிக் காட்சிகளிலேயே அதிகம் ஸ்கோர் செய்கிறார் மனிதர்.

அச்சம் என்பது மடமையடா… அச்சமில்லாமல் தாராளமாக பார்க்கலாம்.

சிங்கம் 3 டீசர் விமர்சனம்… எம்ஜிஆர் ஸ்டைலில் கர்ஜிக்கும் சூர்யா

சிங்கம் 3 டீசர் விமர்சனம்… எம்ஜிஆர் ஸ்டைலில் கர்ஜிக்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்து, ஹரி இயக்கியுள்ள படம் எஸ்-3.

இது சிங்கம் படத்தின் 3வது பாகமாக உருவாகியுள்ளது.

இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர், விவேக், ரோபா சங்கர், சூரி, கிரிஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியானது.

இந்த டீசர் 1 நிமிடம் 24 நொடிகள் கொண்டது.

இது முழுக்க முழுக்க ஆக்ஷன் டீசராக அனல் பறக்க உருவாகியுள்ளது.

டீசர் தொடங்கும் போதே.. டிரெயின் ஓடுகிறது. பின்னணியில் வேட்டை பாடல் ஒலிக்கிறது.

அதனையடுத்து, ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என் எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை படப்பாடலை பாடுகிறார் சூர்யா.

பாடுகிறார் என்பதை விட கர்ஜிக்கிறார் என்றே சொல்லலாம்.

இதனிடையே பல ஆக்ஷன் காட்சிகள் வந்து செல்கிறது.

அதில் பல கார், கண்டெய்னர் லாரிகள், ஜீப் உள்ளிட்ட பல வாகனங்கள் மற்றும் விமானங்கள் வரை வந்து செல்கிறது.

சிங்கம் சிங்கம் துரை சிங்கம்… சீறும் எங்கும்… என்ற பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது.

அப்போது அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி மற்றும் வில்லன் தாகூர் அனுப் சிங் காட்சிகளும் இடம்பெறுகிறது.

பெரும்பாலான காட்சிகள் போலீஸ் ஸ்டேஷன், ரெயில்வே ஸ்டேஷனில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையம், பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சூப்பர் பன்ச் பேசி பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார்.

நான் பாத்தது எல்லாம் திங்கிற ஓநாய் இல்ல… பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்.

இப்போ நான் கொலை பசியில இருக்கேன். எது கிடைச்சாலும் வேட்டையாடனுங்கிற வெறியில இருக்கேன்.

எதிர்ல எவன் வந்தாலும் ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பேன். என்று பேசி முடிப்பதற்குள் கண் முன்னே பல முகபாவங்களை காட்டி ரசிகர்களை மிரள வைத்து இருக்கிறார் சூர்யா.

இது நிச்சயம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்ற உணர்வை தரலாம்.

காஷ்மோரா விமர்சனம்

காஷ்மோரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், சரத் லோகிஸ்தவா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு : விஜே சாபு ஜோசப்.
இயக்கம் : கோகுல்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் – பிரபு மற்றும் பிரகாஷ்பாபு

கதைக்களம்…

காஷ்மோரா மற்றும் ராஜ்நாயக் என இரண்டு வேடம் ஏற்றுள்ளார் கார்த்தி.

பில்லி சூன்யம் மற்றும் பேய்களை ஓட்டுபவர் என ஊரையே ஏமாற்றுபவர் காஷ்மோரா கார்த்தி. இவரது அப்பா விவேக், தங்கை மதுமிதா என ஒட்டு மொத்த குடும்பத்திற்கே இதான் வேலை.

மினிஸ்டர் வீட்டிலும் இவரது ஏமாற்று வேலையை காண்பித்து நம்ப வைத்துவிடுகிறார்.

ஒரு சூழ்நிலையில் ஐடி ரெய்டில் இருந்து தப்பிப்பதற்காக கார்த்தி வீட்டில் பணத்தை வைக்கிறார் மினிஸ்டர்.

அத்துடன் எஸ்கேப் ஆகிறார் விவேக்.

இதனிடையில் மிகமிக பழமையான பங்களாவுக்கு பேய் ஓட்ட செல்கிறார் கார்த்தி.

அங்கு நிஜமான பேய்களுடன் கார்த்தி மாட்டிக் கொள்ள, கூடவே ஸ்ரீதிவ்யா மற்றும் விவேக் குடும்பத்தினரை அங்கே வரவழைக்கிறது வில்லன் பேய்.

இவர்களை அங்கே வரவழைக்க என்ன காரணம்? அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? என விடை சொல்கிறார் இந்த காஷ்மோரா.

Kashmora-movie-first-Look-poster-karthi

கதாபாத்திரங்கள்…

காஷ்மோரா, ராஜ்நாயக் என இரண்டிலும் கார்த்தி செஞ்சுரி அடிக்கிறார்.

ஒட்டுமொத்த படத்தையும் இரு கேரக்டரில் தாங்கி நிற்கிறார்.

பேய் பங்களாவில் மாட்டிக் கொண்டபின், அட.. உங்க வித்தையெல்லாம் என்கிட்ட ஏன் காட்டுறீங்க. கஸ்ட்மர் கிட்ட காட்டுங்க என்று கூறி கெத்து காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

மொட்டைத் தலையுடனும் தலை இல்லாமல் முண்டமாக வந்து மிரட்டுவதும் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

நயன்தாரா எப்போ வருவார் என ஏங்க வைக்கிறார். வந்தபின்னர் ஏங்க வைத்து செல்கிறார்.

ஸ்ரீ திவ்யாவுக்கு மாடர்ன் டைப் கேரக்டர். ஆனால் காட்சிகள் வலுவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு விவேக். வெல்கம் பேக். காமெடி ரசிக்க வைக்கிறது.

இவர்களுடன் சரத் லோகிஸ்தவா, ஜாங்கிரி மதுமிதா ஆகியோரும் உண்டு.

kashmora-new-stills-1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஓயா ஓயா பாடல் மெல்லிசையில் சரித்திரக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் சந்தோஷ் நாராயணன்.

பின்னணி இசை சில இடங்களில் பேச வைக்கிறது.

கலை இயக்குனருக்கு நிறைய நேரம் கை குலுக்கலாம்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் இரண்டு விதமான காட்சி அமைப்புகளும் அருமை.

kaashmora nayan

படத்தின் பிளஸ் :

  • கார்த்தி மற்றும் நயன்தாராவின் நடிப்பு
  • சாமியார்களின் பித்தலாட்டம்
  • விவேக் காமெடி மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்
  • ராஜ்நாயக் மற்றும் ரத்னமஹாதேவி காட்சிகள்

படத்தின் மைனஸ் :

  • பெரும்பாலான படங்களில் படத்தின் நீளம் பெரும் குறையாக இருக்கிறது. இதிலும் அதேதான்.
  • மொட்டைத் தலையுடன் இறக்கும் ராஜ்நாயக் பழிவாங்க வரும்போது கொஞ்சம் முடியுடன் வருவது எப்படி? பாஸ் (ஓ. இதான் 3வது கெட்டப்?)

காஷ்மோராகொஞ்சம் கலகல… கொஞ்சம் லகலக

கொடி விமர்சனம்

கொடி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்ஏ சந்திரசேகரன், காளிவெங்கட், மாரிமுத்து, சிங்கமுத்து, நமோ நாராயணன் மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ஜி வெங்கடேஷ்
படத்தொகுப்பு : பிரகாஷ்.
இயக்கம் : துரை செந்தில்குமார்
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே. அஹ்மது
தயாரிப்பாளர் : வெற்றிமாறன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்

கதைக்களம்…

வாய்பேச முடியாத கருணாஸ் அரசியலில் சாதிக்க விரும்புகிறார்.

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்க, முதல் குழந்தைக்கு கொடி என பெயரிடுகிறார் இவரது கட்சி தலைவர் எஸ்ஏசி.

ஒரு கிராமத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கருணாஸ் தீக்குளித்து இறக்கிறார்.

அதன்பின் தந்தையின் அரசியல் பணியை தொடர்கிறார் கொடி. இவருக்கு ஜோடி ஆளும்கட்சியின் மாவட்ட செயலாளர் த்ரிஷா.

இளைய தனுஷ் காலேஜ் புரபொசராக வருகிறார். இவரது ஜோடி முட்டை விற்கும் அனுபமா.

சில ஆண்டுகளுக்கு மீண்டும் அந்த விஷவாயு பேக்டரி பிரச்சினை எழுகிறது.

இதனால் கட்சித் தலைமைக்கும் தனுஷ் இடையே பிரச்சினை எழுகிறது.

இதனை வைத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆடும் ஆட்டங்களே இந்த கொடி.

kodi 1

கதாபாத்திரங்கள்…

கொடி, அன்பு என இரண்டு கேரக்டரிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் தனுஷ்.

அரசியல்வாதியை மெச்சூர்ட்டியாகவும் இளையவர் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவராகவும் காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.

ஒரு நல்லவர் அரசியல்வாதியானால் அவர் படும் கஷ்டங்களை நடிப்பில் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனுஷின் இரண்டு கேரக்டர்களையும் த்ரிஷா ஒரேஅடியாக தள்ளி முன்னிலை வகிக்கிறார் த்ரிஷா. படத்தின் வில்லியே இவர்தான்.

அவருடைய சினிமா கேரியரில் இப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்த்து இல்லை எனலாம்.

ஒரு பெண்ணாக இருந்து, பாலிடிக்ஸில் சைலண்டாக சாதித்து வருவது அப்ளாஸை அள்ளுகிறது.
செகண்ட் ஹீரோயின் அனுபமா. அளவாக வந்து அழகாக கவர்கிறார்.

இவர்களுடன் எஸ்ஏ. சந்திரசேகரன், விஜயகுமார், சரண்யா, காளிவெங்கட், மாரிமுத்து உள்ளிட்டோர் சிறப்பான தேர்வு.

kodi fight

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷன் நாரயணனின் இசையில் சுழலி, வேட்டு போடு பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவில், அரசியல் காட்சிகள் மாஸாக உள்ளது.

படத்தொகுப்பாளர் பிரகாஷ் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம். முதல் பாதியில் வேகம் குறைவு.

kodi movie posters

படத்தின் ப்ளஸ்

  • த்ரிஷாவின் நெகட்டிவ் + தனுஷின் அரசியல் கேரக்டர்
  • ஒரு காரியத்தை தனக்கு சாதகமாகவும், பாதகமாகவும் செய்பவன் அரசியல்வாதி என்பதை அப்பட்டமாக கூறியிருக்கிறார்
  • தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்படும் கிராம மக்கள்

படத்தின் மைனஸ்…

  • அரசியல் களம் என்றாலும் உடனுக்குடன் எம்எல்ஏ, எம்பி ஆவது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.
  • ஆமை வேகத்தில் நகரும் சில காட்சிகள்

மொத்தத்தில் கொடி… அரசியல் ஆட்டம்

பைரவா டீசர் விமர்சனம்

பைரவா டீசர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து மீண்டும் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பைரவா.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், சிஜா ரோஸ், பாப்ரி கோஸ், தம்பி ராமையா, டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தி மிகப்பிரம்மாண்டமாக பிரபல நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நாளை அக். 28ந் தேதி தொடங்குபோது இப்படத்தின் டீசர் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகிவிட்டது. இந்த டீசர் எப்படி என்பது பற்றிய ஒரு பார்வை பார்ப்போமா?

கபாலி பட டீசரில் ரஜினியை காட்டுவதற்கு முன்பு யாருடா அவன்? என கிஷோர் கேட்பாரே அதேபோல இதில் ஜெகபதி பாபு கேட்கிறார்.

அதன் பின்னர்… தெரிஞ்ச எதிரியை விட, தெரியாத எதிரிக்குத்தான் அல்லு… அதிகமாக இருக்கனும் என்ற பன்ச் டயலாக் பேசுகிறார் இளைய தளபதி.

bairavaa teaser vijay

பொதுவாக விஜய் பன்ச் வசனங்களில் பாசிட்டிவ்வான வார்த்தைகளே இருக்கும்.

இன்னைக்கு நிறைய பேருகிட்ட இல்லாத ஒரு கெட்ட பழக்கம் ஒன்னு என்கிட்ட இருக்குது என்கிறார். அது என்ன என்பது படம் வந்தபிறகுதான் தெரியும்.

இதனிடையில்…

யார்ரா யார்ரா இவன் ஊர கேட்ட தெரியும் வாடா
வந்து முன்ன நின்னு பாரு தெரியும்
வர்லாம் வர்லாம் வா வர்லாம் வா பைரவா என்ற பாடல் வரிகளிலும் குரலிலும் அருண்ராஜா காமராஜ் ரசிகர்கள் கவர்கிறார்.

பின்னணி இசையை பேசும்படி கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

மேலும் கீர்த்தி சுரேஷ் அழகான முகபாவனைகளுடன் ஹோம்லியாக வந்து செல்கிறார்.

இடையில் ஒரு காட்சியில் சதீஷை ஆடவிட்டு பார்க்கிறார் விஜய்.

bairavaa keerthy

தன் விரல்களிடையே ஒரு நாணயத்தை சுற்றி உள்ளே விட்டு விட்டு எடுக்கிறார் விஜய். அப்போது அவருக்கு பின்னால் வில்லன் கும்பல் சுற்றி வளைக்கிறது. இது படத்தில் செம பைட் சீனாக இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடையில் மைம் கோபி.. நீ என்ன பெரிய வசூல் மன்னனா? என்று கேட்கிறார்.?

தெரியல. அப்படிதான் பேசிறாங்க என்கிறார் விஜய். இது படத்திற்கா? அல்லது படத்தின் வசூலுக்காக எழுதப்பட்டதா? என்று தெரியவில்லை.

இறுதியாக எப்ப வரும்ன்னு சொல்லனுமா? என்று கேட்பதுடன் இந்த டீசர் முடிவடைகிறது.

ஆக மொத்தம் விஜய்யின் வழக்கமான பார்முலாவில் பைரவா வந்து இருக்கிறது.

More Articles
Follows