அண்ணாதுரை விமர்சனம்

அண்ணாதுரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்ஆண்டனி, டயானா சம்பிகா, ராதாரவி, காளிவெங்கட், நளினிகாந்த், செந்தில்குமரன், மஹிமா மற்றும் பலர்.
இயக்கம் : சீனிவாசன்
இசை : விஜய்ஆண்டனி
ஒளிப்பதிவு: தில்ராஜ்
எடிட்டிங்: விஜய்ஆண்டனி
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்த்ரா
தயாரிப்பு: ராதிகா சரத்குமார் மற்றும் விஜய்ஆண்டனி

annadurai movie set

கதைக்களம்…

அண்ணாதுரை மற்றும் தம்பிதுரை இருவரும் இரட்டை குழந்தைகள். அண்ணாதுரை அப்பாவுடன் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

தம்பி தம்பிதுரை ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

ஒரு நாள் தற்செயலாக போதை பழக்கத்தால் ஒரு கொலைக்கு காரணமாகி விடுகிறார் அண்ணாதுரை.

அதன்பின் அந்த குடும்பமே பல பிரச்சினைகளை சந்திக்கிறது. தம்பிக்கு வேலை போகிறது. ரவுடி ஒருவன் மிரட்டலால் ஜவுளிக் கடையும் போகிறது.

இதனால் தம்பியின் வாழ்க்கையும் பறிபோகிறது. அதன்பின் அண்ணாதுரை என்ன செய்தார்? குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

annadurai stills

கேரக்டர்கள்…

படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர், நடிகர் என நான்கு தூண்களாய் படத்தை தாங்கி நிற்கிறார் விஜய்ஆண்டனி.

முதலில் நடிப்பை பற்றி சொல்லிவிடுகிறோம். ஆக்சன் என்றால் விஜய் ஆண்டனிக்கு அல்வா சாப்பிடுவது போல. வெளுத்து கட்டியிருக்கிறார்.

ஆனால் இருவேடத்தை ஏற்றிருப்பதால் இன்னும் அதிக வித்தியாசம் காட்டியிருக்கலாம். தாடியை தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை.

ஹீரோயின் சாம்பிகா நல்லா Chubbya வருகிறார். டயானா சாம்பிகா உடன் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக உள்ளது. சாம்பிகாவும் காதல் மொழியை கண்களால் பேசி வசீகரிக்கிறார்.

மற்ற இரண்டு நாயகிகள் இருந்தாலும் அது படத்தின் நீளத்தை அதிகரிக்கிறது.

காளிவெங்கட் இதில் குணச்சித்திர நடிகராக ஜொலிக்கிறார். ஆனால் இவர் சைட் அடிக்கும் பெண் நண்பனின் காதலி என காட்சி நீளுகிறது.

நாயகியின் அப்பாவாக வரும் செந்தில்குமரன் சினிமாவுக்கு கிடைத்த புதிய குணசித்திர நடிகர்.

நாயகனின் அப்பா நளினி காந்த், அம்மா, அரசியல் தலைவர் ராதாரவி, ஜவுளிக்கடையை அபகரிக்கும் வில்லன் சேரன்ராஜ், மொட்டை வில்லன் ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர்.
annadurai stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்..

வழக்கம்போல இசையமைப்பாளராக ஸ்கோர் செய்து விடுகிறார் விஜய் ஆண்டனி.

அண்ணாதுரையின் புகழ் பாடும் ‘தங்கமா வைரமா…’, பாடலும் ‘இஎம்ஐய போல வந்து என்ன செய்யுற..’ பாடல்களும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. விஷுவல் எஃபெக்ட்ஸும் நன்றாக உள்ளது.

நிறைவான ஒளிப்பதிவை கொடுத்து படத்துடன் ஒன்றாக வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் தில் ராஜ். ஆனால் எடிட்டர் விஜய் ஆண்டனி இன்னும் காட்சிகளை கட் செய்திருக்கலாம். இரண்டாம் பாதி, அந்த பெண் ஈஸ்வரி கேரக்டர் எதற்கு எனத் தெரியவில்லை?.

annadurai team live

இயக்கம் பற்றிய அலசல்…

இரட்டையர்கள், ஆள் மாறாட்டம் என்ற கலவையை கொஞ்சம் புதுப்பித்து கொடுத்திருக்கிறார்.

ஆனால் சில காட்சிகள் புதிராக உள்ளது. ஒரு காட்சியில் அண்ணன் கேரக்டர் தம்பியைப் பற்றி சொல்லும்போது ’அவன் சின்னப் பையண்டா. இன்னும் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலை’ என்கிறார். ட்வின்ஸ் பிரதர்ஸ்தானே அதற்கு ஏன் இந்த டயலாக்?

அண்ணாதுரை..  ரசிக்கலாம்

வீரையன் விமர்சனம்

வீரையன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : இனிகோ பிரபாகர், ஷைனி, ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா மற்றும் பலர்.
சை: S.N.அருணகிரி,

ஒளிப்பதிவு: P.V.முருகேஷா

படத்தொகுப்பு: ராஜா முகமது,

பாடல்கள்: யுகபாரதி,

நடனம்: சரவண ராஜா,

சண்டைக்காட்சி: ராக் பிரபு

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: S. பரீத்
பி.ஆர்.ஓ. : குமரேசன்

கதைக்களம்…

தன் மகனை நன்றாக படிக்க வைத்து இந்த ஜில்லாவிலே முதல் மாணவனாக வர வைப்பேன் என தன் தம்பிகளிடம் சவால் விடுகிறார் ஆடுகளம் நரேன்.
இது ஒருபுறமிருக்க, கவுன்சிலர் வேல ராமமூர்த்தியின் மகளை அவர் வீட்டில் டிரைவராக வேலைப் பார்க்கும் ஒருவன் காதலிக்கிறார்.
இவர்கள் இல்லாமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வருகிறார் இனிகோ பிரபாகர் மற்றும் அவரது 2 நண்பர்கள் (ஒருவர் திருநங்கை).
இனிகோவுக்கும் அந்த டிரைவருக்கும் சில பிரச்சினைகள் எழ, ஆடுகளம் நரேனின் மகன் அதில் சிக்கிக் கொள்கிறார்.
இதனால் அவனது படிப்பு பிரச்சினை எழுகிறது.
எனவே இனிகோ அவனது படிப்பை தொடர வைக்க நினைக்கிறார். அதன் பின் நடந்தது என்ன? நரேனின் ஆசையை அவரது மகன் நிறைவேற்றினாரா? அந்த காதல் ஜோடி என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

DPdhvwcVwAABLqw

கேரக்டர்கள்…

வேலையில்லாமல் தனது நண்பர்களுடன் சேட்டை செய்யும் இளைஞனாக இனிகோ பிரபாகர் வருகிறார். கிராமத்து இளைஞனாக பளிச்சிடுகிறார்.
ஆனால் தொடர்ந்து பல படங்களில் இதே கேரக்டர்களில் வருவது சலிப்பை தட்டுகிறது. இனிகோ ரூட்டை மாத்துனா ரசிகர்களுக்கு இனிக்கும்.
நாயகியாக நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார் ஷைனி. ஆனால் குடிகாரன் சொன்ன பேச்சை கேட்டு காதல் வருவது எல்லாம் ரொம்ப ஓவர்.
வேலராமமூர்த்தி மகளாக வருபவர் அழகாக இருக்கிறார். ஆனால் பாதியில் அவரை சாகடித்து ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்.
ஆடுகளம் நரேன் தன் முதிர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். பிள்ளைகளை படிக்க வைக்க ஏழை அப்பாக்கள் படும் பாட்டை அருமையாக கொடுத்துள்ளார்.
இவர்களுடன் வேல ராமமூர்த்தி, தென்னவன் துரைசாமி, சஞ்சரி விஜய் உள்ளிட்டவர்களும், நரேனின் மகனாக வரும் அந்த சிறுவன், ‘கயல்’ வின்சென்ட், திருநங்கை ப்ரீத்திகா ஆகியோரும் நல்ல தேர்வு.
DOrFvmrUEAA5_lt

தொழில்நுட்ப கலைஞர்கள்…
எஸ்.என்.அருணகிரியின் பின்னணி இசை ஓகே. பாடல்கள் படத்திற்கு பலவீனம்.
பி.வி.முருகேசின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
பல கோணங்களில் கதை சொன்ன இயக்குனர், எதையும் முழுமையாக சொல்லாமல் விட்டுவிட்டார். மேலும் படத்தின் நீளத்தை குறைத்து ட்விஸ்ட் வைத்து சொல்லியிருக்கலாம்.
படத்தின் ஆரம்பத்தில் கோழி பிடிக்கும் காட்சி, அதனை அடுத்து வரும் பாடல் இது எல்லாம் தேவையா? என கேட்க தோன்றுகிறது.

வீரையன்… வீராப்பு குறைவு

இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கௌதம் கார்த்திக், சோனாரிக்கா, அர்ஷிதா, சச்சின் கட்கர், சுதன்சு பாண்டே, எம்எஸ். பாஸ்கர் மற்றும் பலர்.
இயக்கம் : கலாபிரபு
இசை : கேபி
ஒளிப்பதிவு: ராசாமதி
எடிட்டிங்: விடி. விஜயன் கணேஷ்பாபு
பி.ஆர்.ஓ. : டைமண்ட்பாபு
தயாரிப்பு: கலைப்புலி எஸ் தாணு

indrajith-gautham-karthik-poster

கதைக்களம்…

தமிழ் சினிமாவில் அட்வென்ஜர்ஸ் கதைகளை காண்பது அரிது.

ஹாலிவுட் சினிமாவில் புதையலை தேடும் இண்டியானா ஜோன்ஸ் கதைகள் உள்ளன. அந்த வகையான கதைதான் இது.

சில ஆயிரம் வருடங்களுக்கு முன் சூரியனில் இருந்து விழும் ஒரு கல் பூமியில் விழுந்து வெடித்து சிதறுகிறது.

அந்த அரிய வகை கல்லால் வறண்ட நிலம் என்றால் கூட செழிப்பாகிறது.

மேலும் அந்த கல்லுக்கு உரிய அற்புத சக்தி என்னவென்றால், அந்த கல்லை பயன்படுத்தினால் நோய் நோடியில்லாமல் 400 வருடங்கள் கூட மனிதனால் வாழமுடியுமாம்.

சித்தர்கள் அந்த கல்லை எங்கோ புதைத்து வைக்க, நாளடைவில் அந்த குறிப்பு மறைந்து போகிறது.

அந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் கௌதம், அவரது ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அந்த கல்லைத் தேடி அலைக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார்.

இறுதியில் அந்த அற்புத கல்லை யார் அடைந்தனர்? அந்த கல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸ் விடை சொல்லும்.

indrajith
கேரக்டர்கள்…

சாக்லேட் பாய் போன்று இருக்கும் கவுதம் இதில் ஆக்சன் செய்துள்ளார். ஆனாலும் அவரது முக பாவனைகளும் லிப்ஸிட்டிக் போட்ட உதடுகளும் ஆக்சனை பிரதிபலிக்கவில்லை.

இவருக்கு சோனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி என இரண்டு ஜோடிகள். இருந்தும் படத்தில் ரொமான்ஸ் இல்லை.

சோனாரிகா படத்தின் ஆரம்ப காட்சிகளிலும், அஷ்ரிதா இரண்டாம் பாதியிலும் வருகின்றனர்.

இவர்களுடன் சச்சின் கட்கர், சுதன்சு பாண்டே ஆகியோரும் உண்டு. ஆனால் இவர்களுக்கான கேரக்டர்களில் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மலையும் அருவிகளும் சார்ந்த காட்சிகளை பார்த்தால், வாழ்வில் ஒருமுறையாவது அங்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி.

கே.பி. இசையில் பாடல்களை விட பின்னணி இசை பேசப்படும்.
1511503306_gautham-karthiks-indrajith

இயக்கம் பற்றிய அலசல்…

ஆக்சன் அட்வென்சர் கதைகள் இளைஞர்களுக்கு பிடிக்கும். ஆனால் இதில் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் எம்ஸ் பாஸ்கர், நாய்குட்டி என காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் கலாபிரபு.

புதையல் தேடும் கதையை பேன்டஸி கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

சென்னையில் இருந்து வடநாட்டுக்கு செல்லும்போது வெறுமனே டிரெய்னை காட்டாமல் அதில் கிராபிக்ஸ் கலந்து ரூட்டு போட்டிருப்பது சூப்பர்.

இண்டர்வெல் ப்ளாக்கில் ப்ளைட் வெடித்து அதிலிருந்து வரும் எழுத்துக்கள் நல்ல கற்பனை.

மலை, அருவி, காடு என அனைத்தையும் கடந்து கஷ்டப்பட்டு குகை உள்ளே செல்லும் கவுதம் வெளியே வரும்போதும் படு ப்ரெஸ்ஸாகவே இருக்கிறார். (ரங்கூன் படத்தில் வந்த கவுதம் போல மேக்அப் போட்டு இருக்கலாமே)

இவ்வளவு இருந்தும் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பும், ட்விஸ்டுகளும் வைத்திருந்தால் இந்திரஜித் இன்னும் ஈர்த்திருப்பான்.

இந்திரஜித்.. குழந்தைகளை ஈர்ப்பான்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கார்த்தி, ரகுல்ப்ரித்தி சிங், போஸ் வெங்கட், சத்யன், மனோபாலா, வர்கீஸ் மேத்யூ, ரோகித் பதாக், சுரேந்தர் தகூர், நரசீனிவாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : வினோத்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
எடிட்டிங்: சிவநந்தீஸ்வரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: எஸ்ஆர்.பிரபு (ட்ரீம் வாரியர்ஸ்)

கதைக்களம்…

தீரன் திருமாறன் என்ற கார்த்திக் ஒரு டி.எஸ்.பி. போலீஸ் டிரெய்னிங் சமயத்திலேயே அவரது பேட்சிசில் முதல் மாணவனாக வந்தவர்.

தன் எதிர் வீட்டில் இருக்கும் பிரியா (ரகுல் பிரித்தீ சிங்)வை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.

சிறுவயதிலேயே தன் போலீஸ் தந்தையை இழந்தவர் தீரன். தன் தந்தையை போல் தானும் உத்யோகத்தில் இருக்கும்போதே தன் உயிரே போனாலும் பரவாயில்லை என நேர்மையாக பணியாற்றி வருகிறார்.

இதனால் அடிக்கடி உயர் அதிகாரிகளால் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.

ஒரு சூழ்நிலையில் ஊர் எல்லையில் ஒதுக்கு புறமாக இருக்கும் வீடுகளை குறிவைத்து அந்த குடும்பத்தினரை கொடூரமாக கொன்று ஒரு கும்பல் கொள்ளையடிக்கின்றனர்.

இது அடிக்கடி தமிழகத்தில் தொடர்கிறது. ஆனால் ஒரு தடயமும் இல்லாமல் அந்த கும்பல் கொள்ளையடிப்பதால் போலீஸ் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

ஆனால் அங்குள்ள பான்பராக், நாட்டு வெடிக்குண்டு மற்றும் இதர பொருட்களால் அவர்கள் வடநாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது.

இதனையடுத்து வட இந்தியாவுக்கு தன் அணியுடன் செல்கிறார் தீரன். அதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

வட இந்தியாவுக்கு சென்ற அவர் அந்த கும்பலை பிடித்தாரா? அவர்கள் யார்? எப்படி கண்டுபிடித்தார்? என்பதே இந்த தீரனின் தீவிர வேட்டை.

theeran stills

கேரக்டர்கள்…

இதில் கார்த்திக் நடித்திருக்கிறார் என்பதை தீரனாக உருமாறியிருக்கிறார் என்றே சொல்லலாம். காஸ்ட்யூம், கடமை, கம்பீரம், கட்டுடல் என அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறார் கார்த்தி.

பருத்தி வீரன் கார்த்தி என்ற பெயர் இனி தீரன் கார்த்தி என்று மாறினாலும் ஆச்சரியமில்லை.

ராஜஸ்தான் சென்று, அங்கு கஷ்டப்படும் போலீஸ் டீம் என தன் முழு உழைப்பை கொடுத்திருக்கிறார். காக்கியில் மட்டுமல்ல காதலிலும் அடி பின்னியிருக்கிறார். ரகுல்பிரித்தியிடம் செமயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இதுநாள் வரை ச்சும்மா ஹீரோயின் என்று வந்த ரகுல் பிரித்தி சிங் இதில் கதைக்கு ஏற்ற நாயகியாக வாழ்ந்திருக்கிறார்.

இவரது கன்னத்தில் கார்த்தி விரல் வைத்து சாப்பாட்டு சுவையை சொல்லும் போது அவர் காட்டும் முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. இனி இவருக்கான வாய்ப்புகள் வந்து குவியும்.

மனோபாலா இதில் சீரியஸான அப்பாவாக வந்து நன்றாக நடித்திருக்கிறார்.

சத்யன் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருகிறார். இந்த சீரியஸான சப்ஜெட்டுக்கு காமெடி தேவையில்லை என்பதை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் வினோத்.

போஸ்வெங்கட் உள்ளிட்ட அந்த காவலர்கள் அனைவரும் கம்பீரம். தீரன் போன்ற போலீஸை பார்த்தால் நம்மை அறியாமல் நாமே சல்யூட் அடிப்போம்.

நிஜத்தில் கணவன் – மனைவியான போஸ் வெங்கட் – சோனியா இருவரும், படத்திலும் கணவன் – மனைவியாக நடித்துள்ளனர்.

வட இந்திய வில்லன்களாக வரும் அனைவரும் செம டெரர்ர் லுக். வர்கீஸ் மேத்யூ, ரோகித் பதாக், சுரேந்தர் தகூர், நரசீனிவாஸ் ஆகியோர் கொள்ளையர்களாகவே வந்து நம் மனதையும் நடிப்பால் கொள்ளையடிக்கிறார்கள்.

அவர்கள் பகுதியில் கார்த்தி சென்று மாட்டிக் கொள்ளும் அந்த காட்சி கைத்தட்டலை அள்ளும்.

Theeran597 new

தொழில்நுட்ப கலைஞர்கள்…

செவத்த புள்ள பாடல் ரொமான்டிக் என்றால் தீரன் டா பாடல் அதிரடி. ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை பெரிதாக பேசப்படும்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், வடஇந்தியாவின் அந்த அழுக்கான புழுதிக்காட்டையும் அப்படியே பதிவு செய்துள்ளது.

வறண்டு போன வட இந்தியாவை ஒரு சினிமா டிக்கெட்டில் பார்த்த முழு திருப்தி கிடைக்கும் அளவுக்கு கொடுத்திருக்கிறார்.

படத்தில் கத்திரிக்கு வேலையே இல்லை. எடிட்டர் கச்சிதம்.

theeran stills 1

இயக்கம் பற்றிய அலசல்…

வினோத்.. கார்த்தி வினோத் வெற்றிக்கூட்டணி அமைத்துள்ளனர். இனியும் இந்த கூட்டணி தொடர வாழ்த்துக்கள்.

வெறுமனே போலீஸ் ஸ்டோரி என்று சொல்லாமல் அதற்கு சில 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று அந்த கொள்ளையடிக்கும் கும்பல் யார்? அவர்களின் பலம் என்ன? என்பதை ஆராய்ந்து ஒரு டாக்டரேட் பட்டம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் டைரக்டர்.

இண்டர்வெல் மற்றும் க்ளைமாக்ஸ் சீன் தமிழ் சினிமா பார்க்காத ஒன்று.

நேர்மையாக வாழும் போலீஸ் அதிகாரிகளின் கடைசி கால நிலைமை என்னவாக இருக்கும்? என்பதையும் யதார்த்தமாக சொல்லி மனதை கலங்கவைக்கிறார் வினோத்.

தீரன் காக்கி சட்டைக்காரர்கள் இனி காலரை நேர்மையாக தூக்கிவிட்டு கொள்ளலாம்

அறம் விமர்சனம்

அறம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நயன்தாரா, விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன், மாரிமுத்து, பாண்டியன் மற்றும் பலர்.
இயக்கம் : கோபி நயினார்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
எடிட்டிங்: ரூபன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்

கதைக்களம்…

இது ஒரு அரசியல் கதை. அவசியமான கதை. அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய கதை. அலட்டிக் கொள்ளாத கதை, அன்பான கதை, அழகான கதை… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழகத்தின் மூலையில் உள்ள ஒரு கிராமம் காட்டூர். குடி தண்ணீர் கூடாத இல்லாத பகுதி.

அந்த கிராமத்தில் கஷ்டப்படும் மக்களில் ஒருத்தி சுனு லட்சுமி. இவரது 4 வயது மகளை வெளியே அழைத்துப் போகும் அங்கு தோண்டப்பட்டிருக்கும் 36 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழந்து விடுகிறாள்.

அந்த குழந்தையைக் காப்பாற்ற கலெக்டர் நயன்தாரா முதல் தாசில்தார், விஓஏ, தீயணைப்பு படை, போலீஸ், எம்எம்ஏ, கவுன்சிலர் என அனைவரும் ஆஜர்.

ஆனால் இவர்கள் செய்யும் முயற்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வி அடைகிறது.

இதனால் பல அரசியல் சதிகளை மீறி நயன்தாரா அந்த குழந்தையை மீட்க என்ன செய்தார்? என்பதே இந்த அறம்.

கேரக்டர்கள்…

நயன்தாரா போல ஒரு ஹீரோயின் இருந்தா இனிமே ஹீரோ இல்லாமல் கூட படம் எடுக்க நினைப்பார்கள் இயக்குனர்கள்.

குழிக்குள் இருக்கும் குழந்தையை மீட்க ஒரு தாயைப் போல் தவிப்பை பிரதிபலித்துள்ளார் நயன்தாரா.

அவரின் இயல்பான நடிப்பு, நேர்த்தியான பார்வை, என அனைத்தும் படத்திற்கு ப்ளஸ்.

மக்கள் பிரச்சினையை மக்கள் இடத்தில் இருந்து நயன்தாரா பேசும் காட்சிகள் கைத்தட்டலை அள்ளும்.

சுமதியாக வரும் சுனு லட்சுமி வெகு இயல்பாக நடித்திருக்கிறார். ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிடும் அந்தக் குழந்தையும் அவளது அண்ணனும் அருமையான நடிப்பு.

பழனி பட்டாளம், ஈ ராமதாஸ், முத்துராமன், விக்னேஷ், தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் யதார்த்தமான நடிப்பை வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதுபோன்ற படங்களுக்கு வசனங்கள்தான் பெரிதும் கைகொடுக்கும். அதை சரியாக செய்துள்ளார் இயக்குனர்.

“இந்தியாவுல விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப முடியும். ஆனால் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு இல்லை, குழிக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற ஒரு மெசின் இல்லை.

இன்னும் கயிறு நம்பித்தான் இருக்கானுங்க. என அதிரடி வசனங்கள் நம்மையும் யோசிக்க வைக்கும்.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் நன்றாக உழைத்திருக்கிறார். ஆழ்துளைக் கிணறு குழந்தை மீட்பை நிஜமாகவே பெரும் பள்ளம் தோண்டிப் படமாக்கியிருக்கிறார்கள்.

உணர்வுப்பூர்வமாக இசையை ஜிப்ரான் கொடுத்து நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறார்.

மக்கள் அரசு அதிகாரியை பார்த்து வர ஏன் இவ்வளவு தாமதம்? என கேட்கும்போது, ரொம்ப அவுட்டராக இருக்கு என்னும்போது மக்கள் கேட்கும் கேள்விகள் நச்.

ஓட்டு கேட்கும்போது நாங்க இங்கோ இருக்கோம் வரத்தெரியலையா? ஓட்டுப் போட எங்களை கூட்டிட்டு போக தெரியலையா? இப்போதான் நாங்க இவ்வளவு தூரத்துல இருக்கோம் தெரியுதா? என கேட்கும்போது எந்த அரசாங்கத்திடமும் பதில் இருக்காது.

அருமையான கதையை கோபி நயினார் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து கொடுத்திருக்கிறார்.

அறம்… அருமை. அவசியம்.

நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சந்தீப், விக்ராந்த், மெஹ்ரின், சூரி, ஹரிஷ் ராகவேந்தர், அப்புக்குட்டி, அருள்தாஸ், தீலிபன் மற்றும் பலர்.
இயக்கம் : சுசீந்திரன்
இசை : இமான்
ஒளிப்பதிவு: லஷ்மன்
படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: அன்னை பிலிம் பேக்டரி ஆண்டனி

nenjil

கதைக்களம்…

படத்தின் முதல் காட்சியே ஆஸ்பத்திரியில் தொடங்குகிறது. சந்தீப்பின் அப்பா சிவா ஒரு சிறிய சிகிக்சைக்காக ஆஸ்பத்திரியில் சேருகிறார். ஒரு போலி டாக்டர் ஆப்ரேசன் செய்ய அவர் மரணமடைகிறார்.

அதன்பின்னர் அதை வேறு ஒரு கோணத்தில் செல்கிறது.

கேட்ரிங் செய்துக் கொண்டே கறி வெட்டுவதை போல ஆட்களை காலி செய்கிறார் ஹரிஷ் உத்தமன்.

ஒருமுறை இவர் போடும் ஸ்கெட்சில் சிக்குகிறார் விக்ராந்த். தன் நண்பனை விக்ராந்த் வில்லனிடம் இருந்து காப்பாறும் சந்தீப், ஒரு பொய் குற்றச்சாட்டை கூறி தன் நண்பனையே சிறைக்குள் தள்ளுகிறார்.

தன் நண்பன் ஜெயிலில் இருந்து வெளி வரும் முன்னே, விக்ராந்த்தை கொல்ல திட்டமிட்டவர்களை தேடி அலைகிறார்.

இது தெரியாத விக்ராந்த், ஜாமீனில் வெளியே வரும்போது சந்தீப் மீது கோபமாக இருக்கிறார்.

அவர்கள் யார்? எதற்காக கொல்ல திட்டமிடுகின்றனர்? அவர்களுக்கு யார் பணம் கொடுத்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

Nenjil-Thunivirundhal-Movie-Stills-

கேரக்டர்கள்…

மாநகரம் படத்தில் ரசிகைகளை கவர்ந்த சந்தீப் தான் இதில் ஹீரோ. நல்ல உடல்வாகு. ஆறடி உயரம். என முறுக்கேறி வருகிறார்.

இவர் சும்மா வந்து நின்றாலே அடிக்க வந்தது போல் இருக்கும். ஆனால் ஆக்சன் காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதற்கு பதிலாக உடும்பு பிடி பிடிச்சி எதிரிகளை கட்டியணைத்து கொள்கிறார்.

தன்னுடைய பழைய பார்முலாவிலேயே இருக்கிறார் விக்ராந்த். சீரியசான கேரக்டர்கள் அழுத்தமான முகம் என்றால் இவரை கூப்பிடுகிறார்களா? எனத் தெரியவில்லை.

மனிதர் சிரிக்கவே மாட்டார் போல. ஆனால் உடல் இளைத்து வளைத்து நன்றாக நடனம் ஆடியிருக்கிறார்.

சூரி, அப்புக்குட்டி ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான். மாவீரன் கிட்டு படத்தில் ஒரு டயலாக் கொடுத்தார் சூரிக்கு. இதில் கொஞ்சம் அதிகம். வேறு ஒன்றுமில்லை.

வில்லன் அடியாள்கள் போல வரும் அருள்தாஸ், தீலிபன் ஆகியோர் சிறப்பு.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அடிக்கடி வந்தாலும், சந்தீப் தான் ஸ்கெட்ச் போட்டு கண்டு பிடிக்கிறார். இன்ஸ்பெக்டர் நீயா நானா கோபிநாத்தின் உறவினர் போலவே இருக்கிறாரே? யார் அவர்?

ஹரிஷ் உத்தமன் தாடியுடன் வருகிறார். அவருக்கு மிரட்டலான கெட் அப் இதுதான். நன்றாக பொருந்தியிருக்கிறது.

போலீசுக்கு சந்தேகம் வராமல் எதையும் அசால்ட்டாக ஸ்கெட்ச் போடுவது ஹரிஷ் உத்தமனின் தனி ஸ்டைல்.

விக்ராந்த் காதலியாகவும் சந்தீப்பின் தங்கையாக வரும் ஷாதிகா தன் நடிப்பில் கெட்டி.

என்னடா இது ஹீரோயின் மெஹ்ரின் பத்தி சொல்லவேயில்லை என்கிறீர்களா? படத்திலேயும் ஒன்றும் சொல்லவில்லையே. ஆனால், மெழுகு பொம்மை போல அழகாக இருக்கிறார் மெஹ்ரின்.

Nenjil-Thunivirundhal-35

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எச்சச்ச எச்சச்ச, ஏய் அரக்கா, அறம் செய்ய விரும்பு ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

இமான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். வில்லனுக்கு ஒரு பிஜிஎம் என்றால் ஹீரோவுக்கு ஒரு பிஜிஎம் நன்றாக இருக்கிறது.

லஷ்மன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளும், க்ளைமாக்ஸ் பைட் லைட்டிங்கும் ரசிக்க வைக்கிறது.

ஆனால் எடிட்டர் தன்னுடைய வேலையை நிறைய இடத்தில் மறந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

அந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை காட்சி எதற்கு? க்ளைமாக்ஸ் முடியும் நேரத்தில் பின்னர் வரும் அந்த கோயில் காட்சிகள் எதற்கு?

Nenjil-Thunivirundhal-Movie-Stills-13-1024x683

இயக்கம் பற்றிய அலசல்…

காதல், மோதல், குடும்பம், கமர்ஷியல் என அனைத்தையும் கலந்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால் சுசீந்திரன் படங்கள் என்றால் அதைப் பார்க்கும்போது ஒரு சுகம் இருக்கும். இதில் முழுமையாக கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் இருக்கிறது.

மருத்துவத் துறையில் போலி டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற கான்செப் உடன் முதல் காட்சி தொடங்க, அதை ஹீரோ ஒரு சின்ன டயலாக் பேசி முடித்து வைத்துவிட்டார் என்பது பெரும் குறை.

நெஞ்சில் துணிவிருந்தால்… பார்க்கலாம்

More Articles
Follows