கடம்பன் விமர்சனம்

கடம்பன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆர்யா, கேத்ரீன் தெரசா, தீப்ராஜ், சூப்பர் சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ், ஒய்ஜி மகேந்திரன், மதுவந்தி அருண் மற்றும் பலர்.
இயக்கம் : ராகவா
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : எஸ் ஆர் சதீஷ்
எடிட்டர்: தேவா
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி

kadamban 2

கதைக்களம்…

கடம்பவனம் என்ற ஒரு வனப்பகுதி. அரசாங்கத்தையும நம்பாமல், அந்த வனத்தையே நம்பி வாழும் மக்கள் ஒரு பக்கம்.

வனத்தை அழித்து வளமாக வாழ நினைக்கும் கார்ப்பேரேட் நிறுவன அதிகாரிகள் ஒரு பக்கம்.

காட்டு வாழ் மக்களுக்கும் இந்த கார்ப்பரேட்டுக்கும் நடக்கும் யுத்தத்தில் வென்றது யார்? எப்படி வென்றார்கள்? என்பதே இந்த கடம்பன்.
Kadamban-still1

கதாபாத்திரங்கள்…

அட சூப்பர்யா இந்த ஆர்யா.. என்று ஆண்களே ஆச்சரியப்படுமளவிற்கு கட்டுடல் காட்டி அசத்துகிறார் கடம்பன்.

உடலுக்கு ஏற்ற போல ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தி ரசிகர்களை வியக்க வைக்கிறார். அவரின் மெனக்கெடல் நிச்சயம் வீண் போகவில்லை. சுருக்கமாக சொன்னால் ஹார்ட் ஒர்க் ஆர்யாவுக்கு ஹாட்ஸ் ஆஃப்.

செழிப்பான வனப்பகுதியில் வாழும் கேத்ரீன் தெரசாவும் செழிப்பாகவே இருக்கிறார். கதாநாயகி என்றில்லாமல் கதையின் நாயகியாக தெரிகிறார்.

இவரின் அண்ணனாக வருபவரும் தன் நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆடுகளம் முருதாஸ் தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

தொழில் அதிபராக வரும் தீப் ராஜ்வும் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார்.

இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி ஆகியோர் வில்லனோடு இணைந்து தங்கள் கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள்.
kadamban 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவுக்கு அடுத்து பின்னணி இசையில் நான்தான் என சொல்லாமல் நிரூபித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

ஒத்த பார்வையில், உச்சிமலை அழகு ஆகிய பாடல்களும் கேட்கும் ரகமே.

நாமும் நாட்டை விட்டு காட்டில் வசிக்கலாமே என ஏங்கும் அளவுக்கு கேமரா விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் சதீஷ்குமார்.

கிட்டத்தட்ட 70 யானைகள் வரும் காட்சி நிச்சயம் ரசிகர்களை பரவசப்படுத்தும்.

ஒரு அழகான தாத்தா பேரன் உறவை சொன்ன மஞ்சப்பை இயக்குனர் ராகவா எடுத்த படமா? இது என இரண்டாவது படைப்பை நன்றாக கொடுத்துள்ளார்.

நாட்டை நம்பி காடு இல்லை. ஆனால் காடு இல்லையேல் நாடே இல்லை. அதில் உள்ள விலங்குகளை நாம் ZOO வில் மட்டுமே பார்த்து மகிழ்கிறோம்.

அவற்றை நாம் தொந்தரவு செய்யாதவரை நமக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

தேன் கூடு, மூங்கில் காடு என அனைத்தையும் கண்முன் வந்து நிறுத்தியிருக்கிறார் ராகவா.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற கதைகள் அரிதாகவே வரும். எனவே நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

கடம்பன்… கைவிடமாட்டான்

சிவலிங்கா விமர்சனம்

சிவலிங்கா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்திவாசு, வடிவேலு, ஊர்வசி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : பி வாசு
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : சர்வேஸ் முரளி
எடிட்டர்: சுரேஷ் அர்ஸ்
பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்
தயாரிப்பு : ரவீந்திரன்

sivalinga 3

கதைக்களம்…

முதல்காட்சியில் சக்திவேல்வாசு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்யப்படுகிறார்.

அவர் வளர்க்கும் ஒரு புறா மட்டுமே அந்த கொலைக்கு சாட்சியாகிறது.

இந்த வழக்கு சிபிசிஐடியான சிவலிங்கேஸ்வரன் லாரன்ஸ் விசாரிக்கிறார். இதனிடையில் ரித்திகா சிங்குடன் காதல் திருமணம் நடக்கிறது.

இறந்துபோன சக்தி, ஆவியாக வந்து ரித்திகாவின் உடலில் புகுந்து கொள்கிறது.

ஆனால் தன்னை யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதை அறியாமல் அலைகிறது அந்த ஆன்மா.

எந்த ஆதாரமும் இல்லாத இந்த கொலையை எப்படி கண்டுபிடிக்கிறார்? புறா எப்படி சாட்சி ஆனது? அந்த ஆன்மா சாந்தி அடைந்ததா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இப்படத்தின் க்ளைமாக்ஸ் பதில் சொல்லும்.

sivalinga 2

கேரக்டர்கள்..

முறைப்பான போலீஸ் அதிகாரி போல் இல்லாமல், கமர்ஷியல் போலீசாக ஜொலிக்கிறார் லாரன்ஸ்.

அவரின் டான்ஸ் மற்றும் ஸ்டைல் எதிலும் பஞ்சமில்லை. இதில் சின்ன கபாலி நான் என்று பாடி காட்டுகிறார்.

பேய்க்கும் தனக்கும் எப்பவும் எல்லா அம்சமும் பொருந்தும் என்று இதிலும் கலக்கியிருக்கிறார்.

இறுதிச்சுற்று பாக்ஸர் ரித்திகா இதில் ரங்குரக்கரா என குத்தாட்டம் போட்டு இருக்கிறார். பேய் பிடித்தவளாகவும் மிரட்டியிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சக்திவேல் வாசு. நடிப்பில் நல்ல தேர்ச்சி. இதையே கன்டின்யூ பன்னுங்க பாஸ். ரஹீம் கேரக்டரில் பிரியாணி போல மணக்கிறார்.

வடிவேலுக்கு சரியான ரீஎண்ட்ரி இப்படம். அவரது காட்சிகளை இன்னும் நீட்டி இருக்கலாம். காமெடி கைகொடுத்திருக்கிறது.

சக்தியின் லவ்வராக வரும் ஷாரா சிறப்பான தேர்வு. நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.

இவர்களுடன் ஊர்வசி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உண்டு.
sivalinga 1

தொழில்நுட்ப கலைஞர்கள்.

தமனின் பின்னணி இசை தாறுமாறு. ஹாரர் படத்திற்கு ஏற்ற ஆர்ஆர் ரசிக்க வைக்கிறது.

ரங்குரக்கர மற்றும் சின்ன கபாலி பாடல்கள் ஆட்டம் போட வைக்கும். சிவலிங்கா பாடலும் ரசிக்க வைக்கிறது.

சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.
ஆனால் முதல்பாதியில் வரும் ஊர்வசி காட்சிகளை வெட்டி, இரண்டாம் பாதியை குறைத்திருக்கலாம்.

இடைவேளைக்கு பின்னர்தான் படமே என்கிற அளவுக்கு அவ்வளவு காட்சிகளை வைத்துள்ளார் டைரக்டர் பி.வாசு.

ஒரு விசாரணை, ஒரு சிபிசிஐடி என இருந்தாலும் அதில் கமர்ஷியல், பேய் என அனைத்தையும் கலந்து கொடுத்துள்ளார் பி வாசு.

பொதுவாக இதுபோன்ற படத்தில் ஆவி எதற்காக, யாரால்? கொல்லப்பட்டது என்பது தெரிந்திருக்கும். ஆனால் இதில், யார்? தன்னை கொன்றார்கள்? என சக்தியின் ஆன்மா அலைவது ட்விஸ்ட்.

ஏ கிளாஸ் ஆடியன்ஸை விட பி அண்ட் சி சென்டரில் சில்லரைகளை அள்ளுவான் சிவலிங்கா

சிவலிங்கா.. த்ரில்-லிங்கா

பவர் பாண்டி விமர்சனம்

பவர் பாண்டி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராஜ்கிரண், தனுஷ், பிரசன்னா, ரேவதி, சாயாசிங், மடோனா, ஆடுகளம் நரேன், (கௌரவ தோற்றத்தில் டிடி, ஸ்டண்ட் சில்வா பாலாஜிமோகன், கௌதம் மேனன், ரோபா சங்கர்) மற்றும் பலர்.
இயக்கம் : தனுஷ்
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவாளர் : வேல்ராஜ்
எடிட்டர்: பிரசன்னா
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பு : தனுஷ் வுண்டர்பார் பிலிம்ஸ்
power paandi 2

கதைக்களம்…

மனைவியை இழந்த பவர் பாண்டி ராஜ்கிரனுக்கு ஒரே மகன் பிரசன்னா. ராஜ்கிரணின் மருமகள் சாயா சிங். அவருக்கு ஒரு பேரன் ஒரு பேத்தி.

சினிமாவில் பைட் மாஸ்டராக பணி புரிந்த பாண்டி, 64 வயதில் தன் குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்து வருகிறார்.

தவறுகள் எங்கு நடந்தாலும் இவர் தட்டி கேட்பதால், அந்த பகுதி வில்லன் (சென்ட்ராயனிடம்) சிறுசிறு மோதல்கள் வருகிறது.

இதனால் போலீஸ் நிலையத்துக்கு அடிக்கடி செல்லும் பிரசன்னா, ஒரு சூழ்நிலையில் தன் தந்தையை ஓவரா திட்டி விடுகிறார்.

இதற்கு மேல் தனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என புறப்படும் ராஜ்கிரண், தன் முன்னாள் காதலியை தேடி செல்கிறார்.

அதன்பின் என்ன ஆனது? காதலியை கண்டு பிடித்தாரா? அவர் யார்? எங்கு இருக்கிறார்? மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பதுதான் கதை.

power paandi 5

கதாபாத்திரங்கள்…

தன் உடலுக்கும் வயதுக்கும் ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்து கெத்து காட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.

வயதான கேரக்டர் என்றாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை வசியம் செய்து விடுகிறார்.

முன்னாள் காதலியை கண்டுபிடித்த பின், அவள் தன்னை இன்னும் நினைத்து கொண்டு இருக்கிறாளா? என்று கேட்டுவிட்டு, அதற்காக காத்திருக்கும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார்.

பைட், ரொமான்ஸ், பாசம், அன்பு என நவரசம் காட்டி நடித்திருக்கிறார் ராஜ்கிரண்.

ஐடி ஊழியராக பிரசன்னா. நாட்டில் எது நடந்தாலும் நமக்கென்ன? என இருக்கும் ஒரு சராசரி மகனாக வாழ்ந்திருக்கிறார் பிரசன்னா.

ஒரு காட்சியில் அம்மாவின் போனை கட் செய்யும் நண்பரை பார்த்து, அம்மாதானே அப்பாதானே என அலட்சியம் செய்யாதீங்க. அவங்க நம்மள பத்தி ரெண்டு நிமிஷம் விசாரிக்க போறாங்க. அதை பேசுங்க என சொல்லும்போது பிஸியான மனிதர்களின் கன்னத்தில் அறைவது போல இருக்கும்.

power paandi 4

மாமனாரை மதிக்கும் நல்ல அமைதியான மருமகளாக சாயாசிங். குழந்தைகளின் தொந்தரவு தாங்க முடியாமல் தாத்தாவிடம் கொடுத்து விட்டு செல்லும் பெற்றோரை நினைவுப் படுத்துகிறார்.

தனுஷ் உடன் காதல் வயப்படுவதும், காதலை சொல்வதும், பிரிந்து செல்வதும் என காதலை உணர்ந்து நடித்திருக்கிறார் மடோனா.

பழைய காதலனை கண்டதும் வயதுக்கேற்ற போல், காதலை நாகரீமாக மறைத்து தான் அனுபவமிக்க நடிகை என்று நிரூபிக்கிறார் ரேவதி.

உன்ன நினைச்சேன், நினைக்கிறேன். நினைச்சிட்டு இருப்பேன் காதலை சொன்னாலும் குடும்பத்தின் உறவுக்காக தயங்கி நிற்கும்போது ரசிக்க வைக்கிறார்.

இவர்களுடன் சின்ன குழந்தைகள், ஆடுகளம் நரேன், வித்யூலேகா, சென்ட்ராயன், டிடி ஆகியோரும் தங்களின் சிறுபணியை சிறப்பாக செய்துள்ளனர்.

power paandi 6

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒவ்வொரு கேரக்டரின் உணர்வுகளுக்கும் தன் இசையால் உயிர் கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன்.

பாடல்களையும் பின்னணி இசையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

இவரும் தனுஷ்ம் பெரும்பாலான பாடல்கள் பாடியுள்ளனர்.

இளவயது கேரக்டர் தனுஷ் என்பதால் பாடலுக்கு குரல் ஓகே. ஆனால் சில பின்னணி இசையின் போதும் ஹம்மிங் கொடுக்க வேண்டுமா சார்..?

வேல்ராஜின் ஒளிப்பதிவில் நம்மை மறந்து காட்சிகளை ரசிக்க முடிகிறது.

வசனங்கள் படத்திற்கு பெரும் சேர்க்கிறது. ‘காதலிச்ச பொண்ணோ கடவுள் கொடுத்த பொண்ணோ ரிசல்ட் என்னவோ ஒண்ணுதான் ” என்று வந்து செல்லும் கேரக்டர்களின் வசனங்களும் மனதில் நிற்கிறது.

power paandi 3

இயக்குனர் நடிகர் தனுஷ் பற்றி…

ப்ளாஷ்பேக் காட்சியில் பாண்டியாக தனுஷ். ஆட்டம் இனிமே தான் ஆரம்பம் என அசால்ட்டாக களம் இறங்கி கிராமத்து மொழியில் நம்மை கவர்கிறார் தனுஷ்.

தன் படம், தான் ஹீரோ என்றெல்லாம் இல்லாமல் ரசிகனுக்கு எது தேவையோ அதை மிக அழகாக செய்துள்ளார்.

காதலியை தேடிச் செல்லும்போது, ஒரே நிமிடத்தில் காதலியை கண்டுபிடிப்பது, போன் இல்லை என்று சொல்லும்போது லாஜிக் மீறல்.

வீட்டை விட்டு ஓடிச்செல்லும்போது, பேங்கில் எடுத்த பணத்தில் போன் வாங்கலாமே?

தாத்தா, அப்பா எல்லாரையும் குழந்தைகள் ஒருமையில் வா போ என்றே அழைக்கின்றனர். அது கூட பாசம் என்றாலும், பக்கத்து வீட்டு இளைஞனை வாடா போடா என்று கூப்பிடுவது ரொம்ப ஓவர்.

ஆக மொத்தம் தமிழ் புத்தாண்டு நாளில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ளார் தனுஷ்.

தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையான ஒரு டைரக்டர் கிடைத்துவிட்டார்.

பவர் பாண்டி … தனுஷின் ரியல் பவர்

செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : எழில்துரை, மதுமிலா, அபிநயா, கயல் வின்சென்ட், ராகவ் உமா சீனிவாசன், வனிதா, மெட்ராஸ் ரமா, திவ்யா, அஜய்ரத்னம், மைம் கோபி, அர்ஜீனன், மகாநதி சங்கர் மற்றும் பலர்.
இயக்கம் : எழில்துரை
இசை : ராஜ்பரத்
ஒளிப்பதிவு : மணீஷ்
எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர்
பி.ஆர்.ஓ.: யுவராஜ்
தயாரிப்பு : எஸ்பி எண்டர்டெயின்மெண்ட் பாலசுப்ரமணியம்

கதைக்களம்…

படத்தின் தலைப்பை கதையை உங்கள் சொல்லியிருக்கும். காதலித்த பெண் காதலனை ஏமாற்றி எஸ்கேப் ஆவதையே நவீன காலத்தில் செஞ்சிட்டாளே என்கிறார்கள்.

படத்தின் முதல்காட்சியிலேயே வீராவை (எழில்துரை) வீட்டில் காணாமல் தேடுகிறார்கள். வீட்டில் வேறு துக்கு மாட்ட கயிறு ஒன்றை கட்டிச் செல்கிறார்.

எனவே வீராவின் அம்மா தங்கையும் தேடுகிறார்கள். இவர்களுடன் வீராவின் நண்பர்களும் தேடி அலைகிறார்கள்.

அவன் தொலைந்து போக அவனின் காதலிதான் காரணம் என்பதால் அவரை தேடி அலைய, அதன் பின் தொடரும் காட்சிகளும், அவர் ஏன் காணாமல் போனார்? என்ற ப்ளாஷ்பேக் காட்சிகளும்தான் படத்தின் கதை.

senju 1

கேரக்டர்கள்…

நிறைய குறும்படங்களை இயக்கிய எழில்துரையே இப்படத்தின் நாயகனும் இயக்குனரும் ஆவார்.

எனவே தனக்கு ஏற்ற போல நாயகிகளையும் கதையையும் அமைத்துக் கொண்டுள்ளார்.

இவரும் நாயகி மதுமிலாவும் வாக்குவாதம் செய்யும் அந்த ஷட்டில்கார்க் க்ரவுண்ட் சீன் ரொம்பவே ஓவர்.

பாய்பிரண்ட்டுடன் தன் காதலியை போக வேண்டாம் சொல்வது எல்லாம் ஓகேதான். அதற்காக செயற்கைத்தனமாக பேசி ரசிகர்களை சோதிக்கிறார்.

அடிக்கடி காதலனை மாற்றும் நாயகியாக மதுமிலா. அழகான நடிப்பில் அசத்துகிறார்.

ஒருவனை விட மற்றொருவன் சிறந்தவன் என்ற நினைப்பு வந்துவிட்டால் ஆண்களை மாற்றும் பெண் கேரக்டரை நன்றாகவே பிரதிபலிக்கிறார்.

அதுவும் இவருடன் உள்ள சகுனி தோழிகளின் பேச்சை கேட்டு ஆடுவது இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம்.

மற்றொரு நாயகியாக அபிநயா. சில ஆண்கள் உண்மையான காதலை புரிந்து கொள்வதில்லை என்பதை தன் நடிப்பில் உணர வைக்கிறார்.

இவர்களுடன் மகாநதி சங்கர், மைம்கோபி, அர்ஜுனன், அஜய்ரத்னம், மெட்ராஸ் ரமா ஆகியோரும் உண்டு.

ஒரு ஜிம் மாஸ்டர் இப்படி குண்டாக இருப்பது அர்ஜீனனதாக இருக்கும். காமெடிக்காக உடம்பை இப்படி வைத்திருந்தாலும் கொஞ்சம் காமெடியும் வைத்திருக்கலாம்.

madhumila

தொழில்நுட்ப கலைஞர்கள்..

மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவும், ராஜ்பரத் இசையும் ஜஸ்ட் ஓகே என சொல்லலாம்.

மதுமிலாவின் பழைய காதலர்கள் ஒன்று சேர்ந்து புதுக்காதலரை மிரட்டும்போது பல காதல் தோல்வி ரசிகர்களின் கைத்தட்டல்களை தியேட்டரில் கேட்க முடிகிறது.

காதல் என்ற பெயரில் பல காட்சிகளில் ரசிகர்களையும் வச்சி செஞ்சிருக்காங்க…

செஞ்சிட்டாளே என் காதல… காதலர்கள் ஜாக்கிரதை

காற்று வெளியிடை விமர்சனம்

காற்று வெளியிடை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கார்த்தி, அதிதி ராவ், ஆர் ஜே பாலாஜி, டெல்லி கணேஷ், ருக்மணி மற்றும் பலர்.
இயக்கம் : மணிரத்னம்
இசை : ஏஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவாளர் : ரவிவர்மன்
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்னம்

கதைக்களம்…

ஒரு சில படங்களை மட்டுமே நாம் இயக்குனருக்காக பார்ப்போம். அதில் முக்கியமான நபர் மணிரத்னம். அவரை மட்டும் நம்பி இப்படத்திற்கு செல்லலாம்.

ஏர் போர்ஸ் போர் பிரிவில் ஹீரோ கார்த்தி (வருண்)க்கு வேலை. 1999ஆம் ஆண்டில் கார்கில் போரில் சண்டையிடும் போது பாகிஸ்தான் ஆர்மியிடம் சிக்கி கொள்கிறார்.

அதன்பின், தன் காதலி லீலா (ஆர்மி டாக்டர்) நினைத்து நினைத்து அவளை காண தப்பித்து செல்கிறார்.

அதன்பின் என்ன ஆனது.? காதலியை எப்படி கண்டுபிடித்தார்? பாகிஸ்தான் ராணுவம் அவரை என்ன செய்தது? மீண்டும் இந்தியா வந்தாரா? என்பதே கதை.

karthi aditi kaatru veliyidai

கேரக்டர்கள்…

பைலட் வருணாக படம் முழுவதும் பளிச்சென்று வருகிறார் கார்த்தி. படத்தின் ஒரு காட்சி மட்டுமே அந்த போர் காட்சிகள்.

படத்தின் முக்கால்வாசி மணிரத்னம் ஹீரோவாக வருகிறார். சில காட்சிகளில் கவுதம் மேனன் பட ஹீரோ போல மைண்ட் வாய்ஸில் (வாய்ஸ் ஓவர்) பேசிக் கொண்டே இருக்கிறார்.

மற்றபடி படம் முழுவதும் தென்றல் போல வரும் ரொமான்ஸ் காட்சிகள்தான்.

ஹீரோயின் அதிதி ராவ்.. காஷ்மீர் பனியை விட பளீரென்று வருகிறார். பெண்களுக்கே உரித்தான அதே சமயத்தில் தன் சுயகௌவரத்தை விட்டுக் கொடுக்காத கேரக்டரில் ஜொலிக்கிறார்.

வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருந்தாலும், காதலனை நம்பாமல் தன்னை நம்பி வாழும் கேரக்டரில் பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.

ஆனால் ஏதோ ஹாலிவுட் பட ஹீரோயினை பார்ப்பது போன்ற உணர்வு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

அட படத்துல ஆர்.ஜே. பாலாஜி இருக்காருல்ல.. என்று வார்த்தையில் மட்டுமே சொல்லலாம். மணிரத்னம் படத்தில் நடித்தேன் என்று அவர் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

இவர்களை தவிர மற்ற கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும், காதலர்களுக்கு மட்டுமே முழுப்படத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

karthi aditi

தொழில்நுட்ப கலைஞர்கள்…

என்னடா இது படம் மெதுவாக செல்கிறதே என்ற எந்தவிதமாக சலிப்பை கொடுக்காமல் காஷ்மீரின் இயற்கை அழகை போதும் போதும் என்கிற அளவுக்கு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

ஓவியர் ரவிவர்மனை போல கேமரா ஓவியராக தெரிகிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

ஒரு காட்சியில் அதிதியை கார்த்தி பிரியும்போது, காரின் லைட் வெளிச்சத்தில் அந்த காட்சியை கவிதையாக்கி இருக்கிறார்.

அதுபோல் பனிச்சரிவில் காதலர்கள் சண்டைபோடும்போது, அட நாமளும் இங்கே நிச்சயம் போகனும் என மனசு துடிக்கிறது.

போர் விமானம் பறக்கும் காட்சியில் காற்றை கிழித்துக் கொண்டு போவது என ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் அழகே மேரி மீ மேரீ மீ மற்றும் வான் வருவாய் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

போர் காட்சியில் தொடங்கி, கார்த்தி தப்பிக்கும் காட்சிகள் என பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் ஏஆர் ரஹ்மான்.

mani ratnam

இயக்கம் பற்றிய அலசல்…

எப்போதும் மணிரத்னம் படத்தில் இருட்டாகவே இருக்கும். ஆனால் இதில் முதன்முறையாக படம் முழுவதும் ப்ரைட் மணிரத்னத்தை பார்க்கலாம்.

உயிரைக்கொல்லும் போர் வீரன். உயிரை காக்கும் டாக்டர். இருவருக்கும் ஒரு காதல். அதில் சில மோதல் என ஒன்லைன் வைத்து படம் முழுவதும் ஆட்சி செய்கிறார் மணிரத்னம்.

கார்த்தியின் அண்ணன் காதலியை கர்ப்பமாகிவிட்டு திருமணம் செய்வதும், அதில் வீட்டில் எல்லாரும் சந்தோஷமாக கொண்டாடுவதும் எல்லாம் இந்தியாவில் நடக்கிறதா?

சரி அவருடைய காதல்தான் அப்படியென்றால் கார்த்தியின் காதலையும் க்ளைமாக்ஸில் அப்படி ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பது? எல்லாம் ரசிகர்களுக்கும் பிடிக்குமா? என்று தெரியவில்லை.

காற்று வெளியிடை.. காதல் ஓவியம்

8 தோட்டாக்கள் விமர்சனம்

8 தோட்டாக்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : வெற்றி, எம்எஸ் பாஸ்கர், நாசர் மற்றும் பலர்.
இயக்கம் : ஸ்ரீகணேஷ்
இசை : சுந்தரமூர்த்தி
ஒளிப்பதிவு : தினேஷ் கே பாபு
எடிட்டர்: நாகூரான்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : வெள்ள பாண்டியன்

கதைக்களம்…

நாயகன் சத்யா (வெற்றி) சிறுவயதிலேயே அப்பாவால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்.

அதன்பின்னர் ஒரு காவலர் உதவியோடு படித்து இன்ஸ்பெக்டராகிறார்.

எப்போதும் சீரியசாக இருக்கும், இவர் ஒரு லோக்கல் ரவுடியை உளவு பார்க்க செல்கிறார்.

அப்போது, தான் வைத்திருக்கும் துப்பாக்கியை பிக்பாக்கெட் அடிக்கும் சிறுவனிடம் பறிகொடுக்கிறார்.

அது கைமாறி கைமாறி ஒருவனிடம் செல்கிறது.

அவன் அதில் உள்ள எட்டு தோட்டாக்களை வைத்து, ஒவ்வொருவரையும் மிரட்டி கொள்ளையடித்து கொலை செய்கிறான்.

சத்யாவின் துப்பாக்கி என்பதால், எல்லாம் பழியும் இவர் மீது விழுகிறது.

அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார். அந்த கொலையாளி யார்? எதற்காக இப்படி செய்கிறார்? என் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது இப்பட க்ளைமாக்ஸ்

C8k5J9IXoAAdcYw

கேரக்டர்கள்…

புதுமுகம் வெற்றி நாயகனாக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே போலீஸ் கேரக்டருக்கு இவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான்.

ஆனால் அதை இன்னும் பெட்டராக செய்திருக்கலாம். படம் முழுவதும் சீரியசாக இருப்பதால் முகபாவனைகள் ஒரே போல உள்ளன.

காதலியிடமும் பாடலிலும் இதே முகபாவனைதான். (என்ன பாஸ் இப்படி?)

படத்தின் நாயகியும் இவரைப் போன்ற படு சீரியஸ்.

படத்தின் முழு கதையையும் தனக்கே எடுத்துவிட்டார் எம்.எஸ்.பாஸ்கர். இனி இவரது சினிமா பயணத்தில் இப்படி ஒரு படம் கிடைக்குமா? என தெரியாது.

எனவே கிடைத்த சான்ஸில் சிக்ஸர் அடித்துள்ளார். பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்ய முடியாமல் தவிக்கும் காட்சிகள் அப்ளாஸ் அள்ளுகிறார்.

பென்சனுக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் அலையும் அந்த கேரக்டரில் ஒரு நடுத்தர அப்பாவின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.

உயர் அதிகாரி நாசரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

C75shUGVQAYg2Y4

படத்தின் கதை வேறு தளத்தில் சென்று கொண்டிருக்கும்போது, வசன காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

எம்எஸ் பாஸ்கர் பேசும் ஒரு வசன காட்சி… படத்தின் பலமே அந்த காட்சிதான் என்றாலும் கொஞ்சம் நீளமாக இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

படத்திற்கு பாடல் தேவையில்லை. பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி.

தினேஷ்பாபுவின் ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறது.

மிஷ்கினின் உதவியாளர் இயக்குனர் ஸ்ரீகணேஷ் என்பதால் அவரின் டச் படம் முழுக்க தெரிகிறது. படத்தின் திரைக்கதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

8 தோட்டாக்கள்… வச்ச குறி தப்பாது

More Articles
Follows