அவள் விமர்சனம்

அவள்  விமர்சனம்

நடிகர்கள் : சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர் மற்றும் பலர்.
இயக்கம் : மிலிந்த் ராவ்
இசை : ஹரிஷ் – சதீஷ்
ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணா
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: சித்தார்த்

aval stills 2

கதைக்களம்…

இது ஒரு வழக்கமான பேய்ப்படம் என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.

வெறும் முகத்துக்கு மட்டும் மேக்அப் போட்டு காமெடி செய்து, சாரி. பயமுறுத்தும் படமல்ல.

நிஜமாகவே அவள் ஒரு டெரர் பீஸ்தான். அதைப் பற்றி பார்ப்போம்.

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

சித்தார்த் ஒரு மூளை நரம்பியல் டாக்டர். அவர் ஹிமாச்சல பிரதேசத்தில் தன் மனைவியுடன் தனியாக வசிக்கிறார்.

இவருக்கு அருகில் உள்ள வீட்டில் அதுல்குல்கர்னி, தன் மனைவி, இருமகள்கள் மற்றும் தன் தந்தையுடன் வசித்து வருகிறார்.

ஒரு நாள் அதுல்குல்கர்னியின் மூத்த பெண், வீட்டு அருகில் உள்ள ஒரு கிணற்றில் தற்கொலை செய்துக் கொள்ள குதிக்கிறார்.

அவரைக் காப்பாற்ற குதிக்கும் சித்தார்த், கிணற்றுக்கு அடியில் ஒரு அமானுஷ்ய உருவத்தைப் பார்க்கிறார்.

அதன்பின் இந்த இரு குடும்பங்களுக்கும் நடக்கும் சம்பவங்களே படத்தின் டெரர் கதையாகும்.

aval movie posters

கேரக்டர்கள்…

படத்தின் முதல்பாதி செம சூடாக செல்கிறது. அதற்கு முக்கிய காரணம் சித்தார்த்-ஆண்ட்ரியாவின் லிப்லாக் காட்சிகள்.

எத்தனை லிப் கிஸ் அடித்திருப்பார்கள் என்று எண்ண நம் கை-கால் விரல்களே போதாது.

புதிதாக திருமண ஆண்களுக்கு உரிதான ரொமான்ஸில் சித்தார்த்தும், பெண்களே உரிதான பொஸஸிவ்னெஸில் ஆண்ட்ரியாவும் கலக்கியிருக்கின்றனர்.

இதில் சித்தார்த்தின் ஹேர் ஸ்டைல் மற்றும் லுக் ரசிகர்களை ஈர்க்கும்.

க்ளைமாக்ஸ் காட்சியில் சித்தார்த் தன் முழு நடிப்பை வழங்கி, அந்த கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார்.

அதுல்குல்கர்னி அவரது இரண்டு மகள்களும் நல்ல நடிப்பை தந்துள்ளனர்.

முக்கியமாக மூத்த பெண் அனிஷா விக்டர் (படத்தில் ஜெனி) மிரட்டியிருக்கிறார். பேய் இவருக்குள் இறங்கும்போது, அதை பிரதிபலிக்கும்போதும் நடுங்க வைக்கிறார்.

இவர்களுடன் ப்ளாஷ் பேக்கில் வரும் அந்த சீனாக்காரரும் நல்ல தேர்வு.

aval stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இதுபோன்ற பேய் படங்களுக்கு ஒலியும் ஒளியும் மிக முக்கியம். அந்த இரண்டையும் சரியாக கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் மிரட்டலுக்கு உதவியுள்ளது.

காட்டு கத்துற மாதிரி மியூசிக் போடாமல் படத்திற்கு எது தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் க்ரிஷ்.

ஒரு திகிலான பேய் படத்தை கொடுத்துள்ள மிலிந்த் ராவ் அவர்களை மிக தாராளமாக பாராட்டலாம்.

அவள்.. லிப்லாக் த்ரில்லர்

Comments are closed.