தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு ‘சைத்ரா’ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். .
இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி.
இணை தயாரிப்பு – T. கண்ணன் வரதராஜ்.
தயாரிப்பு – K. மனோகரன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் M. ஜெனித்குமார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் M. ஜெனித்குமார் பேசியதாவது..
24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது.
பீட்சா , டீமாண்டி காலணி மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.
இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது.
படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் படமக்கினோம் . படம் நவம்பர் 17 ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது.
படத்தை PVR பிக்சர்ஸ் நிறுவனம் தமிழங்கமெங்கும் வெளியிடுகிறது” என்றார் இயக்குனர் M.ஜெனித் குமார்.
Yaashika Anand starrer Chaithra releasing on 17th Nov 2023